”விடுதலைப் புலிகளுக்கெதிரான இரண்டாவது யுத்தம் ஆரம்பமாகியுள்ளது!” மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதiலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச ரீதியான பிரசாரங்கள் மற்றும், ஏனைய நடவடிக்கைகள் யாவும் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ இராஜ்ஜியம் ஒன்றை அமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்ககு  எதிரான யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் புலிகளுக் கெதிரான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான யுத்தம் தொடர்கின்றது எனவும் அவர் குறிப்பட்டள்ளார். 

இதே வேளை, விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அவர் மேலும் கூறியுள்ளார். கொழும்பிற்குள் ஊடுருவிய அநேகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • thurai
    thurai

    தமிழீழ விடுதலைப்புலிகள், பயங்கரவாதப்புலிகளாக இனங்காணப்பட்ட பின்பே இலங்கை அரசினால் புலிகளை போரில் வெல்ல முடிந்தது. இதற்கு புலம்பெயர் தமிழர்களினதும் இலங்கைத் தமிழர்களினதும் ஆதரவின்றி இலங்கை அரசினால் தனியாக் முடியாது. இதனை உணராமால் இலங்கை அரசு செயற்பட்டால் புலிகள் திரும்பவும் தோன்றுவார்கள். இதனால் துன்பங்களை அனுபவிக்கப் போவது இலங்கை மக்களேயாகும்.

    தமிழீழ விடுதலையென்பது புலிகளின் கைகளை விட்டு போய்விட்டது. இப்போ பயங்கரவாதப் புலிகள். இவர்களின் மாறு வேசமே நாடுகடந்த அரசாங்கம்.

    தமிழீழம் என்பது இலங்கைத்தமிழர்களின் எண்ணத்தில் இருந்து அகன்றுவிட்டது. இப்போ இருப்பது விடுதலை ஒன்றேயாகும். விடுதலையானது லங்கையில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் விடுதலையாக மாறுவதன் மூலமே இலங்கையில் அமைதி நிலவும். இதற்காக இலங்கை வாழ் மக்களனைவரும் ஒன்று பட்டு செயற்படுவதன் மூலமே சாத்தியமாகும்.

    துரை

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    தமிழீழம் என்பது இலங்கைத்தமிழர்களின் எண்ணத்தில் இருந்து அகன்றுவிட்டது என்பது தவறு. தமிழீழம் என்பது சிங்கள பவுத்த பேரினவாதத்தினால் உருவாக்கப்பட்டது. தமிழ் மிதவாதத்தலைமைகள் கூக்குரல் இட்டது தற்காலிக சலுகைகளுக்காக மட்டுமே. ஒழுங்கமைக்கப்பட்ட, ஒருமுனைப்படுத்திய அரசியல் செயற்பாடோ, போராட்டமோ அற்ற நிலையில் தீவிரவாதத் தலைமை துளிர் விட்டது. இலங்கை வாழ் மக்களனைவரும் ஒன்று பட்டு செயற்படுவது சாத்தியமற்றதின் பின் தனிநாட்டுப்போராட்டமாக மாற்றம் பெற்றது.

    இந்தப் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ளாமையை என்னவென்று சொல்வது?

    Reply