நாட்டில் பரவலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் சுமார் 7848 குடும்பங்களைச் சேர்ந்த 37,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் கரையோரத்தை அண்டியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்த போதும் கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. கொழும்பு, களுத்துறை மாவட்டத்தில் சுமார் 4108 குடும்பங்களைச் சேர்ந்த 20,540 பேர் பாதிக்கப்பட்ட போதும் நேற்று இவர்கள் தமது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். எனினும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பகுதியில் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியதால் சுமார் 3740 குடும்பங்களைச் சேர்ந்த 16,410 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை அந்தந்த கிராம சேவகர் மட்டத்தில் வழங்குவதற்கு அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. வத்தளை பகுதியில் 14 கிராம சேவகர் பிரிவுகளே பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அழுத்கம, பண்டாரகம பகுதியே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதுரமீமுல்ல பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்த குடும்பங்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன. கொழும்பிலும், களுத்துறை மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி நேற்று குறை வாக காணப்பட்டதால் இடம்பெ யர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு நேற்று செல்ல ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.