“ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண கிராமங்களில் சுதந்திரம் இன்றித் தவித்துக்கொண்டிருக்க, மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. ஓர் இனம் அந்நியப்படுத்தப்பட்டிருக்கையில் நாட்டின் வெற்றி எனக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?” என ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.. அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாட்டுக்குச் சுதந்திரம், விடுதலை கிடைத்து விட்டதாக அரசாங்கம் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் முழு நாட்டுக்குமான விடுதலை என எவ்வாறு கூற முடியும்? தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்” என்றார்.