லண்டன் உள்ளுராட்சி தேர்தலும் புலம்பெயர்ந்த தமிழ் வாக்காளர்களும் புலம்பெயராத சிந்தனையும் : த ஜெயபாலன்

London_Local_Councilsலண்டனில் மே 6ல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் 50 வரையான தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் உள்ளுராட்சி ஆசனங்களைப் பெற்றுள்ளனர். லண்டனில் இதுவரை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் இவ்வளவு தொகையான தமிழர்கள் போட்டியிட்டதும் பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களை வென்றதும் இதுவே முதற்தடவையாகும். கடந்த தேர்தலில் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன், மைக் செல்வா, மனோகரன் தர்மராஜ், தயா இடைக்காடர், நிசாம் அலாவி இஸ்மைல், யோகன் கோகநாதன், எலிசா பாக்கியதேவி மஅன், சசிகலா, கைருள் கரீமா மரிக்கார் ஆகியோர் இம்முறை மீண்டும் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் நியூஹாமில் போட்டியிட்டு நான்காவது முறையாக கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் ஆகக் கூடுதலான வாக்குகளைப் (3453) பெற்றுள்ளார்.

தமிழ், தமிழ் பேசும் கவுன்சிலர்களுள் மைக் செல்வா தமிழகத்தை பின்னணியாகக் கொண்டவர். நிசாம் அலாவி இஸ்மைல், கைருள் கரீமா மரிக்கார் ஆகிய இருவரும் இலங்கைப் பின்னணியைக் கொண்ட முஸ்லிம்கள். ஏனையவர்கள் இலங்கைப் பின்னணியை உடைய தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தமிழ் பேசுபவர்கள்.

தமிழ் கவுன்சிலர்களின் அரசியல்:

Cllr Thaya Idaikadar with former TNA MP Pathmini Sithambaranathanதமிழ் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பதினொருவரில் (இரு முஸ்லீம் கவுன்சிலர்கள் நீங்கலாக) பெரும்பாலானவர்கள் தமிழ் தேசியத்தை முன்வைத்தே தமிழ் வாக்கு வங்கியை தமதாக்கிக் கொண்டனர். இவர்கள் தமிழ் தேசியத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்காத போதும் அதன் அலையில் செல்வதன் மூலமே தங்கள் வாக்கு வங்கியைப் பலமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டனர். இவர்களில் குறிப்பாக தயா இடைக்காடர், சுரேஸ் கிருஸ்ணா அவருடைய துணைவியார் சுரேஸ் சசிகலா, யோகன் யோகநாதன் அவருடைய மகன் ரோகான் யோகநாதன் (இம்முறை தெரிவாகவில்லை) ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனையவர்களும் இந்த தமிழ் தேசிய அலைக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலையிலேயே இருந்தனர். 

மனோ தர்மராஜ் பெரும்பாலும் தமிழ் என்ற வகையில் தன்னை அடையாளப்படுத்துபவர் அல்ல.

Lab_Cllr_Paulமாறாக போல் சத்தியநேசன் இந்த ‘புலித் தேசியம்’ ஆகிப் போன தமிழ் தேசிய அலைக்கு எதிரானவராகவே கணிக்கப்பட்டார். வன்னி யுத்தம் உக்கிரமாகி இருந்தவேளை தமிழ் கவுன்சிலர்களும் கவுன்சிலராக வர விரும்பியவர்களும் புலித் தேசியத்திற்கு ஆதரவான நிலையை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் போல் சத்தியநேசன், வரன் கனகசுந்தரம் போன்றவர்கள் யுத்தத்தை நிறுத்தும்படி இலங்கை அரசைக் கேட்டுக்கொண்ட அதேநேரம் மக்களை பணயக் கைதிகளாக வைத்திராமல் அவர்களை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இவற்றைச் சித்தரிக்கும் தெருநாடகம் தேசம்நெற்றால் ஈஸ்ற்ஹாம் வீதியில் நடத்தப்பட்டதற்கு ‘புலித் தேசியம்’ கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இத்தெரு நாடகத்தை இயக்கியவர்களில் ரெட் யூனியன் சோசலிஸ்ட் கட்சி கூட்டில் போட்டியிட்ட உதயசேனன் தனபாலசிங்கமும் முக்கியமானவர்.

பிரித்தானிய உள்ளுராட்சி மன்றுக்கு கவுன்சிலராகத் தெரிவு செய்யப்படுபவர் தனது உள்ளுர் பிரதேசத்திற்கு காத்திரமான சேவையை வழங்க வேண்டும் என்பதே நோக்கம். உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும் தமிழ் தேசிய அலையானது இந்த உள்ளுராட்சி மன்ற தமிழ் வேட்பாளர்களை வைத்து கட்டமைக்கும் அரசியலோ மிகவும் போலியானது. ஆனால் இதனை உணர்ந்திருந்த கவுன்சிலர்களும் தங்கள் வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டு புலித் தேசியத்தின் அலைக்கு எடுபட்டனர். இவர்களது தேர்தல் பிரிவில் சகல இன மக்களும் வாழ்ந்த போதும் தமிழ் வாக்காளர்கள் மொத்தமாக வாக்கு அளித்தால் வென்றுவிடலாம் என்ற கணிப்பில் (அக்கணிப்பு உண்மையானதும் கூட) இவர்கள் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களின் அரசியல் அவலத்தை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Eliza_PackiaDevi_Mannஇவர்களில் எலிசா பாக்கியதேவி மஅன் விதிவிலக்கானவர். இவர் தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவரே அன்றி அதனை வைத்து அரசியல் செய்பவர் அல்ல. அந்த அவசியம் அவருக்கு இல்லை. ஏனெனில் அவர் தமிழ் வாக்காளரில் தங்கியில்லை.

தமிழ் கவுன்சிலர்கள் தாங்கள் வாழும் தேர்தல் பிரிவின் சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவதுடன் அம்மக்களை நோக்கி தங்கள் சேவைகளை வழங்கத் தவறும்பட்சத்தில் அவர்கள் தங்கள் ஆனசங்களை இழக்க நேரிடலாம்.

ஒரே நபர்கள் வேறுவேறு தொப்பிகளை அணிவது போல் புலித் தேசியவாதிகள் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, உலகத் தமிழர் பேரவை, ரமிழ்ஸ் போர் லேபர், ரமிழ்ஸ் போர் கொன்சவேடிவ் என்ற தொப்பிகளை மாறி மாறி அணிகின்றனர். சில சமயங்களில் இவர்களுக்கு தாங்கள் எந்தத் தொப்பியை அணிந்துள்ளோம் என்று தெரியாமலேயே நடந்தும் கொள்கின்றனர். இந்தத் தொப்பிகளை சில தமிழ் கவுன்சிலர்களும் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்த விரும்பி அணிந்து கொள்கின்றனர். சிலர் விரும்பாமலேயே அணிந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

இவர்களுடைய அரசியல் மாறாட்டம் மிகவும் கேலிக்கூத்தானதாக உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் நின்ற டேவிட் ஜோசப் தாங்கள் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கப் போவதாக அறிவித்தார். பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் ஒரு தேர்தல் பிரிவில் தொழிற்கட்சிக்கு பிரச்சாரம் செய்தனர். அதே நபர்கள் சில மைல்களுக்கு அப்பால் கொன்சவேடிவ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் அதற்கென்று கொள்கைகள் உள்ளது. அவற்றின் கொள்கை அடிப்படையில் உடன்பாட்டுக்குவராது தனிப்பட்ட வேட்பாளர்களின் அடிப்படையில் அரசியலை முன்னெடுத்து நம்பகத்தன்மை அற்றவர்களாகவும் கொள்கையற்றவர்களாகவும் தங்களை இனம்காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறான முரண்நகையான அரசியல் செயற்பாடுகள் கடந்தகாலங்களில் தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியது. அதனையே இன்னமும் தொடர்கின்றனர். 

வெற்றியும் தோல்வியும்:

Lab_Cllr_Jeyaranjan_Thavathurayதவத்துரை ஜெயரஞ்சன், கனபதிப்பிள்ளை நகீரதன், கிருஸ்ணா சுரேஸ், செல்லையா லோகேந்திரன் ஆகிய நால்வரும் புதிதாக இம்முறை கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். தவத்துரை ஜெயரஞ்சன், கிருஸ்ணா சுரேஸ் ஆகிய இருவரும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி இருந்தனர். இம்முறை அவர்கள் வெற்றியைத் தழுவிக் கொண்டனர். மாறாக சென்றமுறை கவுன்சிலராக இருந்த யோகன் யோகநாதனின் மகன் றோகான் யோகநாதன் இம்முறை தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில போட்டியிட்ட சிலர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னெடுத்த பரமகுமாரன் இம்முறை போட்டியிடவில்லை. ‘ஒரு பேப்பர்’ ஆசிரயர் கோபி கோபிரட்ணமும் இம்முறை போட்டியிடவில்லை. இவர்கள் கடந்த தேர்தலில் தொழிற்கட்சியில் போட்டியிட்டு இருந்தனர். தங்களுக்கு வெல்வதற்கு வாய்ப்புள்ள ஆசனங்கள் வழங்கப்படாததால் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகத் தெரியவருகின்றது. ஆனால் இத்தடவை தொழிற் கட்சியில் போட்டியிட்ட 16 தமிழ் பேசும் வேட்பாளர்களில் 10 பேர் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டனர். இன்னும் ஒரு சிலர் ஓரிரு நூறுக்கும் குறைவான வாக்குகளால் தோல்வியைத் தழுவி இருந்தனர்.

சென்ற தேர்தலில் கொன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட பீற்றர் ரட்ணராஜா இத்தடவை போட்டியிடவில்லை.

போல் சத்தியநேசன் மற்றும் புலித் தேசியத்திற்கு ஆதரவு வழங்காத வேட்பாளர்களுக்கு எதிரான சேறடிப்பு பிரச்சாரம் ஒன்று நியூஹாமில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் அப்பிரச்சாரம் பெரும்பாலும் அர்த்தமற்றதாகிப் போனது. போல் சத்தியநேசன் 3500க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்காவது தடவையாகவும் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டார். ‘புலித் தேசியம்’ அணியில் நின்றவர்களைக் காட்டிலும் அவர் 1000 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

Senan - Trade Union & Socialist Coalitionஇத்தேர்தலில் சேனன் என அறியப்பட்ட உதயசேனன் தனபாலசிங்கம் நிராகரிக்கப்பட்டமை கவனத்திற்குரியது. தான் வாழ்கின்ற பகுதியில் மட்டுமல்லாமல் உலகின் எப்பாகத்திலும் ஒடுக்கப்படுகின்ற சமூகத்திற்காக நீண்டகாலமாகப் போராடி வருபவர். உள்ளுர் விப்ஸ்குரொஸ் மருத்துவமனையின் சில பிரிவுகள் மூடப்படுவதற்கு எதிராகவும் இந்தோனேசியக் கடலில் தத்தளிக்கும் அகதிகளுக்காகவும் குரல் கொடுக்கும் இவருக்கும் இவரது கட்சிக்கும் மிகக் குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளது. போட்டியிட்ட 50 வரையான வேட்பாளர்களில் சேனன் 104 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இவர் போட்டியிட்ட தேர்தல் பிரிவிலும் இவரது வாக்கே மிகக் குறைந்ததாக உள்ளது.

மக்களுக்காக குரல் கொடுக்கும் ரேட் யூனியன் சோசலிஸ்ட் கோஓலிசன் வாக்காளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத் தவறிவிடுகின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து பல்வேறு போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து போதும் இவர்களால் லண்டன் தமிழ் மக்களை தம் பக்கம் வெற்றி கொள்ள முடியவில்லை. ரமிழ்ஸ் போர் லேபர், ரமில்ஸ் போர் கொன்சவேடிவ் என்றெல்லாம் அமைப்புகள் உருவாகிய போதும் ரமிழ்ஸ் போர் சோசலிஸ்ட் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியவில்லை. இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களுக்கும் இடையே உள்ள ஒவ்வாத இரசாயன மாற்றத்தை மாற்றாதவரை இவர்கள் தொடர்ந்தும் நிராகரிக்கப்படும் நிலையே உள்ளது. இது லண்டனில் மட்டுமல்ல இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் நிலையும் இதுவாகவே உள்ளது. 

Varatheeswaran_Kஇக்கட்சியைக் காட்டிலும் சுயேட்சையாக போட்டியிட்ட வரன் கனகசுந்தரம் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. வாக்குகளை வைத்து கட்சிகளின் கொள்கைகளை ஒப்பிடுவது மதிப்பீடு செய்வதோ சிறந்த அணுகுமுறையாக இல்லாத போதும் தேர்தலின் முடிவில் யார் மக்களுடைய அங்கிகாரத்தைப் பெறுகிறார்கள் என்பதே தீர்மான சக்தியாக அமைகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதித்துவம்:

புலம்பெயர்ந்து லண்டனில் கணிசமான தொகையினர் வாழ்ந்த போதும் பிரித்தானிய பிரதான அரசியல் நீரோட்டத்தில் இவர்கள் ஒரு ஓரமாகவே நிற்கின்றனர். 100 000 தமிழ் வாக்காளர்களுக்கு மேல் லண்டனிலும் லண்டனைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள 32 உள்ளுராட்சிப் பிரிவுகளிலும் வாழ்கின்றனர். 32 உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கும் 1849 கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேரே தமிழ் பின்னணியை உடையவர்களாக இருந்துள்ளனர். 

பாராளுமன்றத் தேர்தலுக்கு மாறாக உள்ளுராட்சித் தேர்தலில் லேபர் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. லேபர் கட்சி 864 ஆசனங்களையும் கொன்சவேடிவ் கட்சி 748 ஆசனங்களையும் லிபிரல் டெமொகிரட் கட்சி 217 ஆசனங்களையும் ஏனையவை 20 ஆசனங்களையும் வென்றுள்ளன. 13 ஆண்டுகாலத் தொடர்ச்சியான ஆட்சிக்குப் பிற்பாடும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் லேபர் கட்சி எதிர்பார்த்திராத வெற்றியைச் சந்தித்து உள்ளது. இது பல தமிழ் கவுன்சிலர்கள் வெல்வதற்கும் வாய்ப்பை அளித்துள்ளது.

ஒரு உள்ளுராட்சித் தேர்தல் பிரிவில் சராசரியாக 9000 முதல் 10000 வரையான வாக்காளர்கள் இருப்பர். வழமையான உள்ளுராட்சித் தேர்தல்களில் 30 வீதம் முதல் 40 வீதமான வாக்காளர்களே வாக்களிப்பில் ஈடுபடுவதால் தமிழ் வாக்குகள் மொத்தமாக தமிழ் ஒரு வேட்பாளருக்குச் செல்லுமாயின் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழ் வேட்பாளர்களும் வாக்காளர்களும் இந்த வாக்குக் கணிப்பீட்டை சரிவரச் செய்ய முடியுமாயின் 50க்கும் மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் உள்ளுராட்சிமன்றுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

Lab_Cllr_Sasikala100 000 தமிழ் வாக்காளர்களும் சம அளவில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ளுராட்சிப் பிரிவுகளிலும் பரவலாக வசிக்கவில்லை. குறிப்பாக நியூஹாம், ரெட்பிரிஜ், ஹரோ, பிரன்ற், குரொய்டன், வொன்ஸ்வேர்த் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சில உள்ளுராட்சிப் பிரிவுகளிலே செறிவாக வாழ்கின்றனர். குறிப்பாக ஹரோவை எடுத்துக் கொண்டால் அங்கு 6 தமிழ் கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அதன் அளவுக்கு அல்லது அதிலும் அதிகமாக தமிழ் மக்களைக் கொண்ட குட்டி யாழ்ப்பாணம் என்றழைக்கப்படும் நியூஹாமில் போல் சத்தியநேசன் மட்டுமே கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தமிழ் மக்கள் அதிகம் வாழாத பகுதிகளில் இருந்தும் தமிழ் கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களே இல்லாத சவுத்வாக் கவுன்சிலில் இருந்து எலிசா பாக்கியவதி மஅன் மூன்றாவது தடவையும் கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். ஆகவே தமிழ் மக்கள் தங்கள் உள்ளுராட்சி மன்றப் பிரிவுகளில் எதிர்காலத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:

தமிழ் வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளாமை, பதிவு செய்த வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தாமை என்பன தமிழ் மக்களின் உள்ளுராட்சிமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. மேலும் கவுன்சிலராக வர விரும்புபவர்கள் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் கட்சியில் இணைந்து தங்களுக்கு வெல்வதற்கான வாய்ப்புள்ள ஆசனங்களை எதிர்பார்க்கின்றனர். அவ்வாறான ஆசனம் வழங்கப்படவில்லை என்றவுடன் அந்தக் கட்சியைவிட்டுவிட்டு அடுத்த தேர்தலுக்கு வேறுகட்சிக்குச் செல்கின்றனர். மேலும் கொள்கையின் அடிப்படையில் கட்சியை ஆதரிக்காமல் தங்கள் சுயநல அடிப்படையில் செயற்படுவதால் இவர்கள் கட்சியிலும் வாக்காளர் மத்தியிலும் நம்பகத்தன்மையைப் பெறுவதில்லை. 

Lab_Cllr_Suresh_Krishnaஆனால் தவத்துரை ஜெயரஞ்சன், சுரேஸ் கிருஸ்ணா ஆகியோர் தாங்கள் இரு தடவை தோற்றுப் போனபோதும் அதே கட்சியில் தொடர்ந்தும் நின்று கட்சிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கி இம்முறை மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். மக்களது சேவையை முன்னிறுத்தி கட்சிக்கு நம்பகமாக ஒருவர் தொடர்ந்தும் தனது அரசியல் கடமையைச் செய்வாராயின் அவருக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் என நான்காவது தடவையாக கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போல் சத்தியநேசன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியில் நிற்பதும் கட்சிக்கு முரணாகச் செயற்படுபவர்களும் அரசியல் வியாபாரிகள் என்றும் போல் சத்தியநேசன் குற்றம்சாட்டினார்.

பிரித்தானிய அரசியல் கட்சிகளுடன் தமிழ் மக்களின் ஈடுபாடு:

Brent         : Queensbury – Kanapathipillai Naheerathan  (Labour)
Croydon    : Broad Green – SELVA Mike (Labour)
Harrow      : Roxbourne – Manoharan Dharmarajah (Labour)
Harrow      : Headstone South – Sasikala Suresh (Labour)
Harrow      : Queensbury – Nizam Alavi Ismail (Labour)
Harrow      : Roxeth – Thayapara Idaikkadar (Labour)
Harrow      : Rayners Lane – Krishna Suresh (Labour)
Harrow      : West Harrow – Kairul Kareema Marikar (Labour)
Kingston    : St Mark’s – YOGANATHAN Yogan (Liberal Dem)
Newham    : Eastham North – Paul Duraisamy Sathianesan  (Labour)
Merton      : Cannon Hill – Lohendran Chelliah  (Conservative)
Redbridge  : Newbury – Jeyaranjan, Thavathuray (Labour)
Southwark : Riverside – Eliza Packia Devi Mann (Liberal Dem)

இம்முறை கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் எலிசா பாக்கியதேவி மஅன், யோகன் யோகநாதன் ஆகிய இருவரும் லிபிரல் டெமோகிரட் கட்சியில் நின்றும் ஏனைய 10 கவுன்சிலர்களும் லேபர் கட்சியில் நின்றும் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெற்ற அதே தினம் நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மையைப் பெறாவிட்டாலும் அதிகப் படியான ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்க முயற்சிக்கும் கொன்சவேடிவ் கட்சியில் இருந்து ஒரு தமிழர் செய்யப்பட்டு உள்ளார். கொசவேடிவ் கட்சியின் சார்பில் 13 பேர் போட்டியிட்ட போதும் ஒருவரே வெற்றி பெற்றார். கிறிஸ்ரியன் பீப்பிள்ஸ் அலையன்ஸ், கிரீன் கட்சி ஆகியவிற்றில் முறையே 5 வேட்பாளர்களும் 4 வேட்பாளர்களும் போட்டியிட்டனர் அவர்களும் வெற்றி பெறவில்லை. சுயேட்சையாக இரு தமிழர்கள் போட்டியிட்டனர். அவர்களும் வெற்றி பெறவில்லை. ரேட்யூனியன் சோசலிஸ்ட் கோஓஎலிசனில் போட்டியிட்டவரும் வெற்றி பெறவில்லை.

தெரிவு செய்யப்பட்ட 13 கவுன்சிலர்களில் 6 கவுன்சிலர்கள் கரோ உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். இங்கு 12 தமிழ் பேசுவோர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். அடுத்து நியூஹாம், பிரன்ற் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில் ஏழு, ஏழு பேர் போட்டியிட்டு இருந்தனர். இவ்விரு உள்ளுராட்சி மன்றுக்கும் ஒவ்வவொரு கவுன்சிலர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர். கிங்ஸ்ரன் அப்ஒன் தேம்ஸ் உள்ளுராட்சி மன்றில் ஆறு தமிழர்கள் போட்டியிட்டு ஒரு தமிழ் கவுன்சிலர் வெற்றி பெற்றிருந்தார். மேட்டன் கவுன்சிலில் மூவர் போட்டியிட்டு கொன்சவேடிவ் கட்சியில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். குரொய்டன் உள்ளுராட்சி மன்றில் 3 தமிழர்கள் போட்டியிட்டு இருந்தனர். இவர்களில் ஒருவர் கவுன்சிலர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். ரெட்பிரிஜ் உள்ளுராட்சிப் பிரிவில் போட்டியிட்ட இரு தமிழர்களில் ஒருவர் கவுன்சிலராகத் தெரிவானார். தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழாத சவுத்வாக் உள்ளுராட்சி மன்றில் போட்டியிட்ட ஒருவர் கவுன்சிலராகத் தெரிவானார்.

லண்டன் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும்:

Paul Duraisamy Sathianesan  _ _ _ _ _  Labour              3,453
SELVA Mike _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _   Labour               3451
Jeyaranjan, Thavathuray _ _ _ _ _ _  _ Labour               3305    
Kanapathipillai Naheerathan _ _ _ _ _   Labour               2713 
Manoharan Dharmarajah _ _ _ _ _ _ _  Labour               2662
Thayapara Idaikkadar _ _ _ _ _ _ _ _ _Labour               2514
Nizam Alavi Ismail _ _ _ _ _ _  _ _ _ _  Labour               2324
YOGANATHAN Yogan _ _ _ _ _ _ _  _ Liberal Dem      2169
Eliza Packia Devi Mann _ _ _ _ _ _ _ _  Liberal Dem     2069
Sasikala Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour               1914       
Krishna Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour              1904
Lohendran Chelliah  _ _ _ _ _ _ _ _ _ _Conservative    1860 
Kairul Kareema Marikar _ _ _ _ _ _ _ _Labour              1831

Thambimuthu Selvaratnam _ _ _ _ _ _  Labour              2216
Murugesu Sivarajah _ _ _ _ _ _ _  _ _ _Liberal Dem      2115
YOGANATHAN Rohan _ _ _ _ _ _ _ _   Liberal Dem     1933       
KUGAN Kamala _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem     1784                
Sivanantharasa Panchadcharam _ _ _ _ Conservative    1628
Marshel Amutharasan _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem     1614
Uma Kumaran _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour              1535
EMMANUEL Fabion _ _ _ _ _ _ _ _  _ _ Conservative   1521           
Sockanathan Keitheeswaran _ _ _ _ _ _ Conservative    1437
Shivakuru Selvathurai _ _ _ _ _ _ _ _ _ Conservative    1419
JEYADEVA Selva _ _ _ _ _ _ _ _ _ _ _  Conservative    1418
DEWAN Rajesh Kumar _ _ _ _ _ _ _ _   Christian PA     1299
Moses Rajkumar  _ _ _ _ _ _ _ _ _ _ _  Conservative    1,245
Arujuna SIVANANTHAN _ _ _ _ _ _ _  Conservative    1,244
Sivakumar CHELLIAH _ _ _ _ _ _ _ _   Labour              1224
RATNARAJAN, KarrunaThewi _ _ _ _  Conservative    1074
Nadanakumaran, Jeya _ _ _ _ _ _ _ _ _Conservative    1052
Thaneswaran, Thane  _ _ _ _ _ _ _ _ _ Conservative      962
Duraimurugan Kannan _ _ _ _ _ _ _ _ _Conservative      911
VALLIPURAM Kulendran _ _ _ _ _ _    Liberal Dem       933
Arunasalam Pirapaharan _ _ _ _ _ _ _ _Liberal Dem       794
Sakthivel Karuppiah _ _ _ _ _ _ _ _ _ _Liberal Dem        778
Vasantha Mahadevan _ _ _ _ _ _ _ _ _  Conservative      717
Waran Kanagasundaram _ _ _ _ _ _ _ _ Independent      533
SELLAYAH Dyan _ _ _ _ _ _ _ _ _ _ _ _Labour                474 
JAYASUNDERA Niranjan _ _ _ _ _ _  _ Labour                 371                  
Thivendaram Balaraman _ _ _ _ _ _ _ _ Green                  341
Selvarani Balaraman _ _ _ _ _ _ _ _ _ _ Green                  309
Balakrishnasharma Srikanthan _ _ _ _ _ Green                  260 
Sella Varathalingam Jeyakumar _ _ _ _  ChristianPA         186
Subashini Srikanthan _ _ _ _ _ _ _ _ _ _Green                  184
Mauran Uthayakumar _ _ _ _ _ _ _ _ _ Christian PA        157  
Jayakrishna, Jayarajasingham _ _ _ _ _  ChristianPA         149
Nakkeeran Arasaratnam _ _ _ _ _ _ _ _ Independent       146    
Senan THANABALASINGAM _ _ _ _ _  Socialist Coal’n   104
Danaraj Joseph _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _Christian PA         78

கவுன்சில்களின் அடிப்படையில் தமிழ் வாக்காளர்கள்: 

Brent
Alperton
Murugesu Sivarajah _ _ _ _ _ _ _  _ _ _  Liberal Dem   2115

Preston
Thambimuthu Selvaratnam _ _ _ _ _ _  Labour             2216

Queensbury
Selvarani Balaraman _ _ _ _ _ _ _ _ _   Green               309 
Thivendaram Balaraman _ _ _ _ _ _ _  Green               341  
Kanapathipillai Naheerathan _ _ _ _ _   Labour             2713    Elected

Sudbury
Balakrishnasharma Srikanthan _ _ _ _  Green               260   
Subashini Srikanthan _ _ _ _ _ _ _ _ _  Green              184  

Croydon
Broad Green
SELVA Mike _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour             3451      20.1%     Elected
EMMANUEL Fabion _ _ _ _ _ _ _ _ _ _Conservative      1521       8.9%

West Thornton.
JEYADEVA Selva _ _ _ _ _ _ _ _ _ _   Conservative  1418        7.7% 

Enfield
Edmonton Green Ward
RATNARAJAN, KarrunaThewi _ _ _   Conservative  1074

Greenwich
Middle Park and Sutcliffe
Arujuna SIVANANTHAN _ _ _ _ _ _ _Conservative  1,244

Harrow
Roxbourne
Manoharan Dharmarajah _ _ _ _ _ _ _ Labour            2662       (17.76%)      Elected
Sockanathan Keitheeswaran _ _ _ _ _  Conservative  1437         (9.59%)
Shivakuru Selvathurai _ _ _ _ _ _ _ _  Conservative  1419         (9.47%)

Headstone South
Sasikala Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour            1914         (12.68%)     Elected
Mauran Uthayakumar _ _ _ _ _ _ _ _ Christian PA   157           (1.04%)

Queensbury
Nizam Alavi Ismail _ _ _ _ _ _ _ _ _ _Labour           2324         (15.75%)      Elected

Roxeth
Thayapara Idaikkadar _ _ _ _ _ _ _ _ Labour           2514          (16.97%)      Elected

Rayners Lane
Krishna Suresh _ _ _ _ _ _ _ _ _ _ _  Labour            1904           (11.62%)      Elected
Sivanantharasa Panchadcharam _ _   Conservative  1628             (9.94%)
Marshel Amutharasan _ _ _ _ _ _ _  Liberal Dem    1614             (9.85%)
Danaraj Joseph _ _ _ _ _ _ _ _ _ _ _ Christian PA       78             (0.48%)

Headstone North
Sella Varathalingam Jeyakumar _ _  ChristianPA       186             (1.24%)

West Harrow
Kairul Kareema Marikar _ _ _ _ _ _ Labour               1831           (12.81%)       Elected

Pinner South
Uma Kumaran _ _ _ _ _ _ _ _ _ _ _ Labour             1535             (10.00%)

Havering
Emerson Park
Nakkeeran Arasaratnam _ _ _ _ _ Independent       146

Kingston upon Thames

Berrylands
YOGANATHAN Rohan _ _ _ _ _    Liberal Dem       1933         (14%)

Beverley
SELLAYAH Dyan _ _ _ _ _ _ _ _  Labour                  474           (3%)

Coombe Vale
KUGAN Kamala _ _ _ _ _ _ _ _ _ Liberal Dem       1784          (13%)
DEWAN Rajesh Kumar _ _ _ _ _  Christian PA       1299           (1%)

St Mark’s
YOGANATHAN Yogan _ _ _ _ _  Liberal Dem       2169          (15%)      Elected
JAYASUNDERA Niranjan _ _ _ _ Labour                  371            (3%)

Merton
Longthornton
Nadanakumaran Jeya _ _ _ _ _ Conservative      1052 

Cannon Hill
Jayakrishna, Jayarajasingham _  ChristianPA        149
Lohendran Chelliah _ _ _ _ _ _ _Conservative     1860 

Newham
Eastham North
Duraimurugan Kannan _ _ _ _ _ Conservative      911
Vasantha Mahadevan _ _ _ _ _ _Conservative      717
Paul Duraisamy Sathianesan  _ _ Labour             3,453     Elected
Sakthivel Karuppiah _ _ _ _ _ _  Liberal Dem        778

Wall End
Moses Rajkumar  _ _ _ _ _ _ _ _Conservative      1,245
Waran Kanagasundaram _ _ _ _ Independent         533
Arunasalam Pirapaharan _ _ _ _ Liberal Dem         794

Redbridge
Clementswood
Thaneswaran, Thane  _ _ _ _ _ Conservative         962

Newbury   
Jeyaranjan, Thavathuray _ _ _ Labour                   3305      Elected   

Southwark
Riverside
Eliza Packia Devi Mann _ _ _ _Liberal Dem           2069       Elected

Walthamforest
Larkswood
Sivakumar CHELLIAH _ _ _ _ Labour                   1224

Higham Hill
Senan THANABALASINGAM _Socialist Coalition  104

Wandsworth
Tooting
VALLIPURAM Kulendran _ _ _Liberal Dem          933

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • samy
    samy

    புலிகளின் பினாமிகளால் இந்த தேர்தலில் திட்டமிட்டு நிறுத்தி தமிழர்கள் யார் லேபர் கட்சியுடன் நிற்கிறாரகளோ அவர்களை தோற்கடித்து தாம் புலிக்கு வாழ்வு கொடுக்க முற்பட்டு தோல்வியுற்று பல்லுப்பிடுங்கப்பட்டு உள்ளனர். புலிகளின் பினாமிகளுக்கு மீண்டும் ஒரு பாடம் யுகேயிலும் கிடைத்துள்ளது ஆனால் புலிப்பினாமிகள் தாங்கள் களவு எடுத்த மக்கள் சொத்தை காப்பாற்ற தொடரந்தும் இப்படியே தான் இருப்பர்.

    Reply