எதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் கடந்த முறை கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பெளத்தம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முன்னணி பெளத்த பிக்குகள் அடங்கிய சங்க சபையொன்றை அமைப்பது தொடர்பாகவும் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலவந்த மத மாற்றத்தை தடுத்தல் மற்றும் பெளத்தம் தொடர்பான புதிய நடைமுறைகள் பற்றி மத வட்டாரங்களிடையிலான கலந்துரையாடல் நடத்துவது பற்றியும் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.
மேற்படி சட்டப் பிரேரணைகளுடன் கிராமப்புற விகாரைகளின் உட்கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு நிதி வழங்குதல், விகாரைகளுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் ஆகியவையும் இடம்பெறுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.
Rohan
அப்படி எல்லாம் சட்டம் வேண்டுமா என்ன? மற்றைய மதங்களைத் தான் பாதுகாக்க யாருமில்லை!
தமிழர் நிலங்களை ஆயுத முனையில் அபகரித்து விகாரை கட்டும் உரிமைக்குத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கும் நண்பர்களுக்கு இந்தக் காணொலி சமர்ப்பணம்.
http://www.youtube.com/watch?v=ffxoRedhPfk&feature=related
http://www.youtube.com/watch?v=-m7LRZ4vlaw&feature=related
சாந்தன்
ஸ்ரீலங்கா அரசியலைமைப்பில் ‘பெளத்த சாசனத்தை பேணிப்பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை’ என இருக்கிறது. வடக்கில் கிழக்கில் அடாவடியாக புத்தர் சிலைகள் இரவோடிரவாக முளைக்கிறது. யாழ்ப்பாண வெசாக் கொண்டாட்டங்களில் மக்கள் ‘குதூகலமாக’ கலந்து கொள்ளல் எனச் செய்திகள். அங்கே வைக்கப்பட்ட பாதாகைகளில் ‘சாசனம் மிளிர்கிறது’ என விளம்பரம். இதில் தனியாக புதிய சட்டம் வேறு.
பெளத்தம் அவ்வளவு ஆட்டம்காணும் மதமா? அல்லது ஸ்ரீலங்காவில் பெளத்தம் என்றாலே ‘அவமானம்’ பேசாமல் வேறு ஒரு மதத்துக்கு மாறிவிட்டால் நல்லது என மக்கள் நினைக்கிறார்களா? அல்லது வத்திக்கானுக்கு ’தூது’ அனுப்பியும் வரிச்சலுகை (ஜீ.எஸ்.பி பிளஸ்) கிடைக்கவில்லை என்ற கோபமோ?
NANTHA
தமிழ் என்று புகுந்து இந்துக்களை அழிக்க முற்பட்டுள்ள கத்தொலிக்க கும்பல்களுக்கு இது ஒர் சாட்டையடிதான். விகாரைகளில் இந்துக் கடவுள்களைக் காணலாம் ஆனால் கத்தோலிக்க கோவில்களில் திருக்குறளைக் கூட காண முடியாது.
வத்திக்கானின் சுயரூபம் மகிந்தவுக்கு இப்போது புரிந்திருக்கும்!
சாந்தன்
//….தமிழ் என்று புகுந்து இந்துக்களை அழிக்க முற்பட்டுள்ள கத்தொலிக்க கும்பல்களுக்கு இது ஒர் சாட்டையடிதான்….//
செய்தி முழுக்க பெளத்தம், சாசனம் ,மகாசங்கம் காப்பாற்ரல் என ஒரே ‘பழைய பாட்டு’த்தான் ஆனால் நீங்கள் என்னடா எண்டால் ’இந்து’ ‘பாதிரி’ என புதுப் பாட்டை பாடுறியள்!
thurai
சமய்ங்களிற்கும் மொழிகளிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. உலகில் எல்லா சமயங்கழும் எல்லா மொழி பேசும் மக்களிடையேயும் பரவியுள்ளன.
மதவெறியாட்டம் தன் சொந்த இனத்தையே அழிக்கும். இலங்கையில் சிங்களவ்ர் பெள்வுத்த மதத்தையும், தமிழர்
இந்துமதத்தையும் த்ங்களின் சொந்தமாக்குவது ஏன்?
பெள்வுத்த சிங்களவ்ரும், இந்துத் தமிழருமே அரசாள தகுதியுள்ளவர்க்ளென்னும் போதையை மக்களிடையே வள்ர்த்து அரசியல் லாபம் பெறுவதற்கேயாகும்.
துரை
Rohan
‘தமிழ் என்று புகுந்து இந்துக்களை அழிக்க முற்பட்டுள்ள கத்தொலிக்க கும்பல்களுக்கு இது ஒர் சாட்டையடிதான். விகாரைகளில் இந்துக் கடவுள்களைக் காணலாம் ஆனால் கத்தோலிக்க கோவில்களில் திருக்குறளைக் கூட காண முடியாது’ என்று சொல்கிறார் நந்தா.
எந்த இந்துக் கோவில்களில் சிலைகள் படங்கள் என வேறு தெய்வங்கள் உள்ளன என்றும் அவர் சொல்வது நலம்.
‘வத்திக்கானின் சுயரூபம் மகிந்தவுக்கு இப்போது புரிந்திருக்கும்!’ என்று சொல்லும் அவர் திருப்பதி, சிதம்பரம் என்று பல இந்துக் கோயில்களிலும் மடங்களிலும் நடக்கும் விவகாரங்கள் இந்து அமைப்புகளின் சுயரூபத்தை இன்னமும் உலகுக்குக் காட்டவில்லை என்று நினைப்பதாகவே படுகிறது. இதெல்லாம் வத்திக்கானின் சதியோ என்னவோ!
தமிழர்கள் வாழும் இடத்தில் உள்ள சைவக் கோயிலில் கூட தமிழில் தேவாரம் ஓதக் கூடாது என்று சொல்லும் நந்தா தீட்சிதர்கள் பற்றி எதுவும் பேசாதிருப்பது வேடிக்கை.
இந்து மதம் என்று புகுந்து தமிழை அழித்த ஆரியக் கும்பல்களுக்கு யார் சாட்டையடி யார் தருவார்?
சாந்தன்
//….தமிழர் இந்துமதத்தையும் த்ங்களின் சொந்தமாக்குவது ஏன்?…//
துரை, எங்கே ’தமிழர்’ இந்து மதத்தை தமது ‘சொந்தமாக்கினர்’எனச் சொல்லலாமா? ஸ்ரீலங்காவில் ‘சிங்கள பெளத்தம்’ என்கின்ற சொல்லாடல் அரசியல் தலத்திலும் சமூகபொருளாதாரத் தலத்திலும் மிகப்பிரபல்யம். அவ்வாறு இந்துதமிழர் என்கின்ற சொற்பதம் உபயோகத்தில் இருக்கிறதா?
ஸ்ரீலங்காவின் இனவாதத்தை ‘மென்மைப்படுத்த’ தமிழரையும் இழுத்து padding செய்யும் விளையாட்டை நன்றாகக் கற்றுவைத்திருக்கிறீர்கள்!
/……பெள்வுத்த சிங்களவ்ரும், இந்துத் தமிழருமே அரசாள தகுதியுள்ளவர்க்ளென்னும் போதையை மக்களிடையே வள்ர்த்து அரசியல் லாபம் பெறுவதற்கேயாகும்…/ அதே கதை!
BC
சேர்ச்சின் சுயரூபங்கள் பெல்ஜியம் மற்றும் ஐனநாயக நாடுகளில் நன்றாகவே வெளிவந்துள்ளது. மக்களின் பலவீனங்களை பாவித்து ஆசை காட்டி மதம் மாற்றுவதும் மதவெறியாட்டம் தான்.
thurai
//துரை, எங்கே ’தமிழர்’ இந்து மதத்தை தமது ‘சொந்தமாக்கினர்’எனச் சொல்லலாமா//சாந்தன்
அப்போ ஏன் தமிழ்பகுதிகளில் விகாரையைக் கட்டுகின்றான் சிங்களவன் என்கிறீர்கள்? விகாரைகளில் பிக்குமார் பாழி மொழியிலேயே பேசுகின்றனர். சிங்களம் அங்குமில்லை அப்போ ஏன் மதத் துவேசம். தமிழரும் பெளத்த மததை தழுவலாமே.
//இந்து மதம் என்று புகுந்து தமிழை அழித்த ஆரியக் கும்பல்களுக்கு யார் சாட்டையடி யார் தருவார்//றோகன்
இன்னமும் அநேகம் தமிழர் அறியாத உண்மையிது. மேலும் விரிவாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால் ஆரியரால் கூறுபோடப்பட்டு சிதைவுற்ரிருக்கும் தமிழினம் ஒன்றாக் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழமுடியும்.
//ஸ்ரீலங்காவின் இனவாதத்தை ‘மென்மைப்படுத்த’ தமிழரையும் இழுத்து பட்டிங் செய்யும் விளையாட்டை நன்றாகக் கற்றுவைத்திருக்கிறீர்கள்//சாந்தன்
பகைமையை அகற்ரி,நட்பினை வளர்த்து, புரிந்துணர்வோடு பழகி, பிரச்சினைகளை அறிவாற்ரலுடன் தீர்த்து , சமாதானமாக வாழ்வதே மனித குலத்தின் நோக்கமாகும்.
இதனைப் புரியாதவர்கள் ஈழத்தமிழர்களிற்கு விடுதலை எடுத்துக் காட்டுகின்றோமென்று, நம்பிப் பின் போனவர்களிற்கு கொடுத்த இடமே முள்ளிவாய்க்காலின் அழிவு. இதனை இன்னமும் புரிந்ததாகவே தெரியவில்லையே.
துரை
Ajith
Thesamnet is a conveneient place for Nantha to express his sicereity to Sinhala thugs and buddhist fundamentalists. I don’t understand what is the relationship between Vatican and Buddhism. The real problem here is why specific care for buddhism only and not for other relegions. Read the following carefully
எதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.
They want to protect Buddhism and Mahasangha. That means other relegions are threat to buddhism, so they have decided to wipe out other relegions and relegious institutions. We all can remember last month a Sinhala journalist (buddhist) who voluantarily joined Christianity wrote something. She was arrested and charged by the Buddhist government.
The tamil speaking pundits who are talking of reconcilliation with Sinhala racists always never talk of sinhala motives. For the past 60 years Sinhala motives are well established.
BC
சிங்களபெளத்தம் என்ற சொல் தமிழர்களிடம் அரசியல் லாபம் பெறுவதற்காக பாவிக்கபடுகிறது. தமிழ் தேசிய விரோதிகள் என்பது போல் தான். தேசம்நெற்றும் தமிழ் தேசிய விரோதியாக அவர்களால் அறிவிக்கபட்டது தான்.
சாந்தன்
//….அப்போ ஏன் தமிழ்பகுதிகளில் விகாரையைக் கட்டுகின்றான் சிங்களவன் என்கிறீர்கள்? விகாரைகளில் பிக்குமார் பாழி மொழியிலேயே பேசுகின்றனர். சிங்களம் அங்குமில்லை அப்போ ஏன் மதத் துவேசம். …//
விகாரைகளை காணி ‘வாங்கி’ கட்டாமல் அரச செலவில் ஏன் கட்ட வேண்டும் என்பதே கேள்வி. இதைச் சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு! அதேபோலத்தான் ‘குடியேற்றமும்’. சொந்த உழைப்பில் சொந்த காசில் காணி வாங்கி வீடு, கோயில் கட்டுவதை அரச செலவில் செய்வதை ஒப்பிடுவது நல்ல நியாயம்! திரை புத்தருடனோ அன்றி பெளத்த மததுடனோ அல்ல பிரச்சினை! மாறாக அதனை ‘திணிப்போர்’ மீதுதான் பிரச்சினை!
//…தமிழரும் பெளத்த மததை தழுவலாமே….//
தாராலமாக. முன்னர் ஒரு காலத்தில் யாழ்ப்பானத்தில் பெளத்த சமயம் செழிப்பாக இருந்தது என்ற வரலாறு தெரியாதா? ஆனால் எப்போது அது அடக்குமுறையின் ஆயத்தமாகியதோ அன்று தான் சிக்கல் ஆரம்பமாகியது. இதனை ஒரு நூலாக ஹாவாட் பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் ஸ்ரான்லி.ஜே.தம்பையா “Srilanka:Budhissm Betrayed? ” நூலாக எழுதி இருக்கிறார்(ஸ்ரீலங்கா:பெளத்தத்திற்கு துரோகம்? ). படித்துப்பாருங்கள்!
//…பகைமையை அகற்ரி, நட்பினை வளர்த்து, புரிந்துணர்வோடு பழகி, பிரச்சினைகளை அறிவாற்ரலுடன் தீர்த்து , சமாதானமாக வாழ்வதே மனித குலத்தின் நோக்கமாகும்….//
அருமை…அருமை. பிழை விட்டவனை சுட்டிக்காட்ட பிழை விடாதவனையும் ஒரே இடத்தில் போட்டு குழப்பி ‘வெள்ளையடித்தல்’ எல்லாம் மனித குலத்தின் நோக்கம் என்கின்ற உபதேசம் புல்லரிக்க வைக்கிறது. மேலே அமைச்சர் சொன்னது என்ன ? பெளத்ததை காக்க சட்டம் என்பதன் விவாதத்தில் இந்து தமிழ் என வலிந்து ‘இழுத்து’ உங்களின் ‘நோக்கத்தை’ மனித குல நோக்கம் என பெரிய லெவலுக்கு கொண்டு போகிறீர்கள். நல்ல நோக்கம் தான்!
//….இதனைப் புரியாதவர்கள் ஈழத்தமிழர்களிற்கு விடுதலை எடுத்துக் காட்டுகின்றோமென்று, நம்பிப் பின் போனவர்களிற்கு கொடுத்த இடமே முள்ளிவாய்க்காலின் அழிவு. இதனை இன்னமும் புரிந்ததாகவே தெரியவில்லையே…..//
இதனை புரியவைக்கவா அமைச்சர் சட்டம் கொண்டு வருகிறார்? தெரியாமல் போச்சே.
சாந்தன்
//….சிங்களபெளத்தம் என்ற சொல் தமிழர்களிடம் அரசியல் லாபம் பெறுவதற்காக பாவிக்கபடுகிறது…//
நல்லாய்த்தான் கதை விடுகிறீர்கள் BC. இந்த சொல்லாடல்களை முதலில் பாவித்தவர்கள் தமிழரல்ல சிங்களவரே! அதனால்தான் ஸ்ரீலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு என சிங்களவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மட்டுமல்ல அரசியலமைப்பிலும் பெளத்ததுக்கும் சிங்களத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது!
thurai
//விகாரைகளை காணி ‘வாங்கி’ கட்டாமல் அரச செலவில் ஏன் கட்ட வேண்டும் என்பதே கேள்வி. இதைச் சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு//சாந்தன்
அரசின் கூப்பன் அரிசியையும், பருப்பையும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டுதான் அரசிற்கெதிராக ஆயுதம் தூக்கியதையும் மறக்க வேண்டாம்.
//அருமை…அருமை. பிழை விட்டவனை சுட்டிக்காட்ட பிழை விடாதவனையும் ஒரே இடத்தில் போட்டு குழப்பி ‘வெள்ளையடித்தல்’ எல்லாம் மனித குலத்தின் நோக்கம் என்கின்ற உபதேசம் புல்லரிக்க வைக்கிறது//சாந்தன்
தமிழர் பிழைவிடாத இனமா? சிங்களவர் தமிழர்களிலும் கொடியவ்ர்களா? காஸ்ரோ,நெடியவன் உலகெமெங்கும் குத்து வெட்டை உருவாக்கி தமிழர்களின் ஒற்றுமைக்கு பறைசாற்றுவதை நிறுத்திவிட்டு மறுபேச்சு பேசினால் மிகவும் நல்லது.
//அமைச்சர் சொன்னது என்ன ? பெளத்ததை காக்க சட்டம் என்பதன் விவாதத்தில் இந்து தமிழ் என வலிந்து ‘இழுத்து’ உங்களின் ‘நோக்கத்தை’ மனித குல நோக்கம் என பெரிய லெவலுக்கு கொண்டு போகிறீர்கள். நல்ல நோக்கம் தான்!//சாந்தன்
எனக்குத் தெரிய யாழ்ப்பாண்த்தில் அரச மரம் முழைக்கும் போதே பிடுங்கி எறிந்தவர்கள். காரணம் சொல்லவும். இப்படியான மக்களிடமிருந்து சிங்கள்வரையும் பெள்த்த்தையும் காக்க சட்டம் தேவையில்லையா?
துரை
Ajith
Who had the power to provide equality in Sri Lanka? Sinhala people and its leaders, not tamils.
Who brought Sinhala only and buddhist sinhala nation? Sinhala people and its leaders, not tamils.
Who has the power to correct inequality?Sinhala people and its leaders, not tamils.
Who should be blamed for all the mess in Sri Lanka? Sinhala people and its leaders, not tamils.
thurai
// அதனால்தான் ஸ்ரீலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு என சிங்களவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மட்டுமல்ல அரசியலமைப்பிலும் பெளத்ததுக்கும் சிங்களத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது//சாந்தன்
சிங்களவர்களில் கிறிஸ்தவர்கழுமிருக்கின்றார்கள் மறக்க வேண்டாம். இவர்கழும் பேசாமல்தான் உள்ளனர். அங்கு கிறிஸ்தவ கோவில்களை அழிக்க சிங்களவர் முன்வரவில்லை. சிங்களவர் இலங்கையே தம்நாடாகக் கருதுகின்றார்கள். தமிழர்களிற்கு லண்டனில் வீடு வேண்டும், கொழும்பில் வீடு வேண்டும், யாழ்ப்பாணத்தில் வீடு வேண்டும், இதோடு ஆழ்வதற்கு தனியாக ஓர்நாடும் வேண்டும்.
இந்துமதம், கத்தோலிக்கம், அல்லலூயா, ஜெகஜோவ இன்னும் எத்தனையோ யாராவது சொல்வீர்களா? ஓர் சமூகமாகவே புலம் பெயர்நாடுகளில் வாழமுடியாத நிலைமை தமிழர்களிற்கு. இதற்காக யாரவது குரல் கொடுக்கின்றார்களா? சிங்களவன் தன் மக்களைக் காக்க சட்ட்ம் போட்டால் நமக்கென்ன?
யாழ்ப்பாண்த்தில் விகாரையில் இலவசமாக உணவு கொடுத்தால் ஏழைகள் போய் உண்பார்கள். மதமும் மாறுவார்கள். இதற்கும் சிங்க்ளவர்கள் மேலா குற்ரம் சுமத்துவது. ஏழைகள் இல்லாத சமூகத்தை கட்டிவளர்க்காத தமிழர்களே குற்ரவாளிகள். பேச்சில் மட்டும் தமிழரென வாழமுடியாது. செயலிலும் தமிழர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும்.அதன் பின்னரே சிங்கள அரசின் தவறுகளை கூறுவதற்கும் விவாதிப்பதற்கும் எமக்குத் தகுதியுண்டு.
துரை
NANTHA
//சிங்களவர்களில் கிறிஸ்தவர்கழுமிருக்கின்றார்கள் மறக்க வேண்டாம். இவர்கழும் பேசாமல்தான் உள்ளனர். அங்கு கிறிஸ்தவ கோவில்களை அழிக்க சிங்களவர் முன்வரவில்லை. சிங்களவர் இலங்கையே தம்நாடாகக் கருதுகின்றார்கள். தமிழர்களிற்கு லண்டனில் வீடு வேண்டும், கொழும்பில் வீடு வேண்டும், யாழ்ப்பாணத்தில் வீடு வேண்டும், இதோடு ஆழ்வதற்கு தனியாக ஓர்நாடும் வேண்டும்.//
ஆனால் “பாதிரிகளுக்கு” தமிழ் ஈழம் ஏன் வேண்டும்?
thurai
//ஆனால் “பாதிரிகளுக்கு” தமிழ் ஈழம் ஏன் வேண்டும்?//நந்தா
நான் நம்புகிறேன் ரோமிலுள்ள பாப்பாண்டவரை நல்லூரில் குடியமர்துவதற்கே என்று.
துரை
சாந்தன்
//..சிங்களவர்களில் கிறிஸ்தவர்கழுமிருக்கின்றார்கள் மறக்க வேண்டாம். இவர்கழும் பேசாமல்தான் உள்ளனர்…// அதைத்தான் சிங்களக் கிறிஸ்தவர்களும் சொல்கிறார்கள்.
//அங்கு கிறிஸ்தவ கோவில்களை அழிக்க சிங்களவர் முன்வரவில்லை….//
என்ன துரை ஜோக் அடிக்கிறீர்களா அல்லது சீரியசாக எடுதுகிறீர்களா? அண்மையில் (2004 என நினைக்கிறேன்) அமெரிக்க அரசின் மனித உரிமை அறிக்கையில் ஸ்ரீலங்காவில் கிறிஸ்தவ கோவில்கள் எரிக்கப்பட்டமை பற்றி குறிப்பிட்டு இருந்த்து அவ்வளவு ‘வசதியாக’ மறந்து விட்டீர்களா அல்லது பூனை கண்ணை மூடிப் பாலைக்குடிக்கிறதா?
//..சிங்களவர் இலங்கையே தம்நாடாகக் கருதுகின்றார்கள்– தமிழர்களிற்கு லண்டனில் வீடு வேண்டும், கொழும்பில் வீடு வேண்டும், யாழ்ப்பாணத்தில் வீடு வேண்டும், இதோடு ஆழ்வதற்கு தனியாக ஓர்நாடும் வேண்டும்….//
அதற்காக தமிழரை கொல்லலாம் என்கிறீர்களா? ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த நாடு என அங்கீகாரம் அளிப்பது ஸ்ரீலங்காவின் அரசியலமைப்புச் சட்டம், கவனிக்கவும்!
//…ஓர் சமூகமாகவே புலம் பெயர்நாடுகளில் வாழமுடியாத நிலைமை தமிழர்களிற்கு. இதற்காக யாரவது குரல் கொடுக்கின்றார்களா?….//
ஏன் நீங்கள் கொடுக்கலாமல்லவா? நீங்களும் கொடுப்பதில்லை என நினைக்கவே கவலையாக இருக்கு துரை. ஏன் எப்போதும் மற்றவன் உங்களுக்காக ‘குரல்’ கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
//.சிங்களவன் தன் மக்களைக் காக்க சட்ட்ம் போட்டால் நமக்கென்ன?…//
ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவைக் ‘காக்க’ சட்டம் போட்டு பின்னர் தமது நாட்டில் இனப்பாகுபாடு இல்லை…எல்லாம் தேனும் பாலும் வழிந்தோடுகிரது…..இன்னும் ஒரு படி மேலே போய் சிறுபான்மை இனமென்று ஒன்றே இல்ல… எனவெல்லாம் பெரும் கதை விடக்கூடாது. அதைச் செய்தால் நான் ஏன் கேட்கப்போகிறேன்?
//…யாழ்ப்பாண்த்தில் விகாரையில் இலவசமாக உணவு கொடுத்தால் ஏழைகள் போய் உண்பார்கள். மதமும் மாறுவார்கள்…..//
ஏதோ ‘காக்கச் சட்டம்’ என்றீர்கள்? இப்பொ மதம் மாறுவார்கள் என்கிறீர்கள். ஓ…அதாவது ஒருவரும் மற்ர மதத்துக்கு மாறக்க்கூடாது ஆனால் மற்ரவர்கள் தமது மதத்துக்கு வரலாம்! உண்மைதான் பெரும்பான்மையைக் ‘காக்க’ சட்டம். கேட்டால் “புரிந்துணர்வோடு பழகி, பிரச்சினைகளை அறிவாற்ரலுடன் தீர்த்து , சமாதானமாக வாழ்வதே மனித குலத்தின் நோக்கமாகும்” என பெரிய லெவலில் பதில்!
//…இதற்கும் சிங்க்ளவர்கள் மேலா குற்ரம் சுமத்துவது. ஏழைகள் இல்லாத சமூகத்தை கட்டிவளர்க்காத தமிழர்களே குற்ரவாளிகள்….//
எனக்கு தலையை எங்கே கொண்டுபோய் முட்டுவது எனத்தெரியாமல் இருக்கு!்
//….பேச்சில் மட்டும் தமிழரென வாழமுடியாது. செயலிலும் தமிழர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும்.அதன் பின்னரே சிங்கள அரசின் தவறுகளை கூறுவதற்கும் விவாதிப்பதற்கும் எமக்குத் தகுதியுண்டு….//
தமிழர் என்றால் எவ்வாறு ‘வாழ்ந்து காட்ட” வேண்டும் எனச் சொல்லவும், அவ்வரையறையை யார் வகுத்தது , அது எப்போது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது (ஜனநாயகம்!) எப்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது எனவும் சொன்னால் நல்லது!
//விகாரைகளை காணி ‘வாங்கி’ கட்டாமல் அரச செலவில் ஏன் கட்ட வேண்டும் என்பதே கேள்வி. இதைச் சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு//சாந்தன்
அரசின் கூப்பன் அரிசியையும், பருப்பையும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டுதான் அரசிற்கெதிராக ஆயுதம் தூக்கியதையும் மறக்க வேண்டாம்…//
இந்த கூப்பன் அரிசி,பருப்பு எல்லாத்துக்கும் வருமான வரிப் பதில்கள் எழுதியும் அலுத்துப்போச்சு. தேவை எனில் பழைய பதிவுகளைப் படியுங்கள். அதில் நீங்களும் மிக ஆவலுடன் கருத்தெழுதி இருந்தீர்கள்.
//…தமிழர் பிழைவிடாத இனமா? சிங்களவர் தமிழர்களிலும் கொடியவ்ர்களா? காஸ்ரோ,நெடியவன் உலகெமெங்கும் குத்து வெட்டை உருவாக்கி தமிழர்களின் ஒற்றுமைக்கு பறைசாற்றுவதை நிறுத்திவிட்டு மறுபேச்சு பேசினால் மிகவும் நல்லது….//
இங்கே பிரச்சினை ஸ்ரீலங்காவில் பெளதததைக்காக்க சட்டம் என்பது தான். அதை சுட்டிகாட்டினால் நெடியவன் காஸ்ரோ என்கிறீர்கள். அச்சட்டம் சரியானதா எனச்சொல்லாமல் நீங்கள் ஒண்டும் திறமில்லை எனச்சொல்கிறீர்களே. உங்களின் வாதத்திறமை இவ்வளவு தாழ்ந்து விட்டதா?
சரி நாம் தான் நெடியவன் , காச்ரோ கோஷ்டி என பட்டம் சூட்டுகிறீர்கள். 2004 இல அமெரிக்கா ஸ்ரீலங்காவின் மத மாற்ர சட்டத்தை எதிர்த்த போது அமெரிகாவைப்பார்த்தும் நீ என்ன திறமோ என கேட்டிருக்கலாமே? ஏன் அச்சட்டத்தை தூக்கி பாராளுமன்றப் பரணில் வைத்தார்கள்.
//அமைச்சர் சொன்னது என்ன ? பெளத்ததை காக்க சட்டம் என்பதன் விவாதத்தில் இந்து தமிழ் என வலிந்து ‘இழுத்து’ உங்களின் ‘நோக்கத்தை’ மனித குல நோக்கம் என பெரிய லெவலுக்கு கொண்டு போகிறீர்கள். நல்ல நோக்கம் தான்!//சாந்தன்
எனக்குத் தெரிய யாழ்ப்பாண்த்தில் அரச மரம் முழைக்கும் போதே பிடுங்கி எறிந்தவர்கள். காரணம் சொல்லவும். இப்படியான மக்களிடமிருந்து சிங்கள்வரையும் பெள்த்த்தையும் காக்க சட்டம் தேவையில்லையா?..//
அரசமரத்தை புடுங்கினால் பெளத்தம் அழிந்துவிடுமா? மாபெரும் ஞானி கெளதம பெளத்தனையும் அவனின் ஞானத்தையும் இப்படி அரசமரத்தை புடுங்கினால் அழிந்துபோகும் அளவு என சிறுமை எனச் வஞ்சப்புகழ்ச்சி செய்யக்கூடாது. நீங்கள் ரொம்பவும் குறும்ம்புக்காரர் துரை!
thurai
சாந்தனிற்கு எனது கருத்தை ஒரு சொல்விடாமல் வாசித்து பதில் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.
முதலில் உலகில் எங்காவது தமிழர் தாம் ஓர் இனமென்று ஒற்றுமையாக வாழ்கிறார்களா என்று சொல்லவும் அங்கு வாழ விருப்பமாக உள்ளது.
இரண்டாவதாக பிரச்சினை ஸ்ரீலங்காவில் பெளத்தத்தைக்காக்க சட்டம் என்பது தான். இந்து மதத்தை காக்கவும் வளர்க்கவும் தமிழர்கள் இலங்கையில் எடுத்த முயற்சிகளென்ன? தமிழனாகப் பிறந்த சிலரையே இந்துக் கோவிலுக்குள்போகாது தடுக்கும் தமிழர்கள், சிங்களவர் தமது மதத்தையும் மொழியையும் காக்க சட்டம் போடும்போது யாருக்காக கவலைபடுகின்றீர்கள்.
தூங்கிக் கிடக்கும் புலியின் ஆதரவாளர்களை உசுப்பேத்தி திரும்ப தமிழீழ வியாபாரம் தொடங்க சிங்கள அரசுகள் செய்யும் தவறுகள் அவசியம் தேவைதான்.
சாந்தன் முதலில் யாழ்ப்பாணத்தில் ஊர் ஊராக இரும்பு சூலத்துடன் 100 வருடத்திற்கு மேலாக மாற்ரமின்றி இருக்கும் கோவில்களை திருத்தி இந்து மதத்தைக் காப்பாற்ரினால் சிறிய உதவியாவது இந்து மதத்திற்கு செய்ததாக இருக்கும். அதன் பின் சிங்களவர் செய்யும் தவறுகளைப் பற்றிப் பேசலாம்.
துரை
சாந்தன்
//….முதலில் உலகில் எங்காவது தமிழர் தாம் ஓர் இனமென்று ஒற்றுமையாக வாழ்கிறார்களா என்று சொல்லவும் அங்கு வாழ விருப்பமாக உள்ளது…..//
அதை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். எடுத்ததுக்கெல்லாம் ஒட்டுமொத்த ‘தமிழரையும்’ குற்றவாளி ஆக்கிவிட்டு ஒற்றுமை, வாழ விருப்பம் என கதைப்பதில் பிரயோசனமில்லை! தேவை ஏற்படின் உங்கள் தமிழர் ’ஒற்றுமை’ பின்னூட்டங்களை படிததுப்பாருங்கள்.
//….இரண்டாவதாக பிரச்சினை ஸ்ரீலங்காவில் பெளத்தத்தைக்காக்க சட்டம் என்பது தான். இந்து மதத்தை காக்கவும் வளர்க்கவும் தமிழர்கள் இலங்கையில் எடுத்த முயற்சிகளென்ன?…//
மதத்தை மனிதன் ‘காக்க’ வேண்டிய அவசியமில்லை. கடவுளால் தன்னைக் காப்பாற்ர முடியாதுபோனால் அவர்(ள்) எப்படி மக்களை காப்பாற்ர முடியும்?
//…. தமிழனாகப் பிறந்த சிலரையே இந்துக் கோவிலுக்குள்போகாது தடுக்கும் தமிழர்கள், சிங்களவர் தமது மதத்தையும் மொழியையும் காக்க சட்டம் போடும்போது யாருக்காக கவலைபடுகின்றீர்கள்…..//
அந்த ‘மதம்’ ‘மொழி’ மற்ரவனை கொலை செய்து காக்கப்பட வேண்டுமா? அதனை நியாயப்படுத்த சட்டமா? அதனை சட்ட ரீதியாக்க ‘பெரும்பான்மையால் தெரிவுசெய்யப்பட்ட அரசா’? அதை ஆதரித்துப்போவது ‘உலக நியதியா”?
அப்போ உங்கள் கருத்தான “புரிந்துணர்வோடு பழகி, பிரச்சினைகளை அறிவாற்ரலுடன் தீர்த்து , சமாதானமாக வாழ்வதே மனித குலத்தின் நோக்கமாகும்” (thurai on June 6, 2010 5:17 pm ) வெறும் வார்த்தை ஜாலமா?
//….தூங்கிக் கிடக்கும் புலியின் ஆதரவாளர்களை உசுப்பேத்தி திரும்ப தமிழீழ வியாபாரம் தொடங்க சிங்கள அரசுகள் செய்யும் தவறுகள் அவசியம் தேவைதான். …//
நீங்களே ‘சிங்கள அரசுகள்’ எனச் சொல்கிறீர்கள்? சிறுபான்மை இனமென்ற ஒன்றே இல்லை, மக்கள் ஆட்சி, இன ஐக்கியம், என இன்னோரன்ன சொல்லாடல்கள் எல்லாம் பம்மாத்து என உங்களை அறியாமலே எழுத்தில் வருகிறதா?
//….சாந்தன் முதலில் யாழ்ப்பாணத்தில் ஊர் ஊராக இரும்பு சூலத்துடன் 100 வருடத்திற்கு மேலாக மாற்ரமின்றி இருக்கும் கோவில்களை திருத்தி இந்து மதத்தைக் காப்பாற்ரினால் சிறிய உதவியாவது இந்து மதத்திற்கு செய்ததாக இருக்கும்…..//
நன்றாக ‘தூண்டில்’ போடுகிறீர்கள். கோவில் திருத்த காசு அனுப்பச்சொல்லி விட்டு பின்னர் “பாருங்கள் இந்த தமிழர்களை மக்கள் அகதி முகாமில் கஷ்டப்படும்போது கோவில் கட்டுறாங்கள்” என ஒட்டுமொத்த தமிழர்கலையும் திட்டித்தீர்த்துக் கதை விட ஈசியாக இருக்கும் என நினைக்கிறீர்கள் போலிருக்கிறது!
மேலும் இரும்புச்சூலக் கோவில்களை திருத்தினால இந்துமதம் ‘காப்பாற்ர’ப்பட்டு விடும் என நான் இந்துமதத்தை சிறுமைப்படுத்துபவனல்ல. அரச மரத்தை புடுங்கினால் பெளத்தம் அழியும் எனும் லெவலுக்கு இப்போ இந்து மதத்தையும் ‘உயர்த்தி’ பிடிக்கிறீர்கள். 2000 வருடங்களுக்கு மேலாக சூலத்துடன் இருக்கும் இந்துமதத்தை கோவிலைத் திருத்திக்கட்டி காப்பாற்ரவேண்டிய தேவை இல்லை. நன்றி!
//….அதன் பின் சிங்களவர் செய்யும் தவறுகளைப் பற்றிப் பேசலாம்…../
தவறு தவறுதான், கொலை கொலைதான் யார் செய்தாலும் எப்போ செய்தாலும் ‘தட்டிக்கேட்போம்’ என விட்ட கதை எல்லாம் என்னாச்சு?
NANTHA
//ஆனால் “பாதிரிகளுக்கு” தமிழ் ஈழம் ஏன் வேண்டும்?//நந்தா
நான் நம்புகிறேன் ரோமிலுள்ள பாப்பாண்டவரை நல்லூரில் குடியமர்துவதற்கே என்று.//துரை
நல்லகாலம். புலிகளை ராஜபக்ஷ ஒழித்து விட்டார். இல்லாவிடில் முருகா… முருகா என்றவர்கள் ஜேசுவே எனக்கெல்லம் சாமியே.. என்று பாடியிருப்பார்கள். ஆயினும் உண்மையை சொன்னதற்கு நன்றி!
thurai
//2000 வருடங்களுக்கு மேலாக சூலத்துடன் இருக்கும் இந்துமதத்தை கோவிலைத் திருத்திக்கட்டி காப்பாற்ரவேண்டிய தேவை இல்லை. நன்றி!//சாந்தன்
இதேபோல தமிழர்களையும் தனிநாடுதான் காப்பாற்றும் என்ற எண்ணத்தையும் மாற்ரலாமே.
//தவறு தவறுதான், கொலை கொலைதான் யார் செய்தாலும் எப்போ செய்தாலும் ‘தட்டிக்கேட்போம்’ என விட்ட கதை எல்லாம் என்னாச்சு?//சாந்தன்
கொலைகளைச் செய்த புலிகழும், அவர்களிற்கு ஆதரவு கொடுத்தவர்கழும், அப்போது புலிகளின் கொலைகளை தட்டிக் கேட்டவர்களைப் போட்டுத்தள்ளியவ்ர்கழும் முதல் குற்ரவாளிகள். அவர்களே இப்போ இராசபக்சவின் அரசை குற்ரம் சொல்வதால், இராசபக்ச தப்புவதற்கு மீண்டும் புலிகளே மறைமுகமாக் உதவுகின்றார்கள்.
எனவே இதுவரை புலிகளை எதிர்த்தவர்களை துரோகியாகப் பார்த்தார்கள். அவர்கள் சொன்னதுபோல் புலிகள் முள்ளிவாய்க்காலை காட்டிவிடார்கள். இதுவரை புலிகள் செய்த தவறை ஏற்காதவர்கள் தமிழர்களைப் பற்ரிய செயல்களிலிருந்து ஒதுஙகுவதே தமிழர்களிற்கு நன்மைதரும்.
துரை
thurai
//நல்லகாலம். புலிகளை ராஜபக்ஷ ஒழித்து விட்டார். இல்லாவிடில் முருகா… முருகா என்றவர்கள் ஜேசுவே எனக்கெல்லம் சாமியே.. என்று பாடியிருப்பார்கள். ஆயினும் உண்மையை சொன்னதற்கு நன்றி!//நந்தா
உலமுழுவதும் முருகா என்றவர்கள் எல்லாம் ஜேசுவை சாமியே என்று பாடுவது மட்டுமல்லாமல் மற்ரவர்களையும் மாற்ரிக் கொண்டிருக்கின்றார்களே. இது இன்னமும் தெரியாதா?
துரை
NANTHA
“”உலமுழுவதும் முருகா என்றவர்கள் எல்லாம் ஜேசுவை சாமியே என்று பாடுவது மட்டுமல்லாமல் மற்ரவர்களையும் மாற்ரிக் கொண்டிருக்கின்றார்களே. இது இன்னமும் தெரியாதா?””
காசுக்காக தமிழர்கள் கொலை கொள்ளை என்று சகல பாதகங்களையும் செயும்போது இந்த “மதம் மாறுதல்” வெறும் சுண்டைக்காய்! இதிலும் கொலைகாரர்களோடு இயங்கும் பாதிரிகள் “காசை” காட்டி கடவுளை காட்டுவது படு போக்கிரித்தனம்!