சிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்

mervyn2.jpgஊடகத் துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார். தகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாகக் கையேற்றார்.

அந் நிகழ்வில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த “கேக்”கை அவர் ஊடகவியலாளர்களை அழைத்து வெட்ட வைத்ததுடன் அவர்களுக்கு “கேக்” ஊட்டியும் மகிழ்வித்தார்.

கடந்த காலங்களில் சில ஊடக நிறுவனங்களுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அத்தகைய கசப்பான சம்பவங்களை மறந்து சகோதரத்துவத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் “சிரச” ஊடகவியலாளரைக் குறிப்பிட்டு “கேக்” வெட்ட அழைத்தார். அவ்வாறு வெட்டப்பட்ட “கேக்”கை சிரச ஊடகவியலாளர் அமைச்சருக்கு ஊட்ட அமைச்சரும் அவ்வூடகவியலாளருக்கு திருப்பி ஊட்டினார். அத்துடன் “திவயின” ஊடகவியலாளருக்கும் அமைச்சர் ஊட்டினார். இதன் போது ஊடகவியலாளர்கள் கரங்களைத் தட்டி ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாயா
    மாயா

    திருடனிடமே , பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைத்தால் திருட்டு நடக்காது. அது நடந்தால் அவனே பொறுப்பு. அதை லாவகமாக மகிந்த செய்திருக்கிறார்.

    எனவே அடித்த கை , அணைத்து (கேக் ஊட்டி) மகிழ்ந்திருக்கிறது. தான் மாகான் இல்லை, தன்னைத் திருத்தும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. நான் திருந்தினால், நீங்கள் மட்டுமல்ல, என் மனைவியும் மகிழ்வாள் என உண்மையை மெர்வீன் பகிரங்கமாக ஊடகவியளாளர் மத்தியில் பேசி சிரிக்க வைத்துள்ளார். “ஜனாதிபதிக்கு பக்கத்தில் இருந்த ஆசனம் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே நான் அதில் உட்காராமல் , ஜனாதிபதி காலடியில் உட்கார்ந்தேன். ஜனாதிபதி என்னை தூக்கி பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் உட்கார வைத்தார். ஜனாதிபதி காலடியில் உட்காந்த படத்தை போட்ட ஊடகம், ஜனாதிபதி பக்கத்தில் , பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உட்கார்ந்த படத்தை போடவில்லை.” என்றார் சிரிப்பொலிக்கு மத்தியில். “என் குழந்தையை வேண்டுமானால் ஜனாதிபதி மடியில் உட்கார வைக்கலாம். நான் உட்காந்தால், கொஞ்ச நேரத்துக்கு முன்ன வரை நல்லாத்தானே மெர்வீன் இருந்தான். திடீரென என்ன ஆனான்? என்று ஜனாதிபதியே யோசிப்பார்.” என சொன்ன போது பலத்த சிரிப்பு அலையே உருவானது.

    பார்க்கவும்:www.youtube.com/watch?v=Dt-EUSaM7V0&feature=player_embedded

    Reply
  • rohan
    rohan

    என்ன கொடுமை சார் இது?

    மேர்வின் சில்வா பற்றி மாயா எழுதிய வரிகள் பார்த்தேன். ஆனால், எல்லோரும் போய் சண்டே லீடர் பத்திரிகையில் ப்றெட்றிகா ஜான்ஸ் எழுதிய பத்தியைப் படித்துப் பார்க்க வேண்டும்.
    thesundayleader.lk/2010/05/02/meet-the-real-mervyn-silva/

    Reply