நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது!

dutch_policeஏப்ரல் 26ல் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக நெதர்லாந்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சோதணையிட்ட பொலிசார் 40 000 ஈரோ பணம் மற்றும் அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணணிகள் தொலைபேசிகள் புகைப்படங்கள் டிவிடி க்கள் என்பனவற்றை கைப்பற்றி உள்ளனர்.

நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களில் உள்ள வீடுகளையும் கட்டிடங்களையும் பொலிசார் சோதணையிட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டதாக நெதர்லாந்தின் தேசிய பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. நிதி சேகரிப்பது நிதி சேகரிப்பு நிகழ்வுகளை நடாத்தி நிதி சேகரிப்பது கலண்டர் டிவிடி என்பனவற்றை விற்பனை செய்து நிதி சேகரிப்பது சட்ட விரோதமான வாக்களிப்பை நடாத்தி நிதி சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடங்குவதாகவும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப் பின்னலுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் Tamil Coordinating Committee (TCC), the Tamil Rehabilitation Organisation (TRO), Tamil Youth Organisation (TYO), Tamil Women Organisation (TWO) and Tamil Arts and Cultural Organization Netherlands (TKCO), ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் எனத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2006ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யப்பட்டனர். 2008ல் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து பலரைக் கைது செய்திருந்தது. அதன் பிற்பாடு இவ்வாண்டு ஜேர்மன் அரசு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு சிலரைக் கைது செய்தும் இருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • thurai
    thurai

    தலைவர் இப்படி நடக்குமென்று தெரிந்திருந்த படியால்தான் தீர்க்க தரிசினத்துடன் இளம் சமூகத்தினரின் கைகளில் புலம்பெயர் நாடுகளில் பொறுப்புக்களை ஏற்கனவே ஒப்படைத்து விட்டார்.

    வன்னியில் தலைவரை நம்பியவர்களிற்கு முள்ளிவாய்க்காலும், புலம்பெயர் நாடுகளில் பொலிசாரின் விருந்தும் கிடைக்கின்றது. இனிமேல் இளம் சமூகத்தினரிற்கு உருத்திரகுமார் என்ன பரிசு கொடுத்துவிட்டு ஓடப் போகின்றாரோ தெரியாது.

    அன்று தமிழீழ விடுதலைக்கு புலிகள் பணம் கேட்டனர். இன்று பொலிசாரிடமிருந்து புலிகளை விடுவிப்பதற்காக இளம் சமூகத்தினர் பணம் கேட்கின்றனர்.

    துரை

    Reply
  • வாசு
    வாசு

    இலண்டனிலும் புலிகளின் முக்கிய புள்ளிகளின் வீடுகள் முற்றுகையடப்பட்டுள்ளது. கைதுகள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை ஆனால் கணனிகள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன!

    Reply
  • thurai
    thurai

    சில இணயத்தளங்க்ளில் மனிதநேயப் பணியாளர்களையே கைது செய்துள்ளதாக் எழுதுகின்றார்கள்.

    தமிழில் மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிப்பதற்குப் பெயர் மனிதநேயமென்று புலிகளின் தமிழ் அகராதியில் எழுதப்பட்டுள்ளதோ தெரியவில்லை. கொலை செய்தவரை கைது செய்தால் வைத்தியராகி விடுவாரோ?

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    நெதர்லாந்தில் கைதான 7 பேரில், மதியீசன் என்பவர் கேபீயை விட முதன்மையான தலைவர் என , இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி மதியீசன் , பிரான்ஸ் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தவிர அவரிடம் இருந்து அவரது பெயரில் இருந்த ஜெர்மன் மற்றும் சுவிஸ் கடவுச் சீட்டுகளும் போலீசாரால் கைப்பற்றபப்பட்டுள்ளன. இவர் நெடியவனாக இருக்கலாமோ எனும் சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரைத் தெரியவில்லை.

    Reply