சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச நிதியைத் தவறாகக் கையாண்டதாலேயே அவர் இன்று சிறைக் கைதியாகியுள்ளார் என மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்: சரத் பொன்சேகா தாம் அரசியல் சிறைக்கைதி என தன்னை வர்ணிப்பதை விடுத்து அவர் இராணுவத் தளபதி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் வைராக்கிய அரசியலைக் கைவிடவேண்டும்.