சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பின்னர் நேற்று விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் ஓமானிலுள்ள இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களுக்கான அனைத்து வசதிகளும் அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
கடந்த மார்ச் 23ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த இக் கப்பலில் 20 இலங்கையர்கள் உட்பட 22பேர் பயணித்திருந்தனர்.
கடற்கொள்ளையர்களால் கேட்கப்பட்டிருந்த பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து கப்பலையும் கப்பலில் இருந்தவர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.