புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முறையான திருமணப் பதிவை மேற்கொள் ளாத தம்பதியினருக்கு சட்டபூர்வமான முறையில் திருமணத்தை நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன.
வடக்கில் யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதிகளில் கோயில் மற்றும் தேவாலயங்களில் திருணம் செய்துகொண்ட பல தம்பதியினர் தற்போது எமது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புனர் வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனரென ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இத்தம்பதியினர் சேர்ந்து வாழ விரும்பும் பட்சத்தில், அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களை அழைத்து முறையே பேச்சு நடத்தி, அனைவருக்கும் ஒரே தினத்தில் திருமணம் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இத்திருமண வைபவத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.