பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருவிழா நடத்த அப்பகுதி மக்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சுமார் 20 வருடங்களின் பின் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு திருவிழாத் திருப்பலி நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இருபது வருடங்களின் பின்னர் இந்த ஆலயத்திற்குச் செல்ல மக்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மக்கள் கடற்கரை வீதியால் தொண்டைமானாறு ஊடாக பயணிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இத்திருவிழா உற்சவத்தில் பங்கு கொள்ள விரும்புகின்றவர்கள் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு தொண்டைமானாறு சந்தியில் ஒன்று கூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.