வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள தபால் அலுவலகங்களை புனர்நிர்மாணம் செய்ய 36 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் சேதமடைந்த அனைத்து தபாலகங்களும் இத்திட்டத்தின் கீழ் விரைவில் மீளக் கட்டியெழுப்புவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி. குமரகுரு தெரிவித்தார். ஏற்கனவே கட்டப்பட்டு நிறைவு செய்யப்படாத தபாலகங்களும் இந்த நிதி மூலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படும். அதனைவிட வன்னியில் போரினால் சேதமடைந்து முழுமையாக அழிவடைந்தும் உள்ள தபாலகக் கட்டடங்களும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது எனவும் பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.