இலங் கைக்கு வெளியே புலிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடுகடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்க அரசு தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தினை கையாளுவது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள், உயரிஸ்தானிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமது அமைச்சுப் பொறுப்புக்களை இன்று வெளிவிவகார அமைச்சில் கையேற்ற வைபவத்தின்போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் கட்டுரைகளை எழுதினார் என நீதிமன்றினால் 20 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய தகவலையயும் அமைச்சா; இங்கு தெரிவித்தார்.
KARUNA
வந்ததும் வராததுமாய் நாடுகடந்த தமிழ் ஈழத்தை அங்கீகரிச்சிட்டீங்க போல!
மாயா
இலங்கையில் இனப் பிரச்சனை தீர மாநில சுயாட்சி போன்றது தேவை என கருத்துகளை சொன்ன பீரிஸ், புலிகளோடும் , சர்வதேசத்தோடும் அதிகம் நெருக்கமாக இருந்தார். புலிகளோடு பேசி வெறுத்த பீரிஸ் , இனி புலிகளின் அழிவுதான் இலங்கையின் சுபீட்சம் என்ற மனமாற்றத்துக்கு ஆளானார். அதன் பிரதிபலன் புலிகளின் அழிவு. மகிந்தவுக்கு நிழலாக செயல்பட்டவர் இவர்.ஐதேகட்சியின் வழி வெளிநாட்டு உலகத்தோடு பரீச்சயமானவர். இவரது திட்டம் நிறைவேறும். புலத்து புலிகளுக்கு , வாழும் நாடுகளிலேயே முள்ளிவாய்க்கால் தெரியப் போகிறது. இனி வன்னிக்கு போய் பார்க்க வேண்டியதில்லை.
NANTHA
கனடாவில் நாடு கடந்த அரசின் எம்பிகளாக பின்வருவோர் தெரிவாகியுள்ளனர்.
ஜோய் அன்டனி, பொன்.பாலராஜன், எம்.கே. ஈழவேந்தன், தாரணி பிரபாகரன், எஸ்.திருச்செல்வம், ஈசன் குலசேகரம், வனிதா ராஜேந்திரம், சுரேஷ் ரத்னபாலன், வரன் வைத்திலிங்கம், மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன், சுரேன் மகேந்திரன், பாலன் ரத்னராஜா, சாம் சங்கரசிவம், ஐயம்பிள்ளை சண்முகநாதன், ராம் சிவலிங்கம், கந்தையா தேவேந்திரன், நிருத்தன் நாகலிங்கம், லக்சன் சிவபிரகாசபிள்ளை, புவனேந்திரன் நடராஜா, மகாராஜா நந்தகுமார், மோகனசிங்கம் மார்கண்டு,சோதிநாதன் சண்முகன், நாகேந்திரா கற்பனா, முத்துகுமாரசாமி ரத்னா, சிவசோதி ஜெயமதி.
இவர்களில் பலர் புது முகங்கள். ஆனால் அவர்களுடைய “புலி” கனெக்சன் உண்மையானது. இவர்களில் பலருடைய பெயர்கள் உண்மையான பெயர்கள் அல்ல.
எஸ்.திருச்செல்வம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமல்ல, எது லாபமான கட்சியோ அந்தக் கட்சியில் இருப்பவர். திருச்செல்வத்தின் இந்த “திடீர்” பகிரங்கப் பிரவேசம் சந்தேகத்தையே உண்டு பண்ணுகிறது. பணம் என்றால் பேயாகப் பறக்கும் திருச்செல்வம் நாடு கடந்த அரசை கனடாவில் கண்டிப்பாகக் கவிழ்க்கும் சாத்தியங்களே உள்ளன.
இந்த “நாடு கடந்த அரசுக்குப் பொறுப்பான கம்பனி ” Canadian Tamil Democtatic Alternative” என்பதாகும். இந்தக் கம்பனியின் உரிமையாளர்கள் சுப்பிரமணியம் ராசரத்தினம், சார்ல்ஸ் தேவசகாயம், கார்டினர் விக்னராஜா , ஜெயமதி சிவசோதி ஆகியோரே. தேவசகாயமும், விக்னராஜாவும் இந்த தேர்தலில் தோற்றுப் போனவர்கள். ஆயினும் பண விவகாரங்கள் இவர்களின் கையில் உள்ளது. இவர்களின் இணையத்தளமான cptgte.org “திறைசேரி நிலுவை” 150 ,௦௦௦ டாலர்களில் இருந்து 25000 க்கு இறங்கிவிட்டது.
திருச்செல்வம் தனது “பழைய” ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறவுகளைப் புதுப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு கடந்த எம்பிக்கள் கனடா வராமல் கட்டுநாயக்கவை அடையலாம் என்றும் ஒரு அபிமானி கூறுகிறார்.
சிறு எச்சரிக்கை:
பல லட்சங்கள் வாரலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கும் நாடு கடந்த அரசின் எம்பிமாரே இந்த திருச்செல்வம் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கூட்டம் நடக்கும் போது உங்கள் அடியாட்களை வைத்திருங்கள். கூட்டத்தின் நடுவில் திருச்செல்வம் வெளியேறினால் பின் தொடருங்கள். கூட்டத்துக்கு திருச்செல்வம் வராவிட்டால் வேறு இடத்துக்கு ஓடுங்கள். இல்லையேல் கே.பி. என்ற பத்மநாதனின் வெலிக்கடை அயல்வாசிகளாக நீங்களும் இருக்க சாத்தியம் உண்டு!
இறைச்சிக்கு மாடு வாங்குபவர்கள் “பிடி மாடு” என்ற ஒன்றை கொண்டு வருவது வழக்கம். வாங்கிய மாட்டை அந்த பிடி மாட்டுடன் இணைத்துவிட்டால் அது மற்ற ‘அப்பாவி” மாட்டை இறைச்சி கடைக்காரனின் வீடு வரை இழுத்துச் செல்லும். பின்னர் மற்ற மாட்டின் முடிவு எல்லோருக்கும் விளங்கும். இப்போது பிடிமாடு வந்துவிட்டது.
ஜி.எல். பீரிஸ் நம்பிக்கையோடு சொல்வதில் உள்ள உண்மைகளை அனுமானிக்க முடிகிறது.
NANTHA
தேசம்நெட்டுக்கு நன்றி. ஆயினும் எனது கருத்து எளுதப்பட்ட அன்றே இந்த தொடர் மறைந்தது வருத்தமாக இருந்தது. திருச்செல்வத்தினது வேறு பல “விளையாட்டுக்களை” சொல்லநேரம் வந்துவிட்டது பற்றி திருப்தியடைகிறேன்.
எழுத்து என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆய்தம். அதனை கிரிமினல்கள் பாவித்தால் என்னநடக்கும் என்பது “வெளினாடுகளில்” நாம் காணும் நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சி.
வெளினாடுகளில் தமிழர்களை ஆகாசத்தில் பறக்க விட்ட பெருமை “எமாற்று” தமிழ் ஊடகங்களுக்கு உரிமையானது. வெளினாடு வாழ் தமிழர்களை இன்னமும் “இருட்டில்” வைத்து சம்பாதிக்க விரும்புகிறார்கள்!