இலங்கை யில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தக்கூடாதென பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனை வலியுறுத்தி தமிழ்க் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில், சகலரினதும் உணர்வுகளுக்கு நிச்சயமாக தான் மதிப்பளிப்பேன் என்று அமிதாப் பச்சன் நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.
தமிழ்க் குழுவொன்று எனது வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இலங்கையில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்த வேண்டாமென என்னைக் கேட்டுக்கொண்டது. இந்தத் திரைப்பட விழாவை நடத்துவது விஸ் கிராவ்ட் என்ற அமைப்பாகும். அதன் அதிகாரிகளிடம் நான் இதுதொடர்பாகக் கதைத்துள்ளேன். இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக என்னை வந்து சந்திக்குமாறு கேட்டுள்ளேன். இதற்கு உரிய அளவு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று இந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கான கௌரவத் தூதுவரான அமிதாப் பச்சன் தனது இணையத்தளத்தில் தெரிவித்திருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டிருக்கிறது.
மும்பாயில் உள்ள அமிதாப் பச்சனின் பிரதிக்ஸா பங்களாவிற்கும் ஜால்ஸா வாசஸ்தலத்திற்கும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழர்கள் சிலர் ஊர்வலமாக சென்றுள்ளனர். கொழும்பில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் விழாவை பகிஸ்கரிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, கனடாவிலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய தமிழ் காங்கிரஸும் அமிதாப் பச்சன் இலங்கைக்கு செல்வது தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது.
thurai
உலகத்தமிழர்களின் உருமைகளிற்கான ஒரே தொலைக்காட்சியென கூறி பண வசூல் செய்வது ஜிரிவி என்பது யாவரும் அறிந்ததேயாகும். இவர்கள் இலங்கைப் பொருட்களை பகிஸ்கரிக்கச் சொல்லும் அதே குரலில் அடுத்த நிமிடம் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டுமானால் எங்கழுடன் தொடர்பு கொள்ழுங்கள் என்னும் விளம்பரத்தையும் கூறி காட்டுவார்கள்.
புலியை வளர்த்தவர்கள் புலியின் பல்லையும் களட்டி விற்ரு பணமாக்கி விட்டார்கள். தமிழீழக் கூச்சல் போட்டவர்கள் போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். தமிழரென்னும் வெறி மக்களிடையே இல்லாது போனால், தென்னிந்தியாவில் புலிகளிற்கும் அரசியல் வாதிகளிற்கும் தொழிலே கெட்டுப் போய் விடும்.
தம்பியும் புலியும் வன்னியில் இருந்திருந்தால் மிரட்டல் வேறுவிதமாக இருந்திருக்கும். முதலில் கோடிநன்றிகள் இராசபக்சவிற்கு திரைப்பட உலகின் சார்பில்.
துரை
குமார் பாலா
thurai on April 27, 2010 2:44 pm
“முதலில் கோடிநன்றிகள் இராசபக்சவிற்கு திரைப்பட உலகின் சார்பில்.
thurai on April 27, 2010 8:14 am
டக்ளசையும், இராஜபக்சவையும் கொடூரமானவர்களென்போர் சந்தோசமாக இருக்கலாம். ஏனெனில் இலங்கையில் இவர்களிருவருமே இலங்கையில் குற்ரவாளிகள். இப்படியாக இரு குற்ரவாளிகளை மட்டும் கொண்ட நாடு இலங்கை மட்டும்தான்.
என்ன துரை,5 1/2 மணித்தியாலத்துக்குள் இப்படி பல்டி அடிக்கிறீர்கள்?
கொடூரமான குற்றவாளிகளுக்கு கோடி நன்றிகளா? பாவம் நீங்கள் ரொம்பத்தான் குழம்பி இருக்கிறீர்கள்!
thurai
//என்ன துரை,5 1/2 மணித்தியாலத்துக்குள் இப்படி பல்டி அடிக்கிறீர்கள்?
கொடூரமான குற்றவாளிகளுக்கு கோடி நன்றிகளா? பாவம் நீங்கள் ரொம்பத்தான் குழம்பி இருக்கிறீர்கள்//குமார் பாலா
நான் கூறிய நன்றி திரைப்பட உலகின் சார்பில். ஏனெனில் கொலை பயமுறுத்தல்கள் புலிகளால் நடிகர்களிற்கு ஏற்படாததால்.
ஜிரிவின் நேயர்களிற்கும், புலிகளின் பக்த்தர்களிற்கும் இலங்கையில் டக்ளசும், இராஜபக்சவுமே கொடூரமான்வர்கள். எனவே இந்த இரண்டுபேரினால், நாட்டையே பாய்ஙரவாதமான நாடாக தீர்மானிக்கமுடியாது. புலிகளின் 15 வயதுள்ள சிறுவன் 60 வயது வயோதிபரை தண்டித்தமை டக்ளஸ்
மகிந்தாவை விட கேவலமான காலங்கள் தமிழர்களிற்கு.
இதனையே விளங்க வைத்தேன்.
துரை
குமார் பாலா
“நான் கூறிய நன்றி திரைப்பட உலகின் சார்பில். ஏனெனில் கொலை பயமுறுத்தல்கள் புலிகளால் நடிகர்களிற்கு ஏற்படாததால்.”
நீங்கள் ஏன் ‘பயமுறுத்தல் ஏற்படாத’ நடிகர்கள் சார்பில் புலிகளை அழித்ததற்கு நன்றி செல்ல வேண்டும். பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்? மேலும் திரைப்பட உலகின் சார்பில் நன்றிகூற நீங்கள் ‘நடிகரா’ இல்லை ‘இயக்குனரா’ ? மிக நன்றாகத்தான் பல்டி அடிக்கிரீர்கள்! அத்துடன் ஸ்ரீலங்காவில் சாருக்கான் கலந்து கொண்ட விழாவில் குண்டு வீச்சு நடந்தது உங்களுக்கு மறந்திருக்கலாம். அதைச் செய்தவர்கள் புலிகல் அல்ல என நினைக்கிறேன்!
டக்ளஸ், ராஜபஹ்சாவினால் எவ்வாறு நாட்டை பயங்கரவாத நாடாகத் தீர்மானிக்க முடியாதொ அதேபோல ‘புலிகள்’ பெயரில் ஒட்டுமொத்த தமிழரையும் ‘பயங்கரவாதிகள்’ ஆக்க நீங்கள் அப்பப்போ எழுதும் கருத்துகளையும் ஒரு கணம் சிந்தியுங்கள்!
thurai
//டக்ளஸ், ராஜபஹ்சாவினால் எவ்வாறு நாட்டை பயங்கரவாத நாடாகத் தீர்மானிக்க முடியாதொ அதேபோல ‘புலிகள்’ பெயரில் ஒட்டுமொத்த தமிழரையும் ‘பயங்கரவாதிகள்’ ஆக்க நீங்கள் அப்பப்போ எழுதும் கருத்துகளையும் ஒரு கணம் சிந்தியுங்கள்!//குமார் பாலா
புலிகளினதும், சில தமிழர்களினதும் செயல்களினால் ஒட்டு மொத்த தமிழர்களைப் பற்ரிய் அபிப்பிராயம் உலகினில் எவ்வாறுள்ளதென்பதை நான் இங்கு கூறவேண்டியதில்ல்லை.
முள்ளிவாய்க்காலில் மக்கள் அவலப்படும்போது உலகம் கண்மூடியிருந்த்து புலிகளை விமர்சிப்பவர்களாலல்ல. புலிகளை ஆதரித்தவர்களின் செயல்களினாலேயே.
//மேலும் திரைப்பட உலகின் சார்பில் நன்றிகூற நீங்கள் ‘நடிகரா’ இல்லை ‘இயக்குனரா’ ? //குமார் பாலா
சீமான் அண்ணன் நமக்காக குரல் கொடுக்கின்றாரல்லவா அதற்காக.
துரை
சாந்தன்
‘….சீமான் அண்ணன் நமக்காக குரல் கொடுக்கின்றாரல்லவா அதற்காக….’
அப்படியா சங்கதி. புலிகளால் ‘பயமுறுத்தல் ஏற்படாத’ சீமான் அண்ணனுக்காகவா நன்றி சொன்னீர்கள். இப்ப புரியுது!
‘புலிகளினதும், சில தமிழர்களினதும் செயல்களினால் ஒட்டு மொத்த தமிழர்களைப் பற்ரிய அபிப்பிராயம் உலகினில் எவ்வாறுள்ளதென்பதை நான் இங்கு கூறவேண்டியதில்லை.’
புலிகளால் வந்தபோது தமிழர்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை ஆனால் டக்ளஸ், ராஜபஹ்சாவினால் வந்தால் நீங்கள் ஸ்ரீலங்காவின் நல்ல பெயரைக் காப்பாற்ற ஓடோடி வருவீர்கள் அப்படித்தானே?
thurai
//புலிகளால் வந்தபோது தமிழர்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை ஆனால் டக்ளஸ், ராஜபஹ்சாவினால் வந்தால் நீங்கள் ஸ்ரீலங்காவின் நல்ல பெயரைக் காப்பாற்ற ஓடோடி வருவீர்கள் அப்படித்தானே?//சாந்தன்
புலிகழும், புலிக்குணமும் தமிழர்களிடமிருந்து துடைதெறியப்பட வேண்டியவைகள். டக்ளஸ்சும், ராஜபசவும் அரசியல்வாதிகள் இன்று வருவார்கள் நாளை போய் விடுவார்கள்.
இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதால் புலிகளின் பயங்கரவாதம் அழிந்து போகாது. புலத்தில் வாழும் தமிழர்களை ஏமாற்றுவோரிற்கு ஓர் வாய்ப்பாக இலங்கை அரசியல் வாதிகளின் செயல் அமைகின்றதே கவலைக்குரியது.
//அப்படியா சங்கதி. புலிகளால் ‘பயமுறுத்தல் ஏற்படாத’ சீமான் அண்ணனுக்காகவா நன்றி சொன்னீர்கள். இப்ப புரியுது//சாந்தன்
பயமுறுத்தலா? புலிப்பாலை குடித்து, புலியின் பணத்தில் வாழும் சீமானல்லவா? இவர்தானே புலிகளின் தமிழகப் பிரதிநிதி. ராஜீவிற்கு தம்பி என்ன செய்தாரோ அதனையே மற்ர வட இந்தியர்களிற்கும் செய்யக்காத்திருக்கக் கூடியவர்.
புலத்துப் புலிகளிற்கு மிச்சமாக்வுள்ள ஒரே ஸ்ரண்ட் சீமான்தான். புலிகள் பயமுறுத்தல்காரர், கொலைகாரர் என்றும் இப்படியானவர்களிற்கும் தமிழரின் விடுதலைக்கும் சம்பந்தமுமில்லை என்பதை ஏற்றுள்ளமைக்கு சாந்தனிற்கு நன்றிகள்.
துரை
சாந்தன்
/…ஏனெனில் இலங்கையில் இவர்களிருவருமே இலங்கையில் குற்ரவாளிகள். இப்படியாக இரு குற்ரவாளிகளை மட்டும் கொண்ட நாடு இலங்கை மட்டும்தான்…/
/…டக்ளஸ்சும், ராஜபசவும் அரசியல்வாதிகள் இன்று வருவார்கள் நாளை போய் விடுவார்கள்…//
குற்றவாளிகள், பயங்கரவாதிகள், அரசியல்வாதிகள்…வருவார்கள் போவார்கள், ஆனால் 1956 இல் இருந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்….செய்த ஒப்பந்தங்களை கிழித்து வேறு எறிந்து கொண்டிருக்கிரார்கள்…..
//…இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதால் புலிகளின் பயங்கரவாதம் அழிந்து போகாது….//
அரசியல்வாதிகளை வெறும் ‘குற்றவாளிகள்’ என வெள்ளையடிப்பதால் ‘பயங்கரவாதம்’ அழிந்து போகாது. (உ.ம்: இஸ்ரேல்/பாலஸ்தீனம்)
//… புலத்தில் வாழும் தமிழர்களை ஏமாற்றுவோரிற்கு ஓர் வாய்ப்பாக இலங்கை அரசியல் வாதிகளின் செயல் அமைகின்றதே கவலைக்குரியது….//
ம்..நன்றாகத்தான் கவலைப்படுகிறீர்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழரையும் குற்றவாளிகளாக்குகிறீர்கள்.
thurai
//ஆனால் 1956 இல் இருந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்….செய்த ஒப்பந்தங்களை கிழித்து வேறு எறிந்து கொண்டிருக்கிரார்கள்//சாந்தன்
ஆனால் 1983 இல் இருந்து 2010 வரை தமிழீழப் போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் தமிரைக் கொல்வதும், உலகெங்கும் ஈழ்த் தமிரரென்றால் பயங்கரவதிகள் என் பெய்ர் கிடைத்த்தும் யாராலென் சிந்தித்து செய்ற்படுவதே தமிழர்களிற்கு நன்மை தரும்.
துரை
sumi
அமிதாப்பச்சனிடம் புலிப்பினாமிகள் (சீமான் உட்பட) எதை எதிர்பார்க்கிறார்கள். இந்த வசூல் மன்னர்களுக்கு வாய்க்கரிசி விழுந்தாலே போதுமே. அப்புறம் எந்த பிரச்சினையுமே இருக்காதே. இதைப்புரிந்து கொள்ள பச்சனுக்கு இவ்வளவு காலம் தேவையா? அல்லது பனங்காட்டு ந்ரியிடம் சலசப்பு சரிவராதோ? தமிழர்கள் உணர்வுகளுக்கும் பொலிவூட் சினிமாவுக்கும் என்ன சம்மந்தம்?–வசூலா??
மாயா
சில தினங்களுக்கு முன் அ.மாக்ஸ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாழ் பயணம் குறித்த உண்மைகளை மேடையில் பேசிக் கொண்டிருந்த அ. மாக்ஸை தாக்க சீமானின் சீடர்கள் ஏறியதாகவும், தரம் குறைந்த வார்த்தைகளால் ஏசியதாகவும், தமிழர்களுக்கு தமிழீழம்தான் என சொல்லு என கத்தியதாகவும் சொல்லி வேதனைப்பட்டார். விகடன் தான் எழுதிக் கொடுத்த கட்டுரையை புலிகளுக்கு சார்பாக மாற்றி வெளியிட்டு விட்டார்கள் என வேறு சொன்னார். உண்மையான கட்டுரை தீராநதியில் வந்து கொண்டு இருப்பதான தகவலை சொன்னார். இதுதான் புலிகளின் அல்லது புலி ஆதரவாளர்களது ஜனநாயகம்.
அமிதாப் , ராஜீவின் நெருங்கிய நண்பர். அவருக்கு புலிகளது போதனை என்ன செய்யப் போகிறது?
NANTHA
அமிதாப் இந்திய சினிமாவின் ஒரு பெரும் தூண். அவரது முடிவை தமிழ் கோமாளிகள் மாற்ற முடியாது. தவிர இந்திய சினிமா படங்களுக்கு இலங்கை எப்போதுமே ஒரு பெரும் சந்தை. தமிழ் படங்கள் பெரும்பாலும் ஹிந்தி சினிமாவின் பிரதிகளே. பெரும்பாலான “தமிழ்” சினிமா தயாரிப்பாளர்கள் ஹிந்தி சினிமாப்படம் தயாரிப்பின் மூலமாகவே கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
அறுபதுகளில் ஹிந்தி சினிமாவை பகிஷ்கரியுங்கள் என்று திமுக கூறியது. பின்னர் “ஜனார்த்தனன்” மூலமாக ஹிந்தி சினிமாவை தமிழ்நாட்டில் பாருங்கள் என்று கூற வைத்தனர்.
சினிமாத் தொழிலில் லாபம் காணாத சில போக்கிரி சீமான்கள் சில ரவுடித்தனம் பண்ணுகிறார்கள். அது எத்தனை நாளுக்கு?
thurai
சிங்களவர் இலங்கையில் மட்டும் தமிழரின் உருமைகளைப் பறிக்கின்றார்க்ளென ஏற்றுக்கொள்வோம் ஒன்று சேர்ந்து போராடுவோம். தமிழர் வாழுமிடமெல்லாம் தமிழர்களின் உருமைகளை பறிக்கும் புலிகளை என்ன செய்வது?
இதற்காகத்தான் உலகமே பயங்கரவாதப் புலிகளாக்கிவிடார்கள். இதனை இன்னமும் புரியாதவ்ர்கள் தமிழருமில்லை, மனிதருமில்லை. இவர்கள் புலிகளேயாகும்.
துரை