முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிலருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுவதாக அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் சுமார் 20 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார்.
அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் வாய் மூல உறுதிமொழி மூலம் திருமணம் செய்திருந்ததாகவும் ஆனால், உத்தியோகபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அநேகமானோர் தமது ஜோடிகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆயினும் இருதரப்பினரதும் பெற்றோர்களினதும் இணக்கத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயினும், சில ஜோடிகளின் நிலைமை மாற்றமடைந்திருக்கலாமெனவும் பெண்ணொருவர் இனிமேலும் அந்த மனிதரை நான் விரும்பவில்லையெனக் கூறக்கூடுமெனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ஆண்களும் அவ்வாறு கூறக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகள் முகாம்கள் அல்லது புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டனர். ஜோடிகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கிழமைக்கு ஒருதடவை ஒருவரையொருவர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிரிகேடியர் ரணசிங்க கூறியுள்ளார். அவர்கள் சட்டரீதியாகத் திருமணம் செய்த பின் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து குடும்பங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியும். அவர்களில் சிலருக்குப் பிள்ளைகள் உள்ளனர். சிறியளவு தொகையினரே தற்போது வழக்கு விசாரணைக்காக வைக்கப்படுவார்களெனவும் அநேகமானோர் ஒருவருடத்தின் பின் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Ranjan
இந்த இடத்தில் ஊரிலிருந்து வந்திருக்கும் செய்தி ஒன்றையும் சொல்ல வேண்டும். முகாம்களிலும் சித்திரவதைக் கூடங்களிலும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பல பெண்களை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பல ஆண்கள் பரந்த மனப் பாங்குடன் ‘மணம்’ செய்து கொள்ள இருப்பதாகவே நாம் அறிகிறோம். இது தியாகம் அல்ல. பாலியல் வதையை ஆயுதமாகக் கொண்டு தமிழர்களின் ‘சுய கெளரவத்தை’ உடைப்பதன் மூலம் ஒரு இனத்தையே தலை குனிய வைக்கும் முயற்சியை முறியடிக்கும் நோக்கிலேயே இப்படி ஒரு தீர்மானத்தைப் பல ஆண்கள் எடுத்துள்ளார்கள். இந்த நல்ல நோக்கம் மதித்துப் பாராட்டப் பட வேண்டிய ஒன்றாகும்.
“ஜோடிகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கிழமைக்கு ஒருதடவை ஒருவரையொருவர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக” பிரிகேடியர் ரணசிங்க கூறியுள்ளாராம்! என்னே மனிதாபிமானம் மிக்க அரசு என்று புல்லரித்துப் போகிறோம்.
BC
ஊரிலிருந்து வந்திருக்கும் செய்தி என்று புலி ஜோடிகள் திருமணம் செய்வதை கூட அழிவான தமிழீழ பிரசாரத்திற்கா பயன்படுத்த வேண்டும்? பல ஆண்கள் பரந்த மனப் பாங்குடன் ‘மணம்’ செய்து கொள்ளல் நல்ல நகச்சுவை.இந்த ஜோடிகளை கலாச்சார சீரழிவு என்று திட்டாமல் விட்டாலே போதும்.
Ranjan
//ஆண்கள் பரந்த மனப் பாங்குடன் ‘மணம்’ செய்து கொள்ளல் நல்ல நகச்சுவை//
அட்டணைக் கால் போட்டுக் கொண்டு தட்டச்ச்ப்பலகையின் முன் இருப்பவர்கள் எதுவும் பேசலாம். திருமலையில் மட்டும் இவ்வாறு இளம்பெண்கள் 24 பேர் ‘விடுவிக்கப்பட்டுள்ளனர்’. அவர்களின் கதையைக் கேட்டால், கண்களிலிருந்து கண்ணீர் அல்ல இரத்தம் ஓடும்!
இதயம் இருக்க வேண்டிய இடத்தில் கல் இருப்பவர்கள் தாராளமாகநகச் சுவையை இரசிக்கலாம். இந்தக் கொடுமைக்குள் தமிழீழத்தை கொண்டு வந்து கட்டி விட்டு எல்லாவற்றையும் நியாயப் படுத்த முற்படுபவர்களின் முன்னால் கோத்தபாய மகானாகத் தெரிகிறார். வாழ்க வாழ்க மாற்றுக்கருத்தாளர்கள்!!
BC
உங்கள்தரப்பில் இருந்து செய்தி வருவதால் நோக்கம் நன்கு அறியப்பட்டதால் பரந்த மனப் பாங்கு என்பது நகச் சுவையையாக உள்ளது.
Ranjan
//உங்கள்தரப்பில் இருந்து செய்தி வருவதால் நோக்கம் நன்கு அறியப்பட்டதால் பரந்த மனப் பாங்கு என்பது நகச் சுவையையாக உள்ளது.//
நான் எத்தரப்பான் என்று யார் அறிவார்? என்னை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?
Varathan
பல ஆண்கள் பரந்த மனப் பாங்குடன் ‘மணம்’ செய்து கொள்ள இருப்பதாகவே நாம் அறிகிறோம். பாலியல் வதையை ஆயுதமாகக் கொண்டு தமிழர்களின் ‘சுய கெளரவத்தை’ உடைப்பதன் மூலம் ஒரு இனத்தையே தலை குனிய வைக்கும் முயற்சியை முறியடிக்கும் நோக்கிலேயே இப்படி ஒரு தீர்மானத்தைப் பல ஆண்கள் எடுத்துள்ளார்கள்.
Logically there’s no sense for the above lines. We’re living in the same community since our birth. All we know how people are in this world. The fact is society (no community is excepted) composed of all kind of people. In most situations what’s happenning is isolated events are intepretted in generalized way to strengthen their own agenda. Readers can find these kind of faulty intepretations in “Athirvu” website (totally bias and unreliable Tamil news site). … This not that much differ the news like 99.99% support Transnational govt/Vaddukoddai resolution.