சனல் 4 செய்தி தொடர்பாக பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கை

இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முழுமையாக நிராகரித்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை மீட்கும் நோக்கத்துடன் மனிதாபிமான நடவடிக்கையில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டிருந்ததாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் உட்பட பல நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். மனிதாபிமான நடவடிக்கைகளானவை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் இடம்பெற்றது. பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்பும் ஏற்படக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் பிரகாரம் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை அரசாங்கம் இப்போது மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இலங்கையின் சகல இனக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாண்புமிக்கோர் உறுப்பினர்கள் கொண்டதாக அக்குழு அமைந்துள்ளது. அத்தகைய கவலைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. அத்துடன், தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் சகல சமூகங்கள் மத்தியிலும் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.

ஒளிநாடாவைப் பார்க்காமல் அதில் கூறப்பட்டிருக்கின்ற விசேட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கான நிலைப்பாட்டில் உயர்ஸ்தானிகராலயம் இல்லை. ஆதலால், கூறப்படும் ஒளிநாடாவை பார்வையிட அனுப்பிவைக்க முடியும். ஒளிபரப்புவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மை குறித்து பரிசீலிப்பதற்காக அதனை பார்வையிட அனுப்பிவைக்க முடியும்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின்போது இடம்பெற்ற நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனைகள் உயர்மட்ட உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியில் வெளிநாட்டு நிருபர் ஜொநாதன் மில்லரின் செய்தி இணையத்தளங்களில் வெளியாகியிருந்தன. 18 மே 2010 இல் இந்த அறிக்கை பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் வெளியிடப்பட்டதாக அத தெரண இணையத்தளம் நேற்று தெரிவித்திருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • sen
    sen

    Channal 4 வெளியிட்ட செய்தி தொடர்பாக செய்தி வெளியிடாமல் இலங்கை அரசின் மறுப்பு செய்தியினை வெளியிட்ட தேசம் இணைத்தளதிட்கு நன்றி. Asian Tribune இதுகூட செய்யவில்லை.

    Channal 4 செய்தி லண்டன் வீடியோ நிலையங்களில் தயாரிக்கப்பட்டதா? என்பதை கண்டறிய தேசம் முயலவேண்டும். அதாவது ஜனநாயகதிட்கு எதிரான சதியா என்பதை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பிரித்தானிய தொலைகாட்சி “சணல் 4 ” மனிதநேயத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் தன்னை நியாயம் தேடுகிற ஊடகமாக தன்னை நியாயம்தேடுகிற ஒருவராக தன்னை அடையாளம் காட்ட முற்படுகிறது.
    போர் குற்றங்கள் செய்ததாக சொல்லுகிறார்களே யார்? அவர்கள்.இங்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு நான் வக்காளத்து வாங்க வரவில்லை. சணல் 4 கின் நோக்கம் என்ன?
    யுத்தம் என்பதே கொடுராமானது. யுத்தத்தை யாரும் அனுமதிக்க கூடாது. அனுமதித்தால் அதற்குள் எப்படி நியாயத்தை தேடுவது?. யுத்தம் என்று வந்துவிட்டால் அதற்குள் பலியாவது முதலில் உண்மைகள் தான். சணல் 4 இப்ப என்ன விரும்புகிறது. வீடியோ காட்சிகளையா?. இதை வைத்து
    சிறீலங்கா அரசுக்கு மேல் இராணுவத்திற்கு மேல் குற்றம் சுமத்திவிடமுடியுமா?
    படகாட்சிகள் கையை கட்டியிருப்பதும் சுட்டுக் கொல்லப்படுவதும் நிதர்தனமாகவே இருக்கிறது. யாரும் விவாதத்திற்கு வரமாட்டார்கள். புலிகளின் கடந்த காலவரலாறு புரிந்தவர்கள் இந்த சூக்குமத்தை இலவுகாகப் புரிந்து கொள்வார்கள். புலிகள் தங்கள் நோக்கத்தை அடைவதற்கு எதுவும் செய்ய தயங்காதவர்கள்.இதில் அவர்கள் நீண்டகாலம் வெற்றியும் பெற்றார்கள்.இயக்க அழிப்பும் இப்படித்தான் நடந்தேறிற்று.

    அடுத்து தமதுபோராட்டத்து (தமிழ்மக்களுடைய போராட்டத்திற்கு அல்ல )சர்வதே அங்கீகாரத்தைப் பெற்றாகவேண்டும்.அதற்கு எப்பவும் அரசகட்டுப்பாட்டு பகுதிகளையே தேர்ந்தெடுப்பது வழக்கம். இவர்கள் உடைய விறுமாண்டித் தனமான வேலைகள் இப்படிஒரு பக்கம் இருக்க…
    இந்த வீடியோகாட்சிகளில் கொல்லப்பட்டவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்?
    இது புலிகளால் இயக்கப்பட்டது. அதில் கொல்லப்படுகிறவர்கள் புலிகளால்உயிர்ருடன் பிடிபட்ட சிங்கள இராணுவ வீரர்களே!. அதில் பலியாவர்கள் தமது குடும்பத்தை பாதுகாக்கும் பொருட்டு இராணுவத்தில் சேர்ந்த அப்பாவி சிங்கள விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர்களே. “சணல் 4” மேற்கொண்டு தனது புலன்விசாரணைகளை நடத்தட்டும்.

    Reply
  • sen
    sen

    எனக்கு இப்பத்தான் எல்லாம் விளங்குது. உந்த Channel 4 ஒரு CIA எல்லோ!!

    Reply
  • விசுவன்
    விசுவன்

    //Chananl sen on May 20, 2010 7:29 am4 வெளியிட்ட செய்தி தொடர்பாக செய்தி வெளியிடாமல் இலங்கை அரசின் மறுப்பு செய்தியினை வெளியிட்ட தேசம் இணைத்தளதிட்கு நன்றி.//

    அது தான் சனல் 4இல் செய்தியாக வந்து விட்டதே ??

    Reply
  • maruthu
    maruthu

    சரத் பொன்சேகா மறுப்பு

    இலங்கை இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறியத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.//

    காலை வாரி விட்டாரே. இவருக்க தமிழ்ச்சனம் வோட்டுப் போட்டதற்கான கைம்மாறு.

    Reply
  • Ajith
    Ajith

    See another one
    போர்க் குற்றங்கள்: “புதிய ஆதாரங்கள்”
    http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100521_hrwnewevidence.shtml

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளுக்கு ஊக்கம் கொடுப்பவர்களும் ஆதரவாளர்களும் (பி.பி.சி உட்பட) இந்த இரத்தம் தோய்ந்த-சித்திரவதைக்குள்ளாகும் இளம்மனிதன் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர் என உறுதியாகச் சொல்லுகிறார்கள். எம்மை பொறுத்தவரை புலிகளும் பொய்காரர் இராணுவவும் பொய்காரர்களே!.
    இவர்களின் வாய்யிருந்து எந்த உண்மையும் முழுமையாக எதிர்பார்க முடியாது.
    “அக்சன்பாம்” தொண்டுநிறுவன பதிஏழு பேர் கொலைகள் கூட கிடப்பிலேயே கிடக்கிறது. இதன் உண்மைகள் வெளிவரப்போவதில்லை. வங்காலை தொழிலாளி மாட்டின் மூர்த்தி குடும்பத்தின் கொலைகளும் அப்படியே கண்னால் கண்ட சாட்சியங்கள் இல்லையாம்? இந்த கொலைக்கு சாட்சியங்கள் இருக்கிறது புகைப்படம் எடுக்காமல் யாரும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை. இவர் இராணுவத்தை சேர்ந்தவர் என மகிந்தாஅரசும் இராணுவத் தலைமையும் நிரூபிக்க முற்படுமா? அவர்களுக்கு நிரூபிக்கவேண்டிய தேவைகள் நிறையவே இருக்கிறது.

    அடுத்தது புலிகள். உலகத்தின் நான்காவது பெரிய இரானுவத்தை தோற்கடித்ததாக சொல்லுபவர்கள். காற்றுப்போகா இடத்திற்கு கூட தம்மால் போகமுடியும் என பீத்திக்கொள்ளுபவர்கள். சிறீலங்கா இராணுவத்திற்கு எந்தவித குறையில்லாத இராணுவத்தை கட்டிவளர்பதாக ஊடங்களில் பிரச்சாரம் செய்பவர்கள் எந்தவித முட்டாள்காரியத்தையும் புலிகள் செய்வதில்லை மக்களை ஒரு மாயைக்குள் நீண்ட காலம் சிறைப்பிடித்து வைத்தவர்கள். அவர்களுக்குரிய நேரமாகவே இதைக் கருதுகிறேன்.

    சித்திரவதை செய்து கொல்லப்படும் இந்த இளம்மனிதன் எந்த ஊரில் பிறந்தான் இவனின் வயதென்ன? மணமுடித்தவரா? சகோதரககோதரிகள் இருக்கிறார்களா? இல்லை அனாதையாக தேசியத்தலைவரின் கிருபையில் செஞ்சோலை காப்பகத்தில் வளர்ந்து அரசியல் முதிர்ந்து அரசியல் பிரிவில் இணைக்கப் பட்டாரா? என்பது போன்ற பலகேள்விகள் இருக்கின்றன.. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்பிற்போக்கு வாதத்தைத்தை தத்தெடுத்த ஆயுதப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். ஆயுதமில்லாத பிற்போக்கு புலிகள் இன்னமும் உறவாடி கெடுப்பதற்கே உருவத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள. இவர்களின் மூச்சுகயிறு புலம்பெயர்தவர்களிடம்.

    எது எப்படியிருந்தாலும் இந்த சித்திரவதை-கொலைக்கு உட்பட்டவர் “புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்” என்பதை நிரூபிப்பதிலையே தங்கியிருக்கிறது.

    Reply
  • aras
    aras

    இந்த இளம் மனிதன் தனது சகோதரனின் மகன் என சுவிஸிருந்து ஒரு பெண்மணி ஜிரிவிக்கு தெரிவித்திருந்தார்.(அந்தப் பெண்ணின் பெயரை கவனிக்கவில்லை)இந்தப் பையனின் சகோதரனும் புலியில் இருந்தார் எந்த தகவலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனித உரிமைக் காப்பகம்(அவர்களின் அரசியல் நோக்கம் எதுவாக இருப்பினும்) புலிகளின் மனித உரிமை மீறல்களை அறிக்கையிட்ட போது நாம் நம்பினோம் அல்லவா? இதை ஏன் சந்தேகப்பட வேண்டும்?

    Reply
  • Daily Mirror
    Daily Mirror

    LTTE abused fleeing girls
    Saturday, 22 May 2010 23:30
    A report by UN Secretary General Ban-ki moon, handed over to the UN Security Council on Children and Armed Conflict, notes in a section on Sri Lanka that the LTTE had forcibly cut the hair of girls trying to flee the conflict during the last stages of the war to mislead the military into thinking they were Tiger cadres.

    Meanwhile the annual report which had once listed the LTTE and the TMVP led by Karuna Amman and later Pillayan as outfits involved in child recruitment, now does not have their names listed with the end of the war but yet carries the name of Karuna supporter Iniya Barrathi as a child recruiter.

    “Some women and girls trying to flee the conflict areas had their hair forcibly cut by the LTTE as a deterrent to fleeing, knowing that women with short hair would be suspected by the Sri Lankan Army of being LTTE cadres and would likely be treated differently from other internally displaced persons,” the report seen by Daily Mirror online said.

    The report also said that some young girls were forced by their families to marry their relatives to avoid forced recruitment by LTTE during the final stages of the war.

    The report comes amidst allegations by human rights groups of serious human rights abuses by the government during the final stages of the war which ended in May last year, allegations which the government has denied.

    The Annual Report gives an overview of the situation of children affected by conflict and action taken for their protection over the reporting period. In mid-June the report will be discussed in the Security Council Open Debate on Children and Armed Conflict.

    “Interviews with internally displaced persons also indicated that during the months leading to the end of the conflict, there were reports of rape during fight and of sexual harassment, especially towards former female LTTE cadres, including girls,” the UN report said without identifying the who the perpetrators were.

    The report meanwhile says there has been no evidence of significant recruitment by the Tamil Makkal Viduthalai Pulighal (TMVP) in 2009. TMVP, formerly led by Vinayagamoorthy Muralitharan (also known as Karuna), has been reconstituted and is now under the control of former LTTE cadre Sivanesathurai Chandrakanthan (also known as Pillayan).

    However it said that during a mission to Sri Lanka by a UN Special Envoy last December, a number of reports were received on recruitment of children and threats of re-recruitment by Iniya Barrathi, who was part of the TMVP breakaway faction, under Karuna’s leadership, and is referred to as “commander” in Ampara district in the Eastern province.

    In the districts of Killinochchi and Mullaitivu a total of 199 cases of children killed and 146 cases of children maimed were reported from 1 January 2009 to 19 May 2009, although the actual number of casualties is likely to be higher, the UN report said. (Daily Mirror online)

    Reply
  • Siva
    Siva

    சரியான கோணத்தில் ஓர் கட்டுரை- இரயாகரன் வரைந்தது………….

    சனல் 4 முதல் சரத்பொன்சேகா வரை மறைக்க முனைவது எதை?

    உனக்கும், எனக்கும் மட்டுமல்ல எம்மைச் சுற்றி நடந்ததை மூடிமறைப்பதே எங்கும் அரங்கேறுகின்றது. ஒருபுறம் அரசு என்றால், மறுபுறம் புலிகளும் இதில் போட்டி போடுகின்றனர். இந்த எல்லைக்குள் தான் எதிர்க்கட்சிகள் முதல் சர்வதேச நாடுகள் வரை கைகோர்க்கின்றனர்.

    (சிங்கள) இனவாதத்துக்கு எதிரான (தமிழ்) இனவாதிகளின் யுத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதாவது புலிகள் நடத்திய போராட்டம் தோற்கடிப்பட்டுள்ளது. புலிகளின் வழிமுறை, பேரினவாதிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்காது என்பது தெளிவாக்கியுள்ளது. புலிகளால் தொடர்ந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பது, கடந்தகால வரலாறாக எம்முன் அம்மணமாகிக் கிடக்கின்றது. இப்படியிருக்க தொடர்ந்து மக்களை ஏய்த்துப் பிழைக்க, தொடர்ந்து தாம்தான் போராட முடியும் என்பதைச் சொல்ல, நடந்ததை திரிப்பதும் புரட்டுவதும் தொடருகின்றது.

    புலி போராட்டம் தோற்றது என்ற உண்மை ஒருபுறம் இருக்க, எம்மால்தான் அதை வெல்ல முடியும் என்று கூறுபவன் உன்னை முட்டாளாக்கி விடுகின்றான். இவர்கள் வேறு யாருமல்ல, மக்களை ஏய்த்துத் தின்னும் பொறுக்கிகள் கூட்டம். இப்படி ஒருபுறம் இருக்க, பேரினவாத போர்க்குற்றம் தொடர்பாக புலிகள் குலைப்பது தான், அதன் மீதான பரந்துபட்ட சமூக செயல்பாட்டைத் தடுக்கின்றது. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட புலிகள், அதை நியாயப்படுத்தியவர்கள், எப்படி உண்மைக்காக நேர்மையாக குரல்கொடுப்பார்கள்? அவர்கள் தம்மை பாதுகாக்க, இதைத் திரித்து புரட்டி எதுவுமற்றதாக்குகின்றனர். இதில் உள்ள உண்மை இது தான். தம்மை பாதுகாத்துக் கொள்ள மூடிமறைப்பதன் மூலம், அரசின் குற்றத்தை எதுமற்றதாக்கிவிடுகின்றனர்.

    இப்படி இருதரப்பும், அதாவது அரசு – புலி தங்கள் பக்கத்தை மூடிமறைப்பதுதான், இன்றைய முரண்பட்ட தகவல்களின் உள்ளடக்கமாகும். இந்த வகையில்
    1. மக்களுக்கு எதிராக தாங்கள் நடத்தியவற்றை மூடிமறைப்பதன் மூலம், புலிகள் “தேசியத்தையும்” அரசு “ஜனநாயகத்தை” பரஸ்பரம் பூசி மெழுக விரும்புகின்றனர்.

    2. போர்க்குற்றத்தை, குறிப்பாக மே 16 சரணடைந்த பின்னான நிகழ்ச்சிகளை மூடிமறைத்து அதை முற்றாகச் சிதைக்க முனைகின்றனர்.

    இந்த எல்லைக்குள் நிகழ்ச்சிகளும், அரசியல் முரண்பாடுகளும் கூர்மையாகி வருகின்றது. சர்வதேச ரீதியாக போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக் கோரிக்கையோ, அரசு மற்றும் புலிக்கு எதிராகவே கோரப்படுகின்றது. ஒரு விசாரணை நடந்தால், நிச்சயமாக இரண்டுக்கும் எதிராகத்தான் அது நடக்கும். இது பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும்.

    இதைத் தடுப்பதில் தான் அரசும், மறுபக்கத்தில் புலிகளும் தீவிரமாக இயங்குகின்றனர். தங்கள் தங்களவில், இதை விசாரணை செய்வதாக காட்டிக்கொண்டு இதை மழுங்கடிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அதைக் குழிபறிக்கின்றனர். மக்களையும், உலகத்தையும் ஏய்க்க முனைகின்றனர். குற்றங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும், பின்னிப் பிணைந்தும் காணப்படுகின்றது. இதனால் இருதரப்பும் அதை விரும்பவில்லை. அதை குழிபறிக்கும் செய்திகளையும், கட்டுக்கதைகளையும் வெளியிடுகின்றது.

    சம்பவங்களை திரிப்பதன் மூலம், புலிகள் அரசுக்கு உதவுகின்றனர். புலிகள் மே 16 தாங்கள் ஆயுதத்தை கீழே வைத்து சரணடைந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இது ஒரு உண்மை. இதையே இன்று மறுக்கின்றனர். அந்த சரணடைவுடன் சம்பந்தப்பட்ட சர்வதேச தொடர்பாளர்களின் அறிக்கைகள் எல்லாம் இதை தெளிவாக உறுதி செய்கின்றது. இதை இன்று திரிப்பதில் முதன்மைப் பாத்திரத்தை புலிகள் வகிக்கின்றனர். அரசும் இதையே வழிமொழிவதுதான் இதில் வேடிக்கையான ஒற்றுமையான விடையமாக உள்ளது. மகிந்த மே 16 அன்று ஜி11 மாநாட்டில் அறிவித்தததை மறுப்பதுடன், மே 17 காலை 7.30 மணிக்கு பேரினவாதியாக மண்ணை முத்தமிட்டதை இன்று மூடிமறைக்க முனைகின்றனர். அரசு 18 ம் திகிதி என்றும், சரத்பொன்சேகா 19 ம் திகதி என்றும் அனைத்தையும் திரிக்கின்றனர். மே 17 மாலைதான் சரத்பொன்சேகா நாடு திரும்பினார். இறுதியுத்தத்தின் போது சரத்பொன்சேகாவை, நாட்டில் இருந்து அகற்றியது ஏன்? இதை விரிவாக தனியாக பார்க்க உள்ளோம்.

    இங்கு அரசும் – புலியும் இதில் ஒன்றுபட்டு நிற்பதும், இவர்களின் இனவாத வரலாற்றில் முதன்முதலாக நிகழ்கின்றது. தங்கள் தரப்பை மூடிமறைக்க இந்த ஓற்றுமை இதில் ஏற்படுகின்றது. இதன் பின்னணியில் மூடிமறைக்கப்பட்ட குறிப்பான காரணமோ, இரண்டு வேறுபட்டது.

    1.புலி தான் சரணடைந்ததை மூடிமறைக்கவும், தங்கள் துரோகத்தையும் காட்டிக் கொடுப்பபையும் ஏதுமற்றதாக காட்டி தொடரும் எதிர்ப்புரட்சி அரசியலை தக்க வைக்கவும், மே 16 க்குப் பதில் மே 18 ஆகத் திரிக்கின்றனர்.

    2. அரசு மே 16 பின் சரணடைந்த புலி உறுப்பினர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கொன்று குவித்ததை, மூடிமறைக்க இந்த போர்க்குற்ற மீறலை புலிகளின் துணையுடன் மறுக்கின்றனர், மறைக்கின்றனர்.

    இப்படித்தான் இங்கு இதில் புலி-அரசு ஒற்றுமை ஏற்படுகின்றது. போர்க்குற்றங்கள் பற்றிக் கிடைக்கும் ஆவணங்கள் மூடி மறைக்கப்படுகின்றது அல்லது திரிக்கப்படுகின்றது. இந்த வகையில் சனல் 4 தன் இறுதியான ஆவணத்தில், சில உண்மைகளை புதைத்து திரித்து வெளியிட்டுள்ளது. சனல் 4 பேட்டி முழுமையானதல்ல. இதை ஓட்டிய கேள்விகள் பலவாக இருந்தும், சிலதை தமக்கு ஏற்ப திரித்து வெளியிட்டுள்ளனர்.

    சனல் 4 புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் நெருங்கிய தொடர்புடையது. புலியின் சரணடைவு பற்றி கே.பி பேட்டி (17ம் திகதி காலை) முதல் கே.பி யை நேரடியாக பேட்டி கண்ட ஒரு தொலைக்காட்சி. புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்ற வீடியோ காட்சியைக் கூட, அதன் மூலம்தான் வெளியிடப்பட்டது. புலிகளின் போர்க்குற்றம் தொடர்பாக எதையும் வெளியிட்டதாக அறிய முடியவில்லை. இப்படி இலங்கை விடையத்தில் தொடர்புடைய இந்த தொலைக்காட்சி, புலியுடன் தொடர்புடையது.

    இந்த நிலையில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை, தன் குரல் பிரதி மூலம் சிலரின் தேவைக்கு அமையவே வெளியிட்டது. இதன் பின்னணியில் மே 16 இல் நடந்த புலியின் சரணடைவையும், அதில் அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்ற குறிப்பான விடையத்தை பொதுவானதாக்கியது. பொதுவாக கொன்றுகுவித்ததாக கூறுவதுடன், சரணடைந்தவர்களைக் கொன்றதை பற்றி பொது உண்மை சார்ந்த விடையத்தை இல்லாதாக்கினர். இதில் பிரபாகரன் கடைசி மகன் சரணடைந்ததை பற்றிய குறிப்பு மூலம், பிரபாகரனின் இருப்பிடத்தைக் கேட்டு சித்திரவதை செய்ததாக கூறியதன் மூலம், இந்த போர்க்குற்ற ஆவணம் மூலம் பிரபாகரன் சரணடையவில்லை என்பதையே குறிப்பாக புலிகள் சொல்ல வந்த செய்தியாகும்.

    இங்கு பிரபாகரனின் இளைய மகன், தன்னம் தனியாக தன் மெய்ப்பாதுகாவலருடன் தனித்து சரணடைந்தது என்பது முழுப் பொய். அவருடன், அவரின் முழுக் குடும்பமுமே சரணடைந்தது. புலியில் எஞ்சியிருந்த தளபதிகள் முதல் அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் சரணடைந்தது. அவர்கள் தப்பிச் செல்லும் உறுதிமொழியுடன், இந்தச் சரணடைவு ஏற்பாடு மூன்றாம் தரப்பால் தங்கள் கூட்டு சதி மூலம் நெறிப்படுத்தப்பட்டு இருந்தது. இது எந்தப் பிசகுமின்றி, மே 16 அன்று நடந்தது. இதற்கு முன்னமோ, பின்னமோ இது நடக்கவில்லை. இதை திரிக்கவே, இந்த இராணுவ அதிகாரியின் பேட்டியை சனல் 4, தன் குரலால் மொழி பெயர்த்தது.

    தமிழ்மக்களுக்கு நடந்த அவலம் முதல் புலித் தலைமை கொல்லப்பட்ட விதம் பற்றிய தகவல்கள், புலி மாபியாக்களால் தான் இன்று பகிரங்க விசாரணைக்குள்ளாகவில்லை. தகவல்களை பெறக்கூடிய அவர்களின் கடந்தகால கட்டமைப்பும், அதன் செல்வாக்கும், அதை மூடிமறைப்பதற்கே தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது. அரசு தீவிரமாக யுத்தக்குற்ற ஆவணங்களை அழிப்பது போல், புலிகளும் அதை அழித்தபடி திரித்தும் புனைந்தும் கதைகளைக் கட்டிவிடுகின்றனர். தாங்கள் திரித்து புரட்டி வழிநடத்தி தோற்றுப்போன தங்கள் போராட்டத்தைப் போல், யுத்தக் குற்றங்கள் பற்றி மாபியாப் புலிகள் அனைத்தையும் சிதைக்கின்றனர்.

    இன்று இதுதான் பேரினவாதத்தின் போர்க்குற்றத்தை பாதுகாக்கின்றது. பாரிய போர்க்குற்றத்தில் ஈடுபட்ட புலிகள், மற்றொரு தரப்பின் போர்க்குற்றத்தை விசாரணை செய் என்று தார்மீக ரீதியில் கூட கோர முடியாது, கோரவும் மாட்டார்கள். ஒரு விசாரணை நடக்கும் பட்சத்தில், அரச – புலி இரண்டும் மேலானதாக அது அமையும். இதைத்தான் சர்வதேச சமூகம் கோருகின்றது. இதைப் புலிகளும், அரசும் கூட்டாக மறுக்கின்றது. இரண்டு தரப்பும், தங்கள் மேல் போர்க்குற்ற விசாரணை செய்வதை விரும்பவில்லை.

    மகிந்த குடும்பம் இந்த போர்க்குற்றத்தை செய்ததால், அவர் குடும்பம் அதிகாரத்தில் இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டார்கள். புலிகள் போர்க் குற்றம் செய்தால், அவர்கள் தங்கள் புலி அரசியலை தக்கவைக்கும் வரை, அவர்களும் இதை அனுமதிக்கமாட்டார்கள்.

    புலிக்கும் – அரசுக்கும் வெளியில் தமிழ்மக்கள் சுயாதீனமாக போராடினால் மட்டும் தான், போர்க் குற்றவிசாரணை என்பது தார்மீக ரீதியில் கூட சாத்தியமாகும். புலி தான் இதைக்கோரும் என்றால், அவர்களை நம்பித்தான் இது சாத்தியம் என்றால், தோற்றுப்போன அவர்களின் போராட்டம் போல் இதுவும் தோற்றுப்போகும். இதுமட்டும் அனைத்தும் தளுவிய ஒரு உண்மையாகும்.

    பி.இரயாகரன்- 23.05.2010

    Reply