உலக ஊடக சுதந்திர தினம் இன்றாகும். இத்தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்- கீ- மூன் விடுத்துள்ள செய்தியில் ஊடகங்களில் பணிபுரியும் அனைவரையும், பாதுகாக்கவேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் கடமையாகும்.
அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை புரிவோர் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவதும் இந்த பாதுகாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, பேச்சு சுந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமையாகும். உலகளாவிய மனித உரிமைகள் பிரகடணத்தின் 19 ஆவது ஷரத்தில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 97 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலை களுக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கி ன்றேன். இந்த கொலைகளுக்கு காரண மானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பான். கீ மூன் தனது செய்தியில் கூறியுள்ளார்.