நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் – தாயக மக்களின் பெயரில் புலம்பெயர் அரசியல் சவாரி : த ஜெயபாலன்

tgte_2010_Electionமே 18க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப் புயல் மையங்கொண்டது போன்று மாறி மாறித் தேர்தல்கள் வந்து போகின்றது. வட்டுக்கோட்டைத் தேர்தல், ஜனனி ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல், நாடுகடந்த தமிழீழத்தின் நாட்டுக் குழுக்களுக்குத் தேர்தல், யாழ்ப்பாண மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல், இலங்கை ஜனாதிபதித் தேர்தல், இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானியத் தமிழர்களுக்கு இவற்றுடன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்று கடந்த ஓராண்டுக்குள் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகச் சுமை பெரும் சுமையாகிவிட்டது. இதுவரை ஏக தலைவரும் அவரது இயக்கமும் மட்டும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முடிவெடுத்த நிலைபோய் தற்போது தமிழ் மக்களை வாக்களித்து ஆணை வழங்கும்படி கேட்கின்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. போகின்ற போக்கில் வட்டுக் கோட்டைக்கும் நாடு கடந்த தமிழீழத்திற்கும் மட்டுமல்ல ஏக தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? ஏக தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்று தேர்தல் வைத்து முடிவெடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் ஏதோ ஒரு வகையில் வீச்சுப் பெற்றுள்ளது.

மே 02, 2010ல் நாடு கடந்த தமிழ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து செறிந்து வாழும் இடங்களில் நடைபெறவுள்ளது. 135 பேர் கொண்டு அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் 115 பேர் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்ற நாடுகளில் இருந்து தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய 20 பேரும் தமிழ் மக்கள் செறிவு குறைந்த அல்லது தேர்தலை நடாத்துவதற்கு வாய்ப்புக் குறைந்த பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்வார்கள். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 115 பேரால் தெரிவு செய்யப்படுவார்கள். 20 பேரில் ஈழத்தமிழ் மக்கள் வாழாத நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் பங்குபெற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி அதன் மதியுரைக் குழு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கின்றது: ”தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்றெடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி வாழுகின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அத்தோடு தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்தும் போராட்டத்தினை முன்னெடுக்கும் பணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் தாராளவாத மக்களாட்சியின் இடையே வாழ்கின்றனர். தாம் வாழும் நாடுகளின் விதிமுறைகளுக்கேற்ற வகையில் தமிழீழ இலட்சியத்தை ஜனநாயக அமைதி வழிகளால் முன்னெடுக்கலாம் என்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.”

இதில் உள்ள ஆபத்தான அம்சம் இதுவரை சரிவர உணரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் பெயரால் நடாத்தப்படுகின்ற இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் தமது தாயகத்தை விட்டகலாத தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை. இலங்கை அரசு அப்பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கின்ற நியாயமான அச்சம் காரணமாக இருந்தாலும் தாயக மக்களின் பெயரில் நடாத்தப்படுகின்ற இந்தப் பாராளுமன்றத்தில் அம்மக்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டு இராதது இதன் மிகப்பெரும் பலவீனம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் பிரதிநித்துவப்படுத்தவில்லை என்பது கடந்த ஓராண்டு காலத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. வன்னி யுத்தத்தில் இடம்பெற்ற மிகமோசமான அழிவுக்கு இலங்கை அரசு எவ்வளவு பொறுப்புடையதோ அதேயளவு பொறுப்பு இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் உண்டு. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தகமையாக புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்குபற்றியதை குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே அம்மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வன்னி மக்கள் யுத்தத்தில் இருந்து தப்ப முடியாது தடுத்து வைக்கப்பட்டதையோ, தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறார்கள் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டதையோ, யுத்த்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையோ சுட்டிக்காட்டவில்லை. பணயம் வைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிக்கும் படி விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. சர்வதேச சமூகம் அம்மக்களை விடுவிக்க எடுத்த முயற்சிக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். இந்நடவடிக்கைகள் அனைத்தும் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்திருந்தது. வன்னி மக்கள் மிகக் கடுமையான யுத்தத்தை எதிர் கொண்டு வரலாறு காணாத அழிவைச் சந்தித்த போதும் இன்று தேர்தலை நடாத்துகின்ற நாடு கடந்த தமிழீழத்திற்கான செயற்குழுவும் தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளர்களும் பொறுப்பற்ற முறையிலேயே அன்று நடந்து கொண்டனர். இவர்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய எவ்வித தகுதியையும் கொண்டிருக்கவில்லை.

இவர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பதனை இவர்களின் பிரதிநிதிகளை முற்றாக நிராகரித்ததன் மூலம் தாயக மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சிய வாக்கியமான தாயகம் தேசியம் இறைமை இவற்றை முன்வைத்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களும் பெரும்பாலும் ஆதரவு வழங்கி இருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். இப்போராட்டங்களில் முன்னின்ற மற்றுமொருவரான எம் கெ சிவாஜிலிங்கமும் தோற்கடிக்கப்பட்டார். இவை புலம்பெயர்ந்த அரசியல் தலைமைகள் தாயக மண்ணில் இருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழு நாடு கடந்த அரசு பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறது: ”ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும்.”

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை அவர்களின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைப்பதற்கு இதுவும் ஒரு வழிமுறையாக அமையலாம். ஆனால் அதனைத் தாண்டி தாயகத்தில் வாழ்கின்ற மக்களின் அரசியல் பொருளாதார வாழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலுக்குள் வாழ்ந்து கொண்டு அம்மக்கள் தொடர்பான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுவது ஏற்கனவே வன்னி மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்திய கைங்கரியத்தையே இவர்கள் மீளவும் செய்ய உள்ளனர் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது. ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பண்புள்ள மேற்குலகில் வாழ்ந்து கொண்டும் தங்கள் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய எவ்வித மீளாய்வும் இல்லாமல் தங்கள் பலம் பலவீனம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இல்லாமல் மீண்டும் தாயக மக்களுக்காக இவர்கள் சிந்திக்க முற்படுவது அம்மக்களுக்கு இவர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கின்றது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களில் முற்றாக அல்லது பெரும்பாலானவர்கள் அரசியல் அலையில் அடிபட்டுச் செல்பவர்களாகவே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தியதற்கு அப்பால் இவர்களிடம் எவ்வித அரசியல் அனுபவமும் இருந்ததில்லை. இதனை அவர்கள் பற்றிய குறிப்புக்களே புலப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் போட்டியிடுபவர்கள் செயற்பாட்டாளர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு தங்கள் நோக்கங்களுக்காக பினாமிகளாகப் பயன்படுத்தினார்களோ இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்குப் பின்னால் உள்ளவர்களும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். இந்தத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு எவ்வித அரசியல் பொருளாதாரப் பலமும் கிடையாது. உண்மையான பொருளாதார பலம் இதன் பின்னணியில் உள்ளவர்களிடமே உள்ளது. அவர்களே இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இயக்கப் போகின்றார்கள். அவர்களே இத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் அரசியல் முகவரியற்றவர்கள். அல்லது அரசியலில் பாலபாடத்தைத் தாண்டாதவர்கள்.

”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்த நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் மேற்கொள்ளப்படும்.” என்று நாடு கடந்த அரசின் மதியுரைக் குழு தெரிவிக்கின்றது. இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தற்போது தொடர்புபட்டவர்கள் ஒவ்வொருவருமே மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்திற்கான அதன் நடவடிக்கைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது அது பற்றிய எவ்வித மீள்பரிசீலனையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி வன்முறையைக் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கின்றனர். மே 18ல் இரவோடு இரவாக இவர்கள் பெற்ற ஞானம் மிக ஆபத்தான ஞானம். இன்னொரு மே 18ல் இரவோடு இரவாக ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் வெறும் பினாமிகளே. இவர்களை இயக்குபவர்கள் தான் எப்போதும் முடிவுகளை எடுப்பார்கள்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு 20 பேரைத் தெரிவு செய்வதற்கு 38 பேர் வரை போட்டியிடுகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொருளாதார பலத்தை தம் வசம் வைத்துள்ள ரூட் ரவி, தனம் மற்றும் முக்கிய புள்ளிகள் போட்டியிடவில்லை. இவர்களால் இயக்கப்படுகின்ற அடிப்பொடிகளே தேர்தலில் நிற்கின்றனர். இவர்களில் யார் வென்றாலும் முடிவுகள் எடுக்கப் போகின்றவர்கள் இவர்களை இயக்குகின்ற எஜமானர்களே. நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றம் இன்னுமொரு பிரிஎப், ரிவைஓ போன்றே இயங்கும்.

தங்களுக்கு சமூக அந்தஸ்த்தை வேண்டுபவர்கள் போட்டியிட்டு தங்கள் இமேஜை கட்டமைப்பதற்கு அப்பால் தாயக மக்களுக்கு இவர்களால் ஏதுவும் சாதிக்க முடியும் என்பது சந்தேகமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன், மாவை, சுரேஸ் கூட்டு குறைந்த பட்சம் மே 18ற்குப் பின்னாவது தங்கள் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத் தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுயமான அரசியல் சிந்தனையே கிடையாது.

சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் ஆறுமுகம் கந்தையா மனோகரன் யுகே யில் வட்டுக்கோட்டைக்கு வாக்கெடுப்பு நடத்தி இப்போது நாடுகடந்த தமிழீழம் அமைக்கவும் போட்டியிடுகின்றார். இவர் படித்துப் பெற்ற சமூக விஞ்ஞானம் – (அரசியல்) கலாநிதிப் பட்டமோ அல்லது ‘தூள்’ விநாயகர் என்று அறியப்பட்ட இல்போர்ட்டில் ‘செல்வ விநாயகர்’ என்ற ஆலயத்தை நிறுவிய செல்வராஜா செல்லத்துரை ஆன்மீகப் பலத்தோடு மேற்கொண்டுள்ள அறவழிப் பயணமோ தாயக மக்களுக்கு உதவியாக அமையாவிட்டாலும் உபத்திரவமாக அமையாது இருக்க முயற்சிக்க வேண்டும். இவர்கள் நாடு கடந்த தமிழீழம் எடுக்கிறார்களோ அல்லது தாங்கள் வாழும் நாடுகளில் தமிழீழம் எடுக்கிறார்களோ அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் தங்கள் அபிலாசைகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் (நாடு கடந்த தமிழீழம்) பதவிகளுக்காகவும் தாயக மக்கள் மீது சவாரி செய்யாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக பிரித்தானியாவைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கான தேர்தலும் இத்தேர்தல் ஆணைக்குழுவும் சிறு பிள்ளைத் தனமானதாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தல் வாக்காளர் அட்டையிலும் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து வாக்களிப்பு நடைபெறுகின்ற தேர்தல்களிலேயே முறைகேடுகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இங்கு வாக்காளர் அட்டை இல்லை. தன்னை உறுதிப்படுத்த முடியாத வாக்காளரும் வாக்களிக்க வழியுண்டு. சில மாதங்களுக்கு முன்னர் இரு நாள் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தலில் ஈஸ்ற்ஹாம் பேர்ச்சஸ் வீதியில் உள்ள ஒருவர் ஒரே நாளில் தான் வெவ்வேறு வாக்களிப்பு நியைங்களில் 15 வாக்குகளை அளித்ததாகத் தெரிவித்தார். இதற்கு மேல் இத்தேர்தல் பற்றியோ அதனைக் கண்காணிக்கும் ஆணைக்குழு பற்றியோ குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணைக் குழுத் தலைவர் நடராஜா விஜயசிங்கம் தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் விமர்சனம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் துதிபாடி வன்னி மக்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவுக்கு உள்ளாவதை வேடிக்கை பார்த்தவர். ஓய்வு பெற்றுள்ள இவருக்கு இதுதான் தற்போது பொழுது போக்கு.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களின் முக்கிய தகுதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கு பற்றியது, கோசம் எழுப்பியது, புலிக் கொடி பிடித்தது. இதற்கு அப்பால் இவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக எதனையும் குறிப்பிடவில்லை. பலருக்கு அவ்வாறு குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதும் உண்மை. போட்டியிடும் வேட்பாளர்கள் கல்வித் தகமை உடையவர்களாகவும் வியாபார உரிமையாளர்களாகவும் ஆலய உரிமையாளர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் இதுவரை தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் எவ்வாறான காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளனர் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் ‘தூள் விநாயகர்’ உரிமையாளர் செல்வராஜா உட்பட சிலரது குறிப்புகளோ 1977 அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்வோம். அவை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

இக்கட்டுரையை 18 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற நினைவுக் குறிப்புடன் முடிக்கலாம் என நினைக்கிறேன். தற்போதைய ரிஆர்-ரெக் கல்வி நிலையம் தங்களது ஆறு மாத கணணிப் பயிற்சியில் டிப்ளோமா பெற்ற மாணவர்களுக்கு மிடில்செக்ஸ் பல்கலைக் களகத்தில் பட்டமளிப்புச் செய்யும் முறையை அப்போது அறிமுகப்படுத்தி இருந்தது. பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டமளிப்பின் போது அணியும் அங்கிகளை அணிந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் வீட்டில் பிறேம் போட்டு அலங்காரத்துக்கே வைக்க முடியும். இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றமும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு விடயமே.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Comments

  • thurai
    thurai

    ஜெயபாலனிற்கு முதலில் நன்றிகள். புலிகளின் ஏமாற்றுகளை இங்கு வெளியிட்டமைக்கு. இங்கு நான் அதிகம் எழுத விரும்பவில்லை ஆனால் ஒரு வேண்டுகோள் தமிழர்களில் அக்கறை கொண்டவர்களிற்கும், புலிகளில் அக்கறை கொண்டவர்களிற்கும்.

    தமிழீழ விடுதலையில் தொடங்கி இன்று உலகமுழுவதும் மறியற்சாலைகளில் இருந்து தமிழர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். குறிப்பாக புலிகளின் செயற்பாடுகளிற்காக மறியலில் உள்ளோரை விடுதலை செய்வதற்கு நாடுகடந்த அரசின் செயற்படும் சட்டத்தரணிகள் தங்கள் திறமைகளையும், அங்கத்தவர்களாகப் போட்டியிட்டு தமிழர்களிற்கா தங்கள் வாழ்வையும் பணத்தையும் அர்ப்ணம் செய்வோர் தேவையான பண உதவிகளையும் செய்வார்களேயானால், சுறா பிடிக்குகுமுன் சிறிய றாலையாவது ஏமாந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களிற்கு பிடித்துக் காட்டியதாகவிருக்குமென நான் நம்புகின்றேன். இன்னமும் பிடிபடவிருக்கும் தமிழர்களிர்கும் இவர்கள் ஆலோசனை முதலில் வழங்கினால் மேலுமுதவியாகவிருக்கும்.
    துரை

    Reply
  • வாசு
    வாசு

    நன்றி ஜெயபாலன்! ஜனநாயகமுறையான செயற்பாடு என்று கூறும் இந்த நாடுகடந்த தமிழீழ அமைப்பினர் இந்த தேர்தல் தேவையா என்ற ஒரு ஆரோக்கியமான விவாதத்தை கூட வைக்க தயாரில்லை. தாயகத்தில் தமிழ் மக்களிற்கு எந்தவித உரிமைகளும் இல்லை எனவே அதை வெளியில் இருந்துதான் செய்ய முடியும் என்று கூறும் இவர்கள், இலங்கையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை பார்க்கவில்லையா? தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களை பெற முடியும் என்றால் அங்கு ஜனநாயகம் இன்னும் உள்ளது என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள்? பணம் புகழ் அதிகாரம் இவை தான் இவர்களின் முக்கிய குறிக்கோள்! இதில் பகிடி என்னவென்றால் லண்டனில் புலிகளை வைத்து பணம் பண்ணிய முக்கிய புள்ளயான தனம் என்பவர் தனக்கு பணிந்தவர்களை எப்படியாவது தெரிவு செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் பலர் மீது சேற்றை வாரியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுளாராம். அட கடவுளே இது எங்கைபோய் முடியப்போகுதோ!

    இது மட்டுமல்ல விளம்பரத்திற்கு பணம் வாரியிறைக்கப்படுகறது. இந்த பணம் இவர்களால் அகதிகளாக்கப்பட்ட மக்களிற்கு போய்சேர்ந்தாலே பொருளாதார ரீதியான ஒரு விடுதலையையாவது அவர்கள் பெற முடியும்! இந்த தேர்தலால் ஒன்று மட்டும் நடைபெறும். அங்கு அடைபட்டு கிடக்கும் பத்தாயிரம் முன்னை நாள் புலிகள் அனைவரும் ஆயுள் கைதிகளாக மாற வேண்டியதுதான். நாடு கடந்த தமிழீழம் முன்னை நாள் போராளிகளின் நிரந்தர சிறைக்கூடம்! இந்த சுலோகத்தை இவர்கள் தங்களின் பரப்புரைக்கு பாவிக்கலாம்!

    Reply
  • Varathan
    Varathan

    Wrongly directed liberation struggle deeply rooted the doubts in Muslim community and Tamils in Eastern province.In future there’s no possibility for merging of Northern and Eastern province. Demography of Eastern province gradually changed with time so referendum for merging will be defeated easily. In this situation there’s no sense to talk about Transnational govt. Let the people in Sri Lanka live peacefully!

    Reply
  • மாயா
    மாயா

    மின் அஞ்சலில் முகத்திரை அகற்றும் ஒரு மடல் கிடைத்தது. ஜெயபாலனின் கட்டுரைக்கு இதுவும் வலுச் சேர்க்கும்?
    __________

    நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA) அதன் இணைப்பாளரை கடுமையாக தாக்கியவர்கள் இன்று உங்கள் முன் அதே நாடுகடந்த அரசின் தேர்தலில் குதித்துள்ளதன் உள்நோக்கம் என்ன என்பதை புலம்பெயாந்து வாழும் கனேடிய தமிழ் மக்கள் அறிய வேண்டும் என விரும்புகின்றோம்.
    நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பல்வேறு பட்டவர்கள் தனித்து நின்று போட்டியிடும் வேளையில் 20 பேர் இணைந்த உலகத்தமிழர் இயக்கத்தின் கூட்டமைப்பு இந்த தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சிலரைத்தவிர ஏனையவர்கள் எதுகுமறியா அப்பாவிகள். இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்ய தார்மீக பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு என்பதால், தொடர்கின்றோம்.

    (1) வனிதா இராஜேந்திரன்
    செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற பாரிய இழப்புக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பணம் சேர்த்தது மகளீர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவி தான் வனிதா இராஜேந்திரன். அந்த நிதி சேகரிப்பு மும்மரமாக நடைபெற்ற போதும் சோக்க்கப்பட்ட நிதி பாதிக்கபட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அல்லது இதர காரணங்களுக்காக வன்னிக்கு அனுப்பபடவும் இல்லை. இது வரை அதற்க்குரிய கணக்கும் இல்லை!
    இவர் உங்கள் பிரதிநிதியாவதற்க்காக உங்கள் முன் வந்து நிற்க்கின்றார். உங்கள் வாக்குகளுக்காக! தேசத்தின் பெயரிலும் நாட்டில் இடம் பெறும் அவலத்தின் பெயரிலும் பணம் சம்பதிக்கும் இவருக்கு உங்கள் வாக்குகள் கிடைப்பதன் ஊடாக அவர் மேலும் தனது சுயத்தை நிலைநிறுத்த முடியும்.

    (2)ஈசன் குலசேகரம்
    மாற்றுகருத்துள்ள இயக்கம் என்ற பெயரில் தமிழ் தேசிய ஆன்மாவை கொன்று புதைத்த புளொட் அமைப்பின் உறுப்பினரான ஈசன் குலசேகரம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த எம் ஈழச் சொந்தங்களின் தாலிக்கொடி முதல் கொண்டு தங்க ஆபரணங்களை கொள்ளையடித்தவர். கடந்த 15 வருடங்கள் கனடாவில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்த இவர். தாயகத்தில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற போது நேரு குணரட்னம் அவர்களால் மக்கள் மன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்களிலே, போராட்டங்களுக்கு என்று இவரும் நேரு குணரட்னம் அவர்களும் இணைந்து நூற்றுக்கு மேற்ப்பட்ட சங்கங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை 500 டொலர்களை சேகரித்து அதற்க்கு உரிய கணக்கினை இன்று வரைகாட்டாது ஏப்பம் விட்டவர்கள்.

    இன்று இவர் தமிழீழ நாடுகடந்த அரசின் பிரதிநிதியாக வருவதற்க்கு தேர்தலில் நிற்க்கின்றார். இவருக்கு இன்னும் பதவிகளை நாம் கொடுத்து தன் வாழ்வை நலமாக்கி கொள்ள வாக்களிப்போம்.

    (3 திருச்செல்வம்)
    தமிழீழ சங்கத்தில் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதற்க்காக பணி நீக்கம் செய்யப்பட்ட திருச்செல்வம் அவர்கள் தமிழீழச் சங்கத்துக்கு கிடைந்து வந்த அரச மானியத்தை நிறுத்த உதவி புரிந்ததுடன். தமிழீழ ஆர்வலர், முன்னை நாள் பொறுப்பாளர் சுரேஸ் மாணிக்கவாசகத்தை சிறைக்கு அனுப்பிய பெருமை இவருக்கு சாரும்.அது மட்டுமன்றி தனது ஊடக ஜாம்பவித்தனத்தால் உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு லோகேந்திரலிங்கத்தை தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்ப்பட வற்ப்புறுத்தி தோல்வி கண்டவர். லோகேந்திரலிங்கம் அதை புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியேறி தனத பத்திரிகையை சிறப்பாக நடாத்தி வருகின்றார்.
    தன் நாற்காலி விருப்புக்காய் எதையும் செய்ய துணிந்த இவரின் அரசியல் மேதாவித்தனத்தை சீ.எம்.ஆர், ரிவிஐயில் பார்த்திருக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைந்திருக்கலாம். ஆனால் தனது இருப்புக்காய் தனது மகனையே பலி கொடுத்த இந்த செம்மலுக்கு வாக்களித்து இவரை பிரதிநிதியாக்குங்கள்!
    (2) சண் மாஸ்ரர்நாடுகடந்த அரசை விமர்சித்து அதன் இணைப்பாளர் ருத்திரகுமாரை கீழ்த்தரமான விமர்ச்சித்த பத்திரிகையின் ஆசிரிய சண் மாஸ்ரர், இவா பத்திரிகையின் ஆசிரியர் ஆயினும் இன்றுவரையில் கட்டுரைகள் எதையும் எழுதியதாக இல்லை. தனத சுயநலத்திற்காக எதையும் விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்ட இவர் தனது மகனுக்கு ரி.விஐயில் வேலை எடுப்பதற்க்காக —-? விட்டுக்கொடுத்தவர்!
    இவரை உங்கள் பிரதிநிதி ஆக்குங்கள் நிச்சயம் உங்களை விற்று தன்னை வளர்ப்பார் என்பதை உறுதியாக்கி கொள்கின்றோம்!
    இவர்களின் இலக்கு நாடுகடந்த அரசை அமைப்பது அல்ல! இப்போது போல எப்போதும் கனேடிய தமிழ் சமூகத்துக்குள் தமது ஆளுமையையும் அவர்களது தலைமையான நேருவின் ஆதிக்கத்தையும் தக்க வைப்பதன் ஊடகா தாயத்தின் பெயரில் வாங்கப்பட்ட அசையும் அசையாச சொத்துக்கள், முதலீடுகளை தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவதே!

    இவர்களின் ஒருவராவது வன்னியில் உண்ண வழியின்றி கஸ்ரப்படும் எம் உறவுகளுக்கு ஒரு வேளை கஞ்சிக்காவது பணம் கொடுத்தார்களா? என்றால் அதற்க்கு பதில் இல்லை என்பதே; நாங்கள் நாடுகடந்த அரசின் செயற்ப்பாடுகளை வரவேற்க்கின்றோம்! அதில் போட்டியிடும் தனிமனிதர்களை ஆதரிக்கின்றோம். அந்த ஓர்மம் நிறைந்த மனதர்களை தனித்து சாதிக்க துடிக்கும் உள்ளங்களை வாழ்த்துகின்றோம். ஆனால், மக்களின் பணத்தில் வயிறு வளர்த்துக்கொண்டு, தாயநாட்டின் பெயரில் எமது அடுத்த கட்ட போராட்ட வடிவத்துக்குள் நுழை முற்ப்படும் புல்லுருவிகளை இனம் காண வேண்டியது எமதும் உங்களதும் கடமையாகும்.

    இந்த புல்லுருவிகள்ன அதிமேதாவித்தனத்தால் நாம் இழந்து நிற்பவற்றை ஈடு செய்ய முடியாது. சற்றே நிமிர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்க முயலும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்குள் இவர்களை உங்கள் வாக்குகளை வைத்து களை எடுங்கள்!.கூட்டணி அமைத்து தாயகத் தேர்தல் களத்தில் தோற்று போனவர்கள் மீண்டும் கூட்டணியாய் நாடுகடந்த அரசுக்குள் சதி செய்ய புறப்பட்டுள்ளனர். இந்த கூட்டுச்சதியை மக்களாகிய உங்கள் கூட்டு முயறச்சியால் மட்டுமே முறியடிக்க முடியும்.

    கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களே!
    இவர்கள் உண்மையானவர்கள் எனில் வேட்பாளர்களுடனான மக்கள் சந்துப்புக்களை நிராகரித்து அதற்க்கு சமூகமளிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். உங்களின் கேள்விகளுக்கு உங்களை நேருக்கு நேர் சந்திக்க திரணியற்ற இவர்கள் எப்படி உங்கள் பிரதிநிதியாகலாம்?
    இவர்கள் கையில் உங்கள் எதிர்காலத்தை தீ்ர்மானிக்கும் பாரிய பொறுப்பை கொடுக்காதீர்கள். சிந்தியுங்கள்! ஒரு விடுதலைப்புலிகளால், எம் தலைவரால் சரி செய்ய, திருத்த முடியாத இவர்கள் திருந்துவார்கள் என்ற கனவினை விடுத்து இவர்கள் நீட்டும் பசாப்பு கரங்களை தட்டி விடுங்கள்….இங்கே இவர்களது படங்கள் இணைக்கப்பட்டுள்ளன….இவர்களின் முகத்திரை நீங்கள் கிழியுங்கள் நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம்
    நன்றி கனடா தமிழ் சமூகமும் மாணவர் சமூகமும் April 27, 2010

    அன்புடன்
    கணபதி

    Reply
  • BC
    BC

    தேவையான சிறந்த கட்டுரை.
    நாடுகடந்த தமிழீழ அரசை சேர்ந்தோர் தங்களுடைய கொள்கையில் மக்களை சுரண்டி தங்களுக்கு சொத்து சேர்ப்பதில் உறுதியாக தான் இருக்கிறார்கள்.

    Reply
  • thiru
    thiru

    நீங்கள் என்னதான் எழுதினாலும் வெல்லப்போவது அவர்களே!
    தமிழ்மக்களின் நாடி பிடித்து செயற்படக்கூடிய பிரபலவர்த்தகர்கள்

    Reply
  • Rasatharshini
    Rasatharshini

    இனி அவகாசம் இருக்குமோ தெரியாது. ஜெயபாலன் நீங்களும் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கலாம். நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி உறுப்பினர் கிடைத்திருப்பார்.

    Reply
  • thurai
    thurai

    புலம்பெயர் நாடொன்றில் பல ஆண்டுகளிற்கு முன்னர் அந்தநாட்டு அமைப்பொன்றினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கீழ்காணும் கருத்து பதிவு செயப்பட்டுள்ளது.

    ஈழத்தமிழர்களின் அரசியல் பிரசினைக்கு காரணம்,

    பிரச்சினக்குரிய தமிழர்களில் அக்கறையற்ரவர்கழும், தங்கள் சுயநலஙளையும், புகழையும் குடும்ப கவ்ரவத்தையும்
    விரும்புபவ்ர்கழுமேயாகும். இவர்களே தமிழர்க்ளின் அரசியலை பிரதிநிதிப்படுத்துவதே தமிழர்களிற்கு துற்பாக்கியமாகும்.

    இதனை புலம்பெயர்நாடுகளில் நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள் நிச்சயமாக நிரூபிப்பார்கள்.

    துரை

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    //நீங்கள் என்னதான் எழுதினாலும் வெல்லப்போவது அவர்களே!
    தமிழ் மக்களின் நாடி பிடித்து செயற்படக்கூடிய பிரபலவர்த்தகர்கள்.//
    நாங்கள் எவ்வளவோ எழுதியும் கேட்காமல் முள்ளிவாய்க்கால் வரை சென்று தங்கள் முடிவைத் தேடியது மட்டுமல்ல தமிழ் மக்களையும் ஆயிரக் கணக்கில் அழித்தொழித்தனர். இவர்கள் ஒரு போதும் தமிழ் மக்களின் நாடி பிடித்து செயற்படக் கூடியவர்கள் இல்லை. அப்படிச் செயற்பட்டிருந்தால் அந்த மக்களுக்கு விரோதமாகச் செயற்பட மாட்டார்களே. இவர்கள் தங்கள் சொந்த புலம்பெயர்ந்தவர்களின் நலனின் அடிப்படையில் செயற்படுபவர்கள்.

    //இனி அவகாசம் இருக்குமோ தெரியாது. ஜெயபாலன் நீங்களும் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கலாம். நாடுகடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி உறுப்பினர் கிடைத்திருப்பார்.// ராசாதர்சினி
    ராசாதர்சினி அவர்களின் அடிப்படையே புரியாமல் பேசுகின்றீர்கள். நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றம் என்றால் சும்மாவா?. அது ஏக பிரதிநிதித்துவப் பாராளுமன்றம். அங்கெல்லாம் எதிர்க் கட்சி கிடையாது. ஒரே கட்சிதான்.

    த ஜெயபாலன்.

    Reply
  • மாயா
    மாயா

    இலங்கையில் தமிழர்களை அழித்தார்கள். மலேசியாவில் தலை நிமிர விடாமல் ஆக்கியாச்சு. புலத்தில் இருந்து தமிழரைத் துரத்தும் காலம் தொலைவில் இல்லை.

    Reply
  • குமார் பாலா
    குமார் பாலா

    ‘இவர்களே தமிழர்க்ளின் அரசியலை பிரதிநிதிப்படுத்துவதே தமிழர்களிற்கு துற்பாக்கியமாகும்’

    அப்போ நீங்கள் பிரதிநிதுத்துவம் செய்யுங்கள். அதற்குத்தானே தேர்தல் வைக்கின்றனர். வாக்கு கேட்கவேண்டியதுதானே? வென்று ‘நற்பாக்கியம்’ செய்யுங்கள். யார் வேண்டாம் என்றனர்?
    முன்னர் அஜித் சொல்லியது போல் ஏன் நல்லவரை கைகாட்டுங்கள் என அழவேண்டும்? எல்லோரையும் பொல்லாதவர் எனச் சொல்லியவர்கள் நல்லவரை காட்டச்சொல்லி எழுதுவது சிரிப்பைத்தான் கொண்டு வருகிறது.
    இப்படித்தான் குடும்ப நலனில் அக்கரை இலாதவர்கள் யாழ்ப்பானம் சென்று லக்‌ஷரி ஹோட்டல் கட்டுகின்றனர்..பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    Reply
  • canada
    canada

    நாடுகடந்த தமிழீழம் தாயக உறவுகளின் துயரினை போக்குமா?

    என்ற தலைப்பில் கனடாவில் புளொட் துண்டுபிரசுரம்! (முதன்முறையாக புலிகளால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் கனடாவில் வினியோகம்)
    நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் என்று புலிகள் கோரியபோது அங்கே வந்திருந்த புளொட் உறுப்பினர்களும் நாங்களும் ஜனநாயக முறையில் எமது கருத்துக்களை மக்களுக்கு தெளிவூட்டவே வந்துள்ளோம் என்று தெரிவித்து தாங்கள் கொண்டு வந்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகம் செய்தனர்.

    அவ் துண்டு பிரசுரங்களை வாங்கி கொண்ட மக்கள் இப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் கனடாவில் பிறந்துள்ளது என்றும், இதில் கூறப்பட்ட விடயங்களில் எந்தவொரு தவறினையும் காணவில்லை. நடந்த சம்பவங்களையும், தமிழீழம் என்ற பெயரில் மக்களிடம் சேகரித்த பணங்கள் தனிநபர் கைகளில் சிக்கியுள்ளதையும், தமிழீழத்திற்காக தம்முயிரை அற்பணித்த மாவீரர்கள் அவர்தம் குடும்பங்கள் வறுமையிலும், துன்பத்திலும் வாடும்போது இந்த பணம் அந்த மக்களை சென்றடையாமல் இங்கே வாழும் சில சுயநலவாதிகளின் கைகளிற்கு சென்றுவிடக் கூடாது. இதனைத்தானே புளொட் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர் இதில் தவறு எதுவும் இல்லையே என்று அங்கு கூடியிருந்த மக்கள் பலர் பேசிக்கொண்டதையும் காணமுடிந்தது.

    முதன்முறையாக புலிகளின் ஆதரவாளர்களால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது இதுவே கனடாவில் இடம்பெற்ற முதல் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கனேடிய தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான மாற்றமாகும். மக்கள் தங்கள் கருத்துக்களை தாங்களே கூறுவதற்கும், மற்றைய செய்திகள், கருத்துக்கள், விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு விடுக்கப்பட்ட திறவுகோலகவும் அமைந்துள்ளது. இத்துடன் புளொட் இயக்கத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரால் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் முழுமையான பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது….

    நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா??
    அன்பார்ந்த தமிழ்மக்களே விழிப்பாக செயற்படுங்கள்..
    யார் இந்த நாடுகடந்த தமிழீழத்தை பிரகடனப்படுத்தபவர்கள் என்பதை அறிந்து கொண்டு செயற்படுங்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழம் என்று கூறி நமது இனத்தை, சொத்துக்களை, சொந்தங்களை அழித்துவிட்டு இறுதியில் இங்கிருந்து கொண்டு பிழையாக வழிநடாத்தி விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழித்த இந்த கூட்டத்தினர் இறுதியில் இன்று “நாடு கடந்த தமிழீழம்” என்ற போலி நாடகத்தை புலம்பெயர் தேசத்தில் அரங்கேற்றி மக்களின் பணத்தை அபகரிப்பதற்காக மேற்கொள்ளும் நாடகமே இந்த புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்ளும் புதிய நாடகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    புலம்பெயர் நாடுகளில் தாம் தமது குடும்பம் என்று பாதுகாப்பாக இருந்துகொண்டு எமது மக்களையும், மக்களின் சுயகௌரவத்துடன் வாழ்தலுக்கான போராட்டத்தையும் சிதைவடைய செய்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அந்த மக்களை துன்பபடுத்த மேற்கொள்ளும் அரங்கேற்றங்களே இவ்வாறான அர்த்தமற்ற அறிக்கை போராட்டங்கள். தமிழீழம் என்ற போர்வையில் எமது மக்களை கடந்த இரு தசாப்த காலங்களிற்கு மேலாக உண்மையை பேசவோஇ பிழையை தட்டிக்கேட்கவோ, விமர்சனங்களை வெளிப்படுத்தவோ முடியாத ஒர் இனமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒர் இனமாகவே நடாத்திவந்த இந்த கொள்ளை கூட்டம் மீண்டும் மீண்டும் நமது இனத்தை கூறி பிழைப்பு நடாத்துவதற்காகவும், தேடிய சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காக மேற்கொள்ளும் தந்திரங்களேயாகும்..

    நமது இனம் சுதந்திரமாக, சுயகௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட எமது மக்களின் விடுதலைப் போராட்டம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் இவ் பிழையான கூட்டங்களின் வழிகாட்டுதலினால் திசைமாற்றப்பட்டு திசை தெரியாமல் இறுதியில் வன்னி மண்ணில் அஸ்தமித்துள்ளது. பணத்தையே கொள்கையாக கொண்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்த கூட்டத்தினர் வடக்கு கிழக்கு எமது தாயக தேசத்தில் என்ன நடக்கின்றது என்பதை சுதந்திரமாக அறிந்து கொள்ளமுடியாத நிலையை உருவாக்கி ஊடக சுதந்திரத்தையே மறுதலித்து சுதந்திரமான செய்திகளை வெளியிட்டுவந்த ஊடகங்களை பயமுறுத்தி ஒர் அச்சநிலையில் வைத்துக்கொண்டே தமது வசூலிப்புக்களை கனேடிய மண்ணில் மேற்கொண்டனர் என்பதை யாவரும் அறிவர்.

    கடந்த ஆண்டு ஒரு வருடங்களுக்கு மேலாக வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான உண்மை செய்திகளை மழுங்கடித்து இராணுவத்தின் முன்னேற்றத்தை முறியடித்து போராளிகள் போரிடுகின்றனர் என்றும், அர்த்தமற்ற அரசியல் ஆலோசனைகளை கூறியும் எமது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திய இந்த கூட்டத்தினர் இறுதியில் வன்னியில் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் அழிக்கப்படும்வரை ஊடகம் என்ற பெயரில் உலாவரும் கொள்ளை குழுவினரின் ஊடகங்கள் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். விடுதலை என்ற பெயரில் சிங்கள அரசுகளுடன் புலிகள் கொண்ட இரகசிய பேச்சுக்கள், பேச்சுவார்த்தை நாடகங்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, நினைவுமீட்டி பாருங்கள்.

    * 1980ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு காலப்பகுதிவரை சரியானபாதையில் சென்ற எமது மக்களின் விடுதலை போராட்டத்தையும், புலிகளின் விடுதலை பாதையையும் பிழையான பாதைக்கு இட்டுச்சென்றவர்கள்தான் இந்த கூட்டத்தினர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    * 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது மக்களிற்கு கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண அரசையும், 13வது திருத்த சட்டமூலத்தையும் பிரேமதாசா அரசுடன் கூட்டமைத்து குழப்பியவர்கள்தான் இந்த கூட்டத்தினர்.

    * 1987ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சகல அரசியல் தீர்வுகளையும் பிரபாகரனையும் விடுதலைப்புலி அமைப்பையும் தூண்டிவிட்டு குழப்பியவர்கள்தான் இவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரபாகரன் தனது பிழைகளை திருத்தி கொள்வதற்கு விடாது தேசியத் தலைவர் என்ற மாஜையான பதவியை கொடுத்து தொடர்ந்து அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பாரிய பிழைகளை இழைக்க தூண்டி பிரபாகரனின் அழிவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவிற்கும் எமது மக்களின் அழிவிற்கும் வழிகோலியவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    * தமிழ் மக்களின் ஒப்பற்ற அரசியல் தலைவர், புத்திஜீவிகள், சகல போராளிகள், சக போராளி அமைப்புக்களின் தலைவர்கள், நாட்டு பற்றுக்கொண்ட தமிழ்மக்கள் என எல்லோரையும் புலிகளைக்கொண்டு துரோகி என்ற பட்டம் கொடுத்து அழிப்பதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    * புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் மிரட்டியும், ஏமாற்றியும் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை தமது பெயர்களில் வைத்துக்கொண்டுள்ள இவர்கள், அவ் சொத்துக்களை தாமே அபகரிக்க ஆடும் நாடகமே இந்த நாடுகடந்த தமிழீழம் என்பதை மறந்துவிடாதீர்கள். இனியும் இலங்கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் வரவிடாமல் தடுப்பதற்கும், முகாம்களில் அல்லல்படும் எமது தமிழ்மக்களை மேலும் மேலும் துன்பப்பட வைத்து அதில் தமது அரசியல் இலாபம் தேட முயலும் கூட்டமே இவர்கள்.

    * இவர்களின் இந்த நடவடிக்கை மூலம் சிங்கள கடும்போக்காளர்களை கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தைக்கொடுத்து எந்தவொரு அரசியல் தீர்வும் இலங்கையில் வராது தடுப்பதன் மூலம் தமிழ்மக்களுக்கு சொந்தமான புலிகளின் சொத்துக்களை தாம் தமது பெயர்களில் தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்கு ஆடும் நாடகமே இது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    * புலிகளிடம் இருந்த சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு புலிகளின் பிழையான போராட்டத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும்இ புலிகளினால் வலுக்கட்டயாமாக போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பத்திற்கும் அங்கவீனமாக்கப்பட்ட போராளிகளின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டும் என இந்த கூட்டத்திற்கு அந்த பணத்தினை உண்மையான போராட்டத்திற்கு என நம்பி இவர்களிடம் பறிகொடுத்த மக்களாகிய நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

    மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்றும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தாமல் அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும்இ வைத்தியசாலைகளிலும் அல்;லும் பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கி, அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்துவோம். கடந்த பல ஆண்டுகளாக ஆயுததாங்கிய போராட்டம் ஊடாக எமது உரிமையை வென்றெடுக்கலாம் என்று நம்பி ஏமாற்றப்பட்டதுபோல் இனிமேலும் ஏமாராது சரியான பாதையில் சரியான இலக்கை நோக்கி செயற்படுவோம்.

    சகல சௌபாக்கியங்களுடன் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு எமது மக்களை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்காமல் அவர்கள் பட்டவேதனைகள், துன்பங்களில் இருந்து விடுபட்டு ஒர் மனித இனமாக வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்போம்.

    -ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லி இந்த கட்டுரைக்கு பின்னோட்டம் எழுதலாமா? வேண்டாமா? என யோசித்தேன், காரனம்; இந்த நாடு கடத்திய ஈழத்துக்கு தேர்தலில் நிற்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் வேடிக்கையானவை; இவர்கள் சொல்லிகிறார்கள் வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிப்பார்களாம்; அதைதான் ஈழ மக்கள் தீர்மானித்து புலி சார்பான சிலரை அரசியலே பேசபடாது என்பது போல் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களே, (இதை பளய புலி இன்றய புளி தங்கேஸ்வரி சொல்லியுள்ளார்) ஆக மக்கள் என்பது யார்?? இதுவே எனது தர்மசங்கடம், புலம்பெயர் மக்களா ஈழ மக்கள் வாழ்வதா? அல்லது சாவதா என முடிவு எடுப்பது, தேர்தலில் நிற்க்கும் (புலம்பெயர்) யாராவது ஈழ மக்கள் வாக்களிக்கட்டும் என சொல்லட்டும் அவர்கள் உறவுகளாவது அவர்களுக்கு வாக்கு போடுகிறார்களா என பார்ப்போம்; நிக கொதிக்கு தலையில் அறுவை சிகிச்சையா?? என்ன இது சின்ன பிள்ளைதனம்;

    ஒரு வேட்பாளரின் வாக்குறிதிகள் இவை அவரது பெயரை நான் குறிப்பிடவில்லை( என் பாதுகாப்பு கருதி) (சுருக்கமாக எழுதுகிறேன்)

    (1)பிரபாகரன் வழியில் அவரது பாதையில் அவரது கனவுகளை கண்டிப்பாக முடித்து வைக்க முயற்ச்சிப்பேன்;
    (முதலில் பிரபாகரனுக்கு என்னாச்சு அதை சொல்லுங்க, /பல்லி)

    (2)மகிந்தாவின் முகத்தை போட்டோ எடுத்து அதை உலகநாடுகளுக்கு பிறேம் போட்டு காட்டுவேன்;
    (மகிந்தா நீங்கள் எங்கிருந்தாலும் தெரிந்தால் இலவச விமானத்தில் இலங்கைக்கு அழைத்து விடுவார் கவனம்:/பல்லி)

    (3) சிறையில் உள்ள தமிழரையும் புலிகளையும் விடுவிக்க சில சூட்ச்சமங்கள் செய்வேன்)
    (முதலில் அவர்களுக்கு ஏதாவது சிறிய உதவிகள் செய்யமுடியுமா என கவனிக்கவும்; அது உங்களால் முடியாத காரியம் இருந்தாலும் முயற்ச்சியுங்கள் தப்பில்லை;/ பல்லி)

    (4)அகதி ஆக்கபட்டவர்களை அனாதையாக்க அயராது உலைப்பேன்;
    (புலம் பெயர் தமிழரை ஈழத்துக்கு அனுப்ப முயல்வதாகதான் எனக்குபடுகிறது ;/பல்லி)

    (5) பறிக்கபட்ட எமது மண்ணை எப்படியும் இராணவத்திடம் இருந்து என்ன விலை கொடுத்தாவது வேண்டுவேன்,
    (எப்படியோ வீடு வாங்குவது என முடிவு செய்து விட்டீர்கள் அதை யாரால் தடுக்க முடியும்/பல்லி)

    சின்னமே இல்லாத தேர்தல்;
    இவர்களுக்கு வாழ்க்கை;
    சிதைந்து போன எம்மவரை;
    சீர் குலைக்கும் ஆசை;

    ஓடிய புலிகளை ;
    தேடிய புலம் பெயரோ:
    புதிதாக கதை சொல்லி
    இருக்கும் வரை சுருட்டுவார்கள்.

    புலம் பெயர் வாக்காளன் பல்லி;

    Reply
  • sumi
    sumi

    நாடு கடந்த தமிழீழத்தேர்தல் நடப்பது நல்லதே. காலத்தின் கட்டாயத்தேவை. ஏனெனில் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் கைது செய்யப்பட்டவர்கள் போக இன்னும் அநேகமான திருடர்கள் மறைந்து வாழ்கின்றார்கள். இவர்கள் இத்தேர்தல் மூலம் உத்தமர்களாக அடையாளப்படுத்த முனைகின்றார்கள். ஆனால் இத்தேர்தல் பட்டியல்தான் இவர்களை எதிர்வரும் காலத்தில் கைது செய்ய வெகு இவகுவாக
    வழியமைக்க போகின்றது என்பது வெகு விரைவில் அம்பலமாகும். ஏனெனில் இவர்கள் அனைவரும் ஐரோப்பிய சட்டத்தின் கீழ் “கிரிமினல்கள்”. இவர்கள் இந்த தேர்தல் மூலம் தாங்களே தங்களுக்கு குளி வெட்டிக்கொள்கின்றார்கள். விரைவில் இக்குளிகள் இவர்களை வரவேற்கும். அதுவரை காத்திருப்போம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழ்மக்களை மட்டுமல்ல முழு இலங்கையையுமே பல ஆண்டு காலமாக சின்னனா பின்னப் படுத்திய கூட்டமே! புலி என்ற இயக்கம். இவர்களுக்கு உள்ள அரசியல் தகமைதான் என்ன? இவர்களுக்கு இவ்வளவு நீண்ட ஆண்டுகள் நிற்கக் கூடிய பலத்தை யார் வழங்கினார்கள்? இதற்கு விடை கண்டு பிடிப்பதே வரும் கால தமிழ்சமூகத்திற்கு இனிமேலாவது உரிய-நேர்மையான வழியை தேர்ந்தெடுப்பதற்கு உபாயமாக இருக்கும்

    வெளிப்படையாக கிறிமினல்களாக செயல்படுவதற்கு மறைமுகமாக செயல்பட்ட தமிழ்தலைவர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள். இந்த கிறிமினல்கள் என்றுமே மனிதர்கள் மனிதஉயிர்கள் இலங்கை எமது தாய்நாடு என்று கவலைப்பட்டது இல்லை. அவர்களுக்கு அரசியல் என்பது சிங்களவன் எம்மை ஒடுக்குகிறான் என்ற சுலோகமே! அதாவது இனவாதத்தை கக்குவது. இதில்வரும் விளைவுகளை அவர்கள் கிஞ்சித்தும் கணக்கிட்டதில்லை அல்லது அக்கறை கொண்டதில்லை. ஏன்னெனில் தற்கால குடும்பவாழ்வு பற்றியதானே அவர்கள் சிந்தனை. சமூகத்தை பற்றியதல்லவே!. முடிந்தவரை கீறோ ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் தான். வரலாறு எம்மைப் பற்றி எப்படி எழுதப் படப்போகிறது என்பதைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாதவர்கள் எமது புலிக்கு முந்திய தமிழ்தலைவர்கள். இதை தமது சமூகத்திற்கு சேவை செய்ய முற்படுகிற முயற்சிக்கிற ஒவ்வொரு தமிழனும் ஞாபகப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

    முட்டாள் கொள்ளியை கையில் எடுத்தபிறகே அதாவது 1983 க்கு பிற்படே ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கில் உலகத்தின் நான்கு திசைகளுக்கும் இடம் பெயரத் தொடங்கினார்கள் தமிழர்கள். இவர்களுக்கு இருந்தது அரசியல் ஆழுமைமைஅல்ல ஒவ்வொரு உயிர்இனத்திற்கும் தம்மை பாதுகாத்து கொள்ளுகிற தன்னுனர்வே தவிற வேறு இல்லை. ஆசாடபூபதிகளின் வாரிசுகள் எப்படியிருப்பார்கள்? அரசியல்தன்மை முழுமையாக அற்றுப்போய் சுயநலமே வாழ்வாயிற்று. விமானக்குண்டு வீச்சு பங்கர் வாழ்வு. கொலை கழுத்தறுப்பு இடப்பெயர்வு ஊட்டச்சத்தில்லாமல் தமதுசமூகம் வளர்ந்து வருதல் எந்தவித அக்கறையில்லாத தமிழ்சமூகத்தையே இன்று கண்ணெதிரேலே காண்கிறோம். நாடுகடந்த தமிழ்ஈழமும் கடந்தகால தமிழ் தவைர்களைகளைப் போலவே நச்சுப்பொதியை தன்னகத்தை கொண்டுள்ளது.

    எதுமாறாக இருந்தாலும் இந்த காடுகடந்த தமிழ்ஈழம் அல்லது அரசு வரும் காலத்தில்- கொலணி ஆதிக்கம் இன்னொருநாட்டை ஆதிக்கம் செலுத்துவது சுரண்டல் மோசடி 2010 ஆணடிற்கு பிற்பாடு ஆகுதல் மனிதநேயத்திற்கு முழுஅஆதரவை கொடுக்காது ஐரோப்பிய அமெரிக்க கடக்கரைக் நிழலில் “ஜஸ்” குடிக்கும் என்பதை உறுதியாக சொல்வேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இனியொரு தேர்தல் வரும் அதற்கும் புள்ளடி போட வேண்டும். அதில் தேசியத்தவைர் உயிரோடு இருக்கிறார்ரா? இல்லை என்பதா??
    புலம்பெயர் புண்ணாக்குகளே! இதற்கும் தயாராக இருங்கள்.

    Reply
  • thurai
    thurai

    தேர்தல் பிரச்சாரங்கழும் புலிப்பிரமுகர்களின் பேச்சுக்க்ழும் வேடிக்கை மேல் வேடிக்கை. முன்பு புலிக்கு யார் பணம் கொடுத்தாலும் பணத்தை எண்ணி வாங்கினார்கள். கொடுப்பவர்க்ளின் மனதைப் பற்ரி எதுவித சிந்தனையுமிருக்கவில்லை.

    இப்போ வேட்பாளர்களளைப் பற்ரிய பின்னணி பொதுமக்களிற்குத் தெரியாது. ஒவ்வொரு நாட்டிலும் இருந்து நானா நீயா என்னும் போட்டியில் புலிகள் குதித்து விட்டார்கள். இவர்களின் தகுதி 30 வருட காலமாக மாற்றுக் கருத்துக்காரரை பயங்கரவாதப் புலிகளிற்கு ஆதரவாக் உலகமுழுவதும் பயமுறுத்தி வைத்திருந்தமையேயாகும்.

    இப்போ ஆயுதங்கள் மவுனித்து விட்டனவாம் (இன்னமும் புலிகள் தோற்கவில்லை பின்னடைவாம்) அரசியல் நீரோட்டத்தில் இறங்கியுள்ளனராம்.
    யாராவது புலிகளின் சார்பில் இராசபக்சவிற்கு நன்றி கூறுவீர்களா?

    துரை

    Reply
  • thurai
    thurai

    //தேசியத்தவைர் உயிரோடு இருக்கிறார்ரா? இல்லை என்பதா??
    புலம்பெயர் புண்ணாக்குகளே! இதற்கும் தயாராக இருங்கள்.//

    புலம்பெயர் மக்கள் தவறுகளை உணர்ந்துள்ளார்கள். கோடை விடுமுறையில் உருக்திரக்குமார் தேர்தலை நாடத்தியிருந்தால் நாடுகடந்த தமிழீழமா அல்லது புலிகலில்லாத ஏ9 பாதையா புலத்துத் தமிழர்கள் விரும்புகின்றார்களெனத் தெரிந்திருக்கும்.

    துரை

    Reply
  • pandithar
    pandithar

    நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல.
    இதை ஒப்புவிக்க இப்படி ஒரு நாடகமா?..
    சும்மா புலுடா விடாதீர்கள்.
    13 இல் இருந்து தொடங்குவோம் வாருங்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    தொல்லைகாட்ச்சியில் ஒருவர் வந்து தான் பளய போராளியாம்; புதிய போராளியாய் செயல்பட தனக்கு கீழ்காணும் இலக்கத்துக்கு நேரே குத்துங்கள் என சொல்லுகிறார்; இது லண்டனில் நடக்கும் தேர்தலுக்கான விளம்பரமாம்;

    அட பாவி பயலே திரும்பவும் காட்டுக்கை கூட்டிசென்று காவு கொடுக்க திட்டமா??

    அது சரி பளய ஏமாளி சரி எந்த பாடசாலை போராளி என சொன்னால்தானே பல்லி போன்றோருக்கு புரியும்;

    இவர்களை தெரியுமா??

    அருள் ஆனந்தம்;
    சிவராஜ்:
    ஸ்தேபன்;
    பாலசந்திரன்;
    அகிலன்;
    ராஜா வர்மன்
    துரையப்பா ஜோசப்;
    ஸ்தெபன் சுரேந்திரன்;
    சக்தி கிருசாந்தி,

    தெரியவில்லையா??

    எல்லாம் மே 2 சமாசாரம்தான்,
    தொடரும் பல்லி;

    Reply
  • விசுவன்
    விசுவன்

    பொட்டரின் புதிய அறிக்கை ஒன்ற வந்துள்ளது! பொய்யோ மெய்யோ நா.க.தவினருக்கும் பொட்டு வைக்க்படும் போல் தான் உள்ளது.

    பொட்டுவின் அறிக்கையை வாசிக்க இங்கே சொடுக்கவும்!

    http://www.viduthalaipulikal.info/pottu1.html

    Reply
  • santhanam
    santhanam

    பனாங்கொடை முகாமிலிருந்து பொட்டு எழுதியுன்னார் மிகவும் அவதானம்.

    Reply
  • Ajith
    Ajith

    Here, we are gainst Tigers, Tamils, Tamil Forum, and those who interested in liberation of tamils from racist Sinhala oppression. Back home we are helping Sinhala racists to build Buddha’s statues around the North-East, Sinhala settlements in tamils land and establishing Sinhala military in every inch of land to protect Sinhala and Buddha. Who are these people? It is people to decide!

    Reply
  • thurai
    thurai

    அஜீத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள். என்னைப் பொறுத்தவரையில் 1960 ஆண்டு யாழ் கச்சேரி சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டவன். இதேபோல் புலி எதிர்ப்பாளர்கள் பலரும் ஏதோ ஒரு வகையில் தமிழரின் விடுதலைக்கு பங்களித்தவர்கழும், பங்களிக்க விரும்புபவர்கழுமே.

    நீங்கள் கூறும் அமைப்புகளை திரைமறைவில் தமிழரில் அக்கறையற்ர ஓர் சுயநலக் கூட்டம் கட்டுப்பாட்டில் வைத்து நடத்துகின்றார்க ளென்பதையும் இதுவே தமிழரின் இன்றைய நிலமைக்கு காரணமென்பதையும் புரிந்தவர்களே இங்கு எழுதுவோர். இதனை கருத்திற்கொண்டு நீங்க்ழும் செயற்பட்டால் நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தலாமல்லவா.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    கனடாவில் இந்த நாடு கடந்த சுடலைக்கு தேர்தல் என்றதும் அதே “பழைய” புலிக் கேடிகள் போட்டியிடுவதுடன புதிதாக புதிய ஒரு “கம்பனிக்கு” காசு கட்ட வேண்டும் என்றும் வேண்டியுள்ளனர். அந்தக் கம்பனியின் பெயர் CANADIAN TAMIL DEMOCRATIC ALTERNATIVE என்பதாகும்.

    அந்தக் கம்பனி 18 மார்ச் 2010 இல்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பங்காளிகள் அல்லது பணிப்பாளர்கள் பின்வருமாறு:
    சார்ல்ஸ் தேவசகாயம், சுப்பிரமணியம், இராசரத்தினம், ஹரோல்ட் கார்டினர், ஜெயமதி சிவசோதி.
    தேவசகாயம் முன்னர் “கனடா தமிழீழச் சங்கம்” என்ற அமைப்பில் இருந்ததுடன் புலிகளின் தமிழ் ஈழத்தில் தான்தான் யாழ்ப்பாண மாவட்ட அதிபர் என்றும் சவடால் அடித்தவர்.

    சு. இராரசரத்தினம், அந்த சங்கத்துக்கு வங்குரோத்து அடித்து மூடும் வரையில் பொருளாளராக இருந்தவர். இவர் முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உடுவில் அமைப்பாளராக இருந்து புலிகளால் கொல்லப்பட்ட குமாரசாமி விநோதனின் ஆளாக இருந்தவர்.

    கார்டினர் என்பவர் முன்னாள் உலகத்தமிழர் இயக்க தலைவரின் உறவினர். இவர் டெலிமார்கட்டிங் மோசடியில் அகப்பட்டு சிறை சென்றவர்.

    இவர்கள் அனைவரும் புலிகள் என்று எல்லோருக்கும் தெரியும். இவர்களில் ராசரத்தினத்தைத் தவிர மற்ற மூவரும் தேர்தலில் நிற்பதாகவும் அறிவித்தல்களும் படங்களும் பிரசுரமாகி உள்ளன. ஜெயமதி சிவசோதி போட்டியில்லாமலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கனடா தமிழ் ஈழச் சங்கம் கனடிய அரசிடமிருந்து ஐம்பது மில்லியன்கள் பெற்றுள்ளதாகவும் அதனை கள்ளக் கணக்குகள் காட்டி மூடி விட்டு ஓடியவர்களே இப்போது “நாடு கடந்த அரசு” அமைக்க புறப்பட்டவர்கள் என்றும் ஒரு துண்டுப்பிரசுரம் வெளிவந்துள்ளது.

    கனடாவில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு சாதாரண சங்கத்தையே நடத்த வக்கில்லாத இந்தக் கும்பல் ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா என்றும் அந்த பிரசுரம் வினாவியுள்ளது.

    இந்தக் கோஷ்டியின் புளுகுகளை அவர்களது
    CPTGTE.ORG.
    இணையத்தளத்தில் பார்வையிடலாம்!

    Reply
  • thurai
    thurai

    வாக்குப்போடப் போகின்றவர்கள் சிறிது சிந்தித்தால் நல்லது.
    அங்கத்தவர்களாக தெரிவு செய்தவர்களே அரசாங்கத்திற்கும் அங்கத்தவர்களிற்கும் பராமரிப்புப் பணம் செலுத்த வேண்டிவரும்.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    நாடு கடந்த தமிழீழம் போல, இனி பிரபாகரனுக்கு ஒரு வீட்டையும் புலத்தில் கட்டுங்கள். இதுவும் காசு மரம் காய்க்கும் உத்தி. வியாபாரிகளின் சாக்குகள் நிறையும். இதோ அதற்கான செய்தி:

    பிரபாகரனது வீடு அரச படைகளால் அழிக்கப்பட்டது – பீபீசீ
    —————————————————–
    The north Sri Lankan ancestral home of Tamil Tiger rebel leader Velupillai Prabhakaran has been demolished by the Sri Lankan army, Tamil politicians say.

    The house was situated in the Valvettithurai area of the northern Jaffna peninsula.

    The army told the BBC it had not demolished the house.

    The Tamil Tiger leader was killed and his rebel movement defeated after heavy fighting in the north last May brought nearly two decades of war to an end.

    Must-see attraction

    “The Sri Lankan Army was guarding this place. They were not allowing anyone to visit the area. They have been demolishing the house bit by bit for the past few weeks,” former Tamil Member of Parliament Sivajilingam told the BBC.

    “I have written to the president about this. But when I went back there [on Wednesday] the house was reduced to rubble.”

    Prabhakaran spent his childhood at the house with his siblings.

    Prabhakaran’s father, Thiruvenkadam Velupillai, died earlier this year and was cremated in Valvettithurai.

    The house was badly damaged during army operations of 1987 – the rebel leader’s family had left it four years earlier.

    The end of fighting in the north has attracted thousands of tourists from the south, and for many Prabhakaran’s house was among the must-see attractions in Jaffna.

    “Thousands of people were coming and seeing the house everyday. This might have angered the authorities,” Sivajilingam said.

    But the army denies any wrongdoing.

    “It is not correct. We completely deny this allegation,” army spokesman Prasad Samarasinge told the BBC.

    “We have not destroyed any house of Prabhakaran in the country. The army has not done a thing like that.”

    But Tamil sources say that the military want to rid Sri Lanka of any memory of the rebel movement.

    They claim a number of Tamil Tiger war graves have also been destroyed over the past year.

    Reply
  • Ajith
    Ajith

    Thurai,
    I appreciate your contribution towards liberation of tamils from racist Sinhala oppression. You cannot win the minds of the tamils by associating the racist Sinhala regimes and critising LTTE. Most of those commenting against LTTE are aged and cannot think beyond the boundaries. It is very clear that Sinhala racists want to establish Sinhala only nation. They are together as a community is fully engaged with that vision since British left this country. It is sad that you all are fallen in to the hands of those Sinhala Buddhists fundamentalist. LTTE may have done mistakes or there approach may be wrong. They are our children, brothers, sisters. None of the Sinhala including the so called leftists never voiced agaisnt Sinhala oppression. Sinhala people always elected those parties who prepared to take the rights away from tamils. This group uses all its efforts towards removing LTTE but not prepared even to point a single finger aginst Sinhala racist regimes. If you don’t deny that a number your group members were with Rajapakse during his election campagin. Let come out from the boundaries and myths and doing propaganda for Rajapakse and Sinhala nationalists.I hope you all will join the struggle for liberating tamils from Sinhala racisim.

    Reply
  • thiru
    thiru

    கவலை வேண்டாம். அடுத்ததிட்டம் புலம்பெயர்நாடொன்றில் பிரபாகரன் சரணாலயம். காசு கறக்க வருவோம்! தயாராகுங்கள்!!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /….வாக்குப்போடப் போகின்றவர்கள் சிறிது சிந்தித்தால் நல்லது. அங்கத்தவர்களாக தெரிவு செய்தவர்களே அரசாங்கத்திற்கும் அங்கத்தவர்களிற்கும் பராமரிப்புப் பணம் செலுத்த வேண்டிவரும். துரை…./

    உண்மைதான், ஸ்ரீலங்கா மக்கள் மாதிரி அரசைத் தெரிவுசெய்துவிட்டால் பின்னர் அரசு உலகம்முழுவதும் கையேந்தி தனது ‘மந்திரி சபை’க்கு ‘பராமரிப்புச்’ செய்வது போல் வருமா?

    Reply
  • thurai
    thurai

    அஜீத் கூறிய தமிழர் சிஙக்ளவர் பிரச்சினை உண்மையானதும் மறுக்க முடியாததுமாகும். புலிகளில் போரில் இறந்தவர்கழும் மற்ர அமைப்புகளிலிருந்து புலிகளால் கொல்லப்பட்டவர்க்ழும் இன்ப் பற்ருடையவ்ர்களென்பதை ஏற்காமல், புலிகளால் கொல்லப்பட்டோர் எல்லாம் துரோகிகள் என்னும் கருத்தை புலிகள் பரப்ப்பும் போது, புலிகளை தமிழரின் விடுதலையோடு எவ்வாறு சம்பந்தப்படுத்த முடியும்?

    அதோடு ஆங்கிலேயரின் காலத்தில் தமிழரிடம் விடுதலை பற்ரிய பேச்சே இல்லாமலிருந்ததன் காரணமென்ன? இது ஓர் ச்மூகக்குறைபாடே தவிர ஆங்கிலேயரின் வல்லமையில் தங்கியிருக்க்கவில்லை. இவ்வாறு பல சமூகக் குறைபாடுகளைக் கொண்டிருந்த் சமூகத்திடம் விடுதலையை உணர்த்துவதும், போராடவைப்பதும், பசியில்லாதவ்னிற்கு அன்னதானம் செய்வது போலாகும்.

    இறுதியில் நான் கூறுவது சிங்கள்வர்களிற்கு நன்மை தராத சிங்கள அரசும், தமிழர்க்ளிற்கு நன்மை கொடுக்காத புலிகழுமே தமிழ் சிங்கள் பிரச்சினையால் மேலோங்கி வாழ்கின்றன.

    புலிகளின் உலகுதழுவிய நடவடிக்கைகளாலும், இவர்களே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொன்னதால் தமிழர்களின் உருமைப் போரட்டமும் இந்தநிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதென்பதை ஏன் இன்னமும் உங்களால் உணரமுடியவில்லை?

    துரை

    Reply
  • thurai
    thurai

    நாளை நாடுகடந்த அரசின் தேர்தல். இன்றுவரை சில இடங்களில் வாக்குச்சாவடி எங்கென்றே மக்களிற்குத் தெரியாது. அமைப்பாளர்களின் முகவரியோ தொலைபேசிகளோ பகிரங்கப்படுத்தப்படவில்லை. காரணம் யாவரும் புலிகளேயாகும்.

    வியாபாரிகளிற்கு விளம்பரம் செய்யும் ஜிரிவி தான் புலிகளின் நாடுகடந்த அரசிற்கும் விளம்பரம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

    துரை

    Reply
  • vasee
    vasee

    ஒற்றுமை ஒற்றுமை என்று பாடீக்கொண்டு ஏன் இந்த தேர்தல்?
    எல்லாரும் ஒரே குறிக்கோள்தானே! பிறகேன் முட்டிமோதுவான்? உங்களுக்குள் பார்த்து ஒரு இணக்கத்திற்கு வரமுடியாதோ? யாராவது ஒரு வேட்பாளர் உங்கள் இலட்சியத்திற்கு எதிராக நின்றால் உங்கள் தேர்தல் நியாயமானது? யாராவது இந்தக்கேள்வியை ஒருக்கா ஜரிவி ஜெகனிடமோ அல்லது தினேசண்ணாவிடமோ கேட்டுச்சொல்லமாட்டீர்களா?

    Reply
  • thurai
    thurai

    //யாராவது இந்தக்கேள்வியை ஒருக்கா ஜரிவி ஜெகனிடமோ அல்லது தினேசண்ணாவிடமோ கேட்டுச்சொல்ல மாட்டீர்களா//

    இலங்கையில் பிரச்சினை இல்லாவிட்டால் ஜிரிவி யே இருக்காது. இப்படியான் தேர்தல் கூத்துக்க்கள் இல்லாமல் ஜெகனிற்கும் தினேசிற்கும் பேச்சு வராது. அதோடு தலைவரென்றால் ஒரு தலவன் விடுதலை இயக்கமென்றால் புலிகள் மட்டும். தேர்தலென்றால் போட்டியாக் ஒருவரும் இல்லாவிட்டாலும் வந்து ஒருவரிற்கே யாவரும் போடுங்கள் என்று அழைக்கின்றார்கள்.

    தமிழர்களிற்கு ஓர்நாடில்லையென்று கூறி நாடுகடந்த அரசாங்கம் அமைக்கின்றார்கள். இவர்களின் அரசியல் தலைமை அலுவலகம் எங்குள்ளதோ தெரியாது. உருத்திரக்குமாரின் திரை மறைவிலிருந்து இந்த தேர்தல் நாடகத்தை யார் நடத்துகிறார்களென்பதை அறிவது சுலபமல்ல. ஆனால் இலங்கையில் புலிகள் வன்னிமக்களிடம் மறைவிடம் தேடிப்போய் இறுதியில் பாதுகாத்த மக்களிற்கு முள்ளிவாய்க்காலை பரிசாக வழங்கினார்கள்.

    இதேபோலவே புலத்துப் புலிகள் புலம்பெயர் மக்களிடம் நாடுகடந்த அரசைக் காட்டி (அமைத்தல்ல) பதுங்கி வாழ விரும்புகிறார்கள். இதில் ஜிரிவி காட்டும் முகங்கழும் தேர்தலை முன்னின்றுநாட்தும் அப்பாவிகழும் நாளை எந்த நாட்டுப் பொலிசாரிற்கு விருந்தாளியாவார்களோ தெரியாது.

    துரை

    Reply