மலேசியா விலிருந்து கொழும்பை வந்தடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நேற்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தார். இவரை முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றுக்காலை கொழும்பிலிருந்து அழைத்துச் செனறார்.
itam
பாவம் பார்வதியம்மாள்
pandithar
இவரின் பிள்ளை மக்களைத்தான் நிம்மதியாக வாழவிடவில்லை எண்டு பார்த்தால் பெற்ற தாயையும் வாழ விட்டாரில்லை….
NANTHA
பார்வதியம்மாவுக்கும் “இலங்கை” அரசின் செலவில்த்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வெளிநாட்டுப் புலிகள் ஒரு சில ஆயிரம் யூரோக்களை அல்லது டாலர்களை ஏன் அந்த மூதாட்டிக்கு அனுப்பக் கூடாது?
BC
இவருக்கு சிறந்த வைத்தியம் நடப்பதாக புலிகளின் தமிழ்நெற்றே சொல்கிறது.
இதைதானே அரசியல் செய்ய முயற்சிக்காமல் சொந்த நாட்டிலேயே சிகிச்சை அளிக்ககலாமே என்பதை தேசம் வாசகர்கள் முதலே கூறினார்கள்.
santhanam
சிவாஜியின் அரசியல் சானக்கியம்??
chandran.raja
பார்வதி என்ற மூதாட்டி பெண் பாவம். இந்த தமிழ் இனத்தை சேர்ந்த பெண்மணி சுயநினைவில் இருக்கிறாரா என்பதே சந்தேகத்திற்குரியது. யாராவது இவரிடம் சென்று சுயவாக்கு மூலத்தை பதிவு செய்து ஒலிபரப்புவார்களா? நிச்சியமாக இதை புலிகளோ தமிழ்நாட்டு சினிமா கூத்தாடிகளோ செய்யப் போவதில்லை. ஏனெனில் அவரின் வாக்கு மூலத்தால் அவர்களின் பிழைப்புக்கும் அவர்களின் பிற்போக்கு சிந்தனைக்கும் பேரிடி விழ வாய்புண்டு.
பார்வதி என்ற பெண்மனி தமிழ் கலாச்சாரத்திற்கு உட்பட்ட பெண். படிதாண்டா பத்தினி என்று சொல்வார்களே அந்த வகை பட்டவ. புருஷன் கிழித்த கோட்டை தாண்ட முடியாதவ. இக்கட்டான நிலையிலும் கட்டியபுருஷனை கண்கலங்க விட்டதில்லை. நான் கேள்விப்பட்டவரை தன்பிள்ளையின் பெருமைகளிலும் இழிவுகளிலும் தம்மை சம்பந்தபடுத்தி கதைத்ததே இல்லை. அவர்களை அதாவது வேலுப்பிள்ளையும் சேர்த்து பட்டியைவிட்டு பாய்ந்து போன ஒரு “ஆடு” ஆகவே கருதுகிறார்கள்.
வேலுப்பிள்ளைக்கு கடந்த ஐம்பதுவருடங்களாக இனவாத சிங்கள அரசாங்கத்தில் ஆத்திரம் வெறுப்பும் கையாலாகத்தனம் இருந்தாலும் பார்வதி அம்மாளுக்கு அந்த உணர்வு அறவே இல்லை. அவரைக் கேட்டால்…சிவாஜித்தம்பி வறார். கூடவே பலர் வருகிறார்கள். எங்கெங்கொ ஏற்றி இறக்குகிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதே புரியவில்லை என்னை முடிந்தால் கனடா டென்மார்க்கிலிருக்கும் ஏதாவது ஒரு பிள்ளைகளிடம்
என்னை விட்டுவிடுங்கள் அல்லது நான் வாழ்ந்து வளர்ந்து புருஷசன்னுடன் உலாவித் திரிந்த வல்வெட்டிக்துறையில் ஆவது சேத்து விடுங்கள் என்பதே பதிலாக இருக்கும். மிகுதியெல்லாம் அதீதக் கற்பனையே! பிழைப்புவாதப் போக்கே!!.
Ajith
இவரின் பிள்ளை மக்களைத்தான் நிம்மதியாக வாழவிடவில்லை எண்டு பார்த்தால் பெற்ற தாயையும் வாழ விட்டாரில்லை….
What a pitty from Douglas and Rajapakse followers. Daily abductions and rapes tell the reality in a peaceful Rajapakse kingdom.
பார்வதியம்மாவுக்கும் “இலங்கை” அரசின் செலவில்த்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
This country is not belong to Sinhalese only. Hospitals run with the people’s money and every citizen is eligible for their rights. Rajpakse and its allies steal our money to give free education and medical facilities to Sinhala people.It is not Sinhalese giving free to tamils. We all can remember how Sinhala regime destryed our hospitals, scholls and people livelihood. It is the Sinhala government that killed her husband.
chandran.raja
அஜித்! தமிழில் எழுதத் தெரியாது முடியாது என்று இல்லை.உங்களால் எழுத முடியுமென்று தான் நினைக்கிறேன். எதையும் பூரணமான புரிந்துணர்வோடு விளக்கமோ கருத்தோ சொல்வது சரியான அணுகுமுறையாக இருக்குமென்று நினைக்கிறேன். நீங்கள் சர்வதேச நிலையில் பிரச்சனையை புரியவைப்பதற்காக எழுதவில்லை. தமிழர்களுக்கு தான் எழுதுகிறீர்கள். பலநாடுகளில் பரவியிருக்கும் தமிழர்கள் எல்லோருக்கும் ஆங்கிலத்தை துல்லியமாக புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆங்கிலபுலமை போதாது. உதாரணத்திற்கு ஜேர்மனியில் நீண்டகாலம் வசிக்கும் என்னையே எடுத்துக் கொள்ளலாம். தமிழில் எழுதமுடியாவிட்டால் அதற்கான காரணத்தையாவது எமக்கு புரியவையுங்கள். நன்றி உடையவர்களாய் இருப்பீர்கள்.
Ajith
Mr Chandran raja,
My apologies for not writing in tamil. I am tamil and my mother toungue is tamil and my mother land is tamil Eelam. I studied in tamil and can write in tamil. Unfortunately, I haven’t studied the tamil fonts “Pamini”. The tamil உச்சரிப்பு takes long and unable to get the correct letters. I don’t have much time to learn these fonts. I will try my best to get there soon.