தற்காலிக கட்டடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்று காலை 9:00 மணிக்கு குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதனினால் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசத்தில் சுமார் 30 வருட காலத்தின் பின்னர் இந்த நீதிமன்றம் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது