உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்த யோசனைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது அதன் சாதக, பாதக நிலைகளை எடுத்துரைப்பதாக பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
எனினும், அதற்கு முன்னதாக நடைபெறும் கலந்துரையாடலிலும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள எண்ணியுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் இன்னும் ஓரிரு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடலை நடத்தி கருத்துக்களை அறியுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.