பிரிட்டனின் புதிய பிரதமாராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரன் புதிய கூட்டணி அமைச்சரவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சி தலைமையில் கூட்டணி அரசில் சேரும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் க்ளெக் துணைப்பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் ஜார்ஜ் ஒஸ்போர்ன் நிதி அமைச்சராகவும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹேக் வெளியூறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பெரும்பாலான அறிவிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் கன்சர்வேடிவ் கட்சி தலைவர்களுக்கே கிடைத்துள்ளன.
லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு துணைப்பிரதமர் உட்பட ஐந்து கெபினட் இடங்கள் கிடைக்கும் என்று தெரியவருகிறது