புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர். புலிகள் வெற்றிகொள்ளப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படைவீரர் வாரத்தை முன்னிட்டே புனர்வாழ்வழிக்கப்பட்ட ஐனூறு பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.