யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்பட விழா

indian-film.jpgயாழ். மக்களின் மனநிலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அங்கு ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவொன்றை விரைவில் நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துசிங்கவின் பணிப்பின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை யாழ். பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது. இத்திரைப்பட விழாவில் தென் இந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் முன்னர் 16 திரையரங்குகள் இருந்த போதும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இதனால், பொது மக்கள் பொழுது போக்குக்காக திரையரங்குகளில் ஒன்றுகூடி படம் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    அப்ப என்ன!! இந்திரன் அண்ணாச்சியும் ரம்பா அன்ரியும் வருவினமே; தமிழ் மக்கள் பணத்தில் லவ்வாகி அது தடம்புரண்ட வினையாகி இப்போ மானாட மயிலாடவில் வந்து நிற்க்குது; இதுவேன் இப்போ? நியாயமான கேள்விதான்; வேதனைபடும் மக்கள் தம்மை பயணம் வைத்து நடத்திய போராட்டம் (வேள்வி) எம்மடுதூரம் வளர்ந்து ஈழ இந்திய இனைப்பை வலுப்படுத்தி இருக்கு என தெரிந்துகொள்ள வேண்டாமா??

    Reply