இறுதிக்கட்டப் போரினால் மக்கள் அதிகம் கொல்லப்பட்ட மே மாதப் பகுதியை விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்காகவும், அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையொட்டியும் மே மாதம் 18ம் திகதி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வெற்றி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, வன்னியில் இறுதிக் கட்டப் போரினால் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவுகளை வன்னி மக்கள் கண்ணிருடனும், துயரின் வேதனைகளுடனும் நினைவு கூருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்வலி விளம்பரங்கள் அதிகளவில் பிரசுரமாகி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.