நீதி மன்றத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக நேற்று (May 21 2010) விசாரணைகளுக் குட்படுத்தப்பட்ட யாழ். மேயர் திருமதி ப. யோகேஸ்வரி மற்றும் அவரது செயலாளர் திரு கு.பற்கணராசா இருவரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதான வழக்குகள் தனித்தனியே யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதவானின் சமாதான அறையில் மேயருக்கெதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.
மேயரின் செயலாளர் மீதான வழக்கு திறந்த நீதி மன்றத்தில் நடைபெற்றது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்து நடத்தி குற்றவாளியாகக் காணப்பட்டால் 7 வருடங்களுக்கு சிவில் உரிமையை இழக்க வேண்டி வரும் என தெரிவித்த நீதவான் மன்னிப்புக் கேட்டு வழக்கிலிருந்து விடுபடப்போகிறிர்களா அல்லது வழக்கினைத் தொடர்ந்து நடத்தப் போகிறீர்களா என கேட்ட போது வழக்கிலிருந்து விடுபடவிரும்பவதாகத் தெரிவித்த மேயர் நீதிமன்றத்திடம் பகிரங்க மன்னிப்பைக் கோரினார். இதனையடுத்து அவரை வழக்கிலிருந்து விடுவிடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
மேயருக்குத் தெரிவித்த அதே கருத்தை மேயரின் செயலாளருக்கும் நீதவான் தெரிவித்தார். அவரும் மன்னிப்புக் கோரியதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு வழக்கிலிருந்து அவரும் விடுவிக்கப்படுவதாக நிதவான் தெரிவித்தார்.
EPDP
யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஐh அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி! பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு யாழ் நீதவான் ஊடகங்களுக்கு அறிவுரை!
யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஐh அவர்களை நீதிமன்றத்தில் ஆஐராகும் படியும் அவரது கணவர் திரு பற்குணராஐh அவர்களை கைது செய்யுமாறு நீதவான் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் சில திட்டமிட்ட வகையில் அவதூறுகளை பரப்பியிருந்தன.
யாழ் மாநகர பிரதி முதல்வர் றீகன் அவர்களின் கைது குறித்து வெளியான விளம்பரங்கள் விடயமாக நீதவான் அவர்கள் மாநகர முதல்வர் அவர்களை கௌரவமான முறையில் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த விளம்பரம் குறித்த விடயங்களை தெளிவு படுத்தும் நோக்கில் யாழ் மாநகர முதல்வர் அவர்கள் தனது கணவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றிருந்தார் என்பதே உண்மையாகும். இந்நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த யாழ் மாநகர முதல்வர் அவர்களை பகிரங்கமாக விசாரணை நடத்துவதை தவிர்த்து மக்கள் பிரதிநிதி என்ற சிறப்புரிமையின் அடிப்படையில் நீதவான் அவர்கள் தனது சமாதான அறையில் பிரத்தியேகமாக வைத்து ஊடகங்களில் வெளியான விளம்பரங்கள் குறித்த உண்மைகளை கேட்டறிந்து கொண்டார். யாழ் முதல்வர் சார்பாக சட்டத்தரணி சாந்தா அபிமன்சிங்கம் அவர்கள் நீதிமன்றில் ஆஐராகியிருந்தார். இதேவேளை அங்கு பிரசன்னமாகியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ந்த சட்டத்தரணி றெமீடியஸ் அவர்கள் அவசியமற்ற முறையில் பிரச்சினைகளைத் தூண்டக்கூடியவாறு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஊடகங்களில் வெளியான விளம்பரங்கள் குறித்து நீதவான் அவர்கள் முன்பாக விளக்கம
அளித்த முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஐh அவர்கள் நீதிமன்றை அவமதிக்கும் நோக்கில் குறித்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை என்றும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டு செயற்படுவதை தாம் கடைப்பிடித்து வருவதாகவும்இ தொடர்ந்தும் நீதித்துறைக்கு மரியாதை செலுத்தியே தமது சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதை அடுத்து யாழ் மாநகரசபை நிர்வாகத்தின் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் கௌரவ நீதவான் திரு ஆனந்தராஐh அவர்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்களின் செயற்பாடு குறித்த அதிருப்தியை தெரிவித்திருந்ததோடு அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.
மக்களால் தெரிவு செய்பட்ட ஒரு பெண்மணி என்றும் பாராமல் அவரது சேவைகளை பாராட்டுவதற்கு மாறாக அவர் மீதான அவதூறுகளை பரப்ப வேண்டாம் என்றும்இ இது நீதித்துறைக்கும் மாநகரசபைக்கும் இடையிலான பிரச்சினை என்பது போன்ற தோற்றப்பாட்டை ஊடகங்கள் உருவாக்க முனைவது குற்றம் என்றும் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது கொச்சைத்தமிழில் செய்தி வெளியிடுவதை தவிர்த்து நேர்த்தியாக எழுதவேண்டும் என்ற அறிவுரையினையும் நீதவான் அவர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.
மேலும் இது குறித்து எமது செய்தியாளர் தெரிவிக்கையில் யாழ் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஐh அவர்களை கைது செய்வதன் மூலம் யாழ் மாநகரசபையின் சேவைகளை முடக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும்இ அதற்கான பொறுப்பை அடுத்தடுத்து நடந்த தேர்தல்களின் போது தோல்வியை தழுவிக்கொண்ட கூட்டமைப்பு சட்டத்தரணி றொமீடியஸ் அவர்கள் முனைப்புடன் செயற்பட்டுவருவதாகவும் யாழ் மக்கள் அவர் மீது விசனம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை நீதித்துறையை தவறாக வழிநடத்தி மாநகரசபையின் முதல் மரியாதைக்குரிய பெண்மணியை அவமதிக்க றொமீடியஸ் நினைப்பது வெறும் கனவு என்றும் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத யாழ் சட்டத்தரணி ஒருவர் இன்று நீதிமன்ற முன்நிலையில் வைத்து எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.
மாநகர முதல்வரது கணவர் திரு பற்குணராஐh அவர்கள் உலக நாகரீகங்களை கற்றுக்கொண்ட ஒரு கௌரவான அமைதியான மனிதர் என்றும் பிரதி முதல்வர் றீகன் அவர்களின் விடுதலை குறித்து நடந்த யாழ் மாநகரசபையின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் போது ஊழியர்களை திரு பற்குணராஐh அவர்கள் பலாத்காரப்படுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுத்தியிருந்தார் என்றும் ஊடகங்கள் சில விசமத்தனமாக செய்தி வெளியிட்டிருந்தமை குறித்து நீதவான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் அந்த சட்டத்தரணி மேலும் தெரிவித்திருந்தார்.
Anonymous
இது ஈமெயில் மூலம் ஈபிடிபியினர் அனுப்பிய செய்தி. உண்மை எது?
chandran.raja
உண்மை எது?. அது அவரவர் சிந்தைக்கு உட்படவை. உங்களுக்கு எது அளவாகயிருக்கிறது?. அதையே! போட்டுக்கொள்ளுங்கள். நீண்டகாலம் தமிழ்மக்களுக்கு ஊச்சூ காட்டி மாயைக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்க முடியுமா?.
BC
ச்சே ! என்ன மாதிரி ஒரு திரில் story எழுதலாம் என்று பிளான் போட்டால் சப்பென்று போய்விட்டது.
T Constantine
By replying to the allegation EPDP has set an example.
In return THESAM NET must only publish the replies / comments where writer has given their real identity.
I met the mayor on couple of occasions and in my opinion she has the ability and commitment to serve the people.
Anonymous
ஒன்று ஈபிடிபி பொய் சொல்கிறது. அல்லது தேசம் நெற் பொய் சொல்கிறது. மன்னிப்புக் கேட்டதாக வந்துள்ள செய்தியைப் பார்த்தால் முதல்வர் தவறு செய்திருக்கிறார். செய்யாத தவறுக்கு யாரும் மன்னிப்பு கோருவதில்லை. நகர முதல்வருக்கே இந்த நிலையென்றால்…..?
மறுதலையாக ஈபிடிபி சொல்வது உண்மை என்றால் பொய் செய்தி வெளியிட்டதாக தேசம்நெற் மீது நகரமுதல்வர் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்வர் முன்வருவாரா?
“இதேவேளை நீதித்துறையை தவறாக வழிநடத்தி மாநகரசபையின் முதல் மரியாதைக்குரிய பெண்மணியை அவமதிக்க றொமீடியஸ் நினைப்பது வெறும் கனவு என்றும் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத யாழ் சட்டத்தரணி ஒருவர் இன்று நீதிமன்ற முன்நிலையில் வைத்து எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.
மாநகர முதல்வரது கணவர் திரு பற்குணராஐh அவர்கள் உலக நாகரீகங்களை கற்றுக்கொண்ட ஒரு கௌரவான அமைதியான மனிதர் என்றும் பிரதி முதல்வர் றீகன் அவர்களின் விடுதலை குறித்து நடந்த யாழ் மாநகரசபையின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் போது ஊழியர்களை திரு பற்குணராஐh அவர்கள் பலாத்காரப்படுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுத்தியிருந்தார் என்றும் ஊடகங்கள் சில விசமத்தனமாக செய்தி வெளியிட்டிருந்தமை குறித்து நீதவான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் அந்த சட்டத்தரணி மேலும் தெரிவித்திருந்தார்”.
இந்த வாக்கு மூலம் பரிதாபமாக இருக்கிறது. தங்களுக்கு தாங்களே நற்சான்றிதழ் வழங்க வேண்டியிருக்கிறது.
pandithar
ஜெயபாலன் அவர்களே தயவு செய்து யாழ் மாநகர முதல்வர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு செவ்வி எடுங்கள். யாழ் சுண்க்குளி ஆசிரியையான அவர் மிகவும் நாகரீகமானவரும்> மனிதநேயம் கொண்டவரும். அரசியல் இயக்கங்களோடு பரீட்சயம் இல்லதாதவர். அவருக்கு என்ன நடந்தது என்று அவரிடமே கேளுங்கள்! ஊடகங்கள் அவர் மீது சேறு பூசுவது நல்லதல்ல….
NANTHA
அவர்கள் விடுதலை செய்யப்பட்டமை அவர்களின் மீது சுமத்தப்பட்ட “குற்றச்சாட்டுக்கள்” என்பன போலியானவை என்பதனை கூறுகிறது.
ஈபீடீபீ கட்சிக்காரரை “வழி”க்கு கொண்டு வர இப்போது எடுக்கப்படும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. யாழ்ப்பணத்துப் பிரக்கிராசிகள் “நீதி”க்காகக் குரல் கொடுத்த வரலாறுகள் இல்லை.
London Boy
நீதிபதி வீட்டுக்கு முன்னால் ஆயுதக் குழுவைச் சேர்ந்த றீகன் துப்பாக்கியுடன் நின்றார் என்ற முகவரியில்லாத கடித்திற்கே இலங்கையின் நீதித்துறை சட்ட நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட ஆயுதக் குழுவைச் சேர்ந்த துணை மேயரை நீதிமன்றத்தில் சரணடையும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ஆயுதக் குழு உறுப்பினருக்கு ஆதரவாக பத்திரிகைகளில் விளம்பரம் போட்ட அந்த ஆயுதக் குழுவைச் சார்ந்த மேயரையே நீதிமன்றம் சட்டத்தின் முன்னிறுத்தி எச்சரித்து விடுகின்றது.
அப்ப இலங்கையில யாழ்ப்பாணத்தில சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியா நடக்குதோ? ஈபிடிபியும் சட்டத்தை மதித்து ஜனநாயக வழிக்கு வந்திட்டுதோ? என்னதான் நடக்குது. ஈபிடிபி ஆயுதக் குழு சட்டத்தை மதிப்பதில்லை. கடத்துது கப்பம் வாங்குது என்னிறம். பிறகு நீதிமன்றம் ஈபிடிபி யை எச்சரித்தது என்றம். அதிகாரத்தில் ஆயுதத்தையும் வைத்திருப்பவர்களை நீதிமன்றம் எப்படி எச்சரிக்க முடியும்?
நீங்கள் ஆயிரம் காரணம் வைச்சிருப்பியல் எடுத்துவிடுங்கோ கேட்பம்.
Anonymous
அவர்கள் விடுதலை செய்யப்பட்டமை அவர்களின் மீது சுமத்தப்பட்ட “குற்றச்சாட்டுக்கள்” என்பன போலியானவை என்பதனை கூறுகிறது”
மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்யப்படலாம்தானே?
“யாழ் சுண்க்குளி ஆசிரியையான அவர் அரசியல் இயக்கங்களோடு பரீட்சயம்” இல்லதாதவர் எப்படி நடந்து முடிந்த தேர்தல்களில் எமது தலைவர் (டக்ளஸ்) தெய்வம் அவர் வழிகாட்டலில் முன்னேற அவரின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என டான் ரிவியில் பிரச்சாரம் செய்தார்.
“யாழ் மாநகர முதல்வர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு செவ்வி எடுங்கள்”
அதை விட தீர்பபு வழங்கிய நீதிபதியை செவ்வி காண்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
பல்லி
//“யாழ் மாநகர முதல்வர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு செவ்வி எடுங்கள்”/
அதை விட தீர்பபு வழங்கிய நீதிபதியை செவ்வி காண்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.//
இதை தேச நிர்வாகம் கவனத்தில் எடுப்பது நல்லது;
NANTHA
“ஏழு வருடங்களுக்கு” என்பது ஜே ஆர் காலத்து அக்கிரமம். அதனை காட்டி ஒரு நீதிபதி எச்சரித்தது என்ற தகவல் இன்னமும் தமிழர்கள் உலக விவகாரங்களை விட்டு விட்டு “சட்டம்” புரியாதவர்களை பயமுறுத்த முயல்வதையே காட்டுகிறது.
இந்த யாழ்ப்பாணத்து நீதிபதிகள் “புலிகள் ஆயுதங்கள்” வைத்திருக்கலாம்” என்ற சமாதான உடன்படிக்கைச் சரத்தை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. ஏனென்றால் இலங்கைச் சட்டத்தில் ஆயுதம் வைத்திருக்க யாருக்கும் உரிமையில்லை.
இந்த “மெத்த” படித்த யாழ்ப்பாணத்துப் பிரக்கிராசிகள் அந்த சமாதான உடன்படிக்கைக்கு எதிராக “வழக்கு” வைக்காதநோக்கம் “அப்போது” அவர்களும் புலிகள் என்பதையே காட்டிநிற்கிறது.
மகேஸ்வரி வேலாயுதம் என்ற சட்டத்தரணி கொல்லப்பட்ட நஷ்டம் இப்போது தெரிகிறது.
pandithar
சரி!… நீங்களே சொல்லி விட்டீர்கள். தீர்ப்பு வழங்கிய நீதிபதியிடம் ஒரு செவ்வி எடுங்கள். ஆனால் நீதிபதி எல்லா விடயங்களையும் சொல்வது நீதித்துறைக்கு முரனாணது.
அவ்வாறு சொன்னால் அது வரவேற்கத்தக்கது. நண்பர் ஜெயபாலன் அவர்களே செய்வீர்களா?….
Ajith
The item posted in the name of EPDP must have been an inside job by someone. It is neither a comment from any individual nor official release from EPDP. The case against Jaffna major and her husband were published in all newspapers in Jaffna and in Colombo papers. We all should aware that this is the trial is connected to the accusation of the murder of Chavakacheri student Kapilnath by EPDP organsier Charles. The major and her husband, Regan, Charles all of them are part and partial of EPDP which is a terrorist armed group involved with a number of abductions, ransom, corruption and murders. I suspect that the way this was written and published in this web is an inside job. this can satify some of the commentators who always defend the EPDP and Rajapakse terrorism against tamils but the truth never going to die.