IIFA சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஓர் அங்கமாக நேற்று இடம்பெற்ற இந்திய திரைப்பட நட்சத்திரங்களுக்கும் – இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையில் முதலில் இடம் பெற்ற 10 ஓவர் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் சங்கக்கார, தலைமையிலான அணி வெற்றியீட் டியது.
இப்போட்டி பி.ப. 1.30 மணிக்கு கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் ஆரம்பமானது.
களத்தடுப்பில் ஈடுபட்ட சுனில் செட்டி, ரித்தேஷ் தேஷ்முக்…
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய சங்கக்கார தனது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கை அணியில் முன்னாள் வீரர்கள் விளையாடினர். இந்திய திரைப்படவீரர்கள் அணிக்கு சுணில் செட்டி தலைமைதாங்கினார். இவ்வணியில் மஹேல ஜயவர்தன, பர்விஷ் மஃறுப் ஆகியோர் விளையாடினர்.
இதேவேளை, இப்போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி. இரத்நாயக்க மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை மற்றொரு போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முதல் கிரிக்கெட் போட்டி ஒன்றில் களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.
இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய ஆகியோர் விளையாடினர். இக் கிரிக்கெட் போட்டி சிறுவர் நல நிதிக்காக இடம்பெற்றது. இதற்கு யுனிசெப் அனுசரணை வழங்கியது.