யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிலங்களை வழங்க திட்டம்!

Jaffna_Mosqueயாழ்ப் பாணத்தில் மீள்குடியமர்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களில் காணி இல்லாதவர்களுக்கு பள்ளிவாசல் காணிகளை வழங்கி குடியயேற்றம் செய்யப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் மௌலவி ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின் யாழ்ப்பாணத்தில் இது வரை 59 முஸ்லிம் குடும்பங்கள் யாழ.செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டு மீள்குடியமர்ந்துள்ளதாகவும், இது தவிர மேலும் 100 குடும்பங்களும் குடியேறியுள்ளதாகவும், இதில் சொந்தக் காணியுள்ளவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

அத்துடன் காணிகளற்றவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு முதல்  யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற குடும்பங்கள் என்கிற முன்னுரிமை அடிப்படையில் சுமார் 20 குடும்பங்களுக்கு யாழ். சின்னப்பள்ளி வாசலின் பின்பறமாக மையவாடிப் பகுதியிலும், 50 குடும்பங்களுக்கு வேலணை சாட்டி பள்ளிவாசல் பகுதியிலும் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், காணிகள் வழங்குவது தொடர்பாக அரசாங்க அதிபரின் அனுமதி கிடைத்ததும், அவை பகிர்ந்தளிக்கப்பட்டு தற்காலிக வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    ஏன் சொந்த நிலங்களுக்கு என்ன நடந்தது. இன்னும் ‘புலி’ அதை கட்டுப்பாட்டுக்குள் வச்சிருக்கோ? அல்லது யாழ்மாநகரசபை தரப்பார் அமத்தப் பார்க்கினமோ? அல்லது புலி இன்னும் ‘கண்ணிவெடி’ புதைச்சு வச்சிருக்கோ?

    Reply
  • thurai
    thurai

    ஆயுதமெடுத்து விடுதலையென்ற போர்வையில் அநியாயமாக இற்ந்த்வர்கள் போராளிகள். தமிழினத்தினுள் இருந்து கொண்டே ஆயுதமின்றி புலிகளையும் பாவித்து அரசாங்கத்தையும் பாவித்து வாழும் சுயநலவாதிகள். இவர்களே கண்ணிவெடிகளை விட தமிழர்களிற்கு ஆபத்தானவ்ர்கள்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சாந்தனின் அசட்டுத்தனமான கேள்விகளுக்கு யார் மறுமொழி கூறுவது? விரட்டியடிக்கபட்ட மக்கள் விரட்டியடிக்கப்பட்ட எண்ணிகையிலேயா? சதா இருந்து கொள்வார்கள்? அவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா? பிள்ளைகள் பருவமடைய மாட்டார்களா? பருவமடைந்தவர்கள் திருமணமாக மாட்டார்களா? திருமணமானவர் தமது வம்சவிருத்தியை செய்து கொள்ள மாட்டார்களா? இல்லை இவர்கள் தம்மை இனப்பெருக்க விதிக்குள் உட்படுத்தாது தம்மை அழித்துக் கொள்ளவேண்டுமென்று சாந்தன் விரும்புகிறாரா?
    குடியிருக்க காணிகொடுக்கவே இவ்வளவு பிரச்சனை எடுக்கும் சாந்தன் அதிகாரத்தில் இருந்தால் எப்படி? இதைத்தானே திரும்பவும் இந்த தளத்தில் திரும்ப திரும்ப கூறுகிறேன். ஆயுதம் தாங்காத புலிகள் இன்னமும் எம் சமூகத்தில் நல்லவர்கள் போல் ஒட்டியுறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஓ!மனிதநேயத்தை பழமைவாத சிந்தனைக்கு அடகு வைத்தவர்களே!! உலகத்தை உனக்குள் கட்டுப்போட முயற்ச்சிக்காதே!இந்த உலகத்தில் நீயும் ஒருமனித ஜீவனாக உன்னை பிரகடனப்படுத்து. அதில் மட்டுமே! நீமனிதனை காண முடியும். அதுவே ஆதியும் அந்தமுமாகிய மனித வரலாற்றின் சாரம்.

    Reply
  • தமிழ் வாதம்
    தமிழ் வாதம்

    செய்தி இதுதான்…
    “….யாழ்ப்பாணத்தில் இது வரை 59 முஸ்லிம் குடும்பங்கள் ……. மீள்குடியமர்ந்துள்ளதாகவும், இது தவிர மேலும் 100 குடும்பங்களும் குடியேறியுள்ளதாகவும்…….”

    மீள்குடியேற்றமும்,நில ஆக்கிரமிப்பும் இங்கே வெளிப்படையாக வேறுபடுத்தப்பட்டுள்ளது. இதில் வம்ச விருத்தி குடும்பத்தில் அடங்கும் என்பது மூடி மறைக்கிற விடையமல்ல.

    மேலோட்டமான வாசிப்புகள், கருத்துகளை திரும்பத் திரும்ப கூற முயல்வது மூத்த கருத்தாளர்களது முதுமையின் விளைவா? அது கருத்துகளை களைந்து போகப் பண்ணி, கணக்குகளையும் பிழைத்து விடச் செய்யும்.

    சரி செய்ய மாக்சிசம், பிழை பிடிக்கப் புலி என்கிற மலினச் சிந்தனையில் நீண்ட காலம் வாழுங்கள். அதற்காக மாற்றுக் கருத்துகளைக் கண்டு பயப்பிராந்தியில், தூற்றுவதும், தாழ்த்துவதும், குறி சுட்டுப் பார்ப்பதும் அழகல்ல. இங்கே எழுதக் கூடாது என்றால், “மன்னவனும் நீயோ, வள நாடும் உன்னதோ” என்று போய் விடுகிறேன்.

    Reply