அவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தேவையற்றவை எனக் கருதப்படும் அவசரகால விதிமுறைகளே இப்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எவ்வாறாயினும் அவசரகால சட்டத்தை இப்போதைக்கு முழுமையாக நீக்கமுடியாது என்றும் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.