வவுனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1800 பேர் நாளை (30-05-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 480 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேரே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். கண்டாவளை பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி, பிரபந்தனாறு, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே மிள்குடியமர்த்தப்படவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22ஆயிரம் பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படாது எஞ்சியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.