தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும், புதிய இடதுசாரி முன்னணியும் இணைந்து எதிர்வரும் 18ம் திகதி வவுனியா நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முள்ளியவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும், சிறைகளிலுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளதாகவும் திரு. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்ற படுகொலைகளை விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்கக் கோரியும், காணாமல் போனவர்கள் அரசின் பாதுகாப்பில் இருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் இவ்வார்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
kamal
சிவாஜிலிங்கம், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் இது.
கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் நிகழ்வை தனியாகவும் ஆர்ப்பாட்ட பேரணியைத் தனியாகவும் செய்திருக்கலாம்தானே?