மீண்டும் ஒரு தேர்தல்- மே 2010 : முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

tgta.jpgஏப்ரல் 8ல் தானே இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது, பிறகு என்ன “மே தேர்தல்” என குழம்ப வேண்டாம். இது நம் நாட்டு தேர்தல் அல்ல, ஐ.இ (UK)தில் மே 6ல் நடக்கும் பொதுத் தேர்தலும் அல்ல. இது ஒரு விசித்திரமான தேர்தல். உலகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ள தேர்தல், அதுவும் புலம் பெயர் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் தேர்தல்.

மே 2ம் திகதி முக்கிய மூன்று கண்டங்களில், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா வின் முக்கிய நகரங்களில் ஒரே நாளில் “தமிழ் புலி” (Tamil tigers)களின் ஆதரவாளர்கள் இலங்கையின் இறையாண்மையில் (Sovereignty) இருந்து பிரிந்து சென்று தனியான ஒரு ஆட்சியை இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் நிறுவி “தமிழ் ஈழம்” (Tamil Ealam) என்ற தனி இறைமை கொண்ட நாடொன்றை (State) பிறசவிப்பதே இத் தேர்தலின் நோக்கு.

இத் தேர்தலுக்கு “நாடு கடந்த தமிழீழ அரசு(Transnational government of Tamil Ealam)” சுக்கான தேர்தல் என்ற பெயரும் சூடப்பட்டுள்ளது. இந்த நா.க.த.அ சின் இணைப்பாளரான அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை/அமெரிக்க சட்டத்தரணி திரு. வி. உருத்திரகுமரனின் கூற்றுப்படி தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் இலங்கை தமிழர்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் (புலி ஆதரவாளர்கள்) தனித்தனியான குழுவாக, அதாவது நா.க.த.அ சின் அங்கமாக அந்தந்த நாடுகளில் செயல்பட்டு இறுதி இலக்கை அடைய (படாத) பாடுபடுவர்.

சர்வதேச சட்டத்தில் (International Law) இந்த நாடுகடந்த அரசை தஞ்ச அரசு (Government in Exile) என்றும் அழைப்பர். இந்த தஞ்ச அரசிற்கான சர்வதேச சட்டத்தின் வரைவிலக்கணம் பின்வருமாறு அமைகின்றது:

“இறைமையுள்ள நாட்டின் (அரசொன்றின்) அரசாங்கம் அந்நிய நாடொன்றின் இரானுவத்தால் பலாத்காரமாக பறிக்கப்பட்டு, அப்பிரதேசம் அந்நிய நாட்டின் ஆதிக்கதில் இருக்கும் போது அதிகாரம் இழந்த அரசாங்கம் மூன்றாம் நாடொன்றில், அந் நாட்டின் அனுசரணையுடன் தற்காலிகமாக ஒரு அரசாங்கத்தை நிறுவுவது” என்பதாகும்.

இந்த வரைவிலக்கணத்தை இலங்கையுடன், குறிப்பாக இலங்கையின் தமிழ் பிரதேசத்துடன் (வடக்கு, கிழக்கு) பொருத்தி பார்க்கும் போது இது முற்றும் பொருந்துவதாகவில்லை. ஏனெனில் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குற்பட்டது. வடக்கு, கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனியான ஆட்சி ஒன்று நிலவவில்லை. இலங்கை ராணுவம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உள்ளடக்கிய மொத்த ஆள்புல பிரதேசத்திற்கும் சொந்தமானது. இந்த ராணுவத்தை அந்நிய நாட்டு ராணுவமாக கருத முடியாது. இந்த மே 2 தேர்தலில் போட்டி இட்டு நா.க.த.அ சின் உறுப்பினராக வர இருப்போரும் பதவி இழக்கச் செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அல்லர். எனவே இந்த நா.க.த.அ என்பது ஒரு தஞ்ச அரசாங்கம் என்ற வரைவிலக்கணத்துக்குள் வரவில்லை. ஆகவே இந்த நா.க.த.அ என்பது சர்வதேச சட்டவரம்பில் ஒரு பரிசோதனை (Experiment) மட்டுமே. பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 2:1, இருப்பினும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கிலும், நாட்டின் சமகால அரசியல் நிலைமையிலும் இது என்றும் வெற்றி பெற முடியாத ஒரு விடயமே. சுருங்கக் கூறின் ஒரு கனவு, அதுவும் பகற்கனவு.

இந்த நா.க.த.அ தேர்தலுக்காக ஐ. இரா (UK) தில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் முக்கியமாக இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான தனி நாடொன்றை மிக விரைவில் (மூன்று ஆண்டுக்குள்) அமைத்து தமிழரின் சுதந்திர வாழ்வை உறுதிபடுத்துதல், மற்றையது இனஅழிப்பு, போர்குற்றம் தொடர்பாக முக்கியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் சகோதரர், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லல் என்பவையாகும். இவை இரண்டும் நடந்தேறுவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை என்பதை இந்த தேர்தல் வேட்பாளர்கள் வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றனர். இதை விடவும் ஐ.இரா வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வேட்பாளர் ஒருபடி மேலே சென்று இந்த நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் ஆயுத வழிக்குச் செல்வதை விட வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். ஆக இவர்கள் புலிகள் முடித்த இடத்திலிருந்து தொடங்க எத்தனிக்கின்றனர் எனலாம்.

நிற்க, தமிழர்களுக்குகான தனி நாடென்பது “வட்டுக்கோட்டை தீர்மான (VaddukKodai Resolution)” த்தின் அடிப்படையை கொண்டது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானமானது இலங்கையின் பல்லினத்துவ (Multi Ethnic) தன்மையை குறுக்கி அதை இருவின நாடாக காண முற்படுவது. அதாவது இலங்கையில் சிங்களவர், தமிழர் என்ற இரண்டு இனங்களே உள்ளனர் என்றும், இந்த இனங்களுக்கே அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை (Right to self determination) உள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்கும், கிழக்கும் சேர்ந்த தமிழரின் பூர்வீக நிலத்தில் தமக்கான தனி அரசை நிறுவ தமக்கு தார்மிக ரீதியிலான அரசியல் அதிகாரம் உள்ளதாகவும். அதை சிங்கள அரசு முற்றாக நிராகரிக்கிறது என்பதுமே இந்த வேற்பாளர்களின் ஒட்டுமொத்த அரசியல் ஞானமாகின்றது. இந்த அடிப்படையிலேயே தமது நா.க.த.அ சுக்கான கோரிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த நியாயப்படுத்தலை தான் சர்வதேசத்திடமும் கொண்டு செல்லவுமுள்ளார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் இன்னொரு தேசிய இனத்தால், அதாவது இலங்கை சோனகர்களால் (Sri Lankan Moors) நிராகரிக்கப்பட்டது. தமிழர் சொல்லும் பூர்வீக நிலம் என்ற பிரதேசத்தில் சோழனின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு முன்பே சோனகர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே அப்பிரதேசம் தமிழரைவிட சோனகர்களுக்கே அதிகம் உரித்துடையது. இந்த வகையில் இலங்கையின் கிழக்கு தொடர்பாக பேசும் போது அல்லது அது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும் போது இலங்கை சோனகர் புறந்தள்ளபட முடியாதுள்ளனர். எனவே அவர்களின் விருப்பு இல்லாமல் அந்த பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் அதிகாரம் இல்லை. மேலும் இந்த இலங்கை சோனகர் தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கும் போது அத்தகைய சூழ்நிலையை எப்படி இந்த நா.க.த.அ எதிர்கொள்ளும் என்பது தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை.

அத்துடன் புலி ஆதரவாளர்கள் இன்னும் 1970ம் ஆண்டின் சனத்தொகை கணிப்பின்படியே வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பெரும்பான்மை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரை 1.5 மில்லியன் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதையோ, அவர்களில் சுமார் 20% மேலானோர் இலங்கை பிரஜா உரிமையை இழந்து விட்டனர் என்பதையோ, மீதமானோர் வெளிநாட்டு பிரஜா உரிமையை எதிர்பார்துள்ளனர் என்பதையோ இவர்கள் கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர். இதைவிடவும் 2010 ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு தரவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் எதிர்வு கூறமுடியாதுள்ளனர். ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடைபெறும்போது இந்த தனி நாட்டுக்கான கோரிக்கை கிழக்கு தமிழராலும், கிழக்கு சோனகராலும் தோற்கடிக்கப்படும் என்பதை இப்போதே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம். ஆக இந்த நா.க.த.அ யாருக்கு என்ற கேள்விற்கு முகங்கொடுக்க வேண்டியவர் இந்த வேற்பாளர்களே. இதை விடவும் இலங்கையின் கடந்த பொதுத் தேர்தலில் புலிகளுடன் ஒட்டி நின்று பிரிவினையை ஆதரித்த முக்கிய போட்டியாளர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளதையும், இந்த நா.க.த.அ ஏற்பாட்டாளர்களுடன் அரசியல் ரீதியாக ஒத்து போகாத ஒருவகை மிதவாத தமிழர்களே மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.

இருந்த போதிலும் புலம் பெயர் நாடுகளில் வாழும் (புலி) தமிழர்கள் ஆகக் குறைந்தது இலங்கையில் வாழும் தமிழ் இனத்தின் விருப்பு வெறுப்புகளையோ, இந்த நா.க.த.அ தொடர்பான அவர்களின்அபிப்பிராயத்தையோ கருத்தில் எடுக்காமல் ஒருதலை பட்சமாக இந்த முடிவுக்கு சென்றுள்ளதென்பது நா.க.த.அ சுக்கான ஏற்பாட்டாளர்களின் அரசியல் மதியீனத்தையும், தமிழர்களின் இயல்பு வாழ்க்கையில் அக்கறை இல்லா தன்மையும், சர்வதேச அரசியல் நகர்வுகளை மதிப்பிட திராணியில்லா நிலையையும் தெளிவாக காட்டி நிற்கின்றது.

இந்த உத்தேச நா.க.த.அ க்கு மொத்தமாக 135 பிரதிநிதிகள் உலகளாவிய ரீதியில், இலங்கை நீங்கலாக, தெரிந்தெடுக்கப்படப் போகிறார்கள். இதில் 115 பேர் தேர்தல் மூலமும், 20 பேர் நியமன பிரதிநிதிகளாகவும் உள்வாங்கப்படுவர். ஐ.இ (UK) தில் போட்டியிடும் 38 பேரில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். நடைமுறையில் இந்த 135 பேரும் தமிழ் புலிகளின் மே18க்கு பின்னான முகவர்களே. புலிகள் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடித்த அன்றைய த.தே.கூ (TNA) அங்கத்தவலும் பார்க்க இவர்கள் அரசியல் அதிகாரம் எதுவுமே இல்லாதவர்கள். இவர்களுக்கு இருக்கும் அதி கூடிய தகைமை, ஐ.இ (UK) நா.க.த.அரசுக்கான தேர்தல் வேற்பாளர்களின் ஒப்புதல்படி, 2009ம் ஆண்டு தை முதல் வைகாசி மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற அரச எதிர்ப்பு/புலி ஆதரவு ஊர்வலங்களில் கலந்து கொண்டமை. அதே நேரத்தில் இவர்களின் கல்வி தகைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்க வகையில் அனேகமாக எல்லோரும் படித்தவர்கள். ஆனாலும் கனடாவில் போட்டியிடுவோரில் அனேகர் பண விவகாரங்களில் கறுப்பு புள்ளி பெற்றவர்களாம். இந்நிலையில் இவர்களின் தகைமை, தகுதி என்பவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக இந்த நா.க.த.அ சை நிறுவுவதற்கான சாத்தியபாட்டையும் அது சுதந்திரமாக வளர்ந்து செல்லும் சாத்தியத்தையும் (Viability) பார்த்தால் அது ஆரம்பிக்கும் வேகத்திலேயே அதன் முடிவையும் சந்திக்கும் என்பதை எதிர்வு கூர்வதில் சிரமம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

ஆக, இந்த நா.க.த.அ என்பது ஒரு பொழுது போக்குக்கான விடயம், புலம்பெயர் அப்பாவி தமிழர் இந்த கனவரசின் நடைமுறை செலவினத்தை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுவர். புலம்பெயர் நாட்டின் தேசிய அரசியலில் இருந்து தமிழர்கள் அப்புறப்படுத்தப்படுவர். சர்வதேச ரீதியில் தமிழர் பிரச்சினைக்குரியவர் என்ற நிரந்தர பட்டத்தையும் பெறுவர். எஜமானார்களோ இலங்கையின் முன்னைய புலித் தலைவர்கள் போல் தம் சொந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பர். ஆகவே இந்த அரசியல் நகர்வு என்பது தமிழ் அரசியலில் அத்தியாயம் 2. புத்தியுள்ள தமிழர் இதை எதிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் அமைதியாக இதை நிராகரித்து மீதமுள்ள தமிழரை காத்தல் வேண்டும். இது தமிழர்களின் தார்மீக அரசியல் பணி.

நன்றி, Mohamed SR. Nisthar.(from London)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72 Comments

  • Kusumpu
    Kusumpu

    நாடுகடந்த தமிழீழத்தார் நாடுகடந்து வந்த எம்மை நாமறுக்க என்றே இருக்கிறார். கடசிக்காசு என்று அடியேடை கறந்து போட்டு இனி இருக்கிற இடத்திலையும் ஆப்பு வைக்க வளிவகுத்சாச்சு. சும்மா வீட்டுக்குள்ளை இருக்கிறதை விட்டுப்போட்டு தண்டித்தின்ன வெளிக்கிடப்போறாங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உந்தச் சுரண்டல் குழுக்கள் நடாத்துவது எலெக்சனில்லை காசுக் கலெக்சன். “புலம்” பெயர்ந்த சில தமிழர்கள், “புலன்” பெயர்ந்து இருக்கும் வரை உந்தக் காசுக் கலெக்சனுக்கு குறைவிருக்காது.

    Reply
  • த ஜெயபாலன்.
    த ஜெயபாலன்.

    நிஸ்தாருடைய கட்டுரைக்கு நனறி. கட்டுரையில் உள்ள ஒரு விடயம் பற்றி மீளவும் சரி பார்க்கவும். நாடு கடந்த அரசு என்பதும் எக்ஸைல் கவர்ன்மன்ற் என்பதும் ஒன்றல்ல என்பதே நாடுகடந்த அரசாளர்களின் வாதம். எக்ஸைல் கவர்ன்மன்ற்க்கு தனது அரசை குறிப்பிட்ட நாட்டில் இயக்க அந்நாட்டின் அனுமதியும் ஆதரவும் வேண்டும். ஏனெனில் அது ஒரு குறிப்பிட்ட நாட்டிலேயே இயங்கும்.

    நாடு கடந்த அரசு அவ்வாறு அல்ல. அதற்கு எந்த ஒரு நாட்டினதும் அங்கிகாரம் தேவையில்லை. என்பது நாடு கடந்த அரசின் கண்டுபிடிப்பாளர்களின் விளக்கம்.

    ஆனால் நிஸ்தார் குறிப்பிட்டது போலும் முன்னைய கட்டுரைகளில் சொல்லப்பட்டது போலும் இது முற்றிலும் ஒரு ஏமாற்று வித்தையே.

    த ஜெயபாலன்.

    Reply
  • thurai
    thurai

    புலிகளின் இறுதிக்கட்டத்தில் இந்த புலம்பெயர் புலிகள் வடக்கிலிருந்த தமிழரை வன்னிக்கு அழைத்தனர். போக மறுத்தவ்ர்களே இன்று வடக்கில் மனிதராக வாழ்கின்றன்ர். நம்பி போனவர்களை இராணுவத்திற்கு பலி கொடுத்து அதனைப் படம்பிடித்து உலகினிற்குக் காட்டி புலிகளைக் காக்க முயன்ற ஈவிரக்கம்ற புலிக்கும்பல்தான் இந்த நாடுகடந்த அரசின் முன்னோடிகழும் ஆதரவாளர்க்ழும்.

    துரை

    Reply
  • pulavan
    pulavan

    இன்று தேர்தலுக்கு வாக்களித்து விட்டு வெளியேறும்போது வாசலில் தமிழீழத்திற்கான நிதியம் என நிதி சேகரிக்கப்படுகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இன்று தேர்தலுக்கு வாக்களித்து விட்டு வெளியேறும்போது வாசலில் தமிழீழத்திற்கான நிதியம் என நிதி சேகரிக்கப்படுகிறது.- pulavan //

    இதைத் தானே நான் ஏற்கனவே “நடாத்துவது எலெக்சனில்லை காசுக் கலெக்சன்” என்று குறிப்பிட்டேனே…..

    Reply
  • Ajith
    Ajith

    Dear Nisthar,
    I am happy that once again I had the opportunity to read your contributions in this web. It is not about relegion, it is part about anti LTTE campagin for the freedom of tamil people from Sinhala oppression.
    திரு. வி. உருத்திரகுமரனின் கூற்றுப்படி தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் இலங்கை தமிழர்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் (புலி ஆதரவாளர்கள்) தனித்தனியான குழுவாக, அதாவது நா.க.த.அ சின் அங்கமாக அந்தந்த நாடுகளில் செயல்பட்டு இறுதி இலக்கை அடைய (படாத) பாடுபடுவர்.
    I also read Mr. V. Uruthirakumar statement but he never said the following (Tiger supporters) and(படாத). I know your sarcastic writing but I never expected such sarcastic cimment from an islamist.

    ஏனெனில் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குற்பட்டது. வடக்கு, கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனியான ஆட்சி ஒன்று நிலவவில்லை. இலங்கை ராணுவம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உள்ளடக்கிய மொத்த ஆள்புல பிரதேசத்திற்கும் சொந்தமானது. இந்த ராணுவத்தை அந்நிய நாட்டு ராணுவமாக கருத முடியாது.

    I agree that currently under a constitution prepared by Sinhala people only (you may add muslims as well) but not with the agreement of tamils. You cannot forget that there were tamil kingdoms in the North-East of Sri Lanka but you are right there was no elected tamil government since independence from British. The reasons for this is occupation of Sinhala military but people of North-East have shown there wish to establish their own government. Therefore, tamils have the right to establish their own government. There are number of countries got independence. I still believe the Kashmeri’s and Palestine’s have the right to establish their own governments as Estimore’s did or Bangladeshi’s did. Sri Lanka military is constituted 99% by Sinhalese since 1948. They consider themselves as serving for the Sinhala community. For example, during the ethnic cleansing by Sinhala thugs in 1958, 1977, 1983 and after wards they never made attempts to protect tamils or stop the violence. They never brought any thugs under justice system. Therefore, the government, the constitution, the military cannot be considered as a lawful right to claim that they belong to whole nation. It is an occupying foregin force.
    பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 2:1, இருப்பினும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கிலும், நாட்டின் சமகால அரசியல் நிலைமையிலும் இது என்றும் வெற்றி பெற முடியாத ஒரு விடயமே. சுருங்கக் கூறின் ஒரு கனவு, அதுவும் பகற்கனவு.

    I do not understand yourself for your confusion. You rightly expressed that the probability for the success is 67% of this experiment. Then you say it is a day dream. If you know science, you don’t do experiment with the expectation of 100% success. In an unstable social, economic and political enviornment a 67% success is more than enough to start this experiment. It may be difficult under current political enviornment but as you are aware that it is more volatile and changes could happen any time. A good example is Irag. Sadam was a friend of US he was committing war crimes including using chemical weapons against Kurds. Did Sadam ever thought he would be thrown out by his people with the support of US. Did Rajapakse ever thought that Sarath Fonseka will tell the truth that it was that Gotapaya gave orders to kill those came with white flag. Hope for a change. I agree that there may be no chance to happen that Rajapakse and Gotpaya along with few others may not face war crimes charge immediately but there is a high probability for that in the future. We should not forget that Rajapakse was an enemy of India when IPKF invaded SRi Lanka. He was behind JVP during the period when JVP terrorists were active in 1989 against India. India is the first hand witness of the war crimes of Rajapakse. Rajapkse used JVP to dismantle the Rajib-JR fact. It took 20 years for India to take revenge against tamils for sending them back home in 1989. It may take time but India will wait for opportunity to take revenge against Rajapakse and Sinhalese.

    அத்துடன் புலி ஆதரவாளர்கள் இன்னும் 1970ம் ஆண்டின் சனத்தொகை கணிப்பின்படியே வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பெரும்பான்மை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரை 1.5 மில்லியன் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதையோ, அவர்களில் சுமார் 20% மேலானோர் இலங்கை பிரஜா உரிமையை இழந்து விட்டனர் என்பதையோ, மீதமானோர் வெளிநாட்டு பிரஜா உரிமையை எதிர்பார்துள்ளனர் என்பதையோ இவர்கள் கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர்.

    I am sorry that you again and again repeat that it is LTTE supporters demand for freedom from Sinhala occupation. It is the people who gave the mandate for a self-rule. It is not only LTTE but also all the political and militant movements had the same aspirations. You must remember almost every tamil who were chased out by Sinhala regimes(except Jeyapalan and few Rajapkase supporters) came to the streets to show their wishes to the world that they are in favour of a self-rule.
    You must accept the fact that 95% of the population of the North-East were tamil speaking people in 1948 when Sri Lanka was granted Independence by British. The Sinhalam used all the powers (political, econmic and military) to change the demography in the North-East forcefully. Do you think the occupation of West Bank by Isralies is justified.

    புத்தியுள்ள தமிழர் இதை எதிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் அமைதியாக இதை நிராகரித்து மீதமுள்ள தமிழரை காத்தல் வேண்டும். இது தமிழர்களின் தார்மீக அரசியல் பணி.

    What you are implying from the above. I suspect that this article has any relationship with the recent statement by Gotapaya Rajapakse about diaspora tamils:We need take intelligent action to wipe out international LTTE net work in foregin countries. Mr Sothilingam also wrote an article in this web.

    It looks like a direct threat for international community on behalf of G. Rajapakse that keep shut or we will not hesitate to wipe out all tamils as we did in Mullivaygal.You mean that tamils have no right to ask for their right democratically or militarily.

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லியை பொறுத்த மட்டில் இந்த தேர்தல் என்பது சரியோ அல்லது தவறோ என்பதை விட இந்த தேர்தல் நடத்தபட வேண்டிய காலம் ஏப்பிரல் முதலாம் தேதி, அதுவே சரியாக இருக்கும்;

    அத்துடன் இதுவரை பணத்தை ஏமாற்றி(புலியென) வாங்கிய புலினாமிகள் இந்த தேர்தல்மூலம் அங்கிகரிக்கபட்ட திருடர்களாக உலாவ போவது நிழல் அல்ல நிஜம்;

    இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் சில புலத்து ஈழம் என்னும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விட மகிந்தா தமிழ் பேசுகிறார், அது தவறல்ல ஆனால் அந்தளவுக்கு தமிழரிடம் (புலியிடம்) வேட்பாளர் இல்லாதத்து கவலைதான் என்னத்தை சொல்ல எல்லாமே சிரிப்புதான்;

    Reply
  • john
    john

    How can you expect somthing from Tiger terrorist – terrorist involve in terrorisim , they proved all in the past.

    Reply
  • NANTHA
    NANTHA

    //வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் இன்னொரு தேசிய இனத்தால், அதாவது இலங்கை சோனகர்களால் நிராகரிக்கப்பட்டது. தமிழர் சொல்லும் பூர்வீக நிலம் என்ற பிரதேசத்தில் சோழனின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு முன்பே சோனகர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. //

    எந்த வரலாறு என்று கூற முடியுமா?

    மேலும் முன்னாள் சபானாயகர் பாகீர் மாக்கார் (மரைக்காயர்) சிஙகளவர்களுக்கும் அரெபியர்களுக்கும் தோன்றிய சந்ததியினரே இலஙகை முஸ்லிம்கள் என்ற கூற்று உண்மையானால் யாழ்ப்பாணத்திலிருந்து திக்வெல்ல வரை உள்ள முஸ்லிம்கள் எப்படி “தமிழ்” பேச முடியும்?

    அரபி+சிங்களம் = தமிழ்? எப்படி?

    Reply
  • Ajith
    Ajith

    How can you expect somthing from Tiger terrorist – terrorist involve in terrorisim , they proved all in the past./John

    What did you expect from Tigers? You can expect more from real terrorists like EPDP, PLOTE, JVP and Rajapakse company. They provide with abductions, rape, ransom, murders, corruption all for nothing. How can you expect somthing from EPDP terrorists? How can you expect somthing rom PLOTE terrorists? How can you expect somthing from JVP terrorists? How can you expect somthing from Rajapakse group terrorists? They proved all in the past and present. They never stop.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இலங்கையில் தமிழ்ஆடுகள் திசைதெரியாது வழிதவறித் திரிகின்றன. ஏற்கவே! ஏற்கவே வழிதவறிய ஆடுகள் கசாப்பு கடைகாரனக மாறி கத்தியை தீட்டி கூர்மைபடுத்திக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர் இடத்தில். மிகுதியையும் தின்று முடித்தால் தான் தமது செளகிய வாழ்வை மேற்கொள்ள முடியும். இதுவே “நாடுகடந்த தமிழ்ஈழம்”. புலத்தில் நடக்கும் தேர்தல். நாடுகடந்த இந்துக் கோவில்களையெல்லாம் ஒருமுனைபடுத்தி வசூல்களை எல்லாம் ஒரு கடலில் ஆறாக வந்து விழ பண்ணவேண்டும்.

    சட்டத்திற்கு பிறனான சமாச்சாரங்களை எல்லாம் உதாரணமாக கள்ளகிரடிட் காட். தங்கள் நாட்டில்லுள்ள வருமானவரி இல்லாக்காவுக்கு “டிமிக்கி” கொடுப்பது. சிதறிப்போன தமிழ்ரெளடிகளை ஒருங்கிணைப்பது. அப்படியென்றால் தானே! பூட்டி வீடுகளில் புகுந்து பாஸ்போட் தாலிக்கொடி வகையறாக்களை தவிர்த்து தமிழ்ஈழத்திற்காக கொள்ளையிட முடியும். இப்படியாக தேவைகளை ஒட்டி உருவாக்கப்பதே நாடுகடந்த தழிழ்ஈழம்.நடை பெற்ற தேர்தல். இதில் சம்பந்தபட்டிருப்பவர்கள் சதாரணமானவர்கள்.அல்லது சதாரண வாழ்வை மேற்கொள்கிற தமிழர்கள் அல்ல. அசல் யாழ்பாணத்து வறுத்த மிளகாள்தூள் போல்தூள் போல் செயல் படுகிற யாழ்பாணத்து வக்கீல்கல். தமிழரின் பெருமையைக் பறைசாற்றுகிற தமிழ் பற்றாளர்கள். யாழ்பாணத்து மருத்துவர்கள். பொறியல்யாளர்கள். கவிஞர்கள் கட்டுரையாளர்கள். ஆய்வுக் கட்டுரை எழுதுபவர்கள். எமது இனத்தின் இவ்விதி! எவ்விதியோ!! இருந்து பார்பதைத்தவிர ஏதும்யறியேன் பரம்பெருபொருளோ!!

    Reply
  • பல்லி
    பல்லி

    புலம்பெயர் தேச தேர்தலிம் வெற்றிகரமாக 15வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர்; இது தவறாயின் யாராவது இல்லை அதிகமான மக்கள் வாக்களித்தனர் என்பததை எழுதுங்கள்; ஆக 85 வீதமான மக்கள் ஈழம் அலைபாய வேண்டாம் அது முள்ளிவாய்க்கலிலேயே இருக்கட்டும் என விரும்புவதாய் பல்லி எடுத்துக்கலாமா?? அதுக்கான தேர்தல்தானே இது; இதில் சிலர் சுறா படம் திரையரங்குகளில் ஓடியதால்தான் வாக்குகள் குறைவாக விழுந்தத்தனெ மல்லு கட்டுகிறார்கள்; இதில் ரூட்டிங்கில் திருட்டு ஓட்டு போட்டதாக ஜி ரிவியில் குற்றசாட்டு; இதிலை மீள் வாக்கெடுப்பு வேறாம்:எத்தனையோ வழி இருக்கு பிழைக்க; என்ன இது??

    Reply
  • thurai
    thurai

    அஜீத் அவர்களே, தமிழர் இனமென்பது பல சாதிகள்,சமயங்களை உள்ளடக்கியது. ஈழ்த்தமிழினம் போராட்டம் தொடங்குமுன் இருந்ததை விட இன்ன்ம் ஒரு படி மேலாக் விடுதலை அமைப்புகளாகவும் பிளவுபட்டுள்ளது. இது ஒரு இனத்திற்கு திடகாத்திரமல்ல பாரிய பலவீனமேயாகும்.

    தமிழரிற்கு தேவைப்பட்டது புலிகளிடமிருந்து பாதுகாப்பு, உருமையோ, விடுதலையோ அல்ல. தமிழ் அரசியல் கட்சிகளாக் மாறிய அமைப்புகளிற்கும் இதேநிலைதான்.

    தமிழர்களிற்கு ஒரே ஒரு தலைவன் பிரபாகரன். தமிழர்களின் விடுதலை இய்க்கம் புலிகள். புலிகளின் ஆதரவாளர்களே தமிழீழ் பக்த்தர்கள். மற்ரவரெல்லாம் துரோகிகள்.உலகம் ஏற்குமா இதனை?

    ஒரு உண்மையை ஆயிரம் பெயர் பொய் என்று சொன்னாலும் உண்மை உண்மைதான். ஒரு பொய்யை ஆயிரம் பெயர் உண்மை என்று சொன்னாலும் பொய் பொய்தான்.

    தமிழ், தமிழ், எமது இனம்,எமது இனம் என்று கூறியே உலகத்தை ஏமாற்ரி வாழும் தமிழரும், ஏமாந்து வாழும் தமிழரும் திருந்தாத வரை தமிழரின் தலைவிதியை யாராலும் மாற்ரமுடியாது.
    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இங்கிலாந்தில் லண்டனுக்கு வெளியில் நடைபெற்ற குழறுபடிகள் காரணமாக அப்பகுதித் தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனவாம். இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களது நாடு கடந்த தமிழீழ நிர்வாகம் எப்படியிருக்கும் என்று??

    Reply
  • நெற்றிகண்
    நெற்றிகண்

    நோர்வேயில் நடந்துமுடிந்த நாடுகடந்த தேர்தலில் கஷ்ரோ குழு மிகவும் கீழ்த்தரமான முறையில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டனர் தங்கள் குழுவின் மூவரை தவிர மற்றவேற்பாளர்கள் துரோகிகளாக சித்தரித்து துண்டுபிரசுரம் அவதூறுபிரச்சாரம் இப்படியான வேலைகளிற்கு நோர்வே ஒருங்கமைப்பு குழுவால் 75பேர் நியமிக்கபட்டிருந்தனர் இதனால் உண்மையான சமுசேவகர்கள் தோற்கடிக்கபட்டு முகம் தெரியாத மனிதர்கள் தெரிவு செய்யபடடுள்ளனர்.

    Reply
  • NANTHA
    NANTHA

    யாழ்ப்பாணத்தில் 20 சதவீதம் வாக்களித்தால் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து விட்டனர் என்று கூப்பாடு போடும் அரசியல் விமர்சகர்கள் இந்த 15 சதவீத வாக்களிப்பை “அமோக”ஆதரவு என்று அறிக்கை விடுகிறார்கள்.

    கனடாவில் இதுவரை காலமும் “படித்த” திருடர்கள் “புலி”, ஈழம்” என்று சுருட்டினார்கள். ஆனால் இந்தநாடு கடந்த சுடலைக்கான தேர்தலில் தமிழர்கள் “அசல்” திருடர்களையும் கேடிகளையும் தெரிவு செய்துள்ளனர்.

    கனடாவை விட்டு போவதில்லை என்ற தீர்மானத்துடன் வாழும் இவர்கள் இலங்கை மக்களுக்கு என்ன செயப்போகிறார்கள்?

    உதாரணமாக திருச்செல்வமும், ஈழவேந்தனும் இலங்கைக்கு போகமுடியாது. இவர்கள் செய்த கிரிமினல் வேலைகளுக்கு ஜெயில் வாசம்தான் கிடைக்கும்.

    இவர்களை வாக்கு மூலம் தெரிவு செய்தவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்?

    Reply
  • thurai
    thurai

    நாடுகடந்த அரசின் அங்கத்தவர்களா தெரிவு செய்யப்பட்டவர்களைப் பற்ரி கவலைப் படவேண்டியதில்லை. இவர்கள் எல்லாம் தமக்குத் தானே வலையை விரித்து அதற்குள் விழுந்து கொண்ட புலிகள்.

    இனிமேல் எந்த நாட்டுத் தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் அனைவரிற்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். காரணம் அநேகமான அங்கத்வர்கள் ஆங்கிலமும் அரசியலும் படிக்க இப்போதுதான் தொடங்கியுள்ளார்களாம். அதற்கிடையில் இவர்கள் பிரச்சினை பற்ரி பேசுவதானால் மகிந்தாவுடந்தான் தமிழில் தற்சமயம் பேசலாம். எனவே யாரிற்கு மகிந்தாவின் விருந்திற்கு அதிஸ்டமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

    துரை

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    அஜித்துக்கும் நந்தாவுக்குமான எனது பதில்கள்.

    நந்தாவுடைய கேள்விகள் சிறியவை என்பதால் முததில்,
    நந்தா, ” எந்த வரலாற்றின்படி சோனகர்கள் சோழனின் படை எடுப்புக்கு முன்பே கிழக்கில்.” என்று கேட்டுள்ளீர்கள் “இலங்கையில் சோனகர்” என்பது சம்பந்தமான வரலாறுதான் அது.

    பழைய சபாநாயகர் கூற்றுப்படி சிங்கள அரபு கலப்புத்தான் “சோனகர்” என்றால் யாழில் இருந்து திக்வெல வரையுள்ள “சோனகர்” எப்படி தமிழ் பேசுகின்றனர்? சிங்களம் அல்லது அரபு தானே அவர்கள் மொழியாக வேண்டும் என்பது உங்களின் தொக்கி நிற்கும் கோள்வி.

    சபாநயகரின் கூற்றுப்படி “சோனகர்” என்ற தனியான இனம் உள்ளதை ஏற்கிறிர்களா, இல்லையா? ஏனெனில் இந்த விடயத்தை முதலில் தெளிவுபடுத்தாமல் மேலே செல்வது அடிப்படை விடயத்தை மூடிமறைக்கும் செயலுக்கு ஒப்பாகும். இதற்கு விடைகண்டு அப்புறம் மொழிபற்றி பேசலாம்.

    அஜித்,

    எனது கட்டுரையில் அடைப்புக்குறிக்குள் இருப்பவை “நக்கல்” (sarcastic) அதை நான் மறைக்கவில்லை, மறுக்கவும்மில்லை. ஆகவேதான் அவை அடைப்புக் குறிக்குள் உள்ளன. அவை எனது சொற் பிரயோகம்.

    நான் தமிழ் புலிகளுக்கு எதிரானவன். இது வெறும் எதிர்ப்பல்ல. தமிழர் பாலுள்ள அன்பின் நிமித்தத்தால் ஏற்பட்ட வெறுப்பு. த.பு.களின் “அறம்” அற்ற பயங்கரவாதத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பு. அவர்களின் பொய்களுக்கு எதிரான நிலைப்பாடு. 1978, 1990, 1997, 2001, 2004, 2008, 2009களில் எனது சொந்த அனுபவங்கள் தொடர்பாக ஏற்படுதிக்கொண்ட நிலைப்பாடு.

    என்னை ஒரு இஸ்லாமிஸ்ட்(islamist) என்று கூறியுள்ளீர்கள். நான் சமயத்தால் ஒரு முஸ்லீம். ஆகவே “இஸ்லாமிஸ்ட்” என்ற பதம் எனக்கு விளங்கிக் கொள்வதில் கஸ்டமுள்ளது. ஆகவே விளங்கப்படுத்தவும்.

    சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்குண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் என்னிடமில்லை. ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையை அனுபவிக்க நியாயமான காரணங்கள் உள்ளனவா என்பதும், தமிழர் தம்மைதாமே ஆளும் அளவுக்கு இன்னும் அரசியல் முதிர்ச்சி பெறவில்லை என்பதுமே.

    புலிகளை எதிர்ப்பதென்பது ராஜபக்சவின் ஆதரவு என்ற சமன்பாட்டிக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதைவிடவும் நான் ராஜபக்சவை எதிர்தால் தான் தமிழர் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் போக்கு கொண்டவராக முடியும் என்று பொருள்படவும் முடியாது.

    மேலும், பாலஸ்தினியர் தொடர்பான விடயத்தை இந்த விடயத்துடன் கலப்பதன் ஊடாக நாம் எதை கண்டறிய போகிறோம் என்பதால் அதை இங்கு தவிர்கிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்குண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் என்னிடமில்லை…..//

    //…ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையை அனுபவிக்க நியாயமான காரணங்கள் உள்ளனவா என்பதும்,….//
    நிஸ்தார் நீங்கள் மேலே எழுதிய (அடுத்தடுத்த வசனங்கள்) இரண்டு வசனங்களுக்குள்ளேயே குழம்பி உள்ளீர்கள். எனக்கு இருக்கும் ”மாற்றுக் கருத்துக்கிடமில்லாத” உரிமையை அனுபவிக்க காரணம் சொல்ல வேண்டுமா? நல்ல ஜோக்!!

    //….தமிழர் தம்மைதாமே ஆளும் அளவுக்கு இன்னும் அரசியல் முதிர்ச்சி பெறவில்லை என்பதுமே……//
    இவ்வாறுதான் எல்லா அடக்குமுறையாளர்களும் சொன்னார்கள். இந்திய மக்களுக்கு முதிர்வில்லை என இங்கிலாந்தும், பாகிஸ்தானியர்களுக்கு இல்லை என அதே இந்தியரும், அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களுக்கு இல்லை என வெள்ளை அரசும், தென்னாபிரிக்க கறுப்பர்களுக்கு இல்லை என இனவாத அரசும்…..மேலும் இன்றும் கூட இஸ்லாமிய நாடுகளில் இவ் ‘அரசியல் முதிர்ச்சி’ பெண்களுக்கு இல்லை என மறுப்பதையும் காண்கிறோம்!

    Reply
  • Ajith
    Ajith

    Nisthar, Thanks for your response.
    எனது கட்டுரையில் அடைப்புக்குறிக்குள் இருப்பவை “நக்கல்” (sarcastic) அதை நான் மறைக்கவில்லை, மறுக்கவும்மில்லை. ஆகவேதான் அவை அடைப்புக் குறிக்குள் உள்ளன. அவை எனது சொற் பிரயோகம்.
    It is good that you accept that but it is simply shows that you yourself identify like a low grade politician (fundamentalist), not like a true muslim.

    நான் தமிழ் புலிகளுக்கு எதிரானவன். இது வெறும் எதிர்ப்பல்ல. தமிழர் பாலுள்ள அன்பின் நிமித்தத்தால் ஏற்பட்ட வெறுப்பு
    It is a complete lie and a joke.

    என்னை ஒரு இஸ்லாமிஸ்ட்(islamist) என்று கூறியுள்ளீர்கள். நான் சமயத்தால் ஒரு முஸ்லீம். ஆகவே “இஸ்லாமிஸ்ட்” என்ற பதம் எனக்கு விளங்கிக் கொள்வதில் கஸ்டமுள்ளது. ஆகவே விளங்கப்படுத்தவும்.
    A Muslim (Arabic: مسلم‎; /ˈmʊslɨm/ MOOS-lim or English pronunciation: /ˈmʌzlɨm/ MUZ-lim) is an adherent of the religion of Islam.

    ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையை அனுபவிக்க நியாயமான காரணங்கள் உள்ளனவா என்பதும், தமிழர் தம்மைதாமே ஆளும் அளவுக்கு இன்னும் அரசியல் முதிர்ச்சி பெறவில்லை என்பதுமே.
    I agree that may be having your view but most of the tamils strongly believe that tamils have reasonable reasons to enjoy the right of self determination than any other community in the island of Sri Lanka and tamils have matured enough for self-rule.

    புலிகளை எதிர்ப்பதென்பது ராஜபக்சவின் ஆதரவு என்ற சமன்பாட்டிக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதைவிடவும் நான் ராஜபக்சவை எதிர்தால் தான் தமிழர் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் போக்கு கொண்டவராக முடியும் என்று பொருள்படவும் முடியாது.
    It is my strong opinion that you are anti LTTE and anti tamil because of your relationship with Rajapakse. The timing of this article and announcement of Gotapaya itself proves that. Tamils came to the decision of self-determination long before LTTE.

    Reply
  • NANTHA
    NANTHA

    சோழர்களுக்கு முன்னர் சோனகர்கள் வந்துள்ளது பற்றிய வரலாற்றுக் குறிப்பை தராது மழுப்பிவிட்டு சோனகர் “தனி இனமா இல்லையா” என்று கேள்வி எழுப்புவது சம்பந்தமில்லாத விஷயம். சோழர்களின் தரவுகள் “மகாவம்சம்” தருகிறது. எல்லாளன் என்ற சோழன் காலத்தில் இஸ்லாம் என்ற மதமே கிடையாது.

    சோனகர்கள் என்பது “யவனர்கள்” என்ற தமிழ் சொல்லின் திரிபு. அதாவது கிரேக்கர்கள் என்று அர்த்தம். பின்னர் வந்த அரபி வர்த்தகர்களுக்கும் அந்தப்பெயர் வழங்கபட்டது.

    இலங்கையில் 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் “முஸ்லிம்” பாடசாலைகள் என்று எதுவும் இல்லை. தற்போதுள்ள “முஸ்லிம்” பாடசாலைகள் 1957 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பெயர் மாற்றம் பெற்றவை. அது பாகிஸ்தானியான பதியுதீன் முகம்மதுவின் “பிரிவினை” ஐடியா என்றே புலப்படுகிறது.

    இலங்கை முஸ்லிம்கள் “தமிழ்” எதற்காகப் பேச வேண்டும் என்ற கேள்விக்கு பதிலைக் காணவில்லை. பாகீர் மரக்காயர் (ஒரு மலையாளத்து முஸ்லிம்) இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களினதும் அரபிகளினதும் கலப்பு பிறப்புக்கள் என்று கூறியதைப் பற்றி கவலைப்படாத நிஸ்தார் “தனியான இனம்” என்று அவர் கூறினார் என்று எப்படி கூற முடியும்?

    கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் மதம் மாறிய இந்துக்களின் பரம்பரைகள்தான் “இலங்கை முஸ்லிம்கள்” என்ற உண்மையை பொய்யாக்க முயலும் நிஸ்தார் “அரசியலில் தெளிவு” பற்றி அலட்டிக் கொள்வது நகைப்பானதே.

    தவிர இஸ்லாம் என்பது முஸ்லிம்களை ஒரு நாட்டினராக்க முயலவில்லை. அதனால்த்தான் பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. அவை யாவும் “மொழி” அடிப்படையிலும் “குழுக்கள்” (TRIBAL) அடிப்படையிலும் பிரிந்தே உள்ளன. அப்படியிருக்க இலங்கையில் மாத்திரம் முஸ்லிம்கள் “தனியினம்” என்ற கொள்கை எப்படி சாத்தியமாகும்?

    தவிர மொழி பற்றி முஸ்லிம்களுக்கு அக்கறை இல்லை என்றால் இலங்கையில் நடைபெறும் மொழி பற்றிய சர்ச்சைகளில் “முஸ்லிகள்” தலையிடுவது எந்த விதத்தில் நியாயம்?

    தமிழ், சிங்களம் என்ற பிரிவினை தேவையில்லை என்று தமிழை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் சொல்லுவது மற்றையவர்களும் “மத” அடிப்படையில் பிரிந்து போகலாம் என்பதே. இலங்கையில் அதற்கும் சாத்தியங்கள் உண்டு!

    இந்தியாவிலும் இலங்கையிலும் “பிரிவினை”க்கு வித்திட்டவர்களே முஸ்லிம்கள்தான். அப்படியிருக்க நிஸ்தார் போன்றவர்கள் “பிரிவினைக்கு எதிர்” என்று கோஷம் போடுவது வெறும் வெத்து வேட்டுத்தனமாகவே தெரிகிறது.

    மத அடிப்படையில் பிரிந்த நாடு பாகிஸ்தான் இன்று இரண்டு நாடுகளாகிவிட்டது. மொழி என்பது மதத்தை விட சக்தி உள்ளது என்பது வரலாறு காட்டியுள்ள உண்மை. மதத்தின் மூலம் “பிரிவினை” கேட்கும் முஸ்லிம்கள் “மொழி” மூலமான பிரிவினையை “தப்பு” என்று கூறுவது வெறும் சந்தர்ப்பவாதமே ஆகும்.

    அதற்காக பலமொழி பேசுபவர்கள் ஒரே நாட்டில் சமத்துவமாக வாழ முடியாது என்பது அர்த்தம் அல்ல. சிங்கபூர், பெல்ஜியம், கனடா என்பன சில உதாரணங்கள்.

    Reply
  • thurai
    thurai

    //இந்தியாவிலும் இலங்கையிலும் “பிரிவினை”க்கு வித்திட்டவர்களே முஸ்லிம்கள்தான்//நந்தா
    அப்போ வட்டுக்கோட்டைத் தீர்மான்மும் புலிகளின் தமிழீழ தாகமும் எங்கிருந்து வந்தது? செல்வநாயகமும், பிரபாகரனும் முஸ்லிம் பெயர்களா?

    //மொழி என்பது மதத்தை விட சக்தி உள்ளது என்பது வரலாறு காட்டியுள்ள உண்மை//நந்தா
    புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் மொழியை விட பெற்ரோரின் மதத்தையே கூடுதலாக பின்பற்றுகின்றன்ர். தமிழ் பேசத்தெரியாத தமிழ் இந்துக்களாகவும் கிறிஸ்தவராகவும் இன்று பலர் வாழ்கின்றனர். என்வே முஸ்லிம் என்று இலங்கையில் அடயாளம் உள்ளது போல எதிகாலத்தில் இந்துக்களாகவே தமிழர் புலம் பெயர்நாடுகளில் தம்மை அடயாளப்படுத்துவார்கள்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    முகமது அலி ஜின்னா என்பவர் செல்வநாயகம் , பிரபாகரன், வட்டுகோட்டைத் தீர்மானம் என்பவற்றுக்கு முந்தியவர் என்பது துரைக்குப் புரிய வேண்டும். தி மு க ஆரம்பத்தில் “ஜின்னாவுக்கு ஒரு பாகிஸ்தான் கிடைப்பது நியாயம் என்றால் எங்களுக்கு ஒரு திராவிடஸ்தான் வேண்டும்” என்றுதான் முழக்கம் செய்தார்கள். அதன் எதிரொலியாகவே இலங்கையிலும் பாகிஸ்தானியான பதியுதீன் தலைமை ஒரே மொழி பேசுபவர்களை மத ரீதியாக “பிரிவினை” செய்தார்கள். பண்டாரநாயக்க செய்த தவறுகளில் இதுவும் ஒன்று!

    கிழக்கு வங்காளம் இன்று பங்களாதேஷ் ஆக மாறியதற்கு “மொழி”ப் பிரச்சனையே காரணம். இந்த வரலாறும் எமது “இயக்கங்களால்” பிரிவினைக்குச் சார்பாக எடுத்தாளப்பட்ட காரணங்களில் ஒன்று!

    Reply
  • thurai
    thurai

    //முகமது அலி ஜின்னா என்பவர் செல்வநாயகம், பிரபாகரன், வட்டுகோட்டைத் தீர்மானம் என்பவற்றுக்கு முந்தியவர் என்பது துரைக்குப் புரிய வேண்டும்.//நந்தா
    அப்படியானால் இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களிற்கு சுதந்திரமென்றால் என்னவென்று முஸ்லிம்களா கற்ருக் கொட்த்தார்கள்?

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    புலிகளின் அராஜகம் உங்களுக்கு எப்போது “சுதந்திர போராட்டமாக” மாறியது?

    சில வேளைகளில் புலிகளோடு இருந்த கத்தொலிக்க பாதிரிகள் முஸ்லிகளிடமிருந்து “பிரிவினை”, ஈழம் என்பன பற்றி படித்திருப்பார்கள் என்றே எண்ணலாம்!

    Reply
  • thurai
    thurai

    //புலிகளின் அராஜகம் உங்களுக்கு எப்போது “சுதந்திர போராட்டமாக” மாறியது?//நந்தா
    அப்போ இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழினத்திற்கு சுதத்திரப் போராட்டமென்றால் என்னவென்பது இன்னமும் தெரியாதா?

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    இந்துக்களுக்கு தெரிந்தபடியால்த்தான் கருணாவும், தேவானந்தாவும் உயிரோடு இருக்கிறார்கள். கத்தொலிக்க பாதிரிகளோடு சேர்ந்து மதம் மாறிய பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் ஆமை போல மல்லாந்தார். பாதிரி பத்தினாதனும் மற்றும் பல கத்தொலிக்க ஆசாமிகளும் “சுதந்திரம்” பற்றி தெரிந்தபடியால்த்தான் இப்போது கம்பி எண்ணுகிறார்கள்.

    Reply
  • thurai
    thurai

    //கத்தொலிக்க பாதிரிகளோடு சேர்ந்து மதம் மாறிய பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் ஆமை போல மல்லாந்தார்//நந்தா
    பிரபாகரன் தமிழீழம் கண்டிருந்தால் அவர் ஒரு இந்துபரம்பரை, தோல்வியுற்ரால் அவர் ஓர் கத்தோலிக்கர், அரசாங்கத்துடன் சேர்ந்திருந்தால் அவர் ஒரு முஸ்லிம். தமிழரின் அரசியல் அறிவியலிற்கு உலகில் இணையாக யாருமேயில்லை.

    துரை

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    சாந்தன்,
    “எனக்கு இருக்கும் உரிமையை அனுபவிக்க காரணம் சொல்லவேண்டுமா”, என்று கேட்டுள்ளீர்கள். உங்கள் தனிப்பட்ட உரிமை என்றால் நான் காரணம் கேட்டிருக்க மாட்டேன். இது ஒட்டு மொத்த நாட்டு மக்களுடனும் சம்பந்தப்பட்ட விடயம். பல இனங்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் ஆகவே கவணம் அதிகம் வேண்டும். தனிப்பட்ட விடயத்தில் கூட அதிகரிகளுக்கு, அரசாங்கங்களுக்கு தலையிடும் உரிமை உண்டு மறந்து விட வேண்டாம். சில உரிமைகள் நிபந்தனையுடன் அனுபவிக்க வேண்டியவை.

    அஜித்,
    முஸ்லிம் என்றால் யார் என்று விளங்கப்படுத்த “படாத பாடு” என்று சொல்லாவிட்டாலும் “பாடு” பட்டுள்ளீர்கள். அதனால் நான் கேட்டதை கோட்டை விட்டுவிட்டீர்கள். நான் கேட்டது “இஸ்லாமிஸ்ட்” என்று என்னை விழித்துள்ளீர்கள், அதன் விளக்கம் என்ன என்பதுதான். அவசரப்பட வேண்டாம். கேள்வியை விளங்கி பதில் தர முயலுங்கள். காத்திருப்பதில் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை.

    மேலும் நீங்கள் கண்டு பிடித்தவை இரண்டு. நான் புலி எதிர்ப்பாளன் மற்றையது தமிழர்களின் எதிரி. புலி எதிர்ப்பாளன் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முன்பே நான் சொல்லி விட்டேன். நான் தமிழரின் எதிரி என்பது உங்கள் கருத்து. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. இல்லை நான் தமிழர்களின் நண்பன்தான் என்று உங்களுக்கு நிருபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

    பிரிவினைக்கு எங்கே, எப்போது பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது? 1977ல் த.வி.கூ னிக்கு ஆதரவாக கிடைத்த மொத்த வாக்குகள் எத்தனை? எதிராக கிடைத்த வாக்குகள் எத்தனை? ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் உள்ள தமிழ் தலைவர்கள் சரத் பொன்சேகாவுக்கே வாக்களிக்க தமிழர்களை கோட்டனர், பிரிவினையை ஆதரிக்கும் சிவாஜிலிங்கத்தை அல்ல. பொது தேர்தலிலும் பிரிவினையின் மும்மூர்திகள் தோற்கடிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற 14 தமிழ் உறுப்பினரும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்” என்று கதைக்க ஆரம்பித்து விட்டனர். உரித்திர குமாரனும் இலங்கையில் நாடு கடந்த தமிழ் ஈழ தேர்தலை வைத்து தமிழரின் அபிப்பிராயத்தை கேட்காமல் வேறு எல்லா நாடுகளிலும் தேர்தல் வைத்தார். இந்த பொழுது போக்கு தேர்தலிலும் 15% வாக்காளர் தான் கலந்து கொண்டதாக, நானில்லை பல்லி சொல்கிறார். மில்டன் கீன்சில் தேர்தல் முறைகேடு வேறு நடந்துள்ளதாம். அஜித் எங்கே “பெரும்பான்மை” என்று சொல்லமுடியுமா? உங்களை நீங்களே ஏமாற்ற தீர்மானித்து

    நந்தா,
    நிறையவே குழம்பி விட்டீர்கள். இதற்காகத்தான் முதலில் “சோனகர்” தனி இனமா என்பதில் தெளிவு பெற்றுவிட்டு பிறகு மொழி பற்றி கதைப்போம் என்றேன். நான் “சோனர்” பற்றி கதைக்க நந்தாவோ முஸ்லீம்கள் பற்றியும், முஸ்லீம் பாடசாலையின் ஆரம்பம் பற்றியும் கதைக்கிறார். நான் பதில் சொல்லாமல் மழுப்புவதகாவும் சொல்கிறார்.

    நந்தா, மழுப்புவதற்கு எந்த தேவையும் எனக்கு இல்லை. நான் எழுதியது விளையாட்டுக்காகவும் அல்ல. ஆனால் ஒரே படத்தை மீள மீள திரையிடுவது அழகும் அல்ல. தமிழ் பேசும் மக்கள்- அடையாள இருட்டடிப்பு என்ற எனது 2004ம் ஆண்டு கட்டுரையை “தேசம்” சஞ்சிகையில் வாசிக்கலாம். சுயநிர்ணய உ¡¢மை: தமிழர்- சோனகர், சிங்கள தமிழ் போ¢னவாதம் என்ற எனது கட்டுரைகளும் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என நினைக்கின்றேன். அப்போதும் விளங்க வில்லை என்றால் சொல்லுங்கள், இதை விட இலகுவாக விளங்கப்படுத்த முயல்கிறேன்.

    மீண்டும் சொல்கிறேன் உங்களை போலவே நானும் ஒரு குறிப்பிட்ட சமூகம் சமயத்தின் அடிப்படையில் ஒரு தனித்த இனமாக முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளேன். அதே நேரத்தில் சோனகர் என்ற இனம் தொடர்பாகவும், இஸ்லாமியர் அல்லது முஸ்லீம்கள் என்ற சமயம் சார்ந்தவர் தொடர்பாகவும் போதியளவு விளக்கத்தையும் பெற்றுள்ளேன். எனது அரசியல் தெளிவு, தெளிவின்மை தொடர்பாக கவலை படவேண்டாம். முதலில் இது தொடர்பாக நீங்களாக தெளிவு பெற முயற்சியுங்கள். முடியாவிட்டால் நான் உதவி செய்கிறேன்.

    மொழி பெரிதா, மதம் பெரிதா என்ற கேள்விக்கு நான் வரவில்லை. உங்களுக்கு மொழி பெரிதாக இருக்கலாம், இன்னொருவனுக்கு மதம் மொழியைவிட பெரிதாக இருக்கலாம், இன்னொருவனுக்கோ இவை இரண்டுமே பெரிதாக இல்லாமல் இருக்கலாம். இன்னொருவனுக்கு இனம் எல்லாவற்றிலும் பெரிதாக தென்படலாம். இவைகளுக்கு அளவுகோல் என்ன? இப்படியிருக்கும் போது “மொழி” என்பது வலுவானது என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள் நந்தா.

    இலங்கை பல்லின நாடு என்பதை உலகம் ஏற்றுள்ளபோது, இலங்கை மக்களும் அதை சரி எனும் போது, என்னையும், என் போன்றோரையும் எமது பிறப்பு சாட்சி பத்திரம் இவர்கள் இனத்தால் சோனகர் என்று உறுதியாக கூறும் போது, அது சரி என்று நாமும் ஏற்றுக்கொள்ளும் போது நீங்கள் மாத்திரம் ஏன் பலாத்காரமாக என்மை “தமிழர்” என்று “படாத” பாடுபட்டு நிரூபிக்க முயற்சிக்கின்றிகள் என்பது புரியவில்லை.

    இதற்கிடையில் எப்படி பதியுதீன் முஹம்மது பாக்கிஸ்தானியானார், பாக்கீர் மாக்கார் எப்போது கேரளாவில் இருந்து இலங்கை வந்தார். “புரட்சி” என்பதை தமிழருக்கு யார் சொல்லி கொடுத்தார் என்பதற்கெல்லாம் துரை அவர்கள் பதில் கொடுத்தபடியால் இத்துடன் முடிக்கின்றேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்குண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் என்னிடமில்லை…..//

    //…ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையை அனுபவிக்க நியாயமான காரணங்கள் உள்ளனவா என்பதும்,.//

    //உங்கள் தனிப்பட்ட உரிமை என்றால் நான் காரணம் கேட்டிருக்க மாட்டேன். இது ஒட்டு மொத்த நாட்டு மக்களுடனும் சம்பந்தப்பட்ட விடயம். பல இனங்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் ஆகவே கவணம் அதிகம் வேண்டும். தனிப்பட்ட விடயத்தில் கூட அதிகரிகளுக்கு, அரசாங்கங்களுக்கு தலையிடும் உரிமை உண்டு மறந்து விட வேண்டாம். சில உரிமைகள் நிபந்தனையுடன் அனுபவிக்க வேண்டியவை….//

    நிஸ்தார் நீங்களே ‘சுயநிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டு’ என சொல்லி விட்டு இது பல இனங்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் என மாறி பின்னர் தனிமனித சுதந்திரத்தில் தலையிட அரசு அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என வந்து நிற்கிறீர்கள். முதலில் சுயநிர்ணய உரிமை என்றால் என்ன, இனங்களிடையேயான உறவு என்றால் என்ன, தனிமனித சுதந்திரம் (மத வழிபாடு உட்பட) என்றால் என்ன என உள்ள வரையரைகளை நீங்கள் விளங்கிக்கொண்ட வகையில் சொன்னால் நல்லது. நாம் இங்கே ‘ஸ்ரீலங்கா வகை’ ஜனநாயகம். சுதந்திரம் பேசவில்லை. அங்கே அது இல்லை என்பதே அடிப்படை வாதம்.

    //..சில உரிமைகள் நிபந்தனையுடன் அனுபவிக்க வேண்டியவை….//

    எந்த உரிமைகள் அவை அவற்றுக்கான நிபந்தனைகள் என்ன எனவும் கொஞ்சம் சொல்லவும்.
    நீங்கள் ‘உரிமைகளையும், ‘சலுகைகளையும்’ (Rights and Privilages) போட்டுக் குழப்புகிறீர்கள். எந்த உரிமையும் நிபந்தனைகளுடன் வருவதில்லை சலுகைகளே நிபந்தனையுடன் வருகின்றன.

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    சாந்தன்,
    நான் தமிழரின் சுய நிர்ணய உரிமையை மறுதழிக்கவில்லை என்பதையாவது விளங்கிக் கொண்டமைக்காக நன்றி.

    நீங்கள் இலங்கையில் சுதந்திரம், உரிமைகளை அனுபவிக்கும் தன்மை என்பன இல்லை (இதை முற்றாக நான் ஏற்கவில்லை) என்பதாலும், நீங்கள் ஐரோப்பிய நாடொன்றில் தான் வாழ்கின்றிர்கள் என்ற ரீதியிலும் நிபந்தனையுடன் அனுபவிக்கும் சில உரிமைகளை ஞாபகபடுத்த முயல்கிறேன்.

    அதற்கு முன், உங்களின் கை நீட்டும் உரிமை அடுத்தவனின் மூக்குவரைக்கும் என்பது நீங்கள் அனுபவிக்க தகுதியான நிபந்தனையற்ற உரிமை. இருப்பினும் உங்கள் கை நீட்டும் உரிமையை அனுபவிக்கவேண்டி அடுத்தவனின் தடையற்ற நடமாட்டத்தை பற்றி கவலைப்படாமல் உங்கள் உரிமையை அனுபவிக்க உங்களுக்கு நிபந்தனையுடன் கூட உரிமையில்லை.

    உங்களின் உயிர் மேல் உங்களுக்கு பூரண உரிமையுண்டு. ஆனால் நீங்கள் நினைத்த நேரத்தில் அதை எடுக்கும் (தற்கொலை) உரிமையை சட்டம் தடை செய்கிறது. அதை மீறும் போது சட்டம் தண்டிக்கின்றது. இருப்பினும் நீங்கள் கடும் நோயினால் மிக கஸ்டப்படுகிறிர்கள், நீங்கள் வாழ்வதில் பிரயோசனம் இல்லை என்றால் உங்களின் உயிரை நீங்களே எடுக்க சட்டம் அனுமதிக்கின்றது. இது நிபந்தனையுடன் கூடிய உரிமை. இந்த உதாரணமெல்லாம் சரியாக உங்கள் கேள்விக்கு பதிலாக அமையவில்லை என்றால் நான் ஒன்றும் செய்யமுடியாது.

    தனிமனித உரிமை சமூக நலன் சார்ந்த உரிமைக்கு முன்னால் பலமிழக்கிறது. உரிமை அது இருக்கின்றது என்பதற்காக அது எப்போதும் எல்லா சந்தர்பங்களிளும் அனுபவிக்க தகுதி பெற்றன என்றில்லை. விவாகரத்து இருக்கின்றது, அது உங்கள் உரிமையும் கூட, என்பதற்காக எல்லாரும் விவாகரது செய்துதான் ஆகவேண்டுமெபதில்லை. அல்லது விவாகரத்துக்காக வேண்டியே யாரும் கலியாணம் செய்வதில்லை.

    Reply
  • NANTHA
    NANTHA

    துரை, தமிழீழம் என்பது நடக்கப் போவதில்லை என்பது எப்போதொ தெரிந்த விஷயம். அப்படி நடந்திருந்தால் பெட்டியுடன் அகதியாக தென்னிலஙைக்குத்தான் சென்றிருப்பேன்.

    என்ன இருந்தாலும் உங்கள் கற்பனை இப்படிப் போகவேண்டியதில்லை!

    Reply
  • thurai
    thurai

    //தமிழீழம் என்பது நடக்கப் போவதில்லை என்பது எப்போதொ தெரிந்த விஷயம். அப்படி நடந்திருந்தால் பெட்டியுடன் அகதியாக தென்னிலஙைக்குத்தான் சென்றிருப்பேன். என்ன இருந்தாலும் உங்கள் கற்பனை இப்படிப் போகவேண்டியதில்லை//நந்தா

    சரியான தலைமையின் கீழ் வழிநடத்தப் படாததாலேயே தமிழீழம், அழிவீழமாகியது. ஆனால் தமிழீழம் கிடைப்பதாயின் சரியான தலைமையின் கீழ்தான் கிடைத்திருக்கும். அது பிரபாகரனாகவும் இருந்திருக்கக் கூடும். கிடைத்தபின் அங்கு வாழமுடியாமல் தமிழனிற்குப் பயந்து தமிழனே நாட்டை விட்டு ஓடியவர் என்ற பெயர் நந்தாவிற்குக் கிடைத்திருக்கும். தமிழர்களால் தாழ்த்தப்பட்டும் நாட்டை விட்டு ஓடாமல் வறுமையிலும் கொடுமையிலும் வாழ்ந்த வாழும் தமிழ் சமூகங்களுண்டு.

    துரை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சாந்தன்,நான் தமிழரின் சுய நிர்ணய உரிமையை மறுதழிக்கவில்லை என்பதையாவது விளங்கிக் கொண்டமைக்காக நன்றி…./

    இங்கு பிரச்சினை அவ்வுரிமையை ஏற்றுக்கொண்ட நீங்கள் அதனை அனுபவிக்கும் உரிமையை ஏன் புறக்காரணிகளை வைத்து மறுக்கிறீர்கள் என்பதே. பாலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஆனால் அவற்றை ”வழங்குவதில்” இஸ்ரேலின் நலன்கள் அடங்கி உள்ளன என இஸ்ரேல் சொல்லி இருப்பதனை ஏற்றுக்கொள்வீர்களா? இல்லை இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்ரேலின் ‘இருப்பு’ அமெரிக்க நலன் சார்ந்தது. அதனால் பாலஸ்தின உருவாக்கத்தில் அமெரிகாவுக்கும் ‘கருத்துச்சொல்ல’ உரிமை உண்டு என அமெரிக்கா சொல்வதை ஏற்றுக்கொள்வீர்களா? இதில் எவை ‘கைகள்’ எவை ‘மூக்குகள்’ எனச் சொன்னால் நலம்.

    //….அதற்கு முன், உங்களின் கை நீட்டும் உரிமை அடுத்தவனின் மூக்குவரைக்கும் என்பது நீங்கள் அனுபவிக்க தகுதியான நிபந்தனையற்ற உரிமை. இருப்பினும் உங்கள் கை நீட்டும் உரிமையை அனுபவிக்கவேண்டி அடுத்தவனின் தடையற்ற நடமாட்டத்தை பற்றி கவலைப்படாமல் உங்கள் உரிமையை அனுபவிக்க உங்களுக்கு நிபந்தனையுடன் கூட உரிமையில்லை. …//

    ஸ்ரீலங்காவில் தமிழரின் எந்த ’கைநீட்டும்’ உரிமை யாரது எவ்வகையான ‘மூக்குகளை’ பாதிக்கிறது என விளக்கம் சொல்வீர்களா?

    Reply
  • NANTHA
    NANTHA

    சரியான தலைமையின் கீழோ பிழையான தலைமயின் கீழோ “தமிழ் ஈழம்” கேட்டு போராடியிருந்தாலும் சரி அது கிடைக்க எந்த வித வாய்ப்பும் கிடையாது. தமிழ் என்று அரசியல் தொடங்கியவர்களுக்கு அது “மூலதனமே” ஒழிய தமிழ் பேசுபவர்களுக்கு அது எப்போதும் ஓர் “தூக்கு கயிறு” என்பதையே அப்போதும் இப்போதும் நம்புகிகிறேன்! அதற்கான காரணிகள் பலவுண்டு. தமிழர்கள் நிஜங்களுக்குப் பதிலாக நிழல்களை நம்பி வாழ பழகி விட்டார்கள். அது அறியப்படாத வரையில் இந்த “தமிழ்” ஜலதோஷம்” நீடிக்கும்!

    Reply
  • thurai
    thurai

    //தமிழ் என்று அரசியல் தொடங்கியவர்களுக்கு அது “மூலதனமே” ஒழிய தமிழ் பேசுபவர்களுக்கு அது எப்போதும் ஓர் “தூக்கு கயிறு//நந்தா
    தமிழர் என்று கூறினாலும் அவர்களை தமிழர்களாக ஒன்றிணையாது பிரித்து வைத்திருக்கும், சாதிகழும், சமயங்கழுமே இதற்குக் காரணம்.

    தமிழர் தமிழர்களா இல்லாமல் பல கூறுகளாக பிளவுபட்டிருந்ததே இதற்குக் காரணம். இன்று மேலும் நிலைமை மோசமடைந்துள்ளது. இதற்கு ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுமே பொறுப்பு.

    துரை

    Reply
  • Sothilingam T
    Sothilingam T

    விவாதத்தில் ஒரு விடயத்தை மறந்து விவாதங்கள் நடைபெறும்போது விவாதம் அர்ததமற்றதாகிவிடுகிறதா என தோன்றுகின்றது?

    மறந்து போகின்ற விடயம் காலம்-வரலாறு காலம் வரலாற்றை பதிவு செய்து கொண்டிருக்கிறது அது எதை பதிவு செய்து கொண்டிருக்கிறது மக்கள் சமூகம் வாழ்ந்தும் மடிந்தும் புதிதாய் பிறந்தும் கொண்டிருக்கிறார்கள் இந்த மக்களின் வாழ்வுடனேயே எல்லாம் மாற்றம் காண்கின்றன. ஒரு காலத்தில் இலங்கையில் ஒரு குறிப்பிட்ட சாதி இனத்தவர்கள் பெரும்பான்மையினராகவும் பின்னர் வேறு ஒருவர் பெரும்பான்மையினராகவும் அதற்குப்பின்னர் வேறுஒருவருமாக மாற்றம் பெறுகின்றது.

    உதாரணத்திற்கு இந்த பிரிட்டனுக்கு 1990 களில் அதிகமாக தமிழர்களும் சோமாலியர்களும் வருகை தந்தனர் இன்று பிரிட்டனில் கடந்த 3 வருடங்களாக வரும் குடியேற்றவாதிகள் இதர ஜரோப்பியர்களே இன்று பிரிட்டனின் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படுவதை நாம் எம்முன்னாலேயே பார்க்கிறோம்.
    நன்றி.

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழ் பேசுபவர்களின் பிரச்சனை “தமிழும்” அல்ல. சிங்களமும் அல்ல என்பதும் “பொருளாதார” பிரச்சனைகள் என்பதே என்பதை பலரின் பதிலகள் உறுதிப்படுத்துகின்றன.

    அந்த “பொருளாதார” பிரச்சனையை தீர்க்க பலரும் மொழியையும் ஒரு ஆயுதமாக பாவிக்கிறார்கள். அதற்கிடையில் “மதம்” பரப்புவோர் “என்னுடைய கடவுள்” உன் பொருளாதாரப் பிரச்சனையை தீர்ப்பார் என்றும் கூறுகிறார்கள். யாரும் காணாத கடவுளினால் “உப்பு”, “புளி” பிரச்சனை தீரும் என்று நான் நம்பவில்லை!

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    உங்கள் “கை,மூக்கு” கேள்விகள் தொடர்பாக,
    யாழ்பாணத்தில் தமிழர் அதிகம் வாழ்ந்ததால் அது தமிழர்களின் கை நீட்டும் உரிமையாகக் கொள்ளலாம். 1990ல் தமிழ் புலிகள் அந்த உரிமையை “சோனகர்” ரின் வாழ்வதற்கான உரிமை (இதை வேண்டுமானால் “மூக்கு” ஆக கொள்ளலாம்)க்கு எதிராக பாவித்தனர். இதே போல் தாய்லாந்து, நோர்வே பேச்சு வார்த்தைகளில் “சோனகர்” தனி தரப்பாக கலந்து கொள்ள தமிழ் புலிகள் அவர்களை அனுமதிக்க வில்லை. இதுவும் கையும், மூக்கும் சம்பந்தமான விடயம்தான். இவையும் விளங்கவில்லை என்றால் சொல்லுங்கள் இதைவிட இலகுவாக விளங்கப்படுத்த முயற்சிக்கின்றேன்.

    மேலும், பாலஸ்தீன விடயத்தை ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள்? நான் முஸ்லீம் என்பதாலா? என்னைப் பொறுத்தவரை இலங்கையின் பல்லின தன்மையை புரிந்து கொள்வதில் உங்களுக்கு பிரச்சினை இருக்குமானால், உங்களால் பலஸ்தீன பிரச்சினையில் உள்ள இன முறன்பாடுகளை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. எனவே இப்போதைக்கு இங்கு அதை தவிர்கிறேன். தேவை ஏற்படும் போது அது பற்றியும் பேசுவோம்.

    Reply
  • Ajith
    Ajith

    The religious faith, principles, or cause of Islam.

    புலி எதிர்ப்பாளன் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முன்பே நான் சொல்லி விட்டேன்
    பிரிவினைக்கு எங்கே, எப்போது பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது? 1977ல் த.வி.கூ னிக்கு ஆதரவாக கிடைத்த மொத்த வாக்குகள் எத்தனை? எதிராக கிடைத்த வாக்குகள் எத்தனை? ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் உள்ள தமிழ் தலைவர்கள் சரத் பொன்சேகாவுக்கே வாக்களிக்க தமிழர்களை கோட்டனர், பிரிவினையை ஆதரிக்கும் சிவாஜிலிங்கத்தை அல்ல. பொது தேர்தலிலும் பிரிவினையின் மும்மூர்திகள் தோற்கடிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற 14 தமிழ் உறுப்பினரும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்” என்று கதைக்க ஆரம்பித்து விட்டனர். உரித்திர குமாரனும் இலங்கையில் நாடு கடந்த தமிழ் ஈழ தேர்தலை வைத்து தமிழரின் அபிப்பிராயத்தை கேட்காமல் வேறு எல்லா நாடுகளிலும் தேர்தல் வைத்தார். இந்த பொழுது போக்கு தேர்தலிலும் 15% வாக்காளர் தான் கலந்து கொண்டதாக, நானில்லை பல்லி சொல்கிறார். மில்டன் கீன்சில் தேர்தல் முறைகேடு வேறு நடந்துள்ளதாம். அஜித் எங்கே “பெரும்பான்மை” என்று சொல்லமுடியுமா? உங்களை நீங்களே ஏமாற்ற தீர்மானித்து

    Your answer itself proves that you are an islamist. You never tried to answer about palestine or Kashmere problems and their right of self-determination. Your double standard itself suggest you are not honest to yourself. Hamas and PLO are two terrorist organisations. The infighting between these two terroist organisations are still going on, so they have no right for a seperate state. Palestine was the origin of Jews. There are Jihad movements sponsored by Sri Lanka government operate in Eastern province. Do you agree these facts. What is the difference between Isralies and Rajapakse government. Are you openly prepared to accept that both Isralies and Rajapakse government are indifferent and terrorists.

    இலங்கை பல்லின நாடு என்பதை உலகம் ஏற்றுள்ளபோது, இலங்கை மக்களும் அதை சரி எனும் போது, என்னையும், என் போன்றோரையும் எமது பிறப்பு சாட்சி பத்திரம் இவர்கள் இனத்தால் சோனகர் என்று உறுதியாக கூறும் போது, அது சரி என்று நாமும் ஏற்றுக்கொள்ளும் போது நீங்கள் மாத்திரம் ஏன் பலாத்காரமாக என்மை “தமிழர்” என்று “படாத” பாடுபட்டு நிரூபிக்க முயற்சிக்கின்றிகள் என்பது புரியவில்லை.

    I agree with you it is your decision to accept you belongs to “Sonagar” race. It is your right to choose your relegion, race, language but I don’t understand your logic. No one wants you to be a tamil but muslims in Sri Lanka are tamil speaking people.

    Sri Lanka was made by British into a multi racial country but always been as a union of states. As it is now Sri Lanka is place where various races live but none of the races accept it as a multi racial country, Sinhalese never accepts it as a multi racial country. They belive the country is of Sinhalese. 99% of the Sri lanaka forces (armed, air and navy) are constituted by Sinhalese. Tamils never felt that they have equal rights as Sinhalese in this country since the rule of power handed over to Sinhalese. Tamils believed that they can live with in a united country but Sinhala never prepared to accept equal rights. You may not understand the real meaning of equal rights because you accept that the packing and sending tamils from Colombo to Vanni by Rajapakse in buses are the real characteristics of multi racial country or economic sanctions of food and medicine to Vanni.

    Reply
  • thurai
    thurai

    அஜீத், சிங்களவர் தமிழர்களிற்கு சம உருமை மறுப்பதும், தமிழர்களிற்கென்று இலங்கையில் பூர்வீக பிரதேசம் உள்ளதும் உண்மை. இன்றுள்ள நிலைமைக்கு காரணம் சிங்களவ்ரின் துவேசம் மட்டும்மல்ல தமிழர்கள் விட்ட தவறுகழும் ந்டைமுறையிலுள்ள ஒற்றுமையின்மையுமே யாகும்.

    தமிழர் தன் காலில் தனிநாடாக இருக்க எவ்வளவு பலத்துடன் உள்ளான் என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 30 வருடத்திற்கு முன் இருந்த் நிலமையென்ன இப்போதுள்ள நிலைமையென்ன. புலம்பெயர் தமிழர் மாமரத்தில் தொற்ரி வாழும் ஒட்டுண்ணி குருவிச்சை போன்றவர்கள். இவர்களின் பலத்தை அரச மரத்திற்கு ஒப்பிடும் தனி அரசாக்க் முடியுமா?

    ஒரு இனம் தான் வாழும் நாட்டினை விரும்மி (நாடி-நாடு) அங்கேயே வாழ்ந்து சமூகங்களின் ஒற்ருமையையும் பொருளாதார அபிவிருந்தியையும் மேற்கொள்வதே முதல் கடமை.

    புலியின் கட்டுப்பாட்டில் உள்ள போது வன்னியில் யாராவ்து யாழ்ப்பாணத்தில்லிருந்தோ அல்ல்து தென்னிலங்கையிலிருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ குடியேறினார்களா? நாம் விட்ட தவறுகளை உணராமலும் திருந்தாமலும், திருத்தாமலும் நாம் வெற்ரி காண முடியாது. போராட்டம் என்பது உலக்முள்ள வரை, தனிமனிதன் தன் வாழ்வில் போராடுவது போல, ஓர் இனமும் போராட வேண்டும் அத்ற்கு புலிகள் பொருந்துமா, புலம்பெயர் தமிழர் வேண்டுமா நீங்களே பதில் சொல்லுஙகள்.

    துரை

    Reply
  • Ajith
    Ajith

    Mr Thurai,
    I agree with you that a number of factors contributes to the current stage of the problem but the problem still exists and unity is key to achieve the success. Every one needs to believe that we can achieve our goal and it is our courage that can take to the point where we want to reach. I accept that there are mistakes in all parts. It is not only the mistakes of LTTE but all of us make mistakes. Mistakes are unavoidable sometimes but the youth who saccrificed their lives are not made the mistakes purposely. They are our brothers and sisters and they believed that they can achieve something. We should not join our enemy to destroy the hope for the liberation. Sometimes it is beyond our control the fate of success and failures. For example, Palestines struggle for liberation from Isralies never came to reality because of the mistakes of PLO and Hamas but it is the power of America that blocks the liberation. I will be happy if you all put forward constructive criticism and arguments towards success rather than just throw mud on the basic principle of liberation.

    Reply
  • thurai
    thurai

    அஜீத் முதலில் எனது கருத்தை ஏற்ரதற்கு நன்றிகள்.

    தமிழினமென்பது பல ஆண்டுகளிற்கு முன்பு எவ்வளவு ஒற்றுமையுடனும் பலத்துடனும் இருந்ததோ அதே பலமும் ஒற்றுமையும் இன்று ஏன் நம்மிடையேயில்லை? இதற்கான உண்மைகளை முதலில் கண்டறிய வேண்டும். ஒருவரை ஒருவர் குற்ரம் சாட்டுவதையும் துரோகிகள்
    பட்டம் சூட்டுவதையும் நிறுத்த வேண்டும். எல்லாவற்ரிற்கும் மேலாக தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனையும் தமிழனே தமிழனாகவும், மனிதனாகவும் மதிக்க வேண்டும்.

    நமக்குள்ளே உள்ள தவறுகளை நாங்கள் அறியாமலும் அவற்ரினை திருத்தாமலும் சிங்களவரிடம் கோபம் கொள்வதும், தமிழரை கோபம் கொள்ளத் தூண்டுவதும் தமிழினம் தற்கொலை செய்வதற்கே ஒப்பானது.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….உங்கள் “கை,மூக்கு” கேள்விகள் தொடர்பாக,- யாழ்பாணத்தில் தமிழர் அதிகம் வாழ்ந்ததால் அது தமிழர்களின் கை நீட்டும் உரிமையாகக் கொள்ளலாம். 1990ல் தமிழ் புலிகள் அந்த உரிமையை “சோனகர்” ரின் வாழ்வதற்கான உரிமை (இதை வேண்டுமானால் “மூக்கு” ஆக கொள்ளலாம்)க்கு எதிராக பாவித்தனர்…..//

    அப்படியானால் ஏன் தமிழர்கள் ‘சோனகரை’ துரத்தினர் எனகிறீர்கள். நீங்கள் சொன்னது முதலில் சொன்னது போல இவை தனியாக ‘சோனகர்களின் மூக்கு’ மட்டுமல்ல மற்ரைய இனமான தமிழர்களினதும் கைநீட்டும் உரிமையிலும் தங்கி இருந்தது என அமைதியாக இருந்திருக்கலாமல்லவா?
    அல்லது புலிகள் சொன்னது போல தமது ‘தடையற்ற நடமாட்டத்தை” (Mohamed Nisthar on May 8, 2010 3:21 pm ) ஏற்றுக்கொள்கிறீர்களா?

    /…. இதே போல் தாய்லாந்து, நோர்வே பேச்சு வார்த்தைகளில் “சோனகர்” தனி தரப்பாக கலந்து கொள்ள தமிழ் புலிகள் அவர்களை அனுமதிக்க வில்லை…///
    இந்த ” தாய்லாந்து தனித்தரப்பு “ சம்பந்தமாக நடந்த ஜோக்குகள் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் பேராசிரியர் இம்தியாஸ் எழுதியவை பற்றி ஒங்கே நான் பலமுறை சுட்டிக்காடியுள்ளே. படித்திருப்பீர்கள் தானே நிஸ்தார்?
    அது சரி தனித்தரப்பு விளையாடுக்காட்டியவர்க்ள் இப்போது எங்கே? புலிகள் இல்லை தனித்தரப்பும் இல்லை ரோட்டை மறித்துக்கட்டிய குடியிருப்புகளும் இல்லை.

    //…என்றால் சொல்லுங்கள் இதைவிட இலகுவாக விளங்கப்படுத்த முயற்சிக்கின்றேன்….//
    தயவு செய்து சொல்லுங்கள். ஆனால் இலகுவாக என்ச் சொல்லி இன்னும் சிக்கலாக்குகிறீர்கள்!

    //….மேலும், பாலஸ்தீன விடயத்தை ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள்? நான் முஸ்லீம் என்பதாலா? …//
    என்ன நிஸ்தார் ஜோக்கடிக்கிறீர்களா? பாலஸ்தீனப்பிரச்சினை எம்முடன் பின்னிப்பிணைந்தது. எனது போராட்ட வாழ்க்கை பாலஸ்தீன மக்களின் வேதனையில் வலர்ந்தது என்றால் மிகையாகாது. எனது அரைவாசி வாழ்க்கையை பாலஸ்தீன ‘எதிரி’ நாட்டின் நிழலில் கழித்திருக்கிறேன். அந்த நாட்டின் பாதுகாப்பில் தப்பி இருகிறேன். ஆனாலும் எனது ஆதரவு பாலஸ்தீனத்துக்கே என்பதில் உறுதியாகவும் இருக்கிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது மனித உரிமை ஆணையத்தின் செயற்பாடுகளை முடக்கியதில் முக்கிய பங்கு எனது அன்புக்குரிய ‘பாலஸ்தீன ஆதரவு’ நாடுகளுக்கே உரியது என்பது வேதனையான உண்மை. மாறாக எமக்கு ஆதரவு அளித்தது இஸ்ரேல் என்கின்ற ‘கசப்பான’ உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.
    நீங்கள் முஸ்லிம் என்பதால் பாலஸ்தீனப்பிரச்சினையை இழுக்கிறேனா? நல்ல ஜோக்! உங்களைப்பற்றி நீங்கள் மிகைப்படுத்தப்பட்ட விம்பம் ஒன்றை வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன் நான்!

    //…என்னைப் பொறுத்தவரை இலங்கையின் பல்லின தன்மையை புரிந்து கொள்வதில் உங்களுக்கு பிரச்சினை இருக்குமானால், உங்களால் பலஸ்தீன பிரச்சினையில் உள்ள இன முறன்பாடுகளை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. எனவே இப்போதைக்கு இங்கு அதை தவிர்கிறேன். தேவை ஏற்படும் போது அது பற்றியும் பேசுவோம்…../
    தற்போதில்லாமல் எப்போது தேவை? சொல்லுங்கள் நிஸ்தார். என்னைப்பொறுத்தவரை பாலஸ்தீனம் பற்றிய பேச்சு எப்போதும் தேவை!
    ஏன் பாலஸ்தீனத்தில் ‘பல்லின’ சிக்கல் இல்லையே? அல்லது ‘வசதியாக’ டபிள் கேமா?

    Reply
  • பல்லி
    பல்லி

    //என்னைப்பொறுத்தவரை பாலஸ்தீனம் பற்றிய பேச்சு எப்போதும் தேவை!//
    எப்போதும் வளமான நாடுகளை பார்க்காதையுங்கோ; சதிராட புறப்பட்டு தமக்குள் பேயாடி நாசமாய் போன நாடுகளையே கிளி சோதிடம்போல் கைவசம் வைத்திருங்கோ;

    Reply
  • Pandiyan
    Pandiyan

    நண்பர்களே!
    இந்த நாடு கடந்தவர்கள் வட்டுக் கோட்டையினர் தொடர்ந்து தமது பெயரை தக்க வைப்பதற்கும் தமிழ் தேசியத்தை வைத்து பிழைப்பதற்குமான ஒரு கூட்டம். இவர்களின் இந்த பம்மாத்து இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் அடங்கி விடும் என்பதே எனது கருத்து. இது தொடர்பாக உங்கள் உறவுகளான தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இவர்களது பொய்ம்மையை சொல்லியும் எழுதியும் வாருங்கள்.
    தமிழ் மக்கள் இனவிரோத அரசுகளின் நடவடிக்கைகளினால் புலிகளின் மாபெரும் தவறுகளை மறந்து அவர்களை ஆதரித்த போது எங்களால் எதுவும் செய்ய முடியாது இருந்தது. ஆனால் இப்போது நிலமை அப்படி அல்ல என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் மத்தியில் இந்த நாடு கடந்தவர் வட்டுகோட்டையர் பற்றி தொடர்ந்து எடுத்துச் சொல்லி வாருங்கள். அத்துடன் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான பொறிமுறையினை (என்னவாக இருப்பினும்) சற்று கவனம் கொள்ளவும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /…எப்போதும் வளமான நாடுகளை பார்க்காதையுங்கோ; சதிராட புறப்பட்டு தமக்குள் பேயாடி நாசமாய் போன நாடுகளையே கிளி சோதிடம்போல் கைவசம் வைத்திருங்கோ;..//
    அப்போ வளமான அமேரிக்கா ஐரோப்பிய நாடுகள் போன்றன சொல்லும் அட்வைசை கேட்டு இஸ்ரேயல் கையில் பாலஸ்தீனர்களை விடுவோமா ?

    Reply
  • பல்லி
    பல்லி

    //அமேரிக்கா ஐரோப்பிய நாடுகள் போன்றன சொல்லும் அட்வைசை கேட்டு இஸ்ரேயல் கையில் பாலஸ்தீனர்களை விடுவோமா //
    அப்படி வேண்டாம் ஆனால் பாலஸ்தீனத்தை ஒற்றுமையாய் இருங்க என சொல்லுவோமே; அது தப்பா சாந்தன்?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பலஸ்தீனர்களை இஸ்ரயேல் அடிமைப்படுத் வைத்திருக்கிறார்கள் என்பது மறக்க முடியாத உண்மை.பலஸ்தீன குடியிருப்பில்லிருந்து தொழிலாளர்கள் இஸ்ரேலில் தோடங்களுக்களுக்கு வேலைக்கு போய் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் என்பதும் மற்றஒரு உண்மை. இதையறியாமல் பலஸ்தீன விடுதலைத் தலைமை என்பவர்கள் சிறுவர்கள்களை ஏவிவிட்டு இஸ்ரேல் இராணுவத்திற்கு கல்லெறியப் பண்ணுவதும் ஆத்திரம் ஊட்டுவதும் தற்கொலை போராளிகளை அனுப்பிவிடுவதும் இஸ்ரேல் பகுதிகளுக்கு சின்ன சின்ன ரக்கெட்டுகளை ஏவிவிடுவதும் அதற்கு பதிலாக இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன பகுதிகளுக்குள் புகுந்து அட்காஷம் செய்வதும் சந்தேகத்தின் பெயரில் ஆண் பெண்களை பிடித்துப்போவதும் கல்லுக்கு பதிலாக குண்டுகளை இஸ்ரேலியர்கள் பரிசளிப்பதுமே ஆண்டுகாலமாக வழமையாக இருக்கிறது.

    கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு இருபத்தெட்டு வயது நிரம்பிய வக்கீல் பலஸ்தீன பெண்மணி தற்கொலைப் போராளி தற்கொலை தாக்குதல் நடத்தி மாண்டதைக் கண்டோம். பெண் சொன்ன காரணம்; என் சகோதரர்கள் உறவினர்கள் இஸ்ரேல் இராணுவத்தால அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதே. ஒட்டுமொத்தத்தில் போர்வடிவங்கள் முப்பதுவருட புலிப்போராட்டத்திற்கும் பலஸ்தீன போராட்ட வடிவத்திற்கும் எந்தவித வித்தியாசம் இல்லை என்பதையே காட்டி நிற்கின்றன. குறைந்த வயது சிறுவனை குண்டைக்கட்டி அனுப்பி விட்டது பலஸ்தீனத்தில் தான் நடந்தது. நடப்பு வரலாறு இதற்கெல்லாம் விடை தேடும். எதிரி யார் என்பதையும் கண்டறியும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //முப்பதுவருட புலிப்போராட்டத்திற்கும் பலஸ்தீன போராட்ட வடிவத்திற்கும் எந்தவித வித்தியாசம் இல்லை என்பதையே காட்டி நிற்கின்றன. //
    என்னடா இது அரைகுறையாய் தெரிந்து கொண்டு சாந்தனிடம் மாட்டிவிட்டேனோ என பயந்தேன்; ஆனால் நான் புரிந்து கொண்டது சரியே என சந்திரா சொல்வதால் தொடர்ந்தும் சாந்தனுடன் வாதம் செய்யலாம்;

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    Ajith
    உங்களின் மே 15 பின்னூட்டம், நான் எதையோ காட்டுங்கள் என்று கேற்க நீங்கள் வேறு எதையோ காட்டுவது போலாகிவிட்டது. உங்கள் பின்னோட்டதின் முதல் மூன்று வரிகளில் மீண்டும் நான் ஒரு “இஸ்லமிஸ்ட்”, பாலஸ்தீனியர், கஸ்மீரியர் பிரச்சினை பற்றி பேசவில்லை, அவர்களுக்கு சுய நிர்னய உரிமை உண்டா இல்லையா என்பது பற்றியும் பேசவில்லை என்று தொடங்கி எங்கெங்கெல்லாமோ சென்றுள்ளிர்கள். ஆனால் நான் ஏற்கனவே கேட்ட கேள்வி “இஸ்லமிஸ்ட்” என்றால் என்ன என்பதற்கு இன்னும் பதில் வரவிலை. அல்லது பலஸ்தீனம் பற்றி நான் இன்னும் உங்கள் விருப்பப்படி வாய் திறக்காததால் அந்த நிலைதான் “இஸ்லமிஸ்ட்”டின் விளக்கம் என்கின்றிர்களா? மேலும் இப்போது தான் கவனித்தேன் என்னை அடிப்படை வாதி (fundamentalist) என்றும் கூறியுள்ளீர்கள். நான் இதற்கும் விளக்கம் கோட்டு உங்களை குழப்பவில்லை. விருப்பம் போல் அழையுங்கள். ஆனால் ஆங்கிலத்தில் தாராளமக வார்த்தைகள் உள்ளன என்பதற்காக பொருத்தமில்லாத இடங்களில் பொருத்தமில்லா வார்த்தை பிரயோகம் தவிர்கப்படவேண்டியவை. தெரிவு உங்களுடையது.

    சரி உங்கள் விருப்பத்துக்காக பலஸ்தீன் பற்றி பார்ப்போமானால், ஹமாஸ், பா.வி. அ ( P.L.O) இவை இரண்டும் பயங்கரவாத அமைப்பு என்கின்றீர்கள். அந்த அமைப்புகளுக்குள் உட்சண்டை அதனால் அவர்கள் தனிநாடு பெற தகுதியற்றவர் என்றும் கூறியுள்ளீகள். பா.வி.அ பில், ஹமாஸ்சில் பயங்கரவாத தன்மை இருந்ததை, அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை யாரும் மறைக்கவும் இல்லை. ஆனால் பா.வி.அ.யை, அது தனது பயங்கரவாத நடவடிக்கைகளை விட்டதின் பிறகு, ஐ.நா. சபை அவர்களை சுதந்திர போரளிகளாக ஏற்று, அவர்களின் தலைவர் யாசீர் அரபத்துக்கு ஒரு பார்யையாளர் அந்தஸ்து வழங்கி, ஐ.நா (U.N) பொதுசபை அமர்வுகளில் கை துப்பாக்கியுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர்கள் கையில் ஒரு அங்கிகரிக்கப்பட்ட சுயாட்சி பிரதேசம் (மேற்கு கரை) உள்ளது.

    இஸ்ரவேல் என்ற நாடு எப்போது உருவாக்கப்பட்டது என்பதை நான் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. “இஸ்ரவேல்” என்ற பெயரே யாகோபு(Jacob ) என்ற இறை தூதரில் இருந்தே தோன்றியது. இவரின் சந்ததியினரே யூதர்கள் என்று பெயர் கொண்டார்கள். கி.பி.1948ம் ஆண்டு வரை யூதர்களும், அரபிகளும் (அரபிகள்- யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் என்ற மதங்களை ஏற்றுக் கொண்டோர்) வாழ்ந்த/வாழும் இடம் பாலஸ்தீன். இன்றும் யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “பாலஸ்தீன்” ஓன்றை உருவாக்க இந்த (பயங்கரவாத) இயக்கங்கள் போராடுகின்றார்களே ஒழிய, யூதரை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே அரபுக்களுக்கான “பாலஸ்தீனம்” ஒன்றை உருவாக்கவல்ல. “பலஸ்தீனம்” பற்றிய கட்டுரை ஒன்றை யாரும் விரைவில் எழுதற் கூடும் (நானும் முயற்சிப்பேன்) அப்போது நிறைய விடயங்கள் வெளிவரும்.

    மேலும், அஜித் ஹமாஸ், பா.வி.அ என்பவற்றை நீங்கள் பயங்கரவாத அமைப்புகள் என்று குறிப்பிட்டுள்ளதால் அதே குணாம்சம் கொண்ட புலிகள் பயங்கரவாதிகள் அல்லவா? அந்த பயங்கரவாதிகளை அவர்கள் வாழும் நாட்டின் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அழித்தொழித்தை எவ்வாறு பிழை எங்கின்றிர்கள்? அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு சிங்களவர், தமிழர், சோனகர் எல்லோரும் அமைதியாக வாழ முற்படுவது குற்றமா? புலிகள் தமிழர்கள் ஆகவே தமிழர் எல்லாரும் புலிகள் என்ற குதர்க்கத்துக்கு வரமாட்டீர்கள் என நம்புகிறேன்.

    சமயத்தையும், இனத்தையும், மொழியையும் தேர்ந்தெடுப்பது எனது உரிமை எங்கின்றிர்கள். சமயத்தை, மொழியை தேர்ந்தெடுப்பது என்பது சரியாயினும், இனத்தை எப்படி தேர்ந்தெடுப்பது? எனது கட்டுரையில் நிகழ்தகவு பற்றி கூறியதற்கு, விஞ்ஞானம் பற்றி விளக்கமளித்தீர்கள். இந்த “இன” விடயத்தில் உங்கள் விஞ்ஞான(இரசாயண) அறிவு எப்படி?

    நான் “சோனவ(ன்)ர்” என்பதை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்கின்றிர்கள். நன்றி. அதே போல் எங்களை யாரும் தமிழர் என்று கூற நிர்ப்பந்திக்கவில்லை என்றும் கூறுகிறிர்கள்.ஆனால் பிரச்சினை வருவது தமிழ் அரசியல் மொத்த, சில்லறை வியாபாரிகளிடம் இருந்தல்லவா?. இன்னும் ஆர். சம்பந்தன் கூறுகிறார் இலங்கையில் இரண்டு இனங்கள்தான் உள்ளனவாம். இப்போது சொல்லுங்கள் சம்பந்தர் எம்மை சிங்களவர் என்கிறாரா அல்லது தமிழர் என்று குறிப்பிடுகின்றாரா?, தமிழர் என்றால் ரவூப் ஹகீமுடன் என்ன ஒப்பந்தம்? அல்லது புலிகளின் இஸ்லாமிய தமிழர், கலாச்சார குழு என்ற பதங்களின் உற் பொருள் என்ன? ஏப்பிரல் 16ம் திகதி “புதிய திசைகள்” வானொலி நிகழ்வு ஒன்றில் கேட்கப்பட்ட இலங்கை” சோனகர்” சம்பந்தமான கேள்விக்கு திரு. வி. உரித்திரகுமரன் பின்வருமாறு பதிலளித்தார், ” தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர், இந்த நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிக்கிறாராம்”. என்ன அரசியல் அறிவு? அஜித் பார்த்திர்களா நந்தாவுக்கும், உருத்திரருக்கும் உள்ள பிரச்சினையின் ஒற்றுமையை. நல்லவேளை வைகோ சொல்கிறார் ஆகவே நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை என்று சொல்லவில்லை.

    இஸ்ரெயிலுக்கும் ராஜபக்சவுக்கும் என்ன வித்தியாசம் என்று கேற்கிறிர்கள். பிரபாகரனுக்கும், ஆரியெல் சரோனுக்கும்/இஸ்ரெயிலுக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தால் அதே வித்தியாசம் தான் உங்கள் கேள்விக்கான பதில்.

    தவறுகள் தவிர்க்கமுடியாதவை எங்கின்றீர்கள். என்ன தவறு, ஏன் தவிர்கமுடியாது போனது என்று விளக்கமாக கூறினால் நாங்களும் அறிந்து கொள்ளலாம். அனேக மக்களை பொறுத்தவரை கடைசி கட்ட போராடத்தில் ராஜபக்சவுக்கு தவிர்க்க முடியாது போனது அப்பாவி தமிழர்களின் உயிரிழப்புகள். ஆனால் புலிகளால் தவிர்க்க கூடியதாக இருந்தவை அந்த உயிர்கள்தான். இருந்தும் பலி கொடுக்கப்பட்டார்காள். இப்போது சொல்லுங்கள் சொந்த மக்களையே மனித கேடயங்களாக பாவித்து, தப்பிச்சென்றோரை சுட்டுக்கொன்ற உலக சரித்திரத்தின் முதல் உதாரண புருசர் இவர் அல்லவா? இதை (சிறு) தவரென்று மன்னித்து விட சொல்கிறிர்களா? அப்பாவி தமிழரின் உயிர் என்பது அவ்வளவு மலிவானதா உங்களுக்கு?

    பலஸ்தீன் பற்றி கதைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலில் நம் முற்றதில் முளைத்துள்ள பிரச்சனைக்கு பரிகாரம் உண்டா என தேட முனையும் போது அந்த முயற்சியில் உள்ள நியாய, நியாயமற்ற தன்மைகளை வெளியே கொண்டுவந்து ஆரோக்கியமாக விவாதிக்காமல், பலஸ்தீன் விடயம் தொடர்பாக கதைக்காமல் ஒரு அங்குலமும் நகரக்கூடாது என்றால் என்ன செய்வது.

    யூதர்களை இன அழிப்பு செய்த ஹிட்லர் சட்டத்துக்கு தப்பிவிட்டார், ஆனால் அந்த கொலை களத்தில் காவலுக்கு நின்றவன், காவலுக்கு நின்றவனுக்கும் தேனீர் ஊற்றி கொடுத்தவன், அதற்கு சீனி வாங்கச் சென்றவன் என்று இன்னும் ஆட்களை தேடிப்பிடித்து ஜேர்மன் அரசாங்கம் நாசிகளை தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இயற்கை நீதி என்பது ஒன்றுதான். அதில் மஹிந்த, கோத்தபாய, பிரபாகரன், சிவாஜிலிங்கம், சம்பந்தர், உருதிரகுமார், நான் அல்லது நீங்கள் என்று பேதமெல்லாம் கிடையாது.

    இந்த அடிப்படையிலேயே நான் முற்றாக புலிகளையும் அவர்களின் அடாவடித்தனங்களையும் வெறுக்கிறேன். அதை நியாயப்படுத்துவோரை நிராகரிக்கின்றேன். இலங்கை அரசுக்கும், ஹிட்லருக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அல்லது மஹிந்தாவுக்கும், பிரபாகரனுக்கும் அவர்களின் செயல் தொடர்பாக சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளன.

    குற்றசெயல் ஒன்றுக்கு அதை குற்றம் என்று நிறுவ “குற்ற மனம்” (guilty mind) என்பது அவசியமாகின்றது. அது பிரபாகரனின் செயலிலும், ஏன் ஜே.ஆர் ரின் 1983 இனப் படுகொலையிலும் காணப்படுகின்றது. எனவேதான் நோர்வே நாட்டின் தமிழ் பெண், திருமதி. ஜெயரட்ணம், மே 18 ல் தமிழ் மக்கள் “புலி அழிவின் ஓராண்டு நினவு கூட்டத்தில்” போர் குற்றம் சம்பந்தமாக கதைக்க வேண்டாம், கதைத்தால் நாமும் அகப்படவேண்டும், இன அழிப்பு என்றே கோசம் எழுப்புவோம் என்று தமிழர் உயிரோடை என்ற யூ.கே தமிழ் வானொலி ஒன்றில் மே 12/13ம் திகதி அழைப்பு விட்டார். பாத்தீர்களா விடயம் எங்கே செல்கிறதென்று.

    ஆக அஜித், தமிழரின் சுய நிர்ணய உரிமை என்பது வேறு, புலி பயங்ககவாதிகளின் பிரச்சினை என்பது வேறு. சோனவர் தமிழும், சிங்களமும் பேசுவது வேறு, அவர்களுக்கான சுய நிர்ணய உரிமை என்பது வேறு, தமிழர் சைவத்தையோ அல்லது கிறிஸ்த்தவதையோ பின்பற்றுவது வேறு, சோனகர் இஸ்லாத்தை பின்பற்றுவதென்பது வேறு. சுய நிர்ணய உரிமை என்பது ஓடிச்சென்று ஒரு பிரதேசத்துடன் ஒட்டிக்கொள்வதல்ல. அது தனி மனிதனில் இருந்து ஆரம்பிக்கின்றது. அது கடைசியாக நிலத்தில் சென்று முடிகின்றது. எனவே நமது பின்னுட்டல்கள் இவற்றை பிரதிபலித்தால் நன்று.

    Santhan,

    முஸ்லிம் பேராசிரியர் இம்தியாஸ் கூறிய “தனித்தரப்பு” சம்பந்தமான ஜோக்குகள் பற்றி நீங்கள் பலமுறை எழுதியுள்ளதை படிக்கவில்லையா என கேட்டுள்ளிர்கள். என்ன சொல்ல வருகின்றிர்கள்? “தனித்தரப்பு” மாத்திரமல்ல முழு பேச்சு வார்த்தையும் ஜோக் என்கிறிர்களா? அல்லது இம்தியாஸின் அறிவு பரப்புக் குற்பட்டவகையில் “சோனகர்”க்கு தனித்தரப்பாக செயல்படும் உரிமை இல்லயா? அல்லது “சோனகர்” என்போர் தனி இனமே இல்லையா? ஆகவே தமிழர் அனுபவிக்க விரும்பும் சுய நிர்ணய உரிமையும் இந்த சோனகருக்கு இல்லையா? அல்லது நிங்கள் பலமுறை கூறிவிட்டீர்கள் என்பதற்காக உங்களிடம் சரணடைய சொல்கிறிகளா?

    “எனது போராட்ட வாழ்க்கை பாலஸ்தீன மக்களின் வேதனையில் வளர்ந்ததென்றால் மிகையாகாது” என்று சொல்லிவிட்டு, நான் முஸ்லிம் என்றதால் என்னிடம் பலஸ்தீன் பற்றி கேற்கிறிர்களா என்று கேற்க அது நான் என்னை பற்றி வைத்துள்ள” மிகைப் படுத்தப்பட்ட விம்பம்” என்கிறிர்கள். உண்மையில் எது மிகைபடுத்தல் என்று பார்த்தால் உங்களுடைய கூற்றே அதாவது “பலஸ்தீன மக்களின் வேதனையில்…” என்பதே மிகைப்படுத்தலாக அமைகிறது. ஆனால் நீங்கள் பாலஸ்தீனில் பயிற்சி எடுத்திருப்பீர்கள் என நம்ப வாய்ப்புண்டு.

    மேலும் உங்கள் கூற்றாகிய ” பலஸ்தீனத்தில் பல்லின சிக்கல் இல்லையா” என்பதும் வசதியான டபிள் கேமா?” என்ற கேள்வியும் உங்களுக்கும் பாலஸ்தீனதுக்கும் உள்ள அன்னியோன்னியத்தை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

    இறுதியாக உங்கள் கேள்வி “அப்படியானால் ஏன் தமிழர்கள் “சோனகரை” துரத்தினர்?” தமிழர் “சோனகரை” துரத்தினரா? இல்லையே புலிகள் அல்லவா அதை செய்தனர். நானும் புலிகள்தான் “சோனகரை” துரத்தினர் என்றும் எழுதியிருந்தேன்.

    நீங்கள் “புலிகள் எல்லாரும் தமிழர்கள்” ஆகவே “தமிழர்கள் எல்லாரும் புலிகள்” என்ற தத்துவம் போசுகிறிர்களா? அதைவிடவும் உங்கள் கேள்வி 1983 இனக்கலவரத்தின் நான்காம் நாள் ஜே.ஆர்ரின் கூற்றை ஞாபகப்படுத்துகிறது. சில ஆயுததாரகளின் செயலுக்காக அவர்கள் சார்ந்த இனத்தை பார்த்து வெட்கம் கெட்ட நிலையில் ” போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்பதே அது. அன்றில் இருந்து இதுவரை இலங்கை தேர்தலில் நாம் வாக்களிக்கவில்லை. இலங்கை அரசியல் வரலாற்ரில் ஜே.ஆர். ஒரு இரத்த கரை படிந்த அத்தியாயத்துக்கு பொறுப்பாளி. மன்னிக்கபட முடியாத குற்றவாளி.

    நீங்களும் அந் நிலைக்கு வந்து விட்டீர்கள் என்பதை பார்க்கும் போது இதற்குப் பிறகும் நான் எப்படி உங்கள் பொறுப்பற்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..முப்பதுவருட புலிப்போராட்டத்திற்கும் பலஸ்தீன போராட்ட வடிவத்திற்கும் எந்தவித வித்தியாசம் இல்லை என்பதையே காட்டி நிற்கின்றன…… //
    அதனால்த் தான் பாலஸ்தீனியர்கள் ஸ்ரீலங்காவுக்கு ‘வாழ்த்துச்’ சொன்னார்களோ? அதனால் தான் இஸ்ரேல் ஸ்ரீலங்காவை போர்க்குற்ர விசாரனைகலில் எதிர்த்து வாக்களித்ததோ?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    என்ன ஆளப்பா நீங்கள்! விடுதலையை தேடிப் புறப்பட்டவர்களும் அதனால் மக்கள்படும் துன்பங்களையும் அல்லவா நாம் சொன்னோம்.உந்த கேள்வியை சிறீலங்கா அரசுடனும் இஸ்ரேல் அரசுடனும் பலஸ்தீன அரசுடன் அல்லவா? கேட்கவேண்டும்.
    சிலவேளைகளில் நீங்கள் இருக்கும் பகுதியில் “நாடுகடந்தப லஸ்தீனஅரசு” இருந்தால் வாழ்த்து சொன்ன சமாச்சாரத்தைப் பற்றி கேளுங்கள் சாந்தன். அமெரிக்க சட்டம் இப்படியிருக்கு நான் புலியில்லை என்று கருத்து சொல்ல வருகிற உங்களுக்கு இந்த சின்ன விஷயம் புரியாமல் இருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது என்று சொல்லாமல் வேறு எப்படிச்சொல்வது?.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஆனால் பா.வி.அ.யை, அது தனது பயங்கரவாத நடவடிக்கைகளை விட்டதின் பிறகு, ஐ.நா. சபை அவர்களை சுதந்திர போரளிகளாக ஏற்று, அவர்களின் தலைவர் யாசீர் அரபத்துக்கு ஒரு பார்யையாளர் அந்தஸ்து வழங்கி,…

    பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட்டு என ‘வசதியாக’ எழுதுகிறீர்கள்.

    1991 மட்றிட் உடன்படிக்கையில் முதலாவதாகச் சொல்லப்பட்டிருப்பதும் முக்கியமானதும்…

    பாலஸ்தீன விடுதலை அமைப்பு ‘இஸ்ரேல் என்கின்ற ஒரு நாட்டின் இருப்பை அங்கீகரிக்கவேண்டும், மேலும் இஸ்ரேலின் ‘சமாதான முறையில்’ ஆன இருப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் (அதாவது இஸ்ரேலை ஏற்றுக்கொண்டு விட்டு அவர்களுடன் சண்டைக்கு போகக்கூடாது என்பது).

    இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருப்பது ஐ.நா பாதுகாப்புசபை தீர்மானம் 242 மற்றும் 338 ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் (1967ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இதனை கிட்டத்தட்ட எல்லா அண்மை நாடுகளும் நிராகரித்திருந்தன)

    மேலும் ‘பயங்கரவாதத்தியும் வன்முறையையும்’ கைவிட வேண்டும் என்பன.

    //.. ஐ.நா (U.N) பொதுசபை அமர்வுகளில் கை துப்பாக்கியுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர்கள் கையில் ஒரு அங்கிகரிக்கப்பட்ட சுயாட்சி பிரதேசம் (மேற்கு கரை) உள்ளது. …//

    தவறு !
    1974 இல அவர் ஐ.நா வில் உரையாற்றும் போது ”நான் ஒரு கையில் சுதந்திரப்போராளியின் துப்பாக்கியையும் மறுகையில் ஒலிவ் இலையையும் வைத்துக்கொண்டு பேசுகிறேன், தயவு செய்து எனது ஒலிவ் இலையை நளுவவிட வைக்காதீர்கள்’ எனக்குறிப்பிட்டார். ஆனால் அப்போது அவர் தனது துப்பாக்கி வைத்திருக்கும் இடுப்புப்பட்டியை மட்டுமே அணிந்திருந்தார். துப்பாக்கி ஐ.நாவின் வாசலில் பாதுகாவலர்களினால் களையப்பட்டிருந்தது. அதாவது அவர் அணிந்திருந்தது வெறுமையான இடுப்புப்பட்டியே!

    நானும் புளொட்டுடன் ‘திரிந்த’ போது கேட்ட பிரச்சாரத்தைத் தான் நீங்கலும் கேட்டு மகிழ்ந்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது. உண்மை அதுவல்ல.

    //.. “தனித்தரப்பு” மாத்திரமல்ல முழு பேச்சு வார்த்தையும் ஜோக் என்கிறிர்களா? அல்லது இம்தியாஸின் அறிவு பரப்புக் குற்பட்ட வகையில் “சோனகர்”க்கு தனித்தரப்பாக செயல்படும் உரிமை இல்லயா? அல்லது “சோனகர்” என்போர் தனி இனமே இல்லையா?…//

    நான் குறிப்பிட்டது தனித்தரப்பு பற்றி. அவர் சோனகரின் உரிமை பற்றிப் பேசவில்லை. மாறாக அவர்கள் எப்போது இதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பது பற்றி எழுதி இருந்தார். அவரின் கருத்துகளை நீங்கள் ஏற்கவேண்டுமென்பதில்லை ஆனால் கட்டாயம் வாசித்துப்பாருங்கள்.

    //…உண்மையில் எது மிகைபடுத்தல் என்று பார்த்தால் உங்களுடைய கூற்றே அதாவது “பலஸ்தீன மக்களின் வேதனையில்…” என்பதே மிகைப்படுத்தலாக அமைகிறது. …// ஏன் அவ்வாறு என்பதனை விளக்குவீர்களா?

    //..ஆனால் நீங்கள் பாலஸ்தீனில் பயிற்சி எடுத்திருப்பீர்கள் என நம்ப வாய்ப்புண்டு. ..//
    போராட்ட வாழ்க்கை என்றால் ‘ஆயுதம்’ ‘பயிற்சி’ என நீங்கள் நினைப்பது ஜிஹாத் என்றால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான போர் என நினைக்கும் ‘இஸாமிய அடிப்படை வாதிகள்’ கருத்துப் போன்றது!

    //..இன்றும் யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “பாலஸ்தீன்” ஓன்றை உருவாக்க இந்த (பயங்கரவாத) இயக்கங்கள் போராடுகின்றார்களே ஒழிய, யூதரை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே அரபுக்களுக்கான “பாலஸ்தீனம்” ஒன்றை உருவாக்கவல்ல…./

    இதேபோலவே இஸ்ரேலும் சொல்லுகிறது. ஆனால் அவர்கள் ‘ஜனநாயகம்’ வேறுவகை. நாம் எந்த பாலஸ்தீனருடைய நிலங்களையும் அபகரிக்கும் உரிமை கொண்டவர்கள், எந்த பாலஸ்தீனனையும் காலவரையறை இன்றி உள்ளே போடுவோம், எந்த உலம்பெயர் பாலஸ்தீனனுக்கும் நாடு திரும்பும் உரிமை கிடையாது….இந்த லிஸ்ற் பரிச்சயமான ஒன்றாக இருப்பது போல் தோன்றுகிறதா? ஆம் ஸ்ரீலங்காவின் ‘ஜனநாயகம்’ நினவுக்கு வருகிறதல்லவா? ஏற்றுக் கொள்ளலாமல்லவா?

    //..மேலும் உங்கள் கூற்றாகிய ” பலஸ்தீனத்தில் பல்லின சிக்கல் இல்லையா” …//
    பாலஸ்தீனத்தில் பல்லினச்சிக்கல் இருக்கிறது. ஆனால் பால்ஸ்தீனர்கள் அதனை முன்னிறுத்துவதிலும் விட இஸ்ரேல் அரசே அம்மக்கள் மீதான ‘கரிசனையால்’ அதைப்பற்றியும் பேச வேண்டும் என்கிறது இதில் பாலஸ்தீன கிறிஸ்தவர்களின் உரிமை பற்றியதும் அடக்கம்.

    Reply
  • BC
    BC

    //ஒரு கையில் சுதந்திரப்போராளியின் துப்பாக்கியையும் மறுகையில் ஒலிவ் இலையையும் வைத்துக்கொண்டு பேசுகிறேன்.//
    இதே பேச்சை நாங்களும் கேட்டு மயிர் கூச்செறிந்தது ஞாபகம் வருகிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //.. “இஸ்ரவேல்” என்ற பெயரே யாகோபு(Jacob ) என்ற இறை தூதரில் இருந்தே தோன்றியது. இவரின் சந்ததியினரே யூதர்கள் என்று பெயர் கொண்டார்கள்….//
    //….கி.பி.1948ம் ஆண்டு வரை யூதர்களும், அரபிகளும் (அரபிகள்- யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் என்ற மதங்களை ஏற்றுக் கொண்டோர்) வாழ்ந்த/வாழும் இடம் பாலஸ்தீன். …..//

    ஆம் நீங்கள் சொல்வதுபோல பழைய ஏற்பாடுகளில் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடுகள் ஹீபுரூ (யூத)பைபிள் ஆகும். பழைய ஏற்பாடுகள் எழுதப்பட்டது (சொல்லப்பட்டது) கிறிஸ்துவுக்கு முன்னர் ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர். அதேபோல பாலஸ்தீனம் எனும் பெயரும் ஏறத்தாழ அக்காலத்தில் இருந்தே புழங்கி வருகிறது (கலத்துக்குக் காலம் பரப்பளவில் பெருத்தும் சிறுத்தும் ) எனவே இஸ்ரேலியர்கள் சொல்வது போல் இரு பெயர்களும் சமகாலத்தவை எனவே ஒரு இடத்தின் பெயருக்குப்பதிலாக ‘தேவமைந்தன அல்லது இறைதூதன்’ பெயரால் அழைப்பது சாலச்சிறந்ததல்லவா? ஆகவே பாலஸ்தீனம் என்கின்ற பெயரை கைவிட்டு எல்லோரும் (ஜூத/முஸ்லிம்/கிறிஸ்தவ) சகோதரர்களாக இஸ்ரேலில் இருக்கலாமே அதற்கு ஏன் பாலஸ்தீனம் என்கின்ற பெயர் தேவை. ஜனநாயகம், சகோதரத்துவம், பல்லினம், பல்கலாச்சாரம் தான் முக்கியமே அன்றி பெயரில் ஒன்றுமில்லை அல்லவா? எனெவே

    //….இன்றும் யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “பாலஸ்தீன்” ஓன்றை உருவாக்க இந்த (பயங்கரவாத) இயக்கங்கள் போராடுகின்றார்களே ஒழிய, யூதரை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே அரபுக்களுக்கான “பாலஸ்தீனம்” ஒன்றை உருவாக்கவல்ல…//

    அதேபோல யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “இஸ்ரேல்” ஓன்றை உருவாக்க இந்த (ஜனநாயக)இஸ்ரேலிய அரசு் போராடுகின்றதே ஒழிய, முஸ்லிம்களை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே யூதர்களுக்கான ”இஸ்ரேல்” ஒன்றை உருவாக்கவல்ல என்கிறார்களே இஸ்ரேலியர்கள். அதை ஏற்கலாம் தானே? வெறும் பெயரில்தான் வேறுபாடே ஒழிய ‘சேர்ந்து வாழும்’ கொள்கையில் அல்லவே!

    Reply
  • பல்லி
    பல்லி

    //ஆம் நீங்கள் சொல்வதுபோல பழைய ஏற்பாடுகளில் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. //
    பார்த்து நந்தாவிடம் மாட்ட போறியள்.
    //….இன்றும் யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “பாலஸ்தீன்” ஓன்றை உருவாக்க இந்த (பயங்கரவாத) இயக்கங்கள் போராடுகின்றார்களே ஒழிய, யூதரை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே அரபுக்களுக்கான “பாலஸ்தீனம்” ஒன்றை உருவாக்கவல்ல…//

    அதேபோல யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “இஸ்ரேல்” ஓன்றை உருவாக்க இந்த (ஜனநாயக) இஸ்ரேலிய அரசு போராடுகின்றதே ஒழிய, முஸ்லிம்களை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே யூதர்களுக்கான ”இஸ்ரேல்” ஒன்றை உருவாக்கவல்ல என்கிறார்களே இஸ்ரேலியர்கள். அதை ஏற்கலாம் தானே? வெறும் பெயரில்தான் வேறுபாடே ஒழிய ‘சேர்ந்து வாழும்’ கொள்கையில் அல்லவே!

    ஆக பல்லி சொன்னதுபோல் தேவையில்லாத சதிராட்டம் ஒன்றை கால்நூற்றாண்டுக்கு மேல் செய்கிறார்கள் எனதானே இருவரும் சொல்லுறியள். இதைதானே பல்லியும் சொன்னேன்,

    //1974 இல அவர் ஐ.நா வில் உரையாற்றும் போது ”நான் ஒரு கையில் சுதந்திரப்போராளியின் துப்பாக்கியையும் மறுகையில் ஒலிவ் இலையையும் வைத்துக்கொண்டு பேசுகிறேன், தயவு செய்து எனது ஒலிவ் இலையை நளுவவிட வைக்காதீர்கள்’ எனக்குறிப்பிட்டார்//

    இதை அவர் பேசும் போது அவரது மனைவி பாதுகாப்பாய் பாரிஸ்சில் இருந்ததாக எங்கோ எப்பவோ படித்த நினைவு, அது உன்மையா?? சாந்தன்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    நீங்கள் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறியாமல் , நிஸ்தாரின் ’சுயநிர்ணய உரிமை’ பற்றிய ஒருபக்கமான கருத்துக்கு எழுதப்பட்ட பதிலை (கேள்வியாக) எடுக்கிறீர்கள். மேலும் எனது முதற்பதில்லில் நான் சொல்லி இருக்கும் இஸ்ரேனின் ‘ஜனநாயக’ விளையாட்டுகளையும் கவனியுங்கள். மேலும் 1970கள் வரையில் ‘பாலஸ்தீன மக்கள்’ என யாரும் கிடையாது என அப்போதைய பிரதமர் கோல்டா மேயர் சொல்லி இருந்தார் (ஆம் சிறுபான்மை என ஒன்றும் கிடையாது, எல்லோரும் சகோதரர்…போன்ற பம்மாத்து ஸ்ரேற்மன்ருகள் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல).
    எல்லாவற்றுக்கும் மேலாக இனிமேல் ‘இஸ்ரேல்’ கூட இந்த ‘ஜனநாயக’ விளையாட்டை விளையாடத் துணியாது. ஏனெனில் பாலஸ்தீன மக்கள் தொகை இன்னும் 10-15 வருடங்களில் இஸ்ரேலின் சனத்தொகையை தாண்டிவிடும். எனவே ‘ஜனநாயகம்’ சரிவராது என்ற உண்மையை இஸ்ரேல் உணரத்தொடங்கி விட்டது என்கிறார் நியூயோர்க் ரைம்சின் பத்தி எழுத்தாளர் (ஒரு யூதர்) ஜோன் ஃபிரீட்மன் !

    //..இதை அவர் பேசும் போது அவரது மனைவி பாதுகாப்பாய் பாரிஸ்சில் இருந்ததாக எங்கோ எப்பவோ படித்த நினைவு, அது உன்மையா?? …//
    இல்லை !
    இதை அவர் பேசியது 1974 இல ஆனால் திருமணம் செய்து கொண்டது 1990 இல்!

    Reply
  • பல்லி
    பல்லி

    //நீங்கள் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறியாமல் , நிஸ்தாரின் ’சுயநிர்ணய உரிமை’ பற்றிய ஒருபக்கமான கருத்துக்கு எழுதப்பட்ட பதிலை (கேள்வியாக) எடுக்கிறீர்கள்//
    இல்லை எனது குற்றசாட்டு போராட்டமென புறபட்ட இவர்கள் ஒரு அணியாக செயல்பட மறுப்பது ஏன்? இதன் விளைவை நாம் கற்று தேர்ந்தவர்கள் அல்லவா?

    //இஸ்ரேல்’ கூட இந்த ‘ஜனநாயக’ விளையாட்டை விளையாடத் துணியாது.//
    அதுக்கு அவர்களது வளர்ச்சி காரனமாய் இருக்கலாமல்லவா?? ஏன் நம்மவர்கள் கூட யூதர்களை பாருங்கள் பாருங்கள் என தானே ஈழத்தை நாடு கடத்தினார்கள். இஸ்ரேல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தன் நாட்டு வளர்ச்சியில் மிக அவதானமாக உள்ளது என்பது தெரிகிறதல்லவா?? இதுக்காக நான் இஸ்ரேல் நடவெடிக்கைகளை ஏற்றுகொள்பவன் என இல்லை; பாலஸ்தீன வீழ்ச்சியையும் இஸ்ரேல் வளர்ச்சியையும் சொன்னேன் அம்முட்டுதான்;

    //ஏனெனில் பாலஸ்தீன மக்கள் தொகை இன்னும் 10-15 வருடங்களில் இஸ்ரேலின் சனத்தொகையை தாண்டிவிடும். :://
    இப்படியும் ஒரு போராட்டமா?? சனதொகை மட்டும் இருந்தால் போதுமா?? இந்தியாவிலும் தான் சனதொகை அதிகம்; அங்கு உள்ள பட்ணிசாவை கவனிக்கவில்லையா? ஜரோப்பா நீரோட்டத்தில் சுவிஸ் கலந்து கொள்ளாமல் தனியாக போவதுக்கு காரணம் சனதொகை இல்லையே. இதே சனதொகை விடயத்தில் எமது நாட்டை பாருங்கள்.

    //இதை அவர் பேசியது 1974 இல ஆனால் திருமணம் செய்து கொண்டது 1990 இல்!//
    சரிஆண்டு தவறாய் இருக்கலாம்; ஆனால் ஒரு மக்கள் தலைவன் என சொல்லுபவர் தனது குடும்பத்தை பாதுகாப்பாய் பாதுகாப்பான நாட்டிலும் தனக்கு பாதுகாப்பாய் இரும்பையும் (ஆயுதம்) வைத்திருப்பது சரியானதா?? தலமைக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதில் எனது கருத்து மாறவில்லை ஆனால் தலமைமட்டும் பாதுகாப்பாயும் வளமாயும் இருந்தால் போதுமா.? இதுவும் எமக்கு அனுபவம் தந்த பாடம் அல்லவா??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….இல்லை எனது குற்றசாட்டு போராட்டமென புறபட்ட இவர்கள் ஒரு அணியாக செயல்பட மறுப்பது ஏன்? இதன் விளைவை நாம் கற்று தேர்ந்தவர்கள் அல்லவா?…//
    நாம் கற்க முன்னரே அவர்கள் கற்றுவிட்டனர். புளொட் புதிய இயக்கமாக மாறி பாண்டி பஜாரில் சுடுபட்டபோது இதையே நாமும் அவர்களிடம் கேட்டோம் (புளொட்டிடம்). அப்போது எமக்குச் சொல்லப்பட்ட பதில் பி.எல்.ஓ கூட பிரிந்து பரிஸில் சுடுபட்டனர், லண்டனில் சுடுபட்டனர் என.

    //இஸ்ரேல்’ கூட இந்த ‘ஜனநாயக’ விளையாட்டை விளையாடத் துணியாது.//
    அதுக்கு அவர்களது வளர்ச்சி காரனமாய் இருக்கலாமல்லவா?? ..//
    அல்ல, மாறாக ஜனநாஜகம் என்றால் தேர்தல் வரும். மக்கள் தொகை கூடிய இனத்தினர் ஆட்சி அமைப்பர். பால்ஸ்தீனியர்கள் இஸ்ரேலில் ஆட்சி அமைக்க ‘ஜனநாயக’ இஸ்ரேல் விரும்புமா?

    //…ஏன் நம்மவர்கள் கூட யூதர்களை பாருங்கள் பாருங்கள் என தானே ஈழத்தை நாடு கடத்தினார்கள்….//
    நீங்கள் முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சுப்போடுகிறீர்கள். யூதர்களைப் பாருங்கள் எனச் சொன்னது ஏன் என அறியாமல் இப்படு ஸ்பின் பண்ணக்கூடாது. அது கூறப்பட்டது அவர்களைல் ஆயிரம் குழுக்கள் இருப்பினும் ஒரு யூதனுக்கு பிரச்சினை என வந்துவிட்டால் ஒன்றாகநிற் பார்கள். ஆனல் ‘ஒற்றுமை’ பற்றிப்பேசும் நம்மவர்கள் வீடியோவில் காட்டப்பட்ட கொலைகளிக்கு ஸ்ரீலங்கா அரசௌ கொடுக்காத விளக்கமெல்லாம் (தாடி, சட்டை, கலர்) என கொடுக்கும் கனவான்கள்.

    //…இஸ்ரேல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தன் நாட்டு வளர்ச்சியில் மிக அவதானமாக உள்ளது என்பது தெரிகிறதல்லவா??…//
    ஆம் இதிலென்ன ஆச்சரியம்? அதேபோல பாலஸ்தீன மக்களும் தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் செய்வதற்கு இஸ்ரேலின் ‘அனுமதி’ வேண்டும். நாம் ஸ்ரீலங்காவில் ‘வளர்ச்சியில்’ ஈடுபட அனுமதி தேவை இல்லையா?

    //…. பாலஸ்தீன வீழ்ச்சியையும் இஸ்ரேல் வளர்ச்சியையும் சொன்னேன் அம்முட்டுதான்;…//
    இஸ்ரேல் ஒரு நாடு. ஆனால் பாலஸ்தீனம் ஒரு பகுதி. அவர்களுக்கு அதிகாரங்கல் இல்லை. ஏன் அதிகம் சொந்த நிலத்தில் ஒரு வீடுகூடக் கட்ட முடியாது. 45 வருடங்களாக அகதி முகாமில் வைத்திருக்கின்றனர். நீங்கள் ‘வளர்ச்சி’ பற்றிப் பேசுகிறீர்கள்.

    //…இப்படியும் ஒரு போராட்டமா?? சனதொகை மட்டும் இருந்தால் போதுமா?? ..// ஜனநாயகம், இலெக்சன் பற்றி நான் முன்னர் சொன்னவற்றை படியுங்கள். பல்லி மேலோட்டமாக விவதிப்பதை தவிர்த்தல் எனக்கும் நேரத்தை மிச்சமாக்கும்.

    //….இந்தியாவிலும் தான் சனதொகை அதிகம்; அங்கு உள்ள பட்ணிசாவை கவனிக்கவில்லையா? …// ஆனால் ஒரு ‘நாடு’ உண்டல்லவா?

    //.. இதே சனதொகை விடயத்தில் எமது நாட்டை பாருங்கள்…// ஆம், பெரும்பன்மை சனத்தொகையினால் சிறுபான்மையை அடக்குகின்றனர் (பெயர் ஜனநாயகம்)

    //இதை அவர் பேசியது 1974 இல ஆனால் திருமணம் செய்து கொண்டது 1990 இல்!//
    சரிஆண்டு தவறாய் இருக்கலாம்; ஆனால் ஒரு மக்கள் தலைவன் என சொல்லுபவர் தனது குடும்பத்தை பாதுகாப்பாய் பாதுகாப்பான நாட்டிலும் தனக்கு பாதுகாப்பாய் இரும்பையும் (ஆயுதம்) வைத்திருப்பது சரியானதா?? ..//
    என்ன ஆண்டு தவறென்கிறீர்கள். கலியானம் செய்யாமல் இருந்தபோது பேசினார். ஆனால் நீங்கள் அப்போ மனிசியை பாதுகாப்பாய் வச்சிருந்தார் எனக்கூறுகிறீர்கள். யாசர் இப்பேச்சை நிகழ்த்தியது 1974 இல ஆனால் அவர் மனைவி பிறந்ததோ 1963 இல் ! 11 வயதில் யாசர் அரஃபாத் அவரை (திருமதி.சுஹா அரஃபாத்) திருமனம் செய்து விட்டார் என்பீர்கள் போல் இருக்கிறதே? சொல்லப்போனால் அவரது மனைவியைச் முதன் முதலில் சந்தித்ததே 1985-1988 களில்தான் என அவர் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.

    //…தலமைக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதில் எனது கருத்து மாறவில்லை ஆனால் தலமைமட்டும் பாதுகாப்பாயும் வளமாயும் இருந்தால் போதுமா.? இதுவும் எமக்கு அனுபவம் தந்த பாடம் அல்லவா??…//

    எங்கே யாசர் அரஃபாத் (தலைமை) பாதுகாப்பாய் இருந்தார்? இறக்கும் தறுவாயிலும் பாலசஸ்தீனப் பகுதியிலல்லவா இருந்தார்? அங்கிருந்தே பிரான்ஸுக்கு வைத்தியசாலைக்கு வந்தார்? மேலும் சுஹா அரஃபத் சிறுவயசிலேயே பரிசுக்கு சென்றுவிட்டவர். மிகப்பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அஙேயே வாழ்ந்து வந்தார். இதில் ‘பாதுகாப்பு’ எனப்புகுத்தி வசதியாக முடிச்சுப்போடுகிறீர்களே?
    உங்கள் வாதப்படி யாசர் தனது மனைவியை ‘பாதுகாப்பாக’ பரிசில் வைத்திருந்தது பிழை என்றால் நீங்கள் சொன்ன ”இதுவும் எமக்கு அனுபவம் தந்த பாடம் அல்லவா??..” என்பது முன்பின் முரணாக இல்லையா?

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    சாந்தன்,
    பசு மாடு பற்றி கதைக்க வெளிக்கிட்டு அது கட்டியிருந்த தென்னை மரம் பற்றி கதைத்து இப்போது அம் மரம் வளர்ந்துள்ள மண் சம்பந்தமான ஆராய்ச்சியாகி விட்டது விடயம். இதற்காக தான் சொன்னேன் இலங்கை தொடர்பாக, அதன் இனங்கள் தொடர்பாக மாத்திரம் நமது கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் என்று. கேட்கவில்லையே. எனினும் உங்கள் கேள்விகளுக்கு அல்லது உங்கள் பிழையான விளக்கங்களுக்கு பதில் சொல்லாவிட்டால் நீங்கள் சொல்லதுதான் உண்மை என்றாகிவிடும் அபாயம் உள்ளதால் கடைசியாக பின்வருவனவற்றை உங்கள் அபிப்பிராயத்துகு விட்டுவிடுகிறேன்.

    மே 18 ல் சொன்னீர்கள் பாலஸ்தீனத்தில் “பல்லின சிக்கல் இல்லையே” என்று. மே 20ல் ஆம் ‘பல்லின சிக்கல் இருக்கின்றது” என்றுள்ளீர்கள். என்ன இது சிறு பிள்ளை விளையாட்டு. தெரியாவிட்டால் தெரியவில்லை என்று சொல்வதில் தப்பொன்றுமில்லையே. மேலும் மே 20ல் “ஆயுதம்”, “பயிற்சி” என்றவுடன்.. ஜிஹாத்ஸ. அடிப்படைவாதிகள் போல்ஸஎன்று எங்கோ செல்கிறிர்கள். சாந்தன் நான் ஆயுதம் என்ற வார்த்தையை பாவிக்கவில்லை. மற்றும் எனது ” பயிற்சி” என்ற சொற் பிரயோகத்தை “ஆயுத” பயிற்சியாக நீஙகள் எடுத்ததற்கு நான் எப்படி பொறுப்பு எடுக்க முடியும். பயிற்சி என்பது அரசியல் பயிற்சியாகவும் இருக்கமுடியுமல்லவா? நீங்கள் இரண்டையும் எடுத்திருக்கவேண்டும் அல்லது ஒன்றையாவது எடுத்திருக்க வேண்டும். “ஆயுத” பயிற்சியை நீங்கள் நிராகரிப்பதால் அது அரசியல் பயிற்சியாக இருக்க வேண்டும். யாசிர் அரபாத்தின் நேரடி கண்கானிப்பிலா? சும்மாதான் கேட்கிறேன். இவை இரண்டும் இல்லாவிட்டால் லெபனானில் அல்லது ஜோர்தானில் ஏதாவது வேலை பார்த்ததுக்கான வாய்ப்பும் உண்டு. எனவே நான் ஓன்றும் திட்டவட்டமாக கூறவில்லை. அது மாத்திரமல்ல உங்களின் பாலஸ்தினுடனான “அன்னியோன்னியம்” ஒரு சர்வதேச பிரச்சினையும் அல்ல. ஆகவே நாம் விவாதிப்பவைகளை நோக்கம் கருதி குறுக்குவோமானால் முடிவுகள் இலகுவாகிவிடும். அதற்காக ஒப்பீடே தேவை இல்லை என்று கூறவில்லை. எல்லாம் அளவோடு இருந்தால் நன்றல்லவா.

    மே 21ல் இப்படியும் கூறியுள்ளீர்கள் “ அதே போல் யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் இஸ்ரவேல் ஒன்றை உருவாக்கவே இஸ்ரவேல் அரசு போராடுகின்றது. முஸ்லிம் மக்களை கடலுக்குள் அமுக்கவல்ல” இந்த கூற்றின் மூலம் உங்கள் “பாலஸ்தீன அன்னியோன்னியம்” அம்பலத்துக்கே வந்து விட்டது. ஸியோனிசம்(Zionism) என்பதை கேள்விப்பட்டதுண்டா? அல்லது லியோன் பின்ஸ்கர்(Leon Pinsker) என்பவரை யார் என்று தெரியுமா?, ஏன் இஸ்ரவேலர் தான் ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பை மதில் கட்டி ஆள்கிறார்கள் என்பதாவது தெரிகின்றதா?, 3.5 மில்லியன் பாலஸ்தீனியர் இரண்டாம் தலைமுறையினராக ஏன் அகதிகளாக இருக்கின்றனர் என்றாவது புரிகின்றதா? ஐ.நா சபை தீர்மானங்களுக்கு எதிராக திட்டமிட்ட குடியேற்றங்கள் நடை பெறுவதையும் கண்டுகொள்ள வில்லையா? இப்போது சொல்லுங்கள் இஸ்ரவேலர் பாலஸ்தீனியரையும் சேர்த்து பரந்த இஸ்ரவேலை அமைக்கப்பாடுபடுகின்றனரா? பதில் தெரியாவிட்டால் அடுத்த கட்டுரை வரை பொறுத்திருங்கள். பல்லியையும் குழப்பதில் ஆழ்த்த வேண்டாமே.

    Reply
  • thurai
    thurai

    //ஆம் இதிலென்ன ஆச்சரியம்? அதேபோல பாலஸ்தீன மக்களும் தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் செய்வதற்கு இஸ்ரேலின் ‘அனுமதி’ வேண்டும். நாம் ஸ்ரீலங்காவில் ‘வளர்ச்சியில்’ ஈடுபட அனுமதி தேவை இல்லையா?//சாந்தன்

    வளர்ச்சியென்பது ஓர் இனம் தன் விடுதலைக்காக போராடுமுன்பே போராட்டத்திற்கான வளர்ச்சியையாவது பெற்ரிருக்க வேண்டும். இதனிலிருந்து தவறியதாலேயே ஈழ்த்தமிழர்கலிற்கு இந்த நிலமை. இதற்கும் அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்தால் அதற்குப் பெயர் விடுதலைப் போராட்டமல்ல.

    துரை

    Reply
  • PALLI
    PALLI

    //பல்லியையும் குழப்பதில் ஆழ்த்த வேண்டாமே.//
    அப்படி இலகுவாக குழம்பிவிட மாட்டேன்; இருந்தாலும் உங்கள் அறிவுரைக்கு நன்றி, சாந்தன் எனது எந்த கேள்வுக்கும் உங்கள் பதில் சரியாக இல்லை, மாவீரர் உரைபோல் இருக்கு; சரி உங்கள் வாதபடி சகோதர போட்டு தள்ளுதலை கற்று கொடுத்தத்து பிஎல்ஒ காரர்தனா?? என்ன சாந்தன் அடிக்கடி அமவாசையில் நிலவை தேடுறியள்??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..சாந்தன்,
    பசு மாடு பற்றி கதைக்க வெளிக்கிட்டு அது கட்டியிருந்த தென்னை மரம் பற்றி கதைத்து இப்போது அம் மரம் வளர்ந்துள்ள மண் சம்பந்தமான ஆராய்ச்சியாகி விட்டது விடயம்….//

    ஒரு வகையில் சரிதான். ஆனால் இங்கே ‘சுயநிர்ணய உரிமை’ பற்றிய வாதமே நடுநிலை பெறுகிறது. அச்சுய நிர்ணய உரிமையை ஒருவர் , ஒரு இனம் மற்றையவர்களுக்கு ‘மறுக்க’ முடியுமா, அவ்வாறாயின் அதனை மறுப்பவர்கள் யார்? என்பது பற்றிய விவாதத்தில் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய விடயம் வருவது தவிர்க்கப்பட முடியாது என்பதே என்கருத்து ! நீங்கள் அதனை பசுமாடு, மரம் என சொன்னால் நான் ஒன்றும் செய்ய முடியாது!

    //…மே 18 ல் சொன்னீர்கள் பாலஸ்தீனத்தில் “பல்லின சிக்கல் இல்லையே” என்று. மே 20ல் ஆம் ‘பல்லின சிக்கல் இருக்கின்றது” என்றுள்ளீர்கள். என்ன இது சிறு பிள்ளை விளையாட்டு. தெரியாவிட்டால் தெரியவில்லை என்று சொல்வதில் தப்பொன்றுமில்லையே….//

    எனது கருத்தில்ல் உள்ள எழுத்துப்பிழையை ஏலவே (சொல்லப்போனால் உடனேயே)சுட்டிகாட்டி இருந்தேன். அதாவது ‘இல்லயே’ என்பது ‘இல்லையா’ என்ற கேள்வியாக வந்திருக்க வேண்டும் என. ஆனால் என்ன காரணமோ தேசம்நெற் அதனைத் தணீக்கை செய்து விட்டது! என்ன செய்வது தணிக்கையால் நான் ‘சிறிபிள்ளையாகி’ விட்டேன்.

    //…மேலும் மே 20ல் “ஆயுதம்”, “பயிற்சி” என்றவுடன்.. ஜிஹாத்ஸ. அடிப்படைவாதிகள் போல்ஸஎன்று எங்கோ செல்கிறிர்கள். சாந்தன் நான் ஆயுதம் என்ற வார்த்தையை பாவிக்கவில்லை. மற்றும் எனது ” பயிற்சி” என்ற சொற் பிரயோகத்தை “ஆயுத” பயிற்சியாக நீஙகள் எடுத்ததற்கு நான் எப்படி பொறுப்பு எடுக்க முடியும். பயிற்சி என்பது அரசியல் பயிற்சியாகவும் இருக்கமுடியுமல்லவா?,,,..///

    நான் அறிய யாரும் ‘அரசியல்’ பயிற்சி எடுக்க பாலஸ்தீனம் போகவில்லை!
    ஒரு வேளை ஸ்ரீலங்கா பிரச்சினைக்கு பால்ஸ்தீனத்தில் ‘அரசியல்’ பயிற்சி எடுத்ததால்தான் எமது ‘இயக்கங்கள்’ தோல்வி அடைந்தனவோ?

    //…யாசிர் அரபாத்தின் நேரடி கண்கானிப்பிலா? சும்மாதான் கேட்கிறேன்….//
    அவ்வாறில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன். ஆனால் யாசிர் அரஃபாத்தை காரில் அவர் பயணிக்கும் போது கண்டிருக்கிறேன்!

    //….பாலஸ்தினுடனான “அன்னியோன்னியம்” ஒரு சர்வதேச பிரச்சினையும் அல்ல…// நான் அவ்வாறு சொல்லவில்லை!

    //…மே 21ல் இப்படியும் கூறியுள்ளீர்கள் “ அதே போல் யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் இஸ்ரவேல் ஒன்றை உருவாக்கவே இஸ்ரவேல் அரசு போராடுகின்றது. முஸ்லிம் மக்களை கடலுக்குள் அமுக்கவல்ல” இந்த கூற்றின் மூலம் உங்கள் “பாலஸ்தீன அன்னியோன்னியம்” அம்பலத்துக்கே வந்து விட்டது….//

    கருத்துக்களை ‘taking out of context’ அதாவது சொல்லப்பட்ட இடம் மற்றும் ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என எடுக்காமல் வெட்டி எடுத்து திணிக்கக்கூடாது நிஸ்தார. கீழே நீங்கள் சொன்னதும், அதற்கு நான் எழுதிய பதிலும்.

    ….இன்றும் யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “பாலஸ்தீன்” ஓன்றை உருவாக்க இந்த (பயங்கரவாத) இயக்கங்கள் போராடுகின்றார்களே ஒழிய, யூதரை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே அரபுக்களுக்கான “பாலஸ்தீனம்” ஒன்றை உருவாக்கவல்ல…//

    அதேபோல யூதர்களும், அரபிகளும் சேர்ந்து வாழும் “இஸ்ரேல்” ஓன்றை உருவாக்க இந்த (ஜனநாயக) இஸ்ரேலிய அரசு போராடுகின்றதே ஒழிய, முஸ்லிம்களை கடலுக்குல் அமுக்கிவிட்டு தனியே யூதர்களுக்கான ”இஸ்ரேல்” ஒன்றை உருவாக்கவல்ல என்கிறார்களே இஸ்ரேலியர்கள். அதை ஏற்கலாம் தானே? வெறும் பெயரில்தான் வேறுபாடே ஒழிய ‘சேர்ந்து வாழும்’ கொள்கையில் அல்லவே!..//

    நீங்கள் சொல்வதுபோலதான் இஸ்ரேலியரும் சொல்கிறார்கள் ஏற்பார்களா பாலஸ்தீனியர் எனக்கேட்டிருந்தேன். ஆனால் நீஙகளோ எனது கேள்வியை வசதியாக வெட்டி எடுத்து ஸ்ரேற்மன்ற் ஆக்கி விட்டிர்கள்!

    //…ஸியோனிசம்(Zionism) என்பதை கேள்விப்பட்டதுண்டா? அல்லது லியோன் பின்ஸ்கர்(Leon Pinsker) என்பவரை யார் என்று தெரியுமா?, ஏன் இஸ்ரவேலர் தான் ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பை மதில் கட்டி ஆள்கிறார்கள் என்பதாவது தெரிகின்றதா?, 3.5 மில்லியன் பாலஸ்தீனியர் இரண்டாம் தலைமுறையினராக ஏன் அகதிகளாக இருக்கின்றனர் என்றாவது புரிகின்றதா? ஐ.நா சபை தீர்மானங்களுக்கு எதிராக திட்டமிட்ட குடியேற்றங்கள் நடை பெறுவதையும் கண்டுகொள்ள வில்லையா? இப்போது சொல்லுங்கள் இஸ்ரவேலர் பாலஸ்தீனியரையும் சேர்த்து பரந்த இஸ்ரவேலை அமைக்கப்பாடுபடுகின்றனரா? பதில் தெரியாவிட்டால் அடுத்த கட்டுரை வரை பொறுத்திருங்கள். பல்லியையும் குழப்பதில் ஆழ்த்த வேண்டாமே….//

    திரும்பவும் சொல்கிறேன் நான் எழுதியவற்றை கவனமாக வாசிக்கவும். பாலஸ்தீன மக்களைப்பற்றி நான் என்ன சொல்லி இருக்கிறேன். மேலும் நான் வாழும் நாட்டின் கொள்கைகளுக்கு எதிராக நான் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கிரேன் என எழுதி இருந்தேனே கவனிக்கவில்லையா?

    நான் இருப்பது, படிப்பது வேலை செய்வது யூதமக்கள் செறிந்து வாழும் நகரம். அங்கே பாலஸ்தீனம் விடுதலையடைய வேண்டும் எனவும், பாலஸ்தீனர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி உரிமையும் கிடையாது, பால்ஸ்தீனர்களை கொல்லவேண்டும் எனப்பல கருத்துகளை கொண்டோர் பலரை நான் சந்தித்திருக்கிறேன். ஆகவே நிஸ்தார் ஸியோனிசம் பற்றி நீங்கள் எனக்கு சொல்லதேவையில்லை. அனால் தயவு செய்து மற்ரவர்களின் கேள்விகளுக்கு எழுதிய பதிலையோ, அன்றி ஒப்பீட்டளவில் சொல்லப்பட்ட கருத்துகளையொ ‘வெட்டி’ எடுத்து Out of context இல் வாதம் செய்வதனை நிறுத்துங்கள்!

    //….மாவீரர் உரைபோல் இருக்கு;…//palli
    சில விடயங்கள் நீளமாக இருக்கும். நானும் உங்கள் போல் ”மனிசியை பாரிஸில்….”எனபது போல் ‘போகிற போக்கில்’ சொல்லி விட்டுப் போனால் நல்லதல்ல. அதுதான் தேவை எனில் என்னால் முடியாது. காரனம் எனது ‘புளொட் பிரச்சாரப் பிரிவு’ நாட்கள் அனுபவம்! புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

    //…சரி உங்கள் வாதபடி சகோதர போட்டு தள்ளுதலை கற்று கொடுத்தத்து பிஎல்ஒ காரர்தனா?? .//
    எனது பதில் உங்கள் கருத்தான “போராட்டமென புறபட்ட இவர்கள் ஒரு அணியாக செயல்பட மறுப்பது ஏன்? இதன் விளைவை நாம் கற்று தேர்ந்தவர்கள் அல்லவா?…” என்பதற்கு எழுதப்பட்ட எனது ‘அனுபவ’ பதில்

    //…சரி உங்கள் வாதபடி சகோதர போட்டு தள்ளுதலை கற்று கொடுத்தத்து பிஎல்ஒ காரர்தனா?? .//

    கற்றிக்கொடுத்தது அவர்களோ இல்லையோ ஆனால் புளொட் அவர்களைகாட்டி ‘நியாயப்படுத்தல்’ செய்தனர் என்பது எனது ‘அனுபவ’ உண்மை!

    //..என்ன சாந்தன் அடிக்கடி அமவாசையில் நிலவை தேடுறியள்??..// என்ன சொல வருகிறீர்கள்? பி.எல்.ஓ லண்டனிலும், பாரிஸ் வீதிகளிலும் சுடுபட்டது உண்மை இல்லையா?

    //…சரி உங்கள் வாதபடி சகோதர போட்டு தள்ளுதலை கற்று கொடுத்தத்து பிஎல்ஒ காரர்தனா?? .//

    கற்றிக்கொடுத்தது அவர்களோ இல்லையோ ஆனால் புளொட் அவர்களைகாட்டி ‘நியாயப்படுத்தல்’ செய்தனர் என்பது எனது ‘அனுபவ’ உண்மை!

    May 23, 12:14 AM — [ Edit | Delete | Unapprove | Approve | Spam ] — மீண்டும் ஒரு தேர்தல்- மே 2010 : முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

    Reply
  • Ajith
    Ajith

    மேலும், அஜித் ஹமாஸ், பா.வி.அ என்பவற்றை நீங்கள் பயங்கரவாத அமைப்புகள் என்று குறிப்பிட்டுள்ளதால் அதே குணாம்சம் கொண்ட புலிகள் பயங்கரவாதிகள் அல்லவா? அந்த பயங்கரவாதிகளை அவர்கள் வாழும் நாட்டின் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அழித்தொழித்தை எவ்வாறு பிழை எங்கின்றிர்கள்? அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு சிங்களவர், தமிழர், சோனகர் எல்லோரும் அமைதியாக வாழ முற்படுவது குற்றமா? புலிகள் தமிழர்கள் ஆகவே தமிழர் எல்லாரும் புலிகள் என்ற குதர்க்கத்துக்கு வரமாட்டீர்கள் என நம்புகிறேன்.

    Dear Nisthar,
    I would like to respond to all the questions you raised but I didn’t want to waste my time as most of them are responded by other commentators and some of your comments are baseless.
    I never believed that LTTE or any other organisations which has political ambitions and right cause for their actions. I strongly believe that PLO, Hamas, LTTE and similar organisations are liberation organisations that were outcome of oppression from states that are based on fundamentalist issues such as race, colour and relegion.
    It is you who constantly maintain LTTE as a terrorist organisation while keeping silent about similar organisations such as PLO, Hamas, or Kurdish and so on. I raised this issue because it was clear for me you that you are acting as an agent of Rajapakse. Sinhala regimes very often use muslim fundamentalists to make a conflict between tamil speaking muslims and tamil community. You yourself never identified as a Sri Lankan. You are always maintained as muslim. It is a fun you called Rajpakse government as a democratically elected government. On another para you mentioned that you never voted in Sri Lanka after the speech by JR. What a contrast that the Rajapkase who bombed and killed over 100,000 tamils as a democratic leader and JR and Pirabakaran as terrorists. I understand where you are coming from and who you are and what you doing.

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    Ajith,

    I’m happy to hear from you again after a long pause. I clearly understand that you let others answer to my questions due to the fact that you had and have no reasonable answers to those.

    Yes of course I haven’t used my franchise since JR’s offensive statement. Yes of course Rajpakse has been democratically elected. What’s wrong me saying the above. If those are fabricated then put your proofs. What I’m saying is true and will always be true.

    Being a Sri Lankan I have all rights to take favourable or contrary views about Sri Lanka politics with reasons. However it doesn’t mean I should not talk about TT(Tamil tiger or Tiger terrorists- as the tigers lost integrity for them to be called Liberation Tiger) or self determination of Tamils or Moors or etc.

    Sri Lanka is a democratic country you can make your voice heard so that there is no wrong in my demand to raise mine.

    After all my question was to you whether the Moors are separate ethnic, if they are then wherther they have right to self determination as far as the land is concerend. Your answer will clear the darkness spread on all your comments you made following this article.

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    அப்பாடா, ஒரு வழியாக எமது அடிப்படை பிரச்சினைக்கு வந்துவிட்டோம் இல்லையா சாந்தன்?
    ஆகவே பின்வரும் கேள்விகளுக்கு ஆம். இல்லை, தெரியாது அல்லது தெரியும் ஆனால் சொல்ல விரும்பவில்லை என்ற ஏதாவது பதிலொன்றை சொல்லுங்கள்.

    1.இலங்கை சோனகர் தனியான இனமா?

    2. அவர்களுக்கு நிலம் தொடர்பான சுய நிர்ணய உரிமை இருக்கிறதா?

    பிற்குறிப்பு: சாந்தன் மாத்திரமல்ல இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் எழுதிய யாரும் அல்லது எழுதாத ஆனால் கலந்து கொள்ள விரும்பும் எவரும் வாக்களிக்கலாம்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /….அப்பாடா, ஒரு வழியாக எமது அடிப்படை பிரச்சினைக்கு வந்துவிட்டோம் இல்லையா சாந்தன்? //
    நான் எப்போதுமே ‘அடிப்படைப்’ பிரச்சினையை விட்டு விலகிச்செல்லவில்லை. மாறாக நீங்கள் தான் இருக்கும் ‘சுயநிர்ணய உரிமையை’ ‘ஏற்றுக்கொண்டு’ விட்டு மற்றைய இனத்துக்கு ‘இடைஞ்சல்’ எனக்கதையாடியவர். ஆகவேதான் உலக விடுதலை போராட்டங்களில் முதன்மை பெறும் பாலஸ்தீன பிரச்சினையை உதாரணம் காட்டவேண்டி வந்தது.

    //….ஆகவே பின்வரும் கேள்விகளுக்கு ஆம். இல்லை, தெரியாது அல்லது தெரியும் ஆனால் சொல்ல விரும்பவில்லை என்ற ஏதாவது பதிலொன்றை சொல்லுங்கள்……//

    1.இலங்கை சோனகர் தனியான இனமா?

    அது அவர்கள் விருப்பம் (ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை எதையும் ஏற்றுக்கொள்ள நான் தயார்)

    2. அவர்களுக்கு நிலம் தொடர்பான சுய நிர்ணய உரிமை இருக்கிறதா?

    ஆம்

    —————
    இப்போது எனது கேள்விகள். இதற்கு வெறும் ஆம் இல்லை பதில் தேவையில்லை. ஏனென்றால் இவ்வாதம் அவ்வளவு ஆழம் குறைந்ததல்ல.

    1. ஈழத்தமிழ் இனத்தின் சுய நிர்ணய உரிமையில் மற்றைய இனத்தின் ‘இடைஞ்சல்’ கள் பாதிப்புச் செலுத்தலாமா?

    2. அவ்வாறு பாதிப்புச் செலுத்த முற்படுவது ஈழத்தமிழர்களுகு பொருந்துமிடத்து அதே வரைவிலக்கனங்கள் மற்றைய சுயநிர்னய உரிமை கோரும் இனங்களுக்கும் பொருந்துமா?

    4.//…ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடைபெறும்போது இந்த தனி நாட்டுக்கான கோரிக்கை கிழக்கு தமிழராலும், கிழக்கு சோனகராலும் தோற்கடிக்கப்படும் என்பதை இப்போதே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம்….//

    அவ்வாறு ஒரு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா ஒத்துழைப்போடு செய்வதற்கு ஸ்ரீலங்காவுக்கு பரிந்துரை செய்வீர்களா?

    Reply
  • Ajith
    Ajith

    Mr Nisthar,
    You have no capacity understand what is reasonable and what is not. You have proved yourself that you belongs to a community that only believes that of Jihad terrorism is the best form to the world. I know that you are unable to talk about Jihad movement or Rajapkase terrorism that was responsible for most of the violence against tamils. It is a unique feature of you. It is laughable to say you are telling the true. We know what happened to those number of people murdered by Rajapakse for speaking the truth.The so called victorious Sarath Fonseka, Lasantha Wickrematungue, Raviraj MP are few high profile people who were murdered by your democratic leader

    For you democracy is having elections. Sadam Hussain had an election during his last period and won 99% votes. Every time you contradict yourself in your arguments.

    இலங்கை சோனகர் தனியான இனமா?
    The answer is No. They are converts from tamils and Sinhala.

    அவர்களுக்கு நிலம் தொடர்பான சுய நிர்ணய உரிமை இருக்கிறதா?
    The answer is NO if you are referring to Sri Lanka. They never claimed that they have the right of self-determination.

    Reply
  • palli
    palli

    //நான் இருப்பது, படிப்பது வேலை செய்வது யூதமக்கள் செறிந்து வாழும் நகரம்//
    அதே நகரில் ஒரு மூலையில் ஒரு ஏழை யூதர் வீட்டில்தான் பல்லியும் குடிதனம் நடத்துகிறேன்,

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    சாந்தன், அஜித்!

    முதலில் சாந்தனின் கேள்விக்கான பதில்கள்.
    கேள்வி 1, விடை ஆம். உதாரணம் பொஸ்னியா-ஹெசகோவினா (Bosnia-Herzerkovina) ஐரோப்பிய யூனியன்( EU ) உடனடியாக இதன் சுதந்திர பிரகடணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்குள்ள சிறுபான்மையினரது உரிமைகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை தமது அங்கீகரிப்பை வழங்கவில்லை.

    கேள்வி 2, விடை (தயக்கமில்லாத) ஆம்.

    கேள்வி 3, விடை பரிந்துரை செய்வதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் யார் கேட்கப் போகிறார்கள். மேலும் எனது பரிந்துரையை “Stage Setting” என்ற 2009 ஜுன் 7ம் திகதிய தேசம் நெற்றில் பார்க்கவும்.

    அஜித்,

    எனக்கு விளங்கும் சக்தி இல்லை என்றும், நான் ஜிஹாத் பயங்கரவாதத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்ட சமூகத்தில் உள்ளவன் என்றும் கூறியுள்ளிர்கள். உங்களுக்குத்தான் விளங்கும் சக்தி இல்லை என்பதை எப்போதோ பலர் நிரூபித்து விட்டார்கள். அதை நான் மீண்டும் நிரூபிக்கின்றேன். இதோ மே 15ல் சொன்னீர்கள் சோனகர்கள் தனி இனமென்பதில் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று. மே 24ல் சொல்கிறிர்கள் அவர்கள் தனி இனம் இல்லை என்று. தயவு செய்து நிதானமாக பதி சொல்லுங்கள். ஆம் என்று தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. மே15 தின் விடை சரியாயின் மே24லின் விடை பிழை. மே15 பிழையாயின் 24லின் விடை சரி. இரண்டு விடைகளும் ஒரே நேரத்தில் சரியாகவோ அன்றி பிழையாகவோ இருக்க முடியாது. நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு பூரண விளங்கும் சக்தி உண்டோ? இன்னும் சோனகர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகின்றீர்கள். நிலம் தொடர்பான உரிமை முஸ்லிம்களுக்கு இல்லை என்கின்றீர்கள். மீண்டும் குழப்பம். நான் முஸ்லீம் பற்றி வாய் திறக்கவில்லை. ஒருவேளை தமிழை விளங்கிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள்?

    மேலும் சுய நிர்ணய உரிமை சோனகருக்கு இல்லை என்பதின் மூலம் உங்கள் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இது புலிகளின், சம்பந்தரின், உருத்திரகுமரனின் கொள்கை நீங்களும் கையில் எடுத்து விட்டதால் இலங்கையின் ஒற்றுமைக்கு கூறு விளைவிப்பவர். உங்களுடன் ஒப்பிடும்போது ராஜபக்ச போற்றப்பட வேண்டியவர் ஏனெனில் இலங்கையில் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற தனியான இனங்கள் உள்ளன என்பதை ஏற்கிறார். இப்போது பாருங்கள் புலிகள், அதன் ஆதரவாளரான நீங்கள், சம்பந்தர், உருத்திரகுமார், சிவாஜிலிங்கம் போன்றோர் இனவாதிகளா அல்லது (எனது ”Stage Setting” கட்டுரையை வாசித்த பின்பும்) நான் இன துவேசியா? நான் தமிழரின் சுய நிர்ணய உரிமையை மறுக்கிறேனா? அல்லது நீங்கள் என்மை அடிமை கொள்ள பார்க்கின்றீர்களா?. நான் அடிப்படைவாதியா? அல்லது நீங்கள் பச்சை இனவாதியா? நான் பயங்கரவாதியா அல்லது நீங்கள் பசுத்தோல் போர்திய புலி இல்லையா?

    Reply