யுத்தத்தின் போது இறந்தவர்களுக்காக தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு சகல உரிமையும் உள்ளது.
அதற்கு அரசாங்கம் தடைபோடாது அரசியல் நோக்கங்களுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ அணிதிரண்டு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,
யுத்தத்தினால் இறந்தவர்களுக்காக ஒரு வார காலம் சோக தினமாக அனுஷ்டிக்குமாறு சம்பந்தன் கோரியிருந்தார். இவர் ஆரம்ப முதலே பிரபாகரனுக்காக குரல்கொடுத்து வந்தார். இந்த நிலையில் இறந்தவர்களுக்காக அணி திரண்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்துவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் காணப்படும்.