வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் நேற்று (24) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை விளக்குகள் சீர்செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.
வெள்ளம் காரணமாக கரையோர வீதியிலும் புத்தளம் வீதியிலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதோடு நூற்றுக்கும் அதிகமான ரயில் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டன. ஆனால் நேற்று முதல் சகல ரயில் சேவைகளும் சுமுகமாக இடம்பெறுவதாக விஜய சமரசிங்க தெரிவித்தார்.