இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று தலவாக்கலையில் நடத்திய மேதினக் கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்களைப் பிரகடனமாக வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்கிற போது தேர்தல் முறையை மாற்றியமைப்பதாக இருந்தால், மலையகப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக நுவரெலியாவில் நான்கு தொகுதிகளும் பதுளை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் தலா 2 ஆசனங்களும், இரத்தினபுரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளதாகக் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை, இரண்டாவது முக்கிய தீர்மானமாக, பெருந்தோட்டங்களை சீரற்ற நிர்வாகப் போக்கிலிருந்து பாதுகாத் துப் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பைத் தமக்கு வழங்க வேண்டு மெனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
காங்கிரஸின் மேதினக் கூட்டம் அதன் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பீ. தலைமையில் தலவாக்கலையில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.