அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டுக்கு வருவதற்கு பிரிட்டனின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு மே 25 வரையே கால அவகாசம் உள்ளது. இந்த தினத்திற்குள் அக்கட்சிகள் உடன்பாட்டுக்கு வராவிடின் மற்றொரு பொதுத் தேர்தலை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும்.மே 25 இல் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உரை இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னராக பாராளுமன்றத்தின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளனர் என்பதை பிரதமரும் தொழில் கட்சித் தலைவருமான கோர்டன் பிறவுண், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் டேவிட் கமரூன், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக்கிளெக் ஆகியோர் வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக “ரெலி கிராப்” பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிராவிடின் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக எழுத்து மூலமான வழிகாட்டல்கள் எதுவும் முன்னர் இருந்ததில்லை. ஆனால், இப்போது அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர் குஸ் டொன் னெல் இந்த வருட முற்பகுதியில் அறுதிப் பெரும்பான்மைப் பலமற்ற பாராளுமன்றம் ஏற்படும் சாத்தியத்தை எதிர்பார்த்து தேவையான ஒழுங்குவிதிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்துக்கும் சபை அமர்வுக்கும் இடையில் நீண்டகாலப் பகுதி இருப்பதற்கு ஏற்புடையதாக திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாடொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவற்கான இத்திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
650 ஆசனங்களைக் கொண்ட பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை அமைப்பதாயின் 326 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கன்சர்வேட்டிவ் கட்சி 306 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. தொழில் கட்சிக்கு 258 ஆசனங்களும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 57 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இதேவேளை, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்சர்வேட்டிவ் கட்சியினரும் லிபரல் ஜனநாயக கட்சியும் பேச்சு நடத்தியிருந்தனர். அதேவேளை, இலக்கம் 10 டவுனிங் ஸ்ரீரிட்டில் (பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம்) தனது நெருங்கிய சகாக்களுடன் பிரதமர் கோர்டன் பிறவுண் இரகசிய பேச்சு வார்த்தையை நடத்தியிருந்தார்.
எந்தவொரு கட்சியும் தெளிவான விதத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்காவிடில் தேர்தலுக்கு மீண்டும் செல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரவை அலுவலகத்தால் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் வாதம்
//எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிராவிடின் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக எழுத்து மூலமான வழிகாட்டல்கள் எதுவும் முன்னர் இருந்ததில்லை.//
சூரிய அஷ்தமனமாகாத சாம்ராஜ்ஜியக்காரருக்கு ஜனனாயகம் பற்றிய விளக்கம் இல்லை. 1974 இலிருந்து எழுதத் தெரியாமல் சிந்திக்கினம்.
இவையள் பழைமைவாதிகளா அல்லது பிற்போக்குவாதிகளா? ஊருக்குபதேசம்……..