யாழ்ப் பாணம்-பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் 20 வருடங்களின் பின்பு நேற்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு முதலாவது ‘குத்பா’ பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
யாழ்ப்பாணம் முஸ்லிம் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 3 மாதகாலமாக புனரமைக்கப்பட்டு வந்த இப்பள்ளிவாயல் நேற்று இடம்பெற்ற குத்பா பேருரையை அஷ்ஷெய்க் அப்துல் ஹாலித் நிகழ்த்தினார். நாட்டின் நாலாபாகங்களிலிருந்து வருகைதந்த சுமார் ஐயாயிரம் முஸ்லிம்கள் இங்கு குத்பாப் பேருரையிலும் ஜும்ஆத் தொழுகையிலும் கலந்துகொண்டதுடன் ‘கந்தூரி’யிலும் பங்கு கொண்டனர்.
பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்களும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபட்டதுடன் குத்பாப் பேருரையையும் செவிமடுத்தனர். பெண்களுக்கென பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
thurai
முஸ்லிம், தமிழ் ,சிங்கள இனத்தவர்கள் யாழ்ப்பாண்த்தில் ஒற்றுமையாகயும், சமாதானமாகவும் வாழ்ந்து காட்ட வேண்டுமென எதிர்பார்ப்போம்.
துரை
chandran.raja
இருபது வருடங்களுக்கு முன்பு வடமாகணத்தில்லிருந்து சிதறி ஓடவிரட்ட பட்ட மூஸ்லீம் மக்கள் திரும்ப தமது இருப்பிடத்திற்கு தேடிவருவதும் அவர்களின் காணி வளவுகள் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் திரும்ப இயங்குநிலைக்கு வருவது அதுவும் ஒருவருட காலத்தில் சாத்தியப்படுவதென்றால் இதன் கூடிய பெருமையை டக்கிளஸ் தேவானந்தாவையே சென்றடையும்.
மூஸ்லீம்மக்களின் உடமையை சூறையாடியவர்கள் அவர்களை விரட்டி விட்டவர்களை வரலாறு தண்டித்தாலும் மிச்சசொச்சங்கள் உள்ளுரிலும் வெளியூரிலும் இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றன. இதில் மூஸ்லீம் மக்கள் கவனம் செலுத்தி மிகுதி சிதறப்பட்டிருக்கும் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டுமென்று ஆவலாகயிருக்கிறோம்
இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய டக்கிளஸ் தேவானந்தா அவர்கள் பராட்டுக்குரியவர். மூஸ்லீம் சமூகம் இல்லாமல் தமிழ்சமூகம் இல்லை என்ற நிலை வரட்டும். கடந்தகாலங்கள் என்றும் “கெட்டகனவாக” மறவாமல் நிலைத்து நிற்கவேண்டியதும் அவசியமாகிறது.
Rohan
கண்ணீருடன் வாசித்து முடித்தேன்
http://www.groundviews.org/2010/05/26/vanni-in-the-year-after-war-tears-of-despair-and-fear/