கப்பம் கோருவோர் அச்சுறுத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! : ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்

EPDPLogoஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொலைபேசியூடாக பொதுமக்களிடம் கப்பம் கோரியும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தும் வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எமது மக்களுக்கான நேர்வழியைக் காட்டி எமது மக்களை கடந்தகால துன்ப துயரங்களில் இருந்து மீட்டெடுக்கும் எமது கட்சியின் மக்கள் நலன்சார்ந்த பணிகளைப் பொறுத்துக் கொள்ளாத எமது மக்களைத் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் ஆழ்த்தி அதன்மூலம் தங்களது குறுகிய சுயலாப அரசியலை மேற்கொள்ள விரும்பும் சில தீயசக்திகள் குழப்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் நோக்கில் எமது கட்சியின் மீது பல்வேறு வழிகளிலும் சேறு பூசும் குறுகிய எண்ணத்துடனும் அதேநேரம் ஒரு கல்லில் இரு மாங்காய் என்ற ரீதியில் பணம் பறித்துக் கொள்ளும் நோக்கத்துடனும் திட்டமிட்டு செயற்பட்டு வருவதை இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

எச்சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எந்தவொரு நபரிடம் இருந்தும் எவ்வித நிதியும் அறவிடுவதில்லை என்பது எமது மக்கள் அறிந்த விடயமாகும்.
இந்த நிலையில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் வதந்திகளைப் பரப்புவர்கள் தொடர்பில் எமது மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 021 2229824 0112503467 0777781891 எனும் தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு எமக்கு உடனடியாக அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஊடகச் செயலாளர்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – ஈபிடிபி

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • sen
    sen

    சாவகச்சேரியில் மாணவன் கொல்லப்பட்டதும் இந்தக் கொலையில் EPDP இனர் தொடர்பு கொண்டிருப்பதான சந்தேகத்தின் பெயரில் அதன் அங்கத்தவர்கள் என்று சொல்லப்படுவோர் கைது செய்யப்ப்படிருபதும் தெரிந்ததே.

    இதன் தொடர்சியாக சாவகச்சேரி நீதவான் இரண்டு EPDP இனரால் கொலைப் பயமுறுத்தல் விடுவிக்கப் பட்டதும் அதில் ஒருவர் உடனடியாக கைது செய்யப்படதும் தெரிந்ததே. இந்த பயமுறுத்தலுக்கு எதிராக வடமாகாண நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் நீதிமன்றத்தினை பகிஸ்கரிப்பு செய்ததும் செய்திகள்.

    இதன் விளைவாக யாழ்ப்பாண நீதிபதி விசேட கூட்டம் கூட்டியதும் பின்னர் இரண்டாவது சந்தேக நபரான யாழ் மாநகரசபை உதவி மேயர் சிலதினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருகின்றார்.

    இவரை விடுதலை செய்யும் படியும் இல்லாவிடில் யாழ் மாநகர சபை உழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்று யாழ்ப்பாண மேயர் அர்வித்திருக்கின்றார். வழமைக்கு மாறாக தொழில் சங்கம் வேலை நிறுத்தம் செய்வதை விட்டு முதலாளி வேலை நிறுத்தம் வேண்டி நிற்கும் விசித்திரமான சம்பவம் நீதித் துறைக்கு சவாலாக அமைகின்றது.

    மேல் குறிப்பிடப்பட்டவை தரவு ரீதியாக நடந்த விடயங்களுடன் உடன் படுகின்றதோ என்பதை உறுதிப் படுத்த முடியாவிட்டலும், உள்ளடக்கத்தில் நடந்த விடயங்களை விபரிக்கின்றது.

    உதவி மேயரை தேர்ந்த்தெடுத்த வாக்கர்ளர்களை அவரின் குற்றம் அற்ற தன்மையினை நிறுவிக் காட்டி அணிதிரட்டுவதட்கு முடியாமல் அதிகாரத்துவ ரீதியிலான பயமுறுத்தல்களை யாழ் மேயர் விடுவது தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு கன்னையின் ஜனநாயக எல்லைகளை காட்டுகின்றது.

    இது எந்த அளவிற்கு தமிழ் முதலாளித்துவத்தின் கண்னைப் போட்டியால் உருவாக்கப்பட்டது. SLFP, EPDP , கோத்தபாய குத்துவெட்டுகள் என்ன பாத்திரத்தினை வகிக்கின்றன என்பதனை இதுவரை கணிப்பீட முடியாவிட்டாலும், பிரபல பத்திரிகையாளன் வசந்தாவின் கொலைகாரர்கள் சுதந்திரமாக திரிய EPDP அங்கத்தவர்கள் விளக்கமறியலில் இருப்பதும் அதற்கு கட்டளை இட்ட நீதிபதி விக்கினராசா, கோத்தபாயவின் நீதியினை நிலை நாட்டும் சத்தியத்தினை விசேட கூட்டத்தில் குறிப்பிட்டதும் எதோ புகைவதை தெரிவிக்கின்றது.

    இந்த செய்திகள் TNA இற்கு சார்பான உதயன் பத்திரிகையில் மட்டும் வெளியிடப்படவில்லை. அரசு சார்பான ஆங்கில வலைத்தளங்களில் வெளியிடப்படிருகின்றது.
    http://www.lankaeverything.com/index.php?option=com_content&view=article&id=3471:-lawyers-continue-to-abstain-from-appearing-in-courts-in-jaffna-district&catid=13:featured-news
    http://www.dailymirror.lk/print/index.php/news/front-page-news/9990.html

    Reply
  • chandran.raja
    chandran.raja

    திரு.சென் அவர்களே! ஒரு அநாமதேய கடிதத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதோ கைது செய்ய கட்டளையிடுவதோ நீதித்துறைக்கே அவமானகரமானது. முதல் நீங்கள் அதை உறுதி செய்யுங்கள். நீதிவானுக்கு வந்தது. கடிதம் அனுப்பியவரின் முகவரி இடபட்டதா? இல்லை மொட்டைக் கடிதம் என்பதா?? என்பதை. அதன் பின்னே இது முதலாளி போராட்டமா? தொழிலாளி போராட்டமா?? என்பதைப் பற்றி முடிவெடுக்க முடியும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    இன்றும் மூன்று குழந்தகள் கடத்தல்;
    காரணம் கடத்தல்காரருக்கு தண்டனை போதாமைதான், கவனிக்குமா? நீதி துறை;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /….ஒரு அநாமதேய கடிதத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதோ கைது செய்ய கட்டளையிடுவதோ நீதித்துறைக்கே அவமானகரமானது…../
    மிக உண்மை!

    //… முதல் நீங்கள் அதை உறுதி செய்யுங்கள். நீதிவானுக்கு வந்தது. கடிதம் அனுப்பியவரின் முகவரி இடபட்டதா? இல்லை மொட்டைக் கடிதம் என்பதா?? என்பதை….//
    இதாவது மொட்டைக்கடிதம். அற்லீஸ்ற் கடிதம் ஆவது வந்தது. ஆனால் நூற்றுக்கணக்கான பலர் எந்த ‘ஆதாரமும்’ இல்லாமல் இன்னும் சிறையில் வாடுகின்றனர், பலருக்கு கணக்கே இல்லை. அப்போதெல்லாம் புகழ்பெற்ற ‘மூக்கிருக்கும் வரை சளி இருக்கத்தான் செய்ய்யும்’ என பீபீசி வரை சொன்னவர் இன்று நீதித்துறையின் செயற்பாடுகளில் ‘வினோதங்கள்’ சிறீலங்காவில் நடக்கின்றன எனப் பேட்டி கொடுத்தபோது சிரிப்புத்தான் வந்தது.
    (புலி சிறை வைத்தது அது எப்பிடி என கேட்கவேண்டாம், அவர்கள் ‘பாசிசவாதிகள்’)

    //..அதன் பின்னே இது முதலாளி போராட்டமா? தொழிலாளி போராட்டமா?? என்பதைப் பற்றி முடிவெடுக்க முடியும்….//
    அப்பப்பா….மக்கள் போராட்டத்தைப்பற்றி முடிவெடுக்க இப்படியும் ஒரு நிபந்தனையா? அவ்வாறு கைது செய்யப்பட்டபின்னர் அந்த நீதித்துறை செயற்படும் அரசில் இனனும் ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்? அடுத்த இலெக்சனில் ‘வீணை என்னடா வெற்றிலை என்னடாவை’ மீண்டும் பாடவா இல்லை ‘தம்பி மக்களிடம் நான் படித்தேன்‘ நேற்று மீண்டும் இசைக்கவா?

    Reply
  • Ajith
    Ajith

    “ஒரு அநாமதேய கடிதத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதோ கைது செய்ய கட்டளையிடுவதோ நீதித்துறைக்கே அவமானகரமானது.”
    What a joke? Some people think that EPDP and Rajapkse Family are above the law and jutice. EPDP criminality and White van abductions are well established facts. The courage of the Judge should be appreciated and respect. He may have to face the similar fate as happened to many including Lasantha, Raviraj MP who raised their voice for human right abuses of this group.

    I know that it is difficult for EPDP to come out of this because EPDP have lost its independence and a slave of Rajapakse and they carry orders from Gotapaya. Sri Lankan President Rajapakse never condemned the brutal abduction of children which is now become widespread. Some analysts believe that similar abductions were carried out in the past by military and government officials for expport of human organs to rich countries. Minister Basil Rajapkase was involved with release of youths from detention centres after receiving billions as ransom. Gotapaya was involved with billions from arm purchase. God bless Sri Lankans.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சம்பந்தபட்ட விஷயத்தை விட்டு தாவி எங்கேவோ போகிறீர்கள் சாந்தன். இருந்தாலும் ….. ஆண்டாண்டு காலமாக உடன்கட்டையேறுகிற பழக்கத்தை கொடுமையை போன நுhற்றாடின் ஆரம்பத்தில் வெள்ளையர்கள் தடை செய்தார்கள். இந்த நுhற்றாண்டின் ஆரம்பத்தில் தேசியத்தலைவருடன் (சிற்றரசர்) உடன்கட்டை ஏறுகிற பழக்கத்தை பலதமிழர்கள் எதிர்ப்பு மத்திலும் செய்து முடித்தார் மகிந்தா ராஜபக்சா. சாந்தன் நீங்கள் புலியில்லை தான். இருந்தாலும் நன்றி சொல்லலாம். இதுவும் உண்மையே!.

    Reply
  • Pandiyan
    Pandiyan

    இந்த செய்திக்கும் நான் எழுதும் விடயத்திற்கும் சம்மந்தமில்லை எனினும் இதை எங்காவது பதிவு செய்தாக வேண்டும் என்ற அவாவில் இங்கு எழுதுவதற்கு மன்னிக்கவும்.

    இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்ல பெருந்தொகை பணம் கிடைத்தது எவ்வாறு? விசாரணைக்கு இன்டர்போலின் உதவியை நாடும் றோ ………….என்ற செய்தி தட்ஸ் தமிழ என்ற இணையத்தில் இருந்து எடுத்து அரசு சார்பு லேக் கவுஸ் பத்திரிகைகளை விஞ்சிய தேனி என்ற இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இருந்து முப்பது வருடங்களுக்கு முன் சொகுசு வாழ்க்கைக்காக அகதியாக வந்த தேனி ஆசிரியர் குழுவிற்கு இந்த உண்மையான வன்னி அகதிகளுக்கு அவர்களது உறவினர்கள் நண்பர்கள் இலட்சக் கணக்கில் பணம் அனுப்பியது தெரியாத விடயமா? வேண்டும் என்றே தட்ஸ் தமிழ் செய்தியை எடுத்துப் போடுவதன் மூலம் அவர்கள் ஏதோ புலிப்பணத்தில் ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக ஒரு பிரமையை ஏற்படுத்த இந்த அரசு சார்பு இணையம் முயற்சிக்கிறதா?

    இந்த வன்னி மக்கள்தானா பத்து லட்சத்திற்கு மேல் கட்டி வெளிநாடு வந்தார்கள்? அவர்களது சொத்துக்கள் அழிந்த நிலையில் இவர்கள் எவ்வாறு பணம் செலுத்த முடிந்தது என்ற கேள்விக்கு பதிலை இவர்கள் அச் செய்தியின் கீழ் எழுதியிருந்தால் அது பத்திரிகா தர்மம் ஆகும். அப்படி என்றால் மற்றைய வெளிநாடு வந்த அகதிகள் சொத்துக்களை விற்றா வெளிநாடு வந்தார்கள்?

    தடஸ் தமிழில் ஏராளமான தேனி ஆசிரியர் குழு விரும்பாத செய்திகள் வரும். அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு இந்த செய்தியை மட்டும் போடுவதன் மூலம் புலிகளாலும் அரச படைகளாலும் நிர்மூலமாக்கப்பட்ட வன்னி அகதிகள் வெளிநாடு வருவது புலிகளின் பணத்தில் என மேற்கத்தைய நாடுகளின் அரச கொடுப்பனவில் உண்டு திளைத்த தேனி ஆசிரியர் குழு நிறுவ முயற்சிக்கின்றது.

    பாண்டியன் தம்பிராஜா.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…சம்பந்தபட்ட விஷயத்தை விட்டு தாவி எங்கேவோ போகிறீர்கள் சாந்தன். இருந்தாலும் ….. …//

    இல்லையே,தலைப்பு ஈ.பி.டி.பி கடத்தல்/கப்பம் பற்றியது அதற்குப் பதிலளித்தேன். மேலும் ‘அனாமதேயக் கடிதம்’ என ‘எங்கேயோ’ போனது நீங்கள் தான் நானல்ல!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளின் இறுதிக்காலத்தில் மூன்று லொறிபணம் எரிக்கப்பட்டதாக செய்தி வந்தது. வன்னியில் இருந்து இராணுவத்தால் விடுவிக்பட்ட பெண்மணிடமிருந்து ஒரு பையில் பதினெட்டு லட்சம் ரூபா பணம் காணப்பட்டது. அதில் இருந்த இரண்டாயிரம் ரூபா தாளின் இரண்டு சைபர்களும் மையால் அழிக்கப்பட்டிருந்ததாம்.ஏன்? யாம்யறியோம். வங்கி முகாமையாளர் அவர் பெயரில் எண்பதியாரம் ரூபாமட்டும் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாம்.மிகுதிக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

    உத்தேசக் கணக்கின் படி இதுவரை புலிகள் சேகரித்த பணம் ஆறு பில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ரெஜியின் புணர்வாழ்வுக்கழகம் சுணாமி என்ற பெயரில் வசூலித்தவை தாங்கள் பங்கிட்டு கொண்டவை வன்னியில் எரிந்து முடிந்தவை போக தங்கமாகவோ பணமாகவோ புதைத்து ரகசியமாக இலங்கை காட்டில் அல்லது வன்னியில் வைக்கப்பட்டிருக்கலாம். அதே காலப்பகுதியில் தரிசனம் தொலைக்காட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முல்லைதீவுபகுதியை சேர்ந்த பெண்மணி கூறும்போது ரி.ஆர்.ஓ வந்தார்கள் புட்டுக்குழல் தந்தார்கள். அதன்பிறகு அவர்களைக் காணகிடைக்கவில்லை. இதையும் தரிசனம் தொலைக்காட்சி தான் ஒலிபரப்பியது.

    இதை செய்திகளாக வதந்திகளாக எடுப்பது உங்களைப் பொறுத்த விஷயம். ஒருவிழாவில் ஒரு புலிப்பக்தரை சந்தித்தபொழுது இன்றும் தலைவர் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என நம்பகிறார்.காரணம் என்னவென்று கேட்டேன். தலைவர் சொன்னவராம்.தான் செத்தால் தன் பிணத்தை எரித்து சாம்பல் கூடக் கிடைக்காமல் செய்துவிடுங்கள் என்று. ஆனாடியால் அவர் சாகவில்லை. நான் என்ன சொல்லமுடியும்? தங்கவேலு சொன்ன மாதிரி டுப்பூ விட்டிருக்கிறான் டுப்பூ என்று சொல்லமுடியுமா?. எனக்குள்ளவே சொல்லிக் கொண்டேன்.

    Reply
  • thaasan
    thaasan

    ”அதன் பின்னே இது முதலாளி போராட்டமா? தொழிலாளி போராட்டமா?? என்பதைப் பற்றி முடிவெடுக்க முடியும்”

    என்ன தோழரின் அரசியல் தடம் மாறுது போல கிடக்கு. எதிர்ப்பு அரசியல் எல்லாம் நமக்கு ஒத்துவராது, இணக்கப்பாட்டு அரசியலே சரியான வழி என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் டக்ளஸ் தோழர். நீங்கள் என்னடா என்றால் ‘போராட்டம்’, முதலாளி தொழிலாளி என்கிறீர்கள்!!
    தோழர் நினைச்சாரோ இல்லையோ தோழரின் தோழர்கள் கனவிலும் நினைச்சிருக்க மாட்டார்கள் இவ்வளவு கெதியாக கழுத்துக்கு கத்தி வரும் எண்டு!

    Reply
  • NANTHA
    NANTHA

    புலிகள் யாழ்ப்பாணத்தில் காட்டுத் தர்ப்பார்நடத்திய காலத்தில் இந்தநீதிபதிகளும் சட்டத்தரணிகளும் குமுறி எழுந்ததாக வரலாறு இல்லை.

    இப்போது “சந்தேகத்தின்” பெரில் கைது செய்வது எப்படி என்பது புரிகிறது.

    மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மேயர் தனது உதவி மேயருக்காக போராட்டம்நடத்துவது கிரிமினல் குற்றமாக முடியாது.

    “மொட்டைக் கடிதம்” ஒன்றை வைத்து இவ்வளவு தூரம் இந்தநீதிவான் போகத் தேவையில்லை!

    இது கண்டிப்பாக “சேறு” பூசும் வேலைக்குநீதி மன்றம் துணை போவதாகவே படுகிறது.

    Reply
  • thamba
    thamba

    அடப்பாவிகளா உயிரும் பறித்து, காசும் பறித்துவிட்டு, கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை வேறு.

    Reply
  • BC
    BC

    //மற்றைய வெளிநாடு வந்த அகதிகள் சொத்துக்களை விற்றா வெளிநாடு வந்தார்கள்?// Pandiyan
    எனக்கு வெளிநாட்டில் உறவினர்கள் இருந்தார்கள். வட்டிக்கு கடன் எடுத்து தான் எனது குடும்பத்தார் என்னை வெளிநாடு அனுப்பினர். இது மாதிரி பல பெற்றோர் வட்டிக்கு கடன் எடுத்து பிள்ளைகளை வெளிநாடு அனுப்பியும் உள்ளனர். சொத்து விற்று வெளிநாடுவந்த பலர் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்ல பெருந்தொகை பணம் எவ்வாறு கிடைத்தது? என்ற தட்ஸ்தமிழ் செய்தி வேறு பத்திரிக்கைகளிலும் வந்தது. ஏன் தேனி என்ற இணையதளத்தின் மீது மட்டும் தாக்குதல்!
    இந்த செய்தி வருவதற்க்கு முன்னரே இது பற்றி கதைகள் சந்தேகங்கள் தொடங்கிவிட்டன.

    Reply