வெளி நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த உதவிகளில் 60 சதவீதமான நிதி வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் இந்தளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு ஒதுக்கப்படும் நிதிகள் வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு, வீதி, நீர்ப்பாசன, மின்சார, விவசாய, வீடமைப்பு, குடிநீர் வசதி, மீள்குடியேற்றம், நிவாரண, கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான், சீனா உட்பட பல்வேறு உலக நாடுகள் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.