இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இனிமேல் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் 26 May 2010 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
”பொலிஸ் திணைக்களத்தை மக்களுக்குரியதாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அத்தோடு பொலிஸார் தமிழ் மொழி கற்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. கடந்த காலங்களில் மக்களிடமிருந்து எமக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால் மக்களின் முறைப்பாடுகளை பெறுவதற்கு விசேட நாட்களை ஒதுக்கியுள்ளோம் அதனால், மக்களிடமிருந்து எமக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு ‘டிப்ளோமா’ போன்ற பாடநெறிகளை வழங்கவதற்காக பொலிஸ் கல்லூரிகளை ஆரம்பிக்கவுள்ளோம். தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகளை பெற முடியாத நிலையைப் போக்குவதற்கான வகையில், ஐந்து மாத தமிழ்மொழிப் பயிற்சியை வழங்குகின்றோம். இவ்வாறான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பது வரலாற்றில் முதற் தடவையாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
rohan
‘கடந்த காலங்களில் மக்களிடமிருந்து எமக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை’ என்று மகிந்த பாலசூரிய கண்ணீர் விட்டிருக்கிறார்!. இதுவரை இல்லாதிருந்த நிலைமையை மாற்றும் பொருட்டு மக்கள் முறைப்பாடுகளைப் பெற விசேடநாட்களை அவர் ஒதுக்கினார். இப்படி ஒரு ஷ்பெஷல் ஐடியா யாருக்கும் 45 ஆண்டுகளாகத் தோன்றவில்லை! ஷ்பெஷல் ஐடியா வேலை செய்வதால், ‘மக்களிடமிருந்து நல்ல பதில் கிடைத்துள்ளது’ என்று மகிந்த பாலசூரிய புல்லரித்திருக்கிறார்.
மகிந்த பாலசூரிய, மக்களின் ஒத்துழைப்பு குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கியவுடன் எப்படிப் பீரிட்டுப் பெருகுகிறது என்றும் சொன்னால் நல்லது.
“1956 ஆம் ஆண்டு அரசகரும மொழிச்சட்டத்தின்படி அரச அலுவலகங்கள் தமிழிலும், சிங்களத்திலும் தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். அதனை “திரிபுபடுத்தி” அரசியல் செய்த செல்வனாயகம் கோஷ்டி இன்றைய அழிவின் மூல கர்த்தாக்கள்.”என்ற தம் கண்டுபிடிப்பை நந்தா மகிந்த பாலசூரியவுக்கும் தெரியப்படுத்துவது நல்லது. மகிந்த பாலசூரிய பொலிஸ் வேலைக்கு அனுப்பிய விண்ணப்பத்தை நந்தா வாசித்திருக்கிறார் என்பது தேசம்நெற் வாசகர்கள் அறிந்ததே.
NANTHA
தமிழுக்கு அந்தஸ்த்து கிடைத்தாலே பொறுக்க முடியாமல் இருப்பவர்கள்தான் “தமிழ் உரிமை” என்று அலை மோதுகிறார்கள்.
தமிழுக்கு வசதிகள் வழங்குவது, தமிழருக்கு உதவிகள் செய்வது என்பன “தமிழ்” என்று வயிறு வளர்க்கும் கோஷ்டிகளுக்கு வில்லங்கமான விஷயம்தான்!
ஆயினும் பொலிஸ்மா அதிபருக்கு ஒரு சபாஷ்!