தேசிய படைவீரர் வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளின் போது போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து ஹில்டன் ஹோட்டல் வரையான காலி முகத்திடல் வீதி, யுத்த வெற்றிக் கொண்டாட்ட ஒத்திகைகளுக்காக நாளை முதல் காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரையில் மூடப்படவுள்ளது.
இதேவேளை, பஸ் வண்டிகளும் கனரக வாகனங்களும் கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியினூடாக கொம்பனித் தெருவுக்கு வந்து அங்கிருந்து கோட்டைக்கும் புறக்கோட்டைக்கும் செல்ல முடியும். இந்த நடைமுறை நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் பின்பற்றப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.