இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெறுவது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பெரும் மறுமலர்ச்சியென ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
“யாழ்ப்பாண சீமை- தமிழ் முஸ்லிம் உறவை மேலும் பலப்படுத்தும் முஸ்லிம்களும் தமிழர்களும், அந்நியோன்னிய உறவு பூண்டு நெருங்கிய தோழமை பூண்டு வர்த்தக கல்வித் துறையில் மட்டுமன்றி இன்னும் பல துறைகளில் இந் நாட்டில் ஒரு மகோன்னத இடத்தை பிடித்திருந்தனர். துரதிஷ்டவசமாக யாழ். முஸ்லிம்களை உடுத்த துணியுடன் இரவோடு இரவாக சொந்த மண்ணிலிருந்து புலி பயங்கரவாதிகள் துரத்தியடித்தனர். நாட்டின் பல பாகங்களிலும் சிதறுண்டு, அல்லலுற்று அகதி முத்திரையை தம் நெற்றியில் குத்திக்கொண்டவாறு வாழும் நிர்க்கதிக்கு ஆளாக்கப்பட்டனர்.
‘ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிப் பயங்கரவாதத்தை அழித்தொழித்து முழு நாட்டிலும் சமாதானத்தை ஏற்படுத்திய பிறகு யாழ் முஸ்லிம்களின் வாழ்வில் தீனுல் இஸ்லாத்தின் சுடர் இப்போது மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அதான் ஒலியின் இனிய நாதத்தை செவியுறுவதற்கும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபடுவதற்கும் யாழ் முஸ்லிம்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.