தேசிய படைவீரர் வாரத்தை ஆரம்பிக்கும் முகமாக முதல் கொடியை அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
முகமாலை யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த சார்ஜன் சந்ரசிறியின் புதல்வன் வருன ரஷ்மின் முதல் கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.
தாய் நாட்டின் ஒருமைப்பாடு இறைமை மற்றும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க உயிரைத் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக தேசிய படை வீரர் வாரம் கொண்டாடப்படுகிறது. தேசிய படை வீரர் வாரம் நேற்று ஆரம்பமானதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி தேசிய படைவீரா; தினமாகும்