ஊர்காவற்றுறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டார்!

யாழ். ஊர்காவற்றுறைப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் நேற்று 16ம் திகதி பொதுக் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த குமாரவேலு பாலதேவி என்ற 44 வயது குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். மீட்கப்பட்ட சடலம் மரணவிசாரணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • ram
    ram

    இக்கடத்தல்/கொலை ஈபிடிபியினருக்கு தெரியாதாமா? யாழ் மாநாகர முதல்வர் பதிலளிக்கட்டும் பார்க்கலாம்?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஒரு வேளை இதுவும் ‘தனிப்பட்ட’ ,’சட்ட விரோத காதல்’ சம்பவம் என மேயர் சொல்லுவாரோ தெரியவில்லை

    Reply
  • BC
    BC

    /Ram – இக்கடத்தல்/கொலை ஈபிடிபியினருக்கு தெரியாதாமா? யாழ் மாநாகர முதல்வர் பதிலளிக்கட்டும் பார்க்கலாம்? //
    நல்லா தான் பிரசாரம் நடக்குது.

    Reply
  • thurai
    thurai

    தற்கொலைப்படையின் தாக்குதல் வெற்றியழித்தால் லாச்சப்பலில் கேக் வெட்டியும், வெடி கொழுத்தியோரும், அதனைப் பார்த்து ரசித்தவர்க்ழும், இப்போ யாழ் கொலைகளிற்காக கண்ணீர் விடுகின்றார்களே.

    புலிகள் கொன்றால் கொல்லப்பட்டவர் துரோகி. தற்கொலைபடையானால் மாவீரர். யாழில் ஒருவ்ர் இறந்து கிடந்தால் டக்ளஸின் ஆடகள் கொன்று போட்டாங்கள்.

    இங்கும் டக்ளசின் மேல் குற்ரம் சொல்வதன் மூலம் புலிகளை காக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள்.

    துரை

    Reply
  • பல்லி
    பல்லி

    //இங்கும் டக்ளசின் மேல் குற்ரம் சொல்வதன் மூலம் புலிகளை காக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள்.//
    துரை யார் செய்தாலும் கொலைக்கு அதரவாய் உங்கள் எழுத்து வேண்டாம், இது எமது சமூகத்துக்கு தீங்கு;

    Reply
  • thalaphathy
    thalaphathy

    திரு துரை அவர்களே,

    யாழ்ப்பாணத்தில் நடப்பது யாழ்ப்பாணியத்தின் அரசியல். யாழ்ப்பாணியத்தையும் அதன் 60 ஆண்டுகளுக்கு மேலான தமிழ்தலைமை மற்றும் அரசியல் சாணக்கியம் பற்றியும் புடம்போட்டு தெரியப்படுத்த இப்போது புதியவர்கள் வந்துவிட்டார்கள் அல்லவா?. ஆதலால் அங்கு நடந்தேறும் அத்தனை சீரளிவுகளையும், இவர்களது வீர தீர பாரம்பரியங்களை கேள்விக்குள்ளாக்கும் புதியவர்கள்தானே பொறுப்பேற்க வேண்டுமென்பதுதான் அனைத்து யாழ் ஊடகங்களையும் தம்மகம் வைத்திருக்கும் இவர்களின் அவா.

    Reply
  • Ajith
    Ajith

    தற்கொலைப்படையின் தாக்குதல் வெற்றியழித்தால் லாச்சப்பலில் கேக் வெட்டியும், வெடி கொழுத்தியோரும், அதனைப் பார்த்து ரசித்தவர்க்ழும், இப்போ யாழ் கொலைகளிற்காக கண்ணீர் விடுகின்றார்களே.

    Mr Thurai, So you think it is no matter EPDP killing civilians because LTTE used suicide bombers to kill Sinhala army who raped tamils. Why don’t you celebrate this by cutting cake.

    Reply
  • thurai
    thurai

    புலி எதிர்ப்பாளர்கள் அநேகமானோர் எந்த கொலைகளிற்கும் எதிர்ப்பானவர்கள் தான். அது அன்றும் இன்றும் மாறாது. புலிகளின் கொலைகளை ஆதரித்தோரும், தட்டிக்கேளாதோரும் இராசபக்ஸவையும், டக்ளசையும் ஏன் தட்டிக் கேட்கின்றார்கள்?

    புலிஎதிப்பாளர்க்ழுடன் புலி ஆதரவாளர்க்ழும் தற்சம்யம் சேர்ந்து புலியை அழித்தவர்களை பழிவாங்கவே எண்ணுகின்றார்கள். ஈழத் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டல்ல.

    புலிகள் இல்லாமல் போனதுபோல், சிங்கள தமிழ் இனத்திற்கு கேடாக உள்ள அனைவருமில்லாமல் போவார்கள். அதனைச் செய்யக் கூடியவர்கள் புலிகளை இல்லாமல் செய்தவ்ர்களேயன்றி பிறரல்ல. புலிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைபேயாகும். ஆயுதங்கள் மட்டுமல்ல. எனவே இலங்கை மக்களே இராசப்க்சவைப் பற்ரியும், டக்ளசைப் பற்ரியும் தீர்மானிக்க வேண்டிய்வர்கள். புலத்தில் வாழும் தமிழர்களல்ல.

    துரை

    Reply
  • pandithar
    pandithar

    பல்லி….
    டகளஸிற்கு சம்பந்தம் இல்லை என்று கூறுவது அவரது சுதந்திரம். அதை வைத்து இப்படி எழுதலாமா?… கொலைகளை நியாயப்படுத்த முடியாது. யார் செய்யினும்
    அது தவறுதான். முன்பு படுகொலைகள் நடந்த போது இது போன்ற செய்திகள் வெளியில் வருவதில்லை. இப்ப பாம்பு கடித்தாலும் செய்தி வரும். அந்த பாம்பு டகளஸ் வளர்க்கும் பாம்பு என்றம் செய்தி வரும்.

    Reply
  • BC
    BC

    ஊர்காவற்றுறையில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் பொதுக் கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்ற ஒரு செய்தியை , துரை கொலைக்கு அதரவாய் உங்கள் எழுத்து வேண்டாம் என்பதின் நோக்கம் தெளிவானது .
    பண்டிதர், கொலைகைள் மட்டுமா? தங்களுக்கு பலி கொடுப்பதற்காக புலிகள் பிள்ளைகளை கடத்தினார்களே இதில் எத்தனை செய்தி பத்திரிக்கைகளில் முன்பு வந்தன!

    Reply
  • sen
    sen

    புலிகளின் மனித விரோத ஆட்சியில் கொல்லபட்டவர்கள், கடத்தப்படவர்கள் தொடர்பாக கதைப்பதே உயிருக்கு ஆபத்து.

    தற்போது தனியே காணமல் போபவர்கள், கொல்லப்படுபவர்கள் மட்டுமல்ல பாம்பு வளர்ப்பவர்கள் தொடர்பாகவும் பத்திரிகையில் வருகின்றது. எதிர்காலத்தில் பத்திரிகையில் அறிவித்தல் வந்த பின்னர் இவைகள் நடந்தேறும்.

    ஜனநாயகம் ஒரு நாளில் ஆலமரமாக வளராது இப்போது பாணும் இருக்கின்றது கேக்கும் இருக்கின்றது சிலர் ஒன்றையும் தின்ன மறுக்கின்றனர்

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    It is very strange to accuse a person/pertsons without knowing the background of the death. It could be suicide/murder/murder after rape.There are deaths, murders/robbery in many parts of our country. People who watch and listen Indian TV, Jeya, Sun etc can understand the situation in Tamilnadu. Those who contribute to this website are biased. When it happens in Jaffna the jaffna/Colombo media initially presents a different view-it is intentional. The plight of the Tamil people was self made.Tamil leaders exaggerated matters and Tamil media effectively and efficiently manipulated the news, People tend to belive what is appearing in papers.This is our plight.

    Reply