எவரையும் இழிவுபடுத்தும் உரிமை ஊடகவியலாளருக்கு இல்லை – ஊடகத்துறை அமைச்சர்

kahiliya.jpgஎவரையும் இழிவுபடுத்தவோ அல்லது மற்றையோர் மனங்களைப் புண்படுத்தவோ ஊடகத்துறையினருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்று தகவல், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டின் நடப்புகள நிலவரங்களை எழுதும் அதேவேளை அரசாங்கம் எதை செய்தாலும் அதற்கு விரோதமாக எழுதும் போக்கையும் சிலர் கொண்டுள்ளனர். எனினும் நான் அனைத்து ஊடகவியலாளருடனும் சுமுகமாக செயலாற்றுவேன் எனவும் அமைச்சர் கூறினார். அமைச்சர் கெஹெலிய நேற்று (16) கண்டியில் உள்ள மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரினது ஆசிபெற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன். கண்டி நகரான மரபுரிமை நகரை பாதுகாப்பது எமது அனைவருடைய கடமைப்பாடாகும்.

இந்த வகையில் கண்டி நகரில் உள்ள நிருவாக கட்டமைப்புகள் அனைத்தும் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் அடிப்படையில் தான் கண்டி போகம் பறையில் அமைந்துள்ள சிறைச்சாலையை பள்ளேகலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் நேற்று அமைச்சர் பெளத்த, இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மத வழிபாட்டு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மத குருக்களிடமும் ஆசி பெற்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *