மின்னல் தாக்குதல் காரணமாக சனிக்கிழமை மட்டும் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
பொலநறுவை மெதிரிகிரிய பகுதியில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த மூவரும் அநுராதபுரம் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவருமே இந்த மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னரும் புசல்லாவை நயபனை பகுதியில் மின்னல் தாக்கி ஏழு பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாட்டில் இடிமின்னல் தாக்குதல் தொடருமென்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் மீண்டும் எச்சரித்துள்ளது.
இவ்வாண்டு இதுவரை 17 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது