தொடர்ச் சியான மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சபையில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படுமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ச்சியான மழை வெள்ளம் காரணமாக பெரும்பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்பதை சபையில் தெரிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அதன் போது அவர் தமது கூற்றை நீட்டிச் செல்ல முற்பட்ட போது, இதனை ஒரு விவாதமாக்கிக் கொள்ள வேண்டாமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். இதன் போது குறிப்பிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்று அது தொடர்பில் அரசாங்கத்தின் கூற்று வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.