களனி விஹாரையில் வைத்து 2 1/2 வயது குழந்தையை கடத்திச் சென்றவர் என சந்தேகிக்கப்படும் வயோதிபப் பெண்ணின் உறவினர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
குழந்தையை கடத்திய இப்பெண்ணுக்கு இம்மூவரும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச் சாட்டின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் அவரின் மகளும் இரண்டு பேத்திமாரும் ஆவர்.