87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும், தமிழையும், தன்மானத்தையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
முதல்வரின் 87வது பிறந்த நாளையொட்டி நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியதாவது:
ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்துவிடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.
அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக் கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.
அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான். நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.
நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.
தமிழ் வாதம்
நாற்பதினாயிரம் கோடிக்காக,நாற்பதினாயிரம் தமிழ் மக்களை கைவிட்ட கருணாநிதி, ‘குஷ்புவை ஆதரவோடு வரவேற்கும்’நீங்கள் இளைஞன்.
//…Tamil Nadu Chief Minister M. Karunanidhi could have given an ultimatum to the Manmohan Singh government on Tamils in Sri Lanka. But he, during his visit to Delhi, was interested only in saving Union Telecommunications Minister A. Raja who is mixed up in the Rs 40,000-crore scandal involving 2G mobile bands. Even when Karunanidhi talked about the Tamils, he did only cursorily…//
Policy on Lanka
India should spell out its stand
by Kuldip Nayar
Kusumpu
இன்னும் பாருங்கள் ஆசை போகவில்லை. //87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும் தமிழையும் தன்மானத்தையும் திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.// ஐயா! நீங்கள் தமிழ்காக்கும் விறுத்தம் இலங்கைத்தமிழரில் கண்டோமே. பூனை கண்ணை மூடிப்கொண்டு பால்குடித்தால் உலகம் இருண்டுவிடாது. சுத்த தமிழனாக இருந்திருந்தால் சுயமாக ஒரு நல்ல வார்த்தை உண்மை உணர்வோடு வந்திருக்கும். கருணாநிதியில் கர்நாடக இரத்தம் அல்லவா ஓடுகிறது.
Rohan
ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல், என்று சொல்கிற ஐயா இயக்கத்தை வைத்து வீட்டை (கோடீஸ்வரராக) வளர்த்ததிலும் வீட்டையே இயக்கம் என்று நினைத்தததிலும் ஒன்றும் பிழை சொல்ல முடியாது!
lamba
ரோகனின் இக்கூற்று பிரபாகரன் செய்த கூத்துக்கம் அச்சொட்டாய்ப் பொருந்தும்