தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாணவிட்டால் மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சனை பழைய நிலமைக்கே வந்துவிடும் என ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மகாண சபையின் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.ஜே.எம் முசாமில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் கொண்டுவரபட்ட அமரர் நீலன் திருச்செல்வத்தின் அரசியல் தீர்வுதிட்டத்தை ரணில் தலைமையிலான ஜக்கிய தேசிய கட்சி ஆதரித்து இருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வைக் கண்டிருப்பதுடன் ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு அரசியல் ரீதியிலான வெற்றியைச் சந்தித்திருக்கும். அன்று ஜக்கிய தேசியக் கட்சி விட்ட தவறே இன்று ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். தற்போதைய அரசாங்கம் ஒரு இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தன் ஆட்சியை கொண்டு செல்வதுடன் அதிலிருக்கின்ற அமைச்சர்களைக் கூட திருப்திப் படுத்திக் கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிசமைக்காது எனவும் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு ஒன்றினை வைத்துகொண்டு இந்த அரசு சர்வதிகாரத்தனமாக செயற்படுகிறது எனவும் குறிப்பிட்ட அவர் ஜக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினை தொடர்பாக பல தவறுகளை விட்டுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதே வேளை 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்தினால் தமிழ் பேசும்மக்களின் பிரச்சினைக்கு ஆரம்ப நகர்வாக முன்னெடுத்து செல்லமுடியும் அதே வேளை 13 ஆவது அரசியல் சீர்திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாகாகது. கிழக்கு மாகாணத்தில் ஒரு மாகாண சபையை உருவாக்கி அதற்கு ஒரு தமிழ் முதலமைச்சரையும் தெரிவு செய்து அதனுடைய அனைத்து அதிகாரங்களையும் சிங்கள ஆளுனரிடம் ஒப்படைத்ததன் மூலம் இந்த அரசின் கபடத்தனத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
எனவே இந்த அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமானால் ஜக்கிய தேசியக் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கும் என்று வியாழக்கிழமை (13 May 2010) ரீபிசியில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாகாண சபையின் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.ஜே.எம் முசாமில் தெரிவித்தார்.